Published:Updated:

லேசாக வீசிய காற்று; உடைந்து தொங்கிய பேருந்து நிலையக் கூரைகள்! - அதிர்ச்சியில் ராசிபுரம் மக்கள்

ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த வியாபாரிகள், வியாபாரம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகரிலுள்ள புதிய பேருந்து நிலையத்தில், நகராட்சிக்குச் சொந்தமான கடைகள் செயல்பட்டுவருகின்றன. அவற்றில் கான்கிரீட் மேற்கூரைகள் சிதிலமடைந்து அடிக்கடி பெயர்ந்து கீழே விழுந்ததால், பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்குத் தலையில் காயங்கள் ஏற்படும் நிலை தொடர்ந்தது.

பெயர்ந்து தொங்கிய மேற்கூரை
பெயர்ந்து தொங்கிய மேற்கூரை
தோழி வீட்டுக்குச் சென்ற மாணவி மாயம்?! ; தேடிய பெற்றோருக்கு அதிர்ச்சி கொடுத்த மகள்! -நடந்தது என்ன?

கடந்த ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் கான்கிரீட் தளங்களை இடித்துக் கட்டித் தராமல் கிடப்பில் போட்டதாகச் சொல்லப்பட்டது. இதனால், ராசிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த வியாபாரிகள், வியாபாரம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேற்கொண்டு நடந்தவற்றைப் பற்றி நம்மிடம் விவரித்த சமூக ஆர்வலரான நல்வினைச் செல்வன்,

நல்வினைச்செல்வன்
நல்வினைச்செல்வன்

``கொரோனா பேரிடர் நேரத்தில் பேருந்து நிலையக் கடை வியாபாரிகள் இன்னலுக்கு ஆளானார்கள். கான்கிரீட் தளம் கட்டித்தருவதாகக் கூறி, சுமார் 3 லட்ச ரூபாய் வரை நகராட்சி நிர்வாகம், வணிகப் பெருமக்களிடம் வசூல் செய்தது. ஆனால், கடைகளுக்கு கான்கிரீட் தளம் அமைக்காமல், விலை மலிவான தகரத்தினாலான கூரைகளை நகராட்சி நிர்வாகம் அமைத்துவருகிறது. இரவு நேரத்தில் வீசிய சாதாரணக் காற்றில், அத்தனை தகர சீட்டுகளும் சிதிலமடைந்து காற்றில் தொங்கின. அன்று இரவே, புகார் அனுப்பினோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுநாள் மாலை 3 மணி அளவில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலுள்ள வாரச் சந்தைக்கு ஆய்வு செய்ய வந்த நகராட்சி மண்டல நிர்வாக இயக்குநர் சுல்தானாவிடம், இது தொடர்பாக ராசிபுரம் மக்கள் நலக்குழுத் தலைவரும், முன்னாள் நகரமன்ற உறுப்பினருமான வி.பாலு, நான், அரசியல் பிரமுகர்கள் பலரும் சேர்ந்து முறையிட்டோம். உடனடியாக சிமென்ட் கான்கிரீட்டாலான தரமான மேற்கூரை அமைத்துத் தர வேண்டுமென வலியுறுத்தினோம். காற்று இன்னும் கொஞ்சம் அதிகமாக அடித்து, அந்த தகர சீட்டுகள் பறந்து வந்திருந்தால், யார்மீதாவது விழுந்து பெரிய விபரீதம் ஏற்பட்டிருக்கும். ஆனால், நல்லவேளை அப்படி ஏதும் நடக்கவில்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது மாதிரி, உடைந்து தொங்கியதோடு நின்றுவிட்டது.

அதிகாரிகளிடம் முறையிடும் சமூக ஆர்வலர்கள்
அதிகாரிகளிடம் முறையிடும் சமூக ஆர்வலர்கள்

ராசிபுரம் நகராட்சி நிர்வாகம், தற்காலிக தகரக் கொட்டகைகளை அமைக்காமல், சிமென்ட் கான்கிரீட்டாலான மேற்கூரையை அமைத்துக் கொடுக்குமாறு, ராசிபுரம் மக்கள்நலக் குழு சார்பில் கோரிக்கை விடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டிலேயே பேருந்து நிலையத்தில் நகராட்சிக் கடைகளுக்கு மேற்கூரை அமைத்துத் தர லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தற்காலிக, மலிவான, தரமற்ற தகரக் கொட்டகையை அமைத்தது, இங்கே மட்டுமாகத்தான் இருக்கும். அதனால் நகராட்சி நிர்வாகம், வணிகக் கடைகளுக்கு மேற்கூரையில் உள்ள தரமற்ற தகர சீட்டுகளை அகற்றிவிட்டு, கான்கிரீட்டாலான தளம் அமைக்கவில்லையென்றால், பொதுமக்களையும், வணிகப் பெருமக்களையும் ஒன்று திரட்டி, ராசிபுரம் மக்கள்நலக் குழுபோராட்டத்தில் ஈடுபடும்" என்றார் ஆவேசமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு