Published:Updated:

`3 பேராசிரியர்கள், 7 மாணவர்கள் மீதுதான் சந்தேகம்!' -கொதிக்கும் ஃபாத்திமாவின் தந்தை லத்தீப்

சென்னை ஐ.ஐ.டி-யில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஃபாத்திமாவின் தந்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை சந்தித்துப் பேசினார்.

அப்துல் லத்தீப்
அப்துல் லத்தீப்

கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி-யில் முதலாமாண்டு படித்துவந்தார். கடந்த நவம்பர் மாதம் 9-ம் தேதி சனிக்கிழமையன்று விடுதி அறையில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.

மாணவியின் செல்போனை ஆய்வு செய்ததில், `என்னுடைய மரணத்துக்குப் பேராசிரியர் ஒருவர் காரணம்' என எழுதியிருந்ததாகத் தெரிகிறது. அதனடிப்படையில் ஐஐடி பேராசிரியர்களிடம் போலீஸார் விசாரணையை மேற்கொண்டனர். மாணவியின் மரணம் தொடர்பாக, அவரின் பெற்றோர்கள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து மனு அளித்தனர்.

வழக்கு விசாரணை சரியான முறையில் நடக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன். தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற உதவுவதாக அமித் ஷா உறுதியளித்தார்.
அப்துல் லத்தீப்

அந்த மனுவில், `ஃபாத்திமா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்' எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் அளித்த மனுவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பியுள்ளார். மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை ஆரம்பத்தில் கோட்டூர்புரம் போலீஸார் விசாரித்துவந்தனர். தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

`கயிறு எங்கிருந்து கிடைத்தது?' - கேரள மாணவி ஃபாத்திமா தற்கொலையில் தந்தை சந்தேகம்!

இந்த நிலையில் ஃபாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை டெல்லியில் இன்று சந்தித்தார். தன் மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அப்துல் லத்தீப், ``என் மகளின் மரணத்தில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. வழக்கு விசாரணை சரியான முறையில் நடக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் வலியுறுத்தினேன். தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற உதவுவதாக அமித் ஷா உறுதியளித்தார்.

அப்துல் லத்தீப்
அப்துல் லத்தீப்

இதுதொடர்பாக பிரதமர் மோடியையும் சந்தித்தேன். என் மகள் எப்படி உயிரிழந்தார் எனத் தெரிய வேண்டும். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஃபாத்திமா மரணத்தில் 3 பேராசிரியர்கள் மட்டுமின்றி 7 மாணவர்களுக்கும் தொடர்பு உள்ளது” என்றார்.