Published:Updated:

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

டேவிட் கேரியர்
பிரீமியம் ஸ்டோரி
டேவிட் கேரியர்

நம் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க மருந்து அடித்தால், அது உற்சாகமாக டான்ஸ் ஆடியபடி போய் ஒளிந்துகொள்கிறது

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

நம் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க மருந்து அடித்தால், அது உற்சாகமாக டான்ஸ் ஆடியபடி போய் ஒளிந்துகொள்கிறது

Published:Updated:
டேவிட் கேரியர்
பிரீமியம் ஸ்டோரி
டேவிட் கேரியர்

எல்லாவற்றையும் கேலி செய்யும் இந்தத் தலைமுறை, அறிவியலையும் விட்டு வைக்கவில்லை. அந்தப் பகடியின் எதிரொலியே `இக் நோபல்.’ முக்கியமான ஆய்வுகளுக்கு நோபல் பரிசு தருகிறார்கள். `இதெல்லாம் ஒரு ஆராய்ச்சியா' என்று கேட்கும் அளவுக்கான காமெடி ஆய்வுகளுக்கு `இக் நோபல்' தருகிறார்கள். கடந்த 30 ஆண்டுகளாக விழா நடத்தி விருது வழங்குகிறார்கள். இக் நோபல் வாங்கிய ஒருவர், பிற்காலத்தில் நோபலும் வாங்கியிருக்கிறார் என்பது ஆச்சர்யம்.

இந்த ஆண்டு இக் நோபல் வாங்கிய காமெடி ஆராய்ச்சிகள் அடுத்தடுத்த பக்கங்களில்...

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

உடனடி நிவாரணம்!

ஜலதோஷமா? மூக்கடைப்பா? மூச்சுவிட சிரமமா? இதற்கெல்லாம் `ஆமாம்பா, ஆமாம்' என்பவர்களுக்கு உடனடி நிவாரணம் ஒன்றைச் சொல்கிறது, ஆல்கே செம் என்பவர் தலைமையிலான ஐரோப்பிய டாக்டர்கள் குழு ஒன்று. முழுமையான, இனிமையான தாம்பத்ய உறவு மேற்கொண்டால், அடுத்த ஒரு மணி நேரத்துக்கு மூக்கடைப்புப் பிரச்னை இருக்காதாம். ``இது எதனால் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், தைலங்களைவிட செக்ஸ் சிறந்த மருந்து'' என்கிறார்கள் இவர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

கடலுக்கு அடியில் கரப்பான் பூச்சி!

நம் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை ஒழிக்க மருந்து அடித்தால், அது உற்சாகமாக டான்ஸ் ஆடியபடி போய் ஒளிந்துகொள்கிறது. கடலுக்கு அடியில் பயணம் செய்யும் நீர்மூழ்கிக் கப்பல்களில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை என்ன செய்வது? அமெரிக்க முன்னாள் கடற்படை அதிகாரியான ஜான் முல்ரெனன் குழுவினர், நீர்மூழ்கிக் கப்பல்களில் கரப்பான் பூச்சிகளை ஒழிப்பது பற்றி ஆய்வு செய்தனர். பூச்சியியலுக்கான இக் நோபலை இதற்காகப் பெற்றனர்.

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

தலைகீழ் காண்டாமிருகம்!

ஒரு காண்டாமிருகத்தை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தூக்கிச் செல்ல வேண்டும். அப்போது அதை எப்படித் தூக்கிச் செல்வது? 'அதைக் கயிற்றில் கட்டி தலைகீழாகத் தொங்கவிட்டு தூக்கிச் செல்வதுதான் பாதுகாப்பு. பக்கவாட்டிலோ, நின்ற நிலையில் அப்படியேவோ தூக்கக்கூடாது' என சொல்கிறது ராபின் ரேட்கிளிஃப் என்பவர் தலைமையிலான சர்வதேசக் குழு ஒன்று. போக்குவரத்துக்கான இக் நோபல் வென்றது இந்தக் குழு. 'நான் ஏன்யா காண்டாமிருகத்தைத் தூக்கப் போறேன்' என்பவர்கள் அமைதியாக சிரித்துக்கொள்ளவும்.

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

சென்சார் போர்டு ஆராய்ச்சி!

ஜோர்க் விக்கர் என்பவர் தலைமையில் அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகக் குழு ஒன்று சினிமா தியேட்டர்களுக்குப் போய் விநோதமான ஆராய்ச்சி ஒன்றைச் செய்தது. படத்துக்கு `எண்ட்' கார்டு போட்டபிறகு தியேட்டருக்குள் இருக்கும் காற்றை அவர்கள் ஆராய்ந்தனர். ரசிகர்களின் வியர்வை மற்றும் மூச்சுக்காற்று வழியாக வெளியான வேதிப்பொருள்கள் அந்தக் காற்றில் கலந்திருக்கும். படத்தில் சண்டை, வன்முறை, சமூக விரோதச் செயல்கள், செக்ஸ் காட்சிகள் அதிகம் இருப்பதை இது உறுதி செய்யுமாம். எதிர்காலத்தில் இதை வைத்தே சென்சார் சர்ட்டிபிகேட் தந்துவிடலாம் என்கிற இதுவே வேதியியலுக்கான இக் நோபல் பெற்ற ஆராய்ச்சி.

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

தாடியின் பயன் என்ன?

ஆண்கள் ஏன் தாடி வளர்க்கிறார்கள்? `தங்கள் தோற்றத்தை அழகாகக் காட்டி பெண்களை ஈர்ப்பதற்காகவே தாடி பயன்படுகிறது' என்று சார்லஸ் டார்வின் சொன்னார். ஆனால், அமெரிக்காவின் உதா பல்கலைக்கழக உயிரியல்துறைப் பேராசிரியர் டேவிட் கேரியர் தலைமையில், ஒரு குழு பல ஆண்டுகள் தாடி ஆராய்ச்சி செய்தது. `சண்டை போடும்போது முகத்தில் விழும் குத்துகளால் அதிகம் அடிபடாமல் இருக்கவே, அந்தக்கால ஆண்கள் தாடி வளர்த்தார்கள்' என்பது ஆராய்ச்சியின் முடிவு. வாகனத்தின் ஷாக் அப்ஸார்பர்-போல, அடியைத் தாங்குகிறதாம் தாடி. க்ளீன் ஷேவ் செய்தால், அடி பலமாம். இதற்காக அமைதிக்கான இக் நோபல் தரப்பட்டிருக்கிறது.

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

பபுள்கம் பாக்டீரியா!

பலர் போகிற போக்கில் பாதையோரம் பபுள்கம்மைத் துப்புகிறார்கள். ஐந்து ஐரோப்பிய நாடுகளில் இப்படித் துப்பியிருக்கும் பபுள்கம்களில் இருக்கும் பாக்டீரியாவை ஆண்டுக்கணக்கில் ஆராய்ச்சி செய்தது, லெய்லா சடாரி என்பவர் தலைமையிலான குழு. `துப்பிய பபுள்கம்மை ஆராய்ச்சி செய்தால், தொற்றுநோய்களைத் தடுக்கலாம். குற்றங்களைக் கண்டுபிடிக்கலாம். இந்த பாக்டீரியாவை இன்னும் ஆராய்ச்சி செய்து குப்பைகளை மக்கச் செய்யலாம்' என்கிறார்கள் இவர்கள். இதற்காகச் சுற்றுச்சூழலுக்கான இக் நோபல் கிடைத்திருக்கிறது.

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

மோதாமல் நடக்கலாம்!

நடைபாதைகளில் கூட்டமாக நடந்துசெல்லும் பாதசாரிகள் எப்படி ஒருவர் மீது இன்னொருவர் மோதாமல் நடக்கிறார்கள்? அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகப் பேராசிரியர் அலெக்சாண்ட்ரோ கார்பெட்டா குழு இதைப் பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தது. குழுவாகச் சேர்ந்து நடப்பதால்தான் அவர்கள் மற்றவர்களுடன் மோதுவதில்லை என்பதைக் கண்டறிந்து இயற்பியலுக்கான இக் நோபல் பெற்றனர் அவர்கள். `செல்போன் பார்த்துக்கொண்டே மெதுவாக நடக்கும் சிலரால்தான் மற்றவர்கள் மோதிக்கொள்கிறார்கள்' என்ற அரிய உண்மையைக் கண்டுபிடித்து, இயக்கவியல் இக் நோபல் பெற்றார் ஹிசாஷி முரகாமி.

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

பூனை என்ன சொல்கிறது!

செல்லப்பூனை கத்துவதை `மியாவ்' என்று மட்டுமே பலர் மொழிபெயர்க்கிறார்கள். ஆனால், `ஒவ்வொரு மியாவுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு' என்கிறது, ஸ்வீடன் நாட்டின் சூஸன் ஷோட்ஸ் செய்திருக்கும் ஆராய்ச்சி. தாங்கள் வளர்க்கும் பூனையின் மியாவ் மொழியை மனிதர்கள் எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்று பல ஆண்டுகள் ஆய்வு செய்து உயிரியலுக்கான இக் நோபல் பெறுகிறார் அவர்.

இக் நோபல் - இதுவும் நோபல் பரிசுதான்!

ஊழல் செய்தால் உடல் பெருக்கும்!

பொருளாதாரத்துக்கான இக் நோபல் பரிசை பிரான்ஸ் நாட்டின் பேராசிரியர் பாவ்லோ பிளாவட்ஸ்கி பெற்றிருக்கிறார். இவர் செய்த கண்டுபிடிப்பு, `ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு, பணம் சேரச் சேர உடல் பருத்துவிடுகிறது' என்பது. சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியபோது உருவான 15 நாடுகளின் அமைச்சர்களின் புகைப்படங்களை, பல ஆண்டுகள் ஆய்வு செய்து அவர் இந்த முடிவுக்கு வந்தார். `ஒரு நாட்டில் அரசியல்வாதிகள் குண்டாக இருந்தால், அங்கே ஊழல் அதிகமாக இருக்கும்' என்கிறார் இவர்.