Published:Updated:

Lockdown-க்கு நாம் கொடுக்கும் விலை மிக அதிகம்... ஏன்? எதற்கு? எப்படி?

ஊரடங்கு
ஊரடங்கு

ஊரடங்கு Lockdown சில நேரங்களில் தேவை. ஆனால், அதுவே கொரோனாவுக்கான சிறந்த தீர்வு அல்ல. எல்லா நேரங்களிலும் நாம் வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்க முடியாது'' என்கிறார் டாக்டர் பிரப்தீப் கவுர்

மதுரை வைகை ஆற்றின் இரு கரையையும் இணைக்கும் வானவில்

முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் கொண்ட ஊரடங்கு, தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு என எத்தனை எத்தனை ஊரடங்குகள்! 'எதற்கு அனுமதி, எதற்கு அனுமதி இல்லை, எந்த நேரத்தில் அனுமதி' என விவரிக்கும் அரசாணையைப் புரிந்துகொள்ள தனி அகராதி தேவைப்படலாம். எளிய மக்களுக்கும் புரியவில்லை, போலீஸாருக்கும் புரியவில்லை. வி.ஐ.பி-க்கள் பயணங்களுக்காகச் சில மணி நேரங்கள் மட்டுமே வீதிகளில் நின்று பழகிய போலீஸார், இப்போது 100 நாள்களைத் தாண்டி நிற்கிறார்கள். அவர்களின் முரட்டு லத்தி, எப்போதும்போல எளியவர்களையே பதம் பார்க்கிறது.

இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக தொற்றுநோயியல்துறை பேராசிரியர் சுனெட்ரா குப்தா, ''ஒவ்வொரு செயலுக்கும் ஒரு விலை உண்டு. ஊரடங்குக்கு நாம் கொடுக்கும் விலை மிக அதிகம். குறிப்பாக, ஏழைகள் கொடுக்கும் விலை. வருமானத்துக்கு வழியில்லாத எவரையும் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்குமாறு சொல்ல முடியாது. அது பெரிய வன்முறை. ஊரடங்கு எந்தச் சமூகத்திலும் பெரும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்'' என்கிறார்.

மக்களின் உயிர் காக்கவே ஊரடங்கை அமல் செய்வதாகக் கூறுகிறது அரசு. மக்களுக்கு வெறும் நான்கு மணி நேர அவகாசம் கொடுத்து, மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் 21 நாள்கள் ஊரடங்கை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் பிறகு பல கட்டங்களாக அது நீட்டிக்கப்பட்டது. 100 நாள்களைத் தாண்டியும் தொடர்கிறது.

இது எப்போது முடிவுக்கு வரும்? யாருக்கும் தெரியாது. ஊரடங்கை அறிவித்த அரசுக்கும் தெரியாது. கொரோனாவை குணப்படுத்த மருந்தோ, நோயே வராமல் தடுக்க தடுப்பூசியோ கண்டுபிடித்தால் அதன் பிறகு ஊரடங்கு தேவையில்லை. ஆனால், எல்லாமே பரிசோதனைக் கட்டத்தில்தான் இருக்கின்றன. ஒருவேளை கொரோனா வைரஸ் தன் இயல்பை மாற்றிக்கொண்டு வலுவிழந்தால், அதன் பிறகு அச்சம் தேவையில்லை. ஏழு மாதங்களாகியும் அது இன்னமும் அதே வீரியத்துடன் உலகைச் சுற்றிக்கொண்டிருக்கிறது.

எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு?
எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு?

'தமிழகத்தில் ஜூலை இறுதியில் நோய்த்தொற்று உச்சத்தை அடையும்', 'செப்டம்பரில் அதிகரிக்கும்' என்றெல்லாம் கணிப்புகள் சொல்கிறார்கள். 'நவம்பர் வரை ஏழைகளுக்கான இலவச உணவு தானியங்கள் ரேஷனில் வழங்கப்படும்' என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, 'அடுத்த ஆண்டு ஜூலை வரை ரேஷனில் இலவசப் பொருள்கள் வழங்கப்படும்' என்று சொல்லிவிட்டார். இந்த அறிவிப்புகள் உணர்த்துவது ஒன்றைத்தான்... கொரோனாவுடன் நாம் நீண்டகாலம் வாழப்போகிறோம்!

கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்தியா முழுக்க எத்தனை பேருக்கு வேலை போனது என்பதற்குத் தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை. சுமார் 15 கோடிப் பேர் வேலை இழந்திருக்கக்கூடும். சேமிப்பு இல்லாத குடும்பங்கள் தடுமாறுகின்றன. இதை உறுதி செய்யும் காட்சிகள் நம் கண்ணெதிரே தெரிகின்றன. டி.வி-யை ஆன் செய்தால், தனியார் வங்கிகளின் நகைக்கடன் விளம்பரங்கள் நிறைய வருகின்றன. 'நகையை அடகு வைக்க வேண்டாம். வித்துடுங்க' என்று சில விளம்பரங்கள் அட்வைஸ் செய்கின்றன. சின்னச் சின்ன நகரங்களில் அடகுக்கடைகளில் கூட்டம் மொய்க்கிறது.

ஹோட்டல் மேனேஜராக இருந்தவர், மீன் விற்கிறார். கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர், முறுக்கு சுட்டு வியாபாரம் செய்கிறார். ஒவ்வொரு தெருமுனையிலும் திடீரென முளைத்திருக்கும் காய்கறிக் கடைகளை பலர் பார்த்திருக்க முடியும். இவர்களெல்லாம் இதற்கு முன்பு என்ன செய்துகொண்டிருந்தார்கள்? விசாரித்துப் பாருங்கள்... ஆட்டோவுக்கு மாதத் தவணை கட்ட முடியாமல் நொடித்துப் போனவராக அவர் இருக்கக்கூடும். ஏதோ ஒரு தனியார் அலுவலகத்தில் வேலையைவிட்டு அனுப்பப்பட்டவராகவும் இருக்கலாம். இன்னொரு வேதனையான விஷயம்...

வீதிகளில் தயக்கத்துடன் கைநீட்டி யாசகம் செய்பவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். இவர்கள் பிச்சைக்காரர்கள் இல்லை. வேறு கதியற்றவர்கள். ஊரடங்கின் ஆரம்ப நாள்களில் உதவி செய்த தன்னார்வலர்கள் பலர் இப்போது வீடுகளில் முடங்கிவிட்டார்கள். காரணம்? அவர்களுக்கு நன்கொடைகள் வரவில்லை. ஈர மனம் கொண்டவர்களையும் இந்த நிச்சயமற்ற சூழல், மறுதலிக்க வைத்திருக்கிறது.

எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு? - உணவின்றித் தவிக்கும் மக்கள்... தொடரும் கண்ணீர் காட்சிகள் க்ளிக் செய்க... https://bit.ly/2VGt3MI

ஊரடங்கு சென்னை
ஊரடங்கு சென்னை

இந்தக் கேள்விகளுக்குத் தெளிவுபட விளக்கம் தரும் சிறப்புக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு? - உணவின்றித் தவிக்கும் மக்கள்... தொடரும் கண்ணீர் காட்சிகள் க்ளிக் செய்க... https://bit.ly/2VGt3MI

ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது. தீயணைப்பு வாகனத்துக்கு போன் செய்து சொல்கிறோம். அந்த வாகனம் வரும்வரை அவரவர் கையில் கிடைத்த பாத்திரங்களால் தண்ணீரை ஊற்றி, தீ பரவுவதைத் தடுக்க முற்படுகிறோம். ''ஒரு தொற்றுநோய் பரவும்போது ஊரடங்கை அமல்படுத்துவது இது போன்ற தற்காலிகமான தடுப்பு முயற்சிதான்'' என்கிறார்கள் வல்லுநர்கள்.

''ஊரடங்கு சில நேரங்களில் தேவை. ஆனால், அதுவே கொரோனாவுக்கான சிறந்த தீர்வு அல்ல. எல்லா நேரங்களிலும் நாம் வீட்டுக்குள்ளேயே அடங்கியிருக்க முடியாது'' என்கிறார் டாக்டர் பிரப்தீப் கவுர். ''ஊரடங்கு என்பது கொசுவைக் கோடாரியால் கொல்வது போன்றது. கொரோனாவின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்த ஆரம்பத்தில் இது தேவைப்பட்டது. மக்கள் புரிந்துகொண்டனர். இனி நாம் வேறு தீர்வுகளைத் தேட வேண்டும்'' என்கிறார் டாக்டர் ராமசுப்பிரமணியன். ''சமூக, பொருளாதாரச் சூழலைப் பார்க்கும்போது, ஊரடங்கை நீட்டிக்கத் தேவையில்லை'' என்கிறார் டாக்டர் குகானந்தம். இவர்கள் மூவருமே, தமிழக அரசு அமைத்திருக்கும் மருத்துவ வல்லுநர் குழுவில் உள்ளவர்கள்.

> இந்தியா முழுக்க ஊரடங்கு ஏற்படுத்திய விளைவுகள் என்னென்ன?

> ஊரடங்குக்குத் தீர்வு என்ன?

இந்தக் கேள்விகளுக்குத் தெளிவுபட விளக்கம் தரும் சிறப்புக் கட்டுரையை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு? - உணவின்றித் தவிக்கும் மக்கள்... தொடரும் கண்ணீர் காட்சிகள் க்ளிக் செய்க... https://bit.ly/2VGt3MI

* Vikatan App-ல் முழுமையான கட்டுரையை வாசிக்க, கீழேயுள்ள Also Read-ன் தலைப்பை க்ளிக் செய்க.

எதற்காகத் தொடர வேண்டும் ஊரடங்கு?

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு