Published:Updated:

நீலகிரி: `வேரோடு சாய்ந்த 300 மரங்கள்; இருளில் மூழ்கிய 500 கிராமங்கள்!’ - தவிக்கும் மக்கள்

கூடலூர்
கூடலூர்

'14 தற்காலிக மீட்பு முகாம்களில் 900 பேரை தங்க வைத்து பராமரித்து வருகிறோம். மரங்களை அகற்றுவதும், மின் விநியோகத்தை சீரமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம்.'

5 வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் இடைவிடாது பெரும் மழை பெய்து வருகிறது. பலத்த காற்றுடன் கொட்டிக் தீர்க்கும் இந்தப் பெரும்மழையில் ஊட்டி, கூடலூர், குந்தா சுற்றுவட்டார பகுதிகளில் பல கிராமங்கள் நிலைகுலைந்துள்ளன.

An uprooted tree that was blocking a road near Ooty being cleared by fire and rescue service personnel.
An uprooted tree that was blocking a road near Ooty being cleared by fire and rescue service personnel.

இன்று (6.8.2020) காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியி 581 மி.மீ, கூடலூர் 335மி.மீ, அப்பர்பவானி 319 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 3,223மி.மீ மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

சாலையின் குறுக்கேயும் குடியிருப்புகள் மீதும் தற்போது வரை 300-க்கும் அதிகமான ராட்சத மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. நேற்று மரம்‌ விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இருவர் காயமடைந்தனர். மேலும் ஊட்டி அருகில் யூகாலிப்டஸ் மரம்‌ விழுந்ததில் 3 தோடர் வளர்ப்பு எருமைகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தன.

One of three Toda buffaloes that were crushed to death by falling trees in Ooty.
One of three Toda buffaloes that were crushed to death by falling trees in Ooty.

பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரம் விழுந்ததில் 500-க்கும் அதிகமான கிராமங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டு 5வது நாளாக இருளில் மூழ்கியுள்ளன.

கூடலூர் மற்றும் குந்தா பகுதிகளில் ஆபத்தான நிலையில் இருந்த மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஊட்டி கூடலூர் சாலையில் தொடர்ந்து மரங்கள் பெயர்ந்து விழுவதால் பாதுகாப்பு கருதி இந்தச் சாலையில் தற்காலிகமாகப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

An uprooted tree that was blocking a road near Ooty being cleared by fire and rescue service personnel.
An uprooted tree that was blocking a road near Ooty being cleared by fire and rescue service personnel.

மீட்பு நடவடிக்கைகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. தொடர் மழையால் பல இடங்களில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. கடுமையான குளிரும் வாட்டி வதைக்கிறது.

மீட்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, ``மீட்பு பணியில் 150 வீரர்கள் களத்தில் உள்ளனர். 14 தற்காலிக மீட்பு முகாம்களில் 900 பேரை தங்கவைத்து பரமாரித்து வருகிறோம். மரங்களை அகற்றுவதும், மின் விநியோகத்தை சீரமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறோம்" என்றார்.

An uprooted tree that was blocking a road near Ooty being cleared by fire and rescue service personnel.
An uprooted tree that was blocking a road near Ooty being cleared by fire and rescue service personnel.

நம்மிடம் பேசிய மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர் இம்மானுவேல், ``கூடலூர் புறமனவயல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித்தவித்த தம்பதியைப் பல மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டுள்ளோம். இன்று ஒரு நாளில் மட்டும்‌ மரங்கள் வீழ்ந்தது தொடர்பாக 40-க்கும் அதிகமான அழைப்புகள் வந்துள்ளன. தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் 250-க்கும் மேற்பட்டோர் இரவு பகலாகப் பணியாற்றி வருகின்றனர்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு