கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ்

பிரியங்காவின் ஹிப்ஹாப் நடன வகுப்பும் ஸ்டார்ட் ஆகியுள்ளதாம்.

ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ்
ப்ரியங்கா சோப்ரா - நிக் ஜோன்ஸ்
 • ‘இந்தத் தனிமை நாள்களில், மன அழுத்தத்துக்கு இடையிலும் நம் காதலை இணையிடம் வெளிப்படுத்த வேண்டும்’ எனப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் பிரியங்கா சோப்ரா. இப்போது அமெரிக்காவில் தன் கணவர் நிக் ஜோன்ஸுடன் இருக்கும் பிரியங்கா, தன் கணவர் தனக்கு உடற்பயிற்சியாளராகவும், எழுத்து நேரத்தில் நல்ல பார்ட்னராகவும் பியானோ டீச்சராகவும் ஆகியுள்ளதாகக் கூறியுள்ளார். பிரியங்காவின் ஹிப்ஹாப் நடன வகுப்பும் ஸ்டார்ட் ஆகியுள்ளதாம். கோவிட் - 19க்கு எதிரான போரில் முன்னணியில் நிற்கும் மருத்துவப் பணியாளர்களுக்கு நிதி திரட்ட, சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இணையவழி கச்சேரியிலும் பிரியங்கா பங்குபெற்றுள்ளார். பிரியமுடன் பிரியங்கா!

அனில்கபூர்
அனில்கபூர்
 • ப்போதும் ஃபிட்னஸுக்கு தம்ப்ஸ் அப் காட்டும் அனில்கபூர் இந்த ஊரடங்கில் உடலை வலுவாக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டும் வருகிறார். ‘ஆறு வருடங்களாக இதைச் செய்யவேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தோம்’ என்று இன்ஸ்டாவில் முறுக்கிய பைசெப்ஸோடு உள்ள புகைப்படத்தைப் பதிவிட்டார் அனில். அவரின் மகளும் தயாரிப்பாளருமான ரியா கபூரும் ‘ஊரடங்கு முடிவதற்குள் 25 வயதுக்குத் திரும்புவார்போல’ என்ற கமென்டுடன் தன் தந்தையின் புகைப்படத்தைப் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். ஒரு விஷயம்: அனில் கபூருக்கு இப்போது வயது 63! சமூக இடைவெளியைக் கடைப்பிடிங்க!

இன்பாக்ஸ்
 • வொர்க் ஃப்ரம் ஹோம் கலாட்டாக்களில் லேட்டஸ்ட், அமெரிக்காவின் ஏபிசி நியூஸ் நிறுவனத்தின் ரிப்போர்ட்டர் செய்தது. வில் ரீவ் என்ற அந்த நிருபர் காலை நிகழ்ச்சியான ‘குட்மார்னிங் அமெரிக்கா’-வில் செய்தியை அவ்வளவு உற்சாகமாக லைவில் பேசிவிட்டு, பிறகு மொபைலைப் பார்த்தபோதுதான் வந்து குவிந்த நோட்டிஃபிகேஷன்

  களிலிருந்து விஷயத்தை அறிந்திருக்கிறார். மேலே கோட், டை எல்லாம் அணிந்து, கீழே பேன்ட் போடாமல் பேசியிருக்கிறார். கேமரா கோணத்தில் அவர் பேன்ட் அணியாதது தெரிய... ‘ஒரே அசிங்கமாப்போச்சு குமாரு’ மொமன்டாகி

  விட்டிருக்கிறது. இவர் சூப்பர் மேனாக நடித்த கிறிஸ்டோபர் ரீவின் மகன். இது எப்பவோ எங்க சூப்பர்ஸ்டார் செஞ்சதுதான்.

டி.டி.வி.தினகரன்
டி.டி.வி.தினகரன்
 • கொரோனாத் தாக்கம் சென்னையைச் சூழ ஆரம்பிக்கும் முன்பே பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள தனது பண்ணையில் பாதுகாப்பாக செட்டில் ஆகிவிட்டார் டி.டி.வி.தினகரன். எப்போதும் க்ளீன் ஷேவுடன் இருக்கும் தினகரன், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைல், ஒருவாரம் ஷேவ் செய்யாத தாடி எனப் புதிய லுக்கில் லுங்கியோடு வீட்டுக்கு வந்த ஐடி விங் நிர்வாகிகளுக்கு ஹாய் சொல்லியிருக்கிறார். ``வீட்டுலதானேப்பா இருக்கோம். இப்பவாச்சும் புதுப்புது ஸ்டைல் பண்ணிப் பாத்துக்க வேண்டியது தான்’’ எனத் தன் டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்தபடி நிர்வாகிகளிடம் மனம்விட்டுப் பேசியுள்ளார் டி.டி.வி. தாடி வளருது...கட்சி?

பிபாஷா பாசு
பிபாஷா பாசு
 • பிபாஷா பாசு நான்கு ஆண்டுகளுக்கு முன் நடிகர் கரண் சிங் குரோவரை மணந்தார். இந்த ஆண்டு திருமண நாளன்று, ‘என் வாழ்வின் இருளை விரட்டியவள் நீ; வலிகளைப் போக்கியவள் நீ; அன்பை அறிமுகப்படுத்தியவள் நீ; உண்மையான காதலை எனக்கு ஒவ்வொரு நொடியும் காண்பிக்கிறாய். வாழும் காலம் மட்டுமல்ல, அதன் பிறகும் நான் உன்னை நேசிப்பேன். இது சத்தியம்’ என்று கசிந்துருகியிருக்கிறார் கரண். கணவருடைய போஸ்ட்டில், ‘நம் இருவருக்கும் ஹேப்பி மங்க்கிவர்சரி’ என்று ஜாலி கேலி செய்திருக்கிறார் பிபாஷா. வாழ்த்துகள் சொன்னேங்க!

இன்பாக்ஸ்
 • லாக்டௌன் காலத்தில் செலிபிரிட்டிகள் தங்களது பழைய புகைப்படங்கள், வீடியோக்கள், நினைவுகளை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தபடி உள்ளனர். நடிகை கரீனா கபூர் கௌபாய் வேடமணிந்து எடுத்திருந்த பழைய பூமராங் வீடியோ ஒன்றை, நெட்டிசன்கள் எடுத்துப்போட, அது இணையத்தில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது. மில்லியன் ஷேர்களைக் கடந்து போய்க்கொண்டிருக்கும் அந்த பூமராங் வீடியோவின் பரபரப்புக்கு நடுவில், கணவர் மற்றும் மகனோடு வீட்டுச் சுவர்களை அழகுபடுத்திக்கொண்டிருக்கிறார் கரீனா. ஜென் நிலைக்குப் போயிட்டாங்களே

இன்பாக்ஸ்
 • அதிரடி அறிவிப்பு களுக்குப் பெயர்போனவர் எலான் மஸ்க். ஆனால், தற்போதெல்லாம் அவரின் பெயர்தான் அடிவாங் குகிறது. கொரோனா பீதியில் உலகமே பயந்து வீட்டுக்குள் முடங்கியிருக்க, எலான் மஸ்க் வேறு யோசனையில் இருக்கிறார். மார்ச் ஆறாம் தேதி, கொரோனா பீதி முட்டாள் தனமானது எனத் திருவாய் மலர்ந்த மஸ்க், தற்போது ஊரடங்கில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு விடுதலை வேண்டும் என ட்விட்டரில் முழங்கியி ருக்கிறார். இதுதான் ஜனநாயகமா, இது பாசிசம் எனப் பொங்கியிருக்கிறார். எலான் மஸ்க்கின் ட்வீட்டு களைப் பார்த்த இணைய வாசிகள், இவரையா உச்சி மோந்தோம் என ஓட்டித் தள்ளுகிறார்கள். அமெரிக் காவில் மட்டும் பத்து லட்சத்துக்கும் அதிகமான வர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுக்கா சில்லறைய செதற விட்டாங்க!

ஜெயக்குமார்.
ஜெயக்குமார்.
 • மிழக அமைச்சர்களில் அதிகமான வாட்ஸப் குழுக்களில் இருப்பவர் ஜெயக்குமார். அலுவல் ரீதியான குழுக்கள் தொடங்கி பல மீனவர் சங்கங்களின் குழுக்களிலும் இருக்கிறார். டெல்லிப் பயணம் முதல் தனது அன்றாட நடவடிக்கைகளை எல்லாக் குழுக்களிலும் பகிர்கிறார். அரசுக்கான கோரிக்கைகளையும் இதன்மூலம் உடனுக்குடன் அறிந்துகொள்கிறார். அவற்றை நிறைவேற்றுகிறாரா இல்லையா என்பது வேறு கதை. அப்டேட் குமார்

 • 2007-ல் பரபரப்பைக் கிளப்பிய பறக்கும் தட்டு குறித்த காணொலிகள் உண்மைதான் என அமெரிக்காவின் பென்டகன் அமைப்பு கூற, மீண்டும் ஏலியன்கள் குறித்த விவாதங்களைக் கையிலெடுத்திருக்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். ஏலியன்கள் இருக்கிறார்களா, இல்லையா என ஒரு பக்கம் சண்டையிட்டுக் கொண்டிருக்க, அமெரிக்கா கொரோனாவைக் கையாண்ட விதத்தை திசை திருப்பத்தான் இப்படியான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள் எனக் குமுறுகின்றனர் நெட்டிசன்ஸ். ஏலியனுக்கு கொரோனா வருமா?

 • பிஎல், ஒலிம்பிக் எனப் பார்க்கும் அனைத்தையும் ஒரே கல்ப்பில் ஏப்பம் விடும் கொரோனா, ஆஸ்கரையும் விட்டுவைக்கவில்லை. ஆஸ்கர் விருதுகளுக்கு ஒரு படம் தகுதி பெற, குறைந்தபட்சம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் திரையரங்குகளில் அப்படம் திரையிடப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆண்டு அந்த விதியை நீக்கியிருக்கிறது ஆஸ்கர். மார்ச் 16ம் தேதிக்குப் பிறகு ஸ்டிரீமிங் தளங்களில் வெளியான படங்களைப் பரிந்துரைக்கு எடுத்துக்கொள்வோம் என அறிவித்திருக்கிறது. ஆனால், அவை முன்னரே திரையரங்குகளுக்கு எனத் திட்டமிட்ட படமாக இருக்க வேண்டும் என நிபந்தனை போட்டிருக்கிறது. OTT பிளாட்பாரம் வெர்சஸ் திரையரங்குகள் சர்ச்சை உலகெங்கும் வெடித்துக்கொண்டிருக்க, திரையரங்குகளுக்கு ஆஸ்கர் தன் ஆதரவை வழங்கியிருப்பது கவனத்துக்குரியது. உலகமே ஓடிடி பிடியில!

 • ஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் காவல் துணைக் கண்காணிப்பாளர் குர்திப் சிங் ரோந்துப் பணியில் இருந்தபோது தன் மருமகனான 5 வயதுச் சிறுவனோடு நடந்து வந்த இளைஞனைப் பிடித்து விசாரிக்க, அவர் மழுப்பியிருக்கிறார். ஆனால் சிறுவனோ “அதோ அந்த வீட்ல எனக்கு டெய்லி டியூஷன் எடுக்கறாங்க சார்” என்று கைகாட்ட, அங்கு சென்று விசாரித்திருக்கிறார் டி.எஸ்,பி. அந்த டீச்சரும் மழுப்ப, “டெய்லி மூணு பசங்க வர்றோம் சார்” என்றும் எக்ஸ்ட்ரா தகவலைச் சொன்னான் சிறுவன். டீச்சரை எச்சரித்த டி.எஸ்.பியிடம் “அப்டியே வீட்டுக்கு வந்து எங்கம்மாகிட்டயும் ஒரு வார்த்தை சொல்லிருங்க, அடுத்த தெருதான்” என்று வீட்டுக்கும் அழைத்துச் சென்று அம்மாவுக்கும் போலீஸ் மூலம் அறிவுரைகளை அள்ளித் தெளிக்க விட்டிருக்கிறான் சிறுவன். மணிரத்னம் படத்துலதான் இப்டிலாம் பாத்திருக்கோம்யா!