பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

Nandita Das
பிரீமியம் ஸ்டோரி
News
Nandita Das

பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகை நந்திதா தாஸ், சென்னையை மையமாகக் கொண்ட, நிறப் பாகுபாட்டுக்கு எதிரான ‘விமன் ஆஃப் வொர்த்’ தன்னார்வ அமைப்புடன் 2009-ல் ‘டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற பிரசாரத்தில் இணைந்திருந்தார்.

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியப் பிரபலங்களை வைத்து டப்பிங் கொடுக்க வைப்பதுதான் தற்போதைய டிரெண்ட். இதில் லேட்டஸ்ட் வரவு, ஏஞ்சலீனா ஜோலி நடிப்பில் வெளிவர இருக்கும் ‘மேல்ஃபிசென்ட்: மிஸ்ட்ரெஸ் ஆஃப் ஈவில்’.

ஏஞ்சலீனா ஜோலி
ஏஞ்சலீனா ஜோலி

இதில் ஏஞ்சலீனா ஜோலிக்குக் குரல் கொடுத்திருப்பவர் ஐஸ்வர்யா ராய். இனி ஏஞ்சலினா என்றால் ஐஸ்வர்யாதான் டப்பிங்காம்! ஐஸுக்கே டப்பிங் கொடுக்குறவங்க நாங்க!

‘சமீபத்தில் சசிகலா’ என்று ஜெயிலில் எடுக்கப்பட்ட புகைப்படமாக ஒன்று சுற்றிவருகிறது. போகும்போது இருந்ததைவிட ஸ்லிம்மாகவும் தெளிவான முகத்துடனும் இருக்கிறார் சசிகலா. விசாரித்ததில், தினமும் உடற்பயிற்சி, வாக்கிங், நேரத்துக்கு உணவு என்று கன்ட்ரோலாக இருக்கிறாராம். அதைவிட அவர் சிறை வட்டாரத்தில் சொன்னதாகச் சொல்லப்படுவதுதான் ஹைலைட்:

சசிகலா
சசிகலா

வெளியில் இருந்து எந்த நெகட்டிவ் நியூஸும் தன் காதுக்கு வராததால் பாசிட்டிவாகவே இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். அக்கா சாப்பிட்டீங்களா அக்கா?

க்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி, முன்னாள் நகைச்சுவை நடிகரான இவர் அதிபரான பிறகும்கூட பழைய வாழ்வை மறக்கவில்லை, இரு வாரங்களுக்கு முன்னர் அரசு நிகழ்வு ஒன்றில், உலக நாடுகள் எல்லாம், ஒரு வாட்ஸ் அப் குரூப்பில் இருந்தால் எப்படியிருக்கும் என்று கற்பனையாக ஒரு வீடியோவைப் போட்டுக் காட்ட, அரங்கமே சிரிப்பில் அதிர்ந்தது, மிக வெளிப்படையாக உலக நாடுகளின் அரசியல் நிலைப்பாட்டை, நகைச்சுவையாகத் தோலுரித்த அந்த வீடியோதான் கடந்த வாரம் உலகின் வைரல் ஹிட்.

விளாடிமிர் செலென்ஸ்கி
விளாடிமிர் செலென்ஸ்கி

துன்பம் வரும் வேளையிலே...

பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகை நந்திதா தாஸ், சென்னையை மையமாகக் கொண்ட, நிறப் பாகுபாட்டுக்கு எதிரான ‘விமன் ஆஃப் வொர்த்’ தன்னார்வ அமைப்புடன் 2009-ல் ‘டார்க் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற பிரசாரத்தில் இணைந்திருந்தார். சமீபத்தில் ‘India’s Got Color’ என்ற இரண்டு நிமிட இசை வீடியோவை வெளியிட்டிருக்கும் அவர், இந்தியாவில் நிறப் பாகுபாடு எந்த அளவுக்கு வேரூன்றியுள்ளது என்பதை ‘நறுக்’ எனச் சொல்லி, இந்த மனநிலையிலிருந்து நாம் வெளியேற வேண்டும் என்பதையும் வலியுறுத்திருக்கிறார்.

நந்திதா தாஸ்
நந்திதா தாஸ்

இந்த வீடியோவில் அவருடன் ராதிகா ஆப்தே, ரத்னா பதக் ஷா, ஸ்வரா பஸ்கர், விக்ரந்த் மஸே, அலி ஃபஸல், ஷஷாங்க் அரோரா உள்ளிட்ட செலிப்ரிட்டிகளும் தோன்றுவது ஹைலைட். கறுப்புப் படை!

துவரை 11 உலக டைட்டில்கள் வென்றிருக்கும் உசேன் போல்ட்டின் உலக சாதனையை, தனது 12வது டைட்டிலை வென்றதன் மூலம் முறியடித்துள்ளார் ஆலிஸன் ஃபெலிக்ஸ். சமீபத்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்க அணியின் 4*400 மீட்டர் மிக்ஸ்டு ரிலேவில் ஓடினார் ஃபெலிக்ஸ். டீம் தங்கம் வெல்ல, உலக சாதனை ஃபெலிக்ஸின் வசம். 33 வயதாகும் ஃபெலிக்ஸ், 10 மாதங்களுக்கு முன் சிசேரியன் பிரசவத்தில் தன் மகளை ஈன்றெடுத்த ‘பச்ச உடம்பு’க்காரர் என்பதுதான் ஹைலைட். ஆறு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற, 11 முறை உலக சாம்பியன்ஷிப் பெற்ற ஃபெலிக்ஸின் ஸ்பான்ஸர்ஷிப்பை, குழந்தை பெற்ற காரணத்துக்காக ஐந்து மாதங்களுக்கு முன் 70% குறைத்தது ‘நைக்’ என்பது குறிப்பிடத்தக்கது. தாய்மையே வெல்லும்!

‘ஆசியாவில் வாழும் சிம்பன்சிகளில் அதிக வயதுள்ள சிம்பன்சியாக அறியப்படுவது டெல்லி மிருகக் காட்சி சாலையில் வாழும் ரீட்டா. 1960-ல் ஆம்ஸ்டர்டாமில் பிறந்து, 1990-ல் டெல்லிக்குக் கொண்டுவரப்பட்ட ரீட்டா இப்போது 60 வயதாகிவிட்ட நிலையில் நோய்வாய்ப்பட்டு படுத்தபடுக்கையாகிவிட்டது. அதன் நிலை கண்டு வருந்தி, பலரும் ரீட்டா விரைவில் குணமடைய வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். மிருகக் காட்சி சாலை நிர்வாகம் ரீட்டாவுக்கு நல்ல உணவும், படுக்கை வசதிகளும் தொலைக்காட்சி ஒன்றும் வைத்துக்கொடுத்திருக்கிறது.கெட் வெல் சூன்!