Published:Updated:

இன்பாக்ஸ்

Samantha
பிரீமியம் ஸ்டோரி
Samantha

படங்கள்: கிரண் சா

இன்பாக்ஸ்

படங்கள்: கிரண் சா

Published:Updated:
Samantha
பிரீமியம் ஸ்டோரி
Samantha

பாலின ஒருமைப்பாட்டை வலியுறுத்தும்படி புதுவகை பொம்மைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது பார்பி பொம்மைகளை உற்பத்தி செய்யும் மேட்டல் நிறுவனம். மேட்டல் நிறுவனத்தில் பார்பி போலவே `கென்’ என்கிற ஆண் பொம்மைகளும் உண்டு. இப்போது பார்பியாகவும் கென்னாகவும் விரும்பியபடி அலங்காரம் செய்துகொள்ளக்கூடிய பாலினமற்ற பொம்மைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது பார்பி. அறத்துப்பால்!

Trisha
Trisha
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறார் த்ரிஷா. ‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் நடிக்கிறார் த்ரிஷ். வெல்கம்பேக்

இன்பாக்ஸ்

செலிபிரிட்டிகள் தங்கள் பர்சனல் பக்கங்களை வெட்கப்பட்டுக்கொண்டும், முகத்தைத் தலையணையால் மறைத்துக்கொண்டும் சொல்கிற தெலுங்கு டாக் ஷோ, ‘ஃபீட் அப் வித் த ஸ்டார்ஸ்.’ இதைத் தொகுத்து வழங்கும் லஷ்மி மஞ்சு (‘காற்றின் மொழி’யில் ஜோதிகாவுக்கு பாஸாக நடித்தவர்) இதில் கலந்துகொண்ட சமந்தாவை சமீபத்தில் வெட்கப்பட வைத்துள்ளார். படுக்கையறை செட்டப்பில் நடைபெறும் இந்த ஷோவில், ‘அவருக்கு (நாக சைதன்யா) முதல் மனைவி நான் இல்லை. தலையணைதான் அவரின் முதல் மனைவி. என் கணவருக்கு நான் முத்தம் தரவேண்டும் என்று நினைத்தால்கூட, தலையணை தடுத்துவிடும்’ என்றிருக்கிறார் சமந்தா. பில்லோ வில்லி!

திராவிடர் கழகத்தின் பவள விழா மாநாட்டில் கி.வீரமணி எழுதிய ‘திராவிடர் கழக வரலாறு’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தை ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளார் வீரமணி. இப்போது விமானம், கார் என ஸ்டாலின் பயணம் செய்யும்போதும் இந்தப் புத்தகத்தை மறக்காமல் எடுத்துச்சென்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் படித்துவருகிறார்.புத்தகத்தை முழுவதும் படித்துக் கருத்து சொல்ல வேண்டும் என்று அன்புக்கட்டளை போட்டிருந்தாராம் வீரமணி. அதனால் முழுவீச்சில் புத்தகத்தைப் படித்து முடிக்கவே இந்தத் திட்டம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். நமக்கு நாமே!

இன்பாக்ஸ்

ன் அன்பு உள்ளத்தால் உலகைக் கவர்ந்திருக்கிறார் அமெரிக்க ஆசிரியர் ஒருவர். அமெரிக்காவில் கென்டக்கி மாகாணத்தில் நான்காவது கிரேடு பயிலும் பத்து வயது மாணவி, ரியான். இடுப்புக்குக் கீழ் செயலிழந்த மாற்றுத் திறனாளி மாணவியான இவரைப் பள்ளி சுற்றுலாவிற்கு ஒரு நாள் முழுக்க முதுகில் சுமந்து சென்ற அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஜிம் ஃப்ரீமேன் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறார். சுற்றுலா முடிந்ததும் “இதையெல்லாம் நான் பார்த்ததேயில்லை” எனச் சிறுமி ரியான் மகிழ்ந்தது நெகிழ்ச்சிக் கதை. மனதின் நீளம் எதுவோ...

மிழ்நாடு கிரிக்கெட் சங்கச் செயலாளராகப் பதவியேற்றிருக்கிறார் இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத். இந்திய அளவில் கிரிக்கெட் சங்கத் தலைவராகப் பெண் ஒருவர் பதவியேற்றிருப்பது இதுவே முதல்முறை. 70 வயதுக்கு மேல் உள்ளவர்கள் நிர்வாகிகளாகப் பதவியேற்க முடியாது என்கிற உச்சநீதிமன்ற ஆணையால் தன் வாரிசை சீனிவாசன் களமிறக்க, எதிர்த்துப் போட்டியிட யாரும் இல்லை. தேர்தலே இல்லாமல் வென்றிருக்கிறார் ரூபா. அந்த ஸ்டாண்டு பிரச்னை?!

ரூபா குருநாத்
ரூபா குருநாத்

பிரபுதேவா நடிப்புக்கு பிரேக் விட்டுவிட்டு மீண்டும் டைரக்‌ஷனில் தீவிரமாக இறங்குகிறார். சல்மான் - சோனாக்‌ஷி நடிக்க, பிரபுதேவா இயக்கும் தபாங் - 3 டிசம்பர் ரிலீஸ். இதற்கு அடுத்தபடியாக மீண்டும் சல்மான்கானையே இயக்குகிறார் பிரபுதேவா. இன்னொரு தபாங்கா..!

பிரபுதேவா
பிரபுதேவா

பிரிட்டனில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடி நடவடிக்கையாக அந்நாட்டு நாடாளுமன்றத்தைத் தற்காலிகமாகக் கலைத்தார். இருவாரங்கள் நாடாளுமன்றம் செயலற்றிருந்த நிலையில், இது தொடர்பான வழக்கில் பிரிட்டிஷ் உச்ச நீதிமன்றம், போரிஸின் முடிவைக் கடுமையாகக் கண்டித்து, நாடாளுமன்றத்தைக் கலைத்தது தவறு எனத் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மீண்டும் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் உயிர்பெற்றது. சட்டத்தை மீறியதற்காக போரிஸ் பதவி விலக நேரிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிற நிலையில், பெரும் அரசியல் குழப்பத்தில் தவிக்கிறது பிரிட்டன். நீதிக்குத் தலைவணங்கு

ஃபார்முலா 1 சூப்பர்ஸ்டார் மைக்கேல் ஷூமேக்கர், ஏழு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றவர். 2013-ம் ஆண்டு பனிச்சறுக்கு விளையாட்டின்போது அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட, ரேஸ் உலகம் அதிர்ச்சிக்குள்ளானது. கடந்த ஆறு ஆண்டுகளாக, பொதுவெளியில் பகிரப்படாமல் இருந்த அவரது ஹெல்த் அப்டேட்களுக்காக அவர் ரசிகர்கள் தவமிருந்தனர். சமீபத்தில் பாரீஸில் அவருக்கு ஸ்டெம் செல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதனால் அவரது உடல்நலம் சீராகிவருவதாகவும் தற்போது செய்திகள் வெளிவர, ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ‘ஷூமேக்கரை நாங்கள் நன்றாகக் கவனித்துக்கொள்கிறோம். அவர் பிரைவசியைக் கருத்தில் கொண்டு சிகிச்சை விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுவதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேன்டும்’ என அவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தலைவா மீண்டு வா!