Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ராஷ்ஷுக்கு இது ராசியான நேரம்!

இன்பாக்ஸ்

ராஷ்ஷுக்கு இது ராசியான நேரம்!

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ளம் யுக திரை ரசிகர்களின் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா தற்போது படு பிஸி. தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’, தமிழில் கார்த்தியுடன் ‘சுல்தான்’ என்று பல படங்களைக் கைவசம் வைத்திருக்கும் ராஷ்மிகா.

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

அடுத்து நடிக்கும் ‘மிஷன் மஞ்சு’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமாகவுள்ளார். பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளாா். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் புதிதாக வீடு வாங்கியுள்ளாா், ராஷ்மிகா. ஷூட்டிங்கின் போது ஹோட்டல்களில் தங்குவதைத் தவிர்க்கவே இந்த பிளான். ராஷ்ஷுக்கு இது ராசியான நேரம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ‘சாம்ப்’ நாய்க்காக உலகமே இணையத்தில் ஒரு தொகுப்பாளரை வாட்டி வதைக்கிறது. நியூஸ்மேக்ஸின் செய்தித் தொகுப்பாளரான கிரெக் கெல்லி, பைடனின் 12 வயது ஜெர்மன் ஷெப்பர்ட் பற்றி, ‘`அந்த நாயை யாராவது குளிப்பாட்டலாம். குப்பைத்தொட்டியிலிருந்து எடுத்து வந்தது போலிருக்கிறது. வெள்ளை மாளிகையில் எத்தனையோ நாய்கள் இருந்துள்ளன. இது மிகவும் மோசம்’’ என்று பேசியது சர்ச்சையாகியிருக்கிறது. ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களின் அதிகபட்ச ஆயுட்காலமே 13 ஆண்டுகள்தான். அதைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல், அதன் உருவத்தையும் உடலையும் நக்கல் அடித்ததற்கு இணையம் முழுக்க கண்டனக் குரல்கள் எழுந்துவருகின்றன. நா காப்போம்...நாய் காப்போம்!

ம்மூர் அரசியல்வாதிகளே ஜெர்க் ஆகும் அளவுக்கு அவ்வப்போது அவர்களின் ஆதரவாளர்கள் சில ‘சம்பவங்கள்’ செய்வார்கள். சர்ஃப் எக்செல் விளம்பரத்துக்காக கூகுள் எக்செலை பிளே ஸ்டோரில் அன் இன்ஸ்டால் செய்வது, டைம்ஸ் பத்திரிகை கருத்துக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவைத் திட்டுவது என இதுவொரு தொடர்கதைதான். குஜராத்தின் சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தை மோடி பெயரில் மாற்றிவிட்டார் அமித் ஷா மகன் ஜெய் ஷா. பிரபல எழுத்தாளரான டாம் ஹோலாந்து இதை நக்கல் செய்து ட்வீட் வெளியிட்டார். கடுப்பான பா.ஜ.க ஆதரவாளர்கள், ‘உங்கள் வேலையைப் பாருங்கள்’ என ஆரம்பித்து #boycottspiderman என ஹேஷ்டாக்கை டிரெண்ட் ஆக்கினர். நடிகர் டாம் ஹோலாண்டு வேறு, எழுத்தாளர் டாம் ஹோலாண்டு வேறு என்பதையெல்லாம் புரிந்துகொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை என்பதே நிதர்சனம். அது தெரிஞ்சா ஏன் அங்க இருக்கப்போறாங்க?

லகெங்கும் மரணதண்டனைக்கு எதிராகவும் ஆதரவாகவும் குரல்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே வருகின்றன. ‘சட்டங்களும் தண்டனைகளும் கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் குறையும்’ என்கிற ஒரு சாராரின் வாதத்துக்கு வரலாறு நெடுகிலும் சான்றுகள் இருந்ததே இல்லை. மரண தண்டனை என்பது இந்தியாவில் பின்பற்றப்படுவது போல் அமெரிக்காவில் பின்பற்றப்படுவதில்லை. மின்சார நாற்காலி, விஷவாயுக் கூடம், விஷ ஊசி என அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப் பின்பற்றப்படும் வழிமுறைகள் ஏராளம். மௌரீஸ் சம்மா என்கிற பத்திரிகையாளர் எழுதியிருக்கும் ‘Let the lord sort them’ எனும் புத்தகம், அமெரிக்காவில் 1972-ல் நிறுத்தப்பட்டு, பின் மீண்டும் நடைமுறைக்கு வந்த மரணதண்டனை பற்றிப் பேசுகிறது. ‘மரண தண்டனை தேவையா’ எனும் கேள்வியை இன்னொரு முறை ஆழமாக முன்வைக்கிறது இந்த நூல். அரசுகளுக்குக் கேட்குமா?

இன்பாக்ஸ்

‘ஹாரி பாட்டர்’ பட வரிசையில் தோன்றி ரசிகர்கள் பலரின் ஹாா்ட்டின்களை வாங்கிய பிரபல ஹாலிவுட் நடிகை எம்மா வாட்ஸன் திரைத்துறையை விட்டு முழுவதுமாக விலகப் போவதாகக் கிசுகிசுத்தது ஹாலிவுட் வட்டாரம். பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றும் இதுகுறித்த செய்தியை வெளியிடவே, மிகவும் அப்செட்டான அவர் ரசிகர்கள் தங்களது வருத்தத்தை சமூக வலைதளங்களில் கொட்டித் தீர்க்கத் தொடங்கினர். வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, எம்மா வாட்ஸன் அறிவிப்பு கொடுத்துவிட்டார். தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து மட்டுமே விலகும் அவர், தொடர்ந்து படங்களில் நடிப்பாராம். ஃபேன்ஸ் ஹேப்பி அண்ணாச்சி..!

பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய ஹூசைன் ஸெய்டியின் புத்தகமான Mafia queens of mumbai-யிலிருந்து கங்குபாய் பகுதி திரைப்படமாக வெளியாகியிருக்கிறது. 1960களில் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதிகளில் கொடிகட்டிப் பறந்த கங்குபாயின் வாழ்க்கையை மையப்படுத்தி 2011ல் எழுதப்பட்ட கதை தற்போது திரைப்படமாக வரவிருக்கிறது. ‘தேவதாஸ்’, ‘பத்மாவதி’, ‘பாஜி ராவ் மஸ்தானி’ என இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் படங்களுக்கு இந்தியா முழுக்கவே வரவேற்பு உண்டு. அலியா பட் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் ரிலீசாகி பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. வெயிட்டிங்!

ந்த உலகில் எல்லாவற்றையும் பூர்த்தி செய்ய முடியும், மனிதனின் ஆசையைத் தவிர. இந்தியாவில் கடந்த வாரம் வரை ஒரு கோடி‌யே நாற்பது லட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலக மக்கள்‌தொகைக்கு ஏற்ப‌, நிறுவனங்களும் தடுப்பூசிகளை விரைவாகத் தயாரித்து வருகின்றன. ஆனால் இதில் ஒரு சிக்கல் நீடிக்கிறது. பல ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் தங்கள் தேவைக்கு அதிகமாகவே தடுப்பூசிகளை ஆர்டர் செய்து வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, கனடா ஒரு நபருக்கு 11 தடுப்பூசிகளைக் கையகப்படுத்தியிருக்கிறது. இதனால் உலகில் அனைவருக்கும் தடுப்பூசிகளை கொண்டுசேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பகிர்ந்தளிப்போம்!

இன்பாக்ஸ்

னந்த விகடனில் வெளியாகி வாசகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற உதயச்சந்திரன் இ.ஆ.ப எழுதிய 'மாபெரும் சபைதனில்' நூல் அறிமுக விழா திருச்சியில் 06.03.21 அன்று ஹோட்டல் அஜந்தாவில் நடக்கவிருக்கிறது. களம் இலக்கிய அமைப்பு நடத்தும் இந்த விழாவில் ஆர். பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், எழுத்தாளரும் எம்.பியுமான சு.வெங்கடேசன், மருத்துவர் கு.சிவராமன், கவிஞர் நந்தலாலா உள்ளிட்ட பல ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாடவிருக்கிறார்கள். மாமனிதர்கள் போற்றும் மாபெரும் சபைதனில்!

இன்பாக்ஸ்

PASSION VISTA லைப்ஸ்டைல் இதழின் அட்டையில் இடம்பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். Most Admired Global Indians பட்டியலில் தேர்வாகி கட்டுரையும் வெளியாக, சார் சந்தோஷத்தில் திளைக்கிறார். கூடவே, கட்டான உடலுக்கு சிக்ஸ்பேக்கும் வைத்திருக்க, ஹீரோக்கள் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறாராம் இயக்குநர் மணிரத்னம். பொன்னியின் செல்வன் சீக்ரெட் சொல்லுங்க பிரதர்!

‘பாகுபலி’ கொடுத்த மாஸ் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்து மெகா படஜெட் படங்களில் நடித்துவருகிறாா் பிரபாஸ். அந்த வகையில் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கவிருக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபாஸ், அதற்காகத் தினமும் பிரத்யேகமாக வில்வித்தைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். ராவணனாக சயிஃப் அலி கான் நடிக்கிறாா். அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் படம் ரிலீஸ். ஆரம்பிக்கலாங்களா..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism