Published:Updated:

`தேசிய கீதத்துக்கு எழுந்திருக்க முடியாதா?' மாணவர்களைக் கொச்சையாகத் திட்டிய ஐஐடி பேராசிரியர்

சர்ச்சை வீடியோ

ஐ.ஐ.டி கரக்பூர் பேராசிரியர் சீமா, ஆன்லைன் வகுப்பில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத மாணவர்களைத் தகாத வாரத்தைகளால் திட்டியும், சாதிய வன்மத்தையும், தீண்டாமையையும் வெளிப்படுத்தி இருப்பதாக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

`தேசிய கீதத்துக்கு எழுந்திருக்க முடியாதா?' மாணவர்களைக் கொச்சையாகத் திட்டிய ஐஐடி பேராசிரியர்

ஐ.ஐ.டி கரக்பூர் பேராசிரியர் சீமா, ஆன்லைன் வகுப்பில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத மாணவர்களைத் தகாத வாரத்தைகளால் திட்டியும், சாதிய வன்மத்தையும், தீண்டாமையையும் வெளிப்படுத்தி இருப்பதாக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

Published:Updated:
சர்ச்சை வீடியோ

இந்தியா முழுவதும் அமைந்துள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகங்களில் (ஐ.ஐ.டி) ஒவ்வொரு வருடமும், சீட் கிடைக்கப்பெறாத எஸ்.சி / எஸ்.டி மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒரு வருட ஆயுத்த படிப்பு திட்டங்கள் (iit preparatory course) நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 50-150 மாணவர்கள் இதற்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். மாற்றுத்திறனாளி மாணவர்களும் இந்த திட்டத்தில் பங்குபெற்று பாடங்களைப் படித்து வருகின்றனர்.

பி.டெக் பட்டய படிப்புக்கு எஸ்.சி, எஸ்.டி வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் சேர வேண்டும் என்று நோக்கத்தில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் (iit preparatory course) திட்டத்துக்குத் தேர்வான எஸ்.டி, எஸ்.சி மற்றும் மாற்றுத்திறன் உடைய மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக ஐ.ஐ.டி பேராசிரியர்கள் ஆன்லைன் வழி வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஐ.ஐ.டி கரக்பூரில் மாணவர்களுக்கு ஆன்லைனில் ஆங்கிலப் பாடம் நடத்திய ஐ.ஐ.டி பேராசிரியர் ஒருவரின் சர்ச்சை பேச்சு வீடியோ, மூன்று பகுதிகளாக சமூக ஊடகங்களில் வெளியாகி பரவிக் கொண்டிருக்கிறது. அந்த வீடியோவை ஐ.ஐ.டி பாம்பேவைச் சேர்ந்த மாணவர் குழு வெளியிட்டிருக்கிறது.

ஐஐடி கோராக்பூர்
ஐஐடி கோராக்பூர்

மாணவர் குழு வெளியிட்டிருக்கும் மூன்று வீடியோயோக்களும் ஐ.ஐ.டி கோரக்பூர் பேராசிரியர் சீமா சிங் என்பவரை மையப்படுத்தியே வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோக்களில் பேராசிரியர் சீமா, ஆன்லைன் வகுப்பில் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காத மாணவர்களை தகாத வாரத்தைகளால் திட்டியும், ``பாரத் மாதா கி ஜெய்" என்று உச்சரிக்கவும் வற்புறுத்துகிறார். சீமாவின் பேச்சு சாதிய வன்மத்தையும், தீண்டாமையையும் வெளிப்படுத்தி இருப்பதாக கண்டனங்கள் குவிந்து வருகின்ற

முதலில் ஆன்லைன் வகுப்புகளில் சரி வர கலந்துகொள்ளாத மாணவர்களைத் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தித் திட்டுகிறார். மாணவர்களை மட்டுமில்லாமல் அவர்களின் பெற்றோரையும் தொடர்புப்படுத்தி ஆசிரியர் சீமா அவதூறாகப் பேசுகிறார். தன்னுடைய தாத்தாவின் மறைவால் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத மாணவர் ஒருவரை மிரட்டுகிறார். மேலும், தான் சொல்வதைக் கேட்காமல் போனால் அனைவருக்கும் பூஜ்யம் தான் மதிப்பெண்ணாக வழங்கப்படும் என்று மிரட்டும் சீமா, ஒருகட்டத்தில் `நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறேனோ அதைச் செய்தே தீருவேன். யாரும் என்னைத் தடுக்க முடியாது. நீங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்திடமும், சிறுபான்மையினர் நலத்துறையிடமோ சென்று என் மீது புகார் தெரிவித்துக் கொள்ளுங்கள். யாராலும் என்னைத் தடுக்க முடியாது' என்று மிரட்டுகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அச்சில் ஏற்ற முடியாத ஒரு வார்த்தையக் கொண்டு திரும்பத் திரும்பத் திட்டுகிறார். மற்றொரு வீடியோவில் மாணவர்கள் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காததால் ``வெட்கமில்லாதா ஜென்மங்களே ( shameless Creatures) உங்களால் தேசிய கீதத்திற்கு கூட 2 நிமிடங்கள் ஒதுக்கி எழுந்து நிற்க முடியவில்லையா? உங்கள் பெற்றோரைச் சொல்ல வேண்டும்" என்றும், `பாரத் மாதா கீ ஜெ' என்று சொல்லாத மாணவர் ஒருவரையும் திட்டுகிறார்.

ஐஐடி கரக்பூர் பேராசிரியர் சீமா
ஐஐடி கரக்பூர் பேராசிரியர் சீமா

மூன்று வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் பேராசிரியர் சீமாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டங்கள் குவிந்த வண்ணமாக இருக்கின்றன.

பேராசிரியர் சீமாவின் வெறுப்புப் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள கரக்பூர் ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் பூலே வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள், ``ஐ.ஐ.டி கரக்பூர் பேராசிரியர் சீமா, அவரின் சாதிய மனநிலையை மறைக்க தேசியவாதம் என்ற முகமூடியைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். உச்சநீதிமன்றமே தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்கத் தேவையில்லை என்று அறிவித்துள்ள நிலையில், சீமா மாணவர்களைக் கட்டாயப்படுத்துகிறார். சாதி ரீதியான தீண்டாமையை சீமா கையாண்டிருக்கிறார்" என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே போல் ஆசிரியரின் செயலுக்குப் பட்டியல் சமூக மக்களும், பல்வேறு கல்லூரி மாணவர்களும் தங்கள் கண்டனங்களை '#End_Casteism_In_IIT' என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆசிரியரின் செயலானது பட்டியலின மக்களின் மீதான அவரின் கோபத்தையும், வெறுப்புணர்வையும் வெளிப்படுத்துவதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

கண்டனங்கள்
கண்டனங்கள்

சம்பவம் தொடர்பாக ஐ.ஐ.டி பாம்பே மாணவ அமைப்பினர் ஐ.ஐ.டி கரக்பூர் பதிவாளர் தமல் நாத்துக்கு புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பதிலளித்த அவர் ஐ.ஐ.டி-யில் இத்தகைய செயல்களை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். புகார் தொடர்பாக முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம், என்று உறுதியளித்திருக்கிறார்.

பிரச்னை இந்திய அளவில் பூதாகரமாக வெடித்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவர்கள் ஐ.ஐ.டி மீதான தங்களின் நெடுங்கால கனவினை மனதில் வைத்து இது வரையிலும் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism