Published:Updated:

`உங்களின் உரிமைகள் நசுக்கப்படவில்லை!’ - காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக்

சத்யா கோபாலன்

`ஜம்மு-காஷ்மீரில் அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத உள்ளூர் பழங்குடியினர் இப்போது அதைப் பெறுவார்கள்’ என சத்ய பால் மாலிக் கூறியுள்ளார்.

Satya Pal Malik
Satya Pal Malik ( AP )

ஜம்மு-காஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டம் 370, 35A ஆகிய பிரிவுகள் கடந்த 5-ம் தேதி நீக்கப்பட்டு, காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம், யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, வரும் முதல் சுதந்திர தின விழா நேற்று அங்கு வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது.

kashmir
kashmir
AP

ஜம்மு- காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றிய பிறகு, சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் குறித்து ஆளுநர் சத்ய பால் மாலிக் மக்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ``சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டதால் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகள், அடையாளம் நசுக்கப்படவில்லை. மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கது.

அவர்கள், காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சி, கலாசாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்குப் புதிய கதவைத் திறந்துள்ளனர். இந்த மாற்றம் காஷ்மீரின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான தடையை நீக்கியுள்ளன.

Satya Pal Malik
Satya Pal Malik
AP

கடந்த 70 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்பு ஆகிய எதுவும் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். இவற்றில் கவனம் செலுத்துவதாகக் கூறி அரசியல் தலைவர்களால் மக்கள் தவறாக வழி நடத்தப்பட்டனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை நல்லாட்சிக்கு உதவும்.

சட்டப் பிரிவுகள் 370, 35ஏ! - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இழப்பால் நடக்கப் போவது என்ன?

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்குத் தன்னம்பிக்கை மற்றும் வேலைவாய்ப்பைக் கொண்டுவரும். முக்கியமாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் காஷ்மீர் இணைந்து சமத்துவ உணர்வை ஏற்படுத்தும். ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அவர்களின் அடையாளம் ஆபத்தில் இல்லை, சிதைக்கப்படவில்லை என்பதை உறுதியாக நான் கூறுவேன்.

Satya Pal Malik
Satya Pal Malik
AP

மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளால் காஷ்மீர் மக்களின் அடையாளம் முடிவடையும் என்று யாரும் கவலைப்படக் கூடாது. இந்த நடவடிக்கை மாநிலத்துக்குள் மொழி, கலாசாரம் மற்றும் அடையாளங்களை மேம்படுத்துவதற்கு உதவும்” என்று கூறியுள்ளார்.