Published:Updated:

நாகை: மாஸ்க் அணியாமல் வந்த தவில் வித்வான்! - போலீஸ் விசாரணையின்போது மாரடைப்பால் மரணம்

மாஸ்க் அணியாத வித்வான் சீனிவாசன்
News
மாஸ்க் அணியாத வித்வான் சீனிவாசன்

நாகை நேதாஜி சாலையில் தனது டூ வீலரில் வந்தபோது நாகை நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார், சீனிவாசனை நிறுத்தி, ``ஏன் மாஸ்க் அணிந்து வரவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

தவில் வித்வான் ஒருவர் மாஸ்க் அணியாமல் டூ வீலரில் சென்றபோது, தடுத்து நிறுத்தி, போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனிவாசன்
சீனிவாசன்

நாகப்பட்டினம் திருமேனி செட்டித்தெருவில் வசிக்கும் பிரபல தவில் வித்வான் சீனிவாசன் (77). தமிழக அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவர் சுபகாரியங்களுக்கு வாசித்தால் அந்த மங்கல காரியம் சிறப்பாக நடந்தேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை. இந்நிலையில் அவர் நேற்று ( 07.01.2022 ) நாகை நேதாஜி சாலையில் தனது டூ வீலரில் வந்தபோது நாகை நகர காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸார், சீனிவாசனை நிறுத்தி, ``ஏன் மாஸ்க் அணிந்து வரவில்லை?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அப்போது சீனிவாசன் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது திடீரென மயக்கமாகி விழுந்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தத் தகவல் கிடைத்ததும் அவரின் மகன் பாலச்சந்தர், உடனடியாக வந்து தந்தைக்கு உதவியிருக்கிறார். அப்போது போலீஸார் ஏற்பாட்டில் ஒரு வாகனம் வரவழைக்கப்பட்டு, சீனிவாசனை நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சீனிவாசன் மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூற குடும்பமே சோகமாகிவிட்டது.

நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

இது குறித்து நாகை நகர காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமியிடம் பேசினோம். ``வாகன சோதனையில் மாஸ்க் அணியாமல் வந்த சீனிவாசனை போலீஸார் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறித்தியுள்ளனர். ஆனால் அப்போது சீனிவாசன் கோபப்பட்டு போலீஸாரிடம் பேசியிருக்கிறார். அந்த நேரத்தில் அவர் சுகர் மற்றும் பிபி காரணமாக மயங்கியநிலையில் அமர்ந்திருக்கிறார். உடனே அவரின் மகன் பாலச்சந்திரனுக்கு தகவல் தரவே, அவரும் வந்து தந்தையை அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். அங்கு அவர் மாரடைப்பால் இறந்திருக்கிறார். இதில் எள்ளளவும் போலீஸின் தவறு கிடையாது" என்றார்.