Published:Updated:

இன்பாக்ஸ்

ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா

இன்றைய தேதியில் எல்லா வுட்களிலும் மார்க்கெட்டைத் தக்க வைத்திருக்கும் சாமர்த்தியப் பெண்.

இன்பாக்ஸ்

இன்றைய தேதியில் எல்லா வுட்களிலும் மார்க்கெட்டைத் தக்க வைத்திருக்கும் சாமர்த்தியப் பெண்.

Published:Updated:
ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா
இன்பாக்ஸ்

தேர்தல் பிரசாரத்துக்காக மதுரை வந்திருந்த பிரதமர் மோடி ரொம்ப உற்சாகமாக இருந்தார். வேட்டி சட்டையுடன் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றவர், சாமி கும்பிட்டு, கோயில் வரலாற்றை அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அன்றைய இரவு பசுமலை தாஜ் ஹோட்டலில் தங்கினார். அங்கிருந்தபடியே தூரத்தில் தெரியும் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலைக் கண்டு ரசித்தார். மறுநாள் பிரசாரக் கூட்டத்தில் பேசும்போது, மீனாட்சியம்மன் கோயில், தமிழ்ச் சங்கம், திருவிளையாடல், வைகை நதி, இலக்கியம், புண்ணிய பூமி, ஜல்லிக்கட்டு, தூங்கா நகரம் என்று மதுரையைப் பற்றி டச்சிங்காக அவர் பேசியது பலருக்கும் ஆச்சர்யம். ‘‘எம்.ஜி.ஆர் நடித்த மதுரை வீரன் படத்தை மறக்க முடியாது’’ என்று சொன்னது எல்லாவற்றையும் தாண்டிய ஹைலைட். ஜிகர்தண்டா, கறிதோசை போன்றவை மட்டும்தான் மிஸ்ஸிங். உரை எழுதிக் கொடுத்தவர் பெரிய ஆராய்ச்சியாளர்போல!

இன்பாக்ஸ்

ராஷ்மிகா மந்தனா... இன்றைய தேதியில் எல்லா வுட்களிலும் மார்க்கெட்டைத் தக்க வைத்திருக்கும் சாமர்த்தியப் பெண். இந்தியில் இரண்டு, தெலுங்கில் இரண்டு, தமிழில் இரண்டு என அரை டஜன் படங்களைக் கையிருப்பில் வைத்திருக்கிறார். அமிதாப்புடன் ‘குட்பை’ படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ராஷ்மிகாவுக்கு விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ‘‘நான் தளபதி ஃபேன்’’ என மீடியாக்களில் வான்டடாகச் சொல்லிவருகிறார் ராஷ். கவனிங்ணா!

இன்பாக்ஸ்

மாதவனை தற்போது பாலிவுட்டே கொண்டாடுகிறது. சமீபத்தில் வெளியான அவரின் ‘ராக்கெட்ரி’ படத்தின் டிரெய்லருக்கு எக்கச்சக்க வரவேற்பு. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஆறு மொழிகளில் ரிலீஸ் ஆகிறது படம். ஷாருக் கான், சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்கள். போலிக் குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்துக்காக மாதவன் மூன்று வருடங்கள் உழைத்திருக்கிறார். கேரளாவில் நம்பி நாராயணனின் வீட்டில் தங்கி, அவரைப் பற்றி வெளியே தெரியாத விஷயங்களையும் கதையில் சேர்த்து உருவாக்கியிருக்கிறார். படம் ஓ.டி.டி ரிலீஸா என எல்லோரும் கேட்க, ‘‘நிச்சயம் தியேட்டர் ரிலீஸ்தான்’’ என்று சொல்லியிருக்கிறார் மாதவன். வெயிட்டிங்!

இன்பாக்ஸ்

‘குக்கு வித் கோமாளி’ புகழ் அஸ்வின் சந்தோஷத்தில் திளைக்கிறார். புகழுக்குப் பிறகு நிறைய சினிமா வாய்ப்புகள் இவர் கதவைத் தட்டுகின்றன. ‘குட்டி பட்டாஸ்’ என்ற சிங்கிள் பாடலின் மூலம் டீன் டிக்கெட்டுகளை சமீபத்தில் வசீகரித்திருக்கிறார். சாண்டி மாஸ்டரின் வித்தியாச ஸ்டெப்ஸோடு பிகிலில் நடித்த ரெபா மோனிக்கா ஜானுடன் சேர்ந்து இவர் ரிலீஸ் செய்திருந்த வீடியோ ட்ரெண்டிங் அடித்தி ருக்கிறது. பாசிட்டிவ் கமென்ட்களால் அஸ்வின் இப்போ செம ஹேப்பி. மகிழ்ச்சி!

இன்பாக்ஸ்

சச்சின் டெண்டுல்கர்... மகாராஷ்டிராவின் இரண்டாம் அலை கொரோனாவில் பாதிக்கப்பட்டி ருக்கிறார். சமீபகாலங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டதால் மன வருத்தத்தில் இருந்தார் சச்சின். தற்போது அவர் உடல்நலம் தேற இந்தியர்கள் ட்வீட் செய்து ட்ரெண்டாக்கியதில் நெகிழ்ந்துபோயிருக்கிறார். ‘‘என்னைப் பற்றிய பிம்பத்தை மாற்றிய கொரோனாவுக்கு நன்றி. விரைவில் எதிர்கால இந்திய கிரிக்கெட்டுக்காக ஒரு பெரிய அமைப்பை உருவாக்கப் போகிறேன். தெருவோரம் விளையாடும் திறமைசாலிகளை இனம் காண்பதும் வளர்த்தெடுப்பதுமே என் லட்சியம்’’ என ஏகத்துக்கும் நெகிழ்ந்திருக்கிறார் லிட்டில் மாஸ்டர். மேன் வித் எ பிளான்!

‘‘பெண்களின் நிலை பெரும்பாலான இடங்களில் மாறிவிட்டாலும், சினிமா இன்னும் மாறாமல் இருக்கிறது’’ என்று குற்றம் சாட்டுகிறார் ஷ்ரயனா பட்டாச்சார்யா. பொருளாதார நிபுணரான இவர், கடந்த 25 ஆண்டுகளில் சூப்பர் ஹிட் அடித்த பாலிவுட் படங்களில் பெண்களின் பங்கு குறித்து ஆய்வு செய்திருக்கிறார். இது ‘Desperately Seeking Shah Rukh’ என்ற நூலாக வரவுள்ளது. ‘‘பெண்களின் எழுச்சி பற்றிப் பேசும் ‘டங்கல்’ படத்தில்கூட பெண்களைவிட ஆண்களுக்கே வசனங்கள் அதிகம். ‘பிகே’ படத்தில் 45 நிமிடக் காட்சிகளில் பெண்களுக்கு வசனமே இல்லை. பெரிய ஹீரோக்களின் படங்களில் பெண்கள் இப்படித்தான் நடத்தப்படு கிறார்கள்’’ என ஆதங்கத்துடன் சொல்கிறார் ஷ்ரயனா. கசக்கும் உண்மை!

இன்பாக்ஸ்

தமிழகத்தைச் சேர்ந்த வாள் சண்டை வீராங்கனை பவானி தேவி டோக்கியோ ஒலிம்பிக்கிற்குத் தேர்வாகியிருப்பதில் நடிகர் சசிகுமார் உற்சாகத்தில் இருக்கிறார். முன்பு இத்தாலி போட்டியில் கலந்துகொள்ள அவருக்கு சசிகுமார் உதவியதை அண்மைப் பேட்டியில் பவானி தேவியே நன்றியோடு நினைவுகூர்ந்திருந்தார். அந்த விஷயத்தை சசிகுமாரே மறந்துபோயிருந்தாராம். அன்று பெயர் தெரியாமல் உதவிய அந்தப் பெண்ணா சாதித்தது என நினைத்து ஆனந்த அதிர்ச்சி அவருக்கு. ‘ஒரு வீராங்கனையின் ஆரம்பக்கால வெற்றியில் சிறு அணிலாய் உதவிய பெருமை போதும்’ என்று சசிகுமாரும் நெகிழ்ந்திருக்கிறார். செய்ந்நன்றி!

கர்நாடக முதல்வராகப் பதவியேற்ற நாள் முதல் உள்கட்சிக் குழப்பங்களை சமாளிக்க முடியாமல் திணறுகிறார் எடியூரப்பா. அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக இணைந்தி ருப்பவர், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஈஸ்வரப்பா. ‘என் துறையில் தலையிட்டு, என்னைக் கேட்காமலேயே எல்லா எம்.எல்.ஏ-க்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்கிறார் முதல்வர். அப்புறம் நான் எதற்கு அமைச்சராக இருக்க வேண்டும்? என்னைச் செயல்பட விடாமல் முதல்வர் தடுக்கிறார்’ என கவர்னருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் ஈஸ்வரப்பா. இப்போது பா.ஜ.க தலைவர்கள் தலையிட்டு சமாதானம் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். பாஜகன்னாலே பஞ்சாயத்துதான்!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நோயாளிகளை நேரில் பார்ப்பதையும், நெருக்கமாக வந்து பரிசோதனை செய்வதையும் பல டாக்டர்கள் இப்போதும் தவிர்க்கிறார்கள். ஆனால், ‘‘உயிருக்குப் போராடும் நோயாளிகளை கருணையுடன் அணுக வேண்டியது அவசியம். டாக்டர்களும் மருத்துவ மாணவர்களும் ஷேக்ஸ்பியர் நாடகங்களைப் படித்தால், நோயாளிகள்மீது பரிவு காட்டுவார்கள்’’ என்கிறார், டாக்டர் டேவிட் ஜெஃப்ரி. எடின்பர்க் பல்கலைக்கழக மருத்துவரான இவர், ‘‘மனித உறவுகள் மற்றும் உணர்வுகள் குறித்து ஷேக்ஸ்பியர் அளவுக்கு யாரும் எழுதவில்லை. அவர் நாடகங்களைப் படித்தால், ஒரு பிரச்னையை அடுத்தவர் கண்களால் பார்க்கும் நினைப்பு எழும். மருத்துவக் கல்லூரிகளில் இந்த நாடகங்களைப் பாடமாக வைக்கலாம்’’ என்கிறார். நம் ஊரில் இப்படி யார் எழுத்துகளைப் படிக்கலாம்?

இன்பாக்ஸ்

கொரோனா இன்னும் நீண்ட காலம் அச்சுறுத்தும் என்பதைப் புரிந்துகொண்ட ஷாருக் கான், தனது தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் அலுவலகத்தை சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அமர்வது போல மாற்றியிருக்கிறார். தன் அடுத்த படமான ‘டார்லிங்ஸ்’ குறித்த அறிவிப்பையும் கூடவே வெளியிட்டிருக்கிறார். இதில் ஷாருக் ஜோடி, அலியா பட். மாஸ் கம்பேக்!

இன்பாக்ஸ்

அமெரிக்கத் துணை அதிபராகப் பதவியேற்று இரண்டு மாதங்களாக ஒரு கெஸ்ட் ஹவுஸில் தங்கிக்கொண்டு பணிகளைச் செய்துவந்தார் கமலா ஹாரிஸ். இப்போதுதான் தன் அதிகாரபூர்வ இல்லத்தில் குடியேறுகிறார். பழைமையான அந்த பங்களாவின் சீரமைப்பு வேலைகளுக்கு இவ்வளவு நாள்கள் ஆகிவிட்டதாம். குறிப்பாக கிச்சனைப் பழுது பார்க்கும்போது நேரில் போய், ‘‘எனக்குச் சமைப்பதற்கு இந்த இந்த வசதிகள் வேண்டும்’’ என விவரித்தாராம் கமலா. அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் சமைக்கவும் போகிறார் என்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள் அதிகாரிகள். ஆல்ரவுண்டர்!

கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அரசியலில் குதிக்கப்போகிறார் என நியூஸ் வரும்போதெல்லாம் ‘எனக்குத் தொழில் சினிமா’ எனக் கூறி ஒதுங்கிவிடுவார். இம்முறை கேரள சட்டசபைத் தேர்தலில் சிலரது பெயரைக் குறிப்பிட்டு வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுவருகிறார் மோகன்லால். கொல்லம் பத்தனாபுரம் தொகுதியில் இடதுசாரிக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் கணேஷ்குமார், காங்கிரஸ் கூட்டணியில் கொல்லம் சவற தொகுதியில் போட்டியிடும் தன் நண்பர் சிபு பேபி ஜான், பாலக்காட்டுத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் மெட்ரோமேன் தரன் ஆகியோரின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து மோகன்லால் வீடியோ வெளியிட்டுள்ளார். மொத்தத்தில் கேரளத்தின் மூன்று அரசியல் கூட்டணிகளையும் திருப்திப்படுத்திவிட்டார். புதுசா இருக்கே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism