Published:Updated:

நெல்லை: ரோடு ரோலர் ஏற்றி நொறுக்கப்பட்ட 7,655 மது பாட்டில்கள்! - காவல்துறை அதிரடி

சட்ட விரோதமாக அண்டை மாநிலங்களிலிருந்து மது பாட்டில்கள் கடத்திவரப்பட்டு நெல்லை மாநகரத்தில் விற்பனை செய்வதைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறைவிடப்படும் தினங்களில் சிலர் சட்ட விரோதமாக மது பாட்டில்களைப் பதுக்கிவைத்துக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இன்னும் சிலர், வெளி மாநிலங்களில் குறைந்த விலைக்கு விற்கப்படும் மது பாட்டில்களைக் கடத்திவந்து விற்பனை செய்துவந்தனர்.

அழிக்கப்பட்ட மது பாட்டில்கள்
அழிக்கப்பட்ட மது பாட்டில்கள்

சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்யும் கும்பலைப் பிடிக்க நெல்லை மாநகர காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி சட்ட விரோதமாக மது விற்பனை செய்தவர்களைப் பிடித்து அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பின்னர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த ஆண்டு முதல் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை நீதிமன்ற உத்தரவுப்படி அழிக்க காவல்துறை முடிவு செய்தது. அதனால் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 7,635 மது பாட்டில்கள் இன்று அழிக்கப்பட்டன.

அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு பணி
அதிகாரிகள் முன்னிலையில் அழிப்பு பணி

மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் முத்துலட்சுமி, பாளையங்கோட்டை வட்டாட்சியர் தாஸ்பிரியன் ஆகியோர் முன்னிலையில் மகிழ்ச்சி நகரில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், மது பாட்டில்களைத் தரையில் பரப்பி அவற்றின்மீது ரோடு ரோலர் வாகனம் ஏற்றப்பட்டது. அங்கு அழிக்கப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு 13 லட்சம் ரூபாய் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு