Published:Updated:

மின்சாரம் தாக்கி இறந்த சிறுவன்; `விபத்தை மறைக்காதீர்!’ அறிவுறுத்தும் காவல்துறை!

வீட்டில் விபத்து ஏற்பட்டு இறந்தாலும் காவல்துறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டும் என திருவாரூர் விபத்து குறித்து காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்...

திருவாரூர் நேதாஜி சாலையில் அமைந்துள்ள ஒரு வீட்டில், ஹரிஷ் சிங் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். இவர்கள் ராஜஸ்தான் மாநிலம், ராஜ்கோட் பகுதியைப் பூர்வீமாகக்கொண்டவர்கள். ஹரிஷ் சிங்கின் மகன் பிரவீன் சிங். 13 வயதுடைய இந்த மாணவன் திருவாரூரிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்.

இரு தினங்களுக்கு முன்பு, தனது வீட்டின் மாடியில் மாணவன் பிரவீன் சிங் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டின் வெளியே சென்ற மின்சாரக் கம்பிமீது அவரது கை பட்டது. இதனால், அவரது உடலில் மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட பிரவீன் சிங் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்தும், இதில் பிரவீன்சிங் மரணமடந்தது குறித்தும் முறைப்படி காவல்துறையினருக்கு தெரிவிக்காமலேயே, பிரவீன் சிங்கின் உடலை இவரின் குடும்பத்தினர் தகனம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பிரவீன்சிங் மின்சாரம் தாக்கி மாடியிலிருந்து, சாலையில் வந்து விழும் காட்சி, அந்தப் பகுதியிலுள்ள ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்திருக்கிறது. இந்தக் காட்சி, வீடியோவாகப் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

`ஆன்லைன் டிரேடிங்' என ரூ.6.45 லட்சம் மோசடி; `கவனமாக இருங்கள்' என காவல்துறை அறிவுறுத்தல்!
வீடியோ
வீடியோ

இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். இது குறித்துப் பேசும் காவல்துறையினர், ``இது விபத்துதான் என்பது உறுதியாகத் தெரிகிறது. அவரின் பெற்றோர், தங்கள் மகனின் உடலைப் பிரேத பரிசோதனை செய்வதை விரும்பவில்லை. உடலைப் பெற்று இறுதிச் சடங்கு செய்ய காலதாமதம் ஆகும் என நினைத்திருக்கின்றனர். இதனால், காவல்துறையினருக்கு தெரிவிக்காமலேயே தங்கள் மகனின் உடலை அடக்கம் செய்திருக்கிறார்கள். இவர்களது உணர்வுகளையும் வேதனையையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இது தவறானது. சட்டத்துக்குப் புறம்பான செயல். சிலர் இது போன்ற தவறுகளைச் செய்துவிடுகிறார்கள். இது தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும். எனவே, விபத்தில் இறந்தாலும் காவல்துறையினருக்குத் தெரியப்படுத்த வேண்டும்" என அறுவுறுத்துகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு