அப்படி அவர்கள் தங்கியிருந்த ஒரு பகுதி ஜப்பானின் தென்மேற்குப் பகுதியில் இருந்த ஒக்கினாவா தீவு. அந்தத் தீவில் கூடாரம் போட்டிருந்த அமெரிக்கர்களுக்கு அங்கே ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது. தீவில் வசித்த பல முதியவர்களுக்கு வயது நூறுக்கும் மேல். யாரைக் கேட்டாலும் `எனக்கு் வயது 105...’, `108...’, `110...’ என்று சொல்ல ராணுவத்தினர் மிரண்டுபோனார்கள்.

`நூறாண்டுகள் வாழ்வதெல்லாம் எங்களுக்குச் சாதாரணம்’ என்று எல்லோருமே சின்னக் கண்களை சிமிட்டிச் சிமிட்டிப் புன்னகையோடு சொல்ல, அமெரிக்கர்களுக்கு மண்டை காய்ந்துவிட்டது. `நீடித்த ஆயுளுக்குப் பின்னால் என்னமோ மர்மம் இருக்கிறது’ என்ற தேடல் நெஞ்சை அரித்தது. அவர்களின் தேடலின் இறுதியில் கண்டடைந்த விஷயம்தான் `ஈகீகய்’ (IKIGAI).

நம் எல்லாருக்குமே நீண்ட நெடுங்காலம் உயிர் வாழும் ஆசை இருக்கிறது. அந்த ஆயுட்காலத்தை மகிழ்ச்சியோடு கழிப்பதுதான் நம் லட்சியமாகவும் இருக்கிறது. அந்த மகிழ்ச்சிக்கான மாரத்தான் ஓட்டத்தில், அன்பானவர்களோடு செலவழிக்க போதிய நேரமில்லை; புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ள அவகாசமில்லை; நம் தனிப்பட்ட ஆர்வங்களை வளர்த்துக்கொள்வதைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு படைப்பாற்றல் இருக்கிறது என்பதைக்கூட மறந்துவிட்டோம். எந்நேரமும் வேலையும் பணம் சார்ந்த சிந்தனையுமாகவே வாழ்க்கையின் மிக முக்கியமான ஆற்றல் நிறைந்த நாற்பதாண்டுகளைக் கழிக்கிறோம்.

நாம் என்னதான் திட்டமிட்டாலும், முதுமை நாம் திட்டமிடுவதைபோல் அமைந்து விடுவதில்லை. வாழ்வின் எல்லையில் உடற்சோர்வும், தள்ளாடும் நடுக்கங்களும், தீராத நோய்களும், வாதையுமே நமக்கென காத்திருக்கின்றன. அதனால்தான் இன்று உலகம் முழுக்க வாழும் காலத்திலேயே மகிழ்ச்சியோடு வாழ்வதை ஊக்குவிக்கும் வாழ்க்கைமுறைகளுக்கு இளைஞர்கள் தாவுகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை முறைதான் `ஈகீகய்.’

ஜப்பானில் ஒரு சிறு தீவில் பின்பற்றப்பட்ட இந்த வாழ்க்கை முறை இன்று உலகமெங்கும் பல லட்சம் பேரால் கொண்டாடப் படுகிறது.

ஈக்-ஈ-கய்... இதில் `ஈ’ என்பதைச் சொல்லும்போது புன்னகைத்து சொல்ல வேண்டுமாம்..! ஏன் தெரியுமா... எப்போதும் மகிழ்ச்சியும் புன்னகையுமாக எப்படி வாழ்வது என்பதைத்தான் ஈகீகய் கற்றுத்தருகிறது. `ஈகீகய்’ என்றால் Reason for being. இருத்தலுக்கான நோக்கம். ஒக்கினாவா மொழியில் `ரிட்டையர்மென்ட்’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லே இல்லையாம். ஏன் தெரியுமா... அங்கே யாருமே ரிட்டையர்டு ஆவதில்லை. அங்கே மரணம்தான் ரிட்டையர்மென்ட்.

பார்ட்டி செல்லும் பையனோ பல்லுபோன பாட்டியோ உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். உழைப்பு என்றதும், பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கடனே என்று பார்க்கிற வேலை அல்ல, மனதுக்குப் பிடித்த வேலையை மனநிறைவோடு, நூறு சதவிகித ஈடுபாட்டோடு செய்வதுதான் ஈகீகய். நீங்கள் எதில் சிறந்து விளங்குகிறீர்களோ, எதை எப்போதும் செய்ய விரும்புகிறீர்களோ அதுவே உங்கள் ஈகீகய். ஒவ்வொருவருக்கும் ஒரு ஈகீகய் உண்டு. அதை எப்படிக் கண்டுபிடிப்பது... அதைக் கடைசியில் பார்ப்போம். அதற்கு முன்னால் ஈகீகய் மக்களின் வாழ்க்கை முறையில் நாம் கற்றுக்கொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் உடலின் ஒவ்வொரு பகுதியையும் அசைத்துச் செய்யும் சிறிய உடற்பயிற்சிகள் அவசியம்!

1 . உலகம் எத்தனை வேகமாக இயங்கினாலும் நாம் மிகப் பொறுமையாக வாழப் பழக வேண்டும். சவுக்கு சத்தத்தில் ஓட நாம் மாடுகள் அல்ல என்பதை மனதில் கொண்டு மன அமைதி குலையாத வேலைகளை முழுமையாக, திருத்தமாகச் செய்ய வேண்டும்.

2 . எவ்வளவு பிடித்த உணவாக இருந்தாலும் முக்கால் வயிற்றுக்கு மேல் உண்ணக் கூடாது.

3. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தை நண்பர்களுக்கும் குடும்பத்துக்கும் என ஒதுக்குவதைக் கடுமையாகக் கடைப்பிடியுங்கள். நண்பர்களுடன் உரையாட, ஆட, பாட, விளையாட என உற்சாகமாயிருங்கள்.

4. ஒவ்வொரு நாளும் உடலின் ஒவ்வொரு பகுதியையும் அசைத்துச் செய்யும் சிறிய உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

5. உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சூழலையும் புன்னகையோடு ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும், எல்லோரையும் நம்மால் மாற்றிவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்வதும், சக மனிதர் குறித்த தேவையற்ற முன்முடிவுகளைத் தவிர்த்துவிட்டு நட்போடு அரவணைத்துக் கொள்வதையும் வழக்கமாக்குங்கள்!

6. உங்களைப்போலவே இயற்கையையும் நேசிக்கக் கற்றுக்கொள்வது முக்கியம். இயற்கையை மேலும் மெருகேற்ற உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பைச் செய்யுங்கள்.

7. நமக்குக் கிடைக்கும் எல்லா விஷயங்களுக்கும் நன்றியுணர்வோடு இருப்பது மிக மிக முக்கியம். ஒக்கினவா மக்கள், அவர்கள் உண்ணும் உணவில் தொடங்கி நடக்கும் நிலம், வாகனம் ஓட்டும் ஓட்டுநர் வரை அனைத்தையும், அனைவரையும் மதித்து நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறார்கள்.

8. உலகமே கற்றுக்கொடுத்த பாடம்தான். Live the moment. எதிர்காலத்தைப் பற்றிய கவலைகள் இன்றி, கடந்த காலம் குறித்த சோகங்கள் இன்றி இப்போதைய தருணத்தைக் கொண்டாடப் பழகுங்கள்.

இவைதாம் ஈகீகய் முன்வைக்கும் எளிய வாழ்க்கை முறை. இதைச் செய்ய அமேசானில் எதையும் ஆர்டர் செய்யத் தேவையில்லை. லட்சக்கணக்கில் செலவழிக்கவும் தேவையில்லை. கொஞ்சம் பொறுமையும், நன்றியுணர்வும், அன்பும், சுய மற்றும் பொது அக்கறையும் இருந்தாலே போதும்.

உங்களைப்போலவே இயற்கையையும் நேசிக்கக் கற்றுக்கொள்வது முக்கியம். இயற்கையை மேலும் மெருகேற்ற உங்களால் முடிந்த சிறிய பங்களிப்பைச் செய்யுங்கள்.

சரி இகீகயை எப்படிக் கண்டுபிடிப்பது?

இகீகயின் முக்கியக் கூறுகள் நான்கு... திறமை, ஆர்வம், தேவை மற்றும் குறிக்கோள். அதையொட்டி நான்கு கேள்விகளை உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அதற்கான பொதுவான விடைதான் ஈகீகய்.

கேள்வி 1: `நான் என்னவாக ஆக விரும்புகிறேன்... அதைத்தான் தினமும் செய்துகொண்டிருக்கிறேனா?” (ஆர்வம்). கேள்வி 2: `நான் எதில் சிறந்து விளங்குகிறவனாக இருக்கிறேன்?’ (திறமை). கேள்வி 3: `நான் எதைச் செய்தால் எனக்கு மகிழ்ச்சியும் பணமும் கிடைக்கும்?’ (தேவை). கேள்வி 4: `நான் வாழும் உலகின் தேவை என்ன?’ (குறிக்கோள்)

இந்த நான்கு கேள்விகளுக்குமான விடைகளில் நம் வாழ்வின் நோக்கமும் பொருளும் பொதிந்திருக்கின்றன. நாம் செய்யும் வேலை நமக்கும் பலனளித்து, நாம் சார்ந்திருக்கும் மக்களுக்கும் உலகுக்கும் நன்மை அளிப்பதாகவும் இருப்பதுதான் ஈகீகய். இதைக் கண்டறிந்து, அதற்கேற்ப உங்கள் நிகழ்காலத்தை வடிவமைத்துக்கொள்ளுங்கள். நிச்சயம் ஓய்வுக்கால மகிழ்ச்சி இன்றே சாத்தியமாகும்.

ஈகீகய் வலியுறுத்துவது ஒன்றுதான்... `வாழ்நாள் முழுக்க உழைத்துக் கொண்டேயிருங்கள். ஆனால் அந்த உழைப்பு உங்களுக்கானதாக, உங்களை மகிழ்விப்பதாக இருக்கட்டும்’ என்பதுதான் அது!

- அதிஷா