Published:Updated:

iஅக்கா

பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுகிறது. அதில் மிச்சம் செய்தால் கை நிறைய மிச்சமாகும்

பிரீமியம் ஸ்டோரி

`பணத்தைச் சேமிப்பதும், சம்பாதிப்பதற்கு சமமானதே!' என்பார்கள். இல்லத்தரசிகள் ஸ்மார்ட் ஆகச் செயல்பட்டு, செலவழிக்கும் பணத்தில் கொஞ்சம் சேமித்து வைக்கும் பணம்தான் பல சமயம் குடும்பத்தைக் காப்பாற்றி யிருக்கிறது. சின்னச் சின்ன ஐடியாக்கள் மூலம் சில நூறு மற்றும் ஆயிரம் ரூபாயைச் சேமிப்பது எப்படி என்பதை இந்த இதழில் பார்க்கலாம்.

உண்டியல் போல கிச்சனில் ஒரு சேமிப்பு பாக்ஸ் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் புத்திசாலித் தனத்தால் மிச்சம் செய்யும் பணத்தை உடனடியாக அதில் போட்டு வைக்கவும். வருட இறுதியில் அதிலிருக்கும் தொகை வெறும் பணமல்ல; உங்கள் ஸ்மார்ட்னெஸ். அதுவே உங்களைக் கூடுதலாக மிச்சம் செய்ய ஊக்கப்படுத்தும்.

ஆன்லைன் ஷாப்பிங்கும் பணத்தை மிச்சப்படுத்த உதவும். ஷாப்பிங் போர்ட்டல்களில் வரும் ஆஃபர்களை கவனித்து கிச்சனுக்குத் தேவையான பொருள்களை வாங்கத் தொடங்குங்கள். விலையும் குறைவாக இருக்கும். கேஷ்பேக் கிடைக்கும் வாய்ப்புகளும் உண்டு. வீட்டுக்கே வந்து சேர்ந்துவிடும்.

பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடுகிறது. அதில் மிச்சம் செய்தால் கை நிறைய மிச்சமாகும். கடைகளுக்குச் செல்வதாக இருந்தாலும், மற்ற இடங்களுக் கென்றாலும் திட்டமிட்டுப் பயணம் செய்யுங்கள். கொஞ்சம் மிச்சம் என்றாலும் சில நூறு கூடுதலாக உங்கள் கைகளில் தங்கும்.

மின் கட்டணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லோரின் பட்ஜெட்டையும் எகிற வைத்துக் கொண்டிருக் கிறது. மின்கட்டண ஸ்லாப் முறைப்படி, 500 யூனிட் வரை பயன்படுத்தினால் சுமார் 1,000 ரூபாய் பில் என்றால், 510 யூனிட் ஆனாலே 1,800 ரூபாய் ஆகிவிடும். உங்கள் கணக்கீட்டைக் கவனித்து கொஞ்சம் குறைத்தாலே நிறைய மிச்சமாகும்.

மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஆண்களுக்காக மட்டுமல்ல. மாதம் 500ரூபாய் என்றால்கூட அதை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவந்தால், பணம் பன்மடங்காகும். மிச்சம் செய்யும் 1000 ரூபாய் 1500 ரூபாயாக வளருமென்றால் அதுவும் உங்கள் உழைப்புதான். முறையாகத் தெரிந்து கொண்டு மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யுங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு