Published:Updated:

இன்பாக்ஸ்

ஷ்ரதா ஸ்ரீநாத்
பிரீமியம் ஸ்டோரி
ஷ்ரதா ஸ்ரீநாத்

சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்ட ஷ்ரதா ஸ்ரீநாத், ஒரு முக்கியமான ரெசல்யூஷனை எடுத்திருக்கிறார்.

இன்பாக்ஸ்

சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களில் தீவிர ஆர்வம் கொண்ட ஷ்ரதா ஸ்ரீநாத், ஒரு முக்கியமான ரெசல்யூஷனை எடுத்திருக்கிறார்.

Published:Updated:
ஷ்ரதா ஸ்ரீநாத்
பிரீமியம் ஸ்டோரி
ஷ்ரதா ஸ்ரீநாத்
 • அது, ‘நோ ஷாப்பிங்!’ ‘குளோபல் வார்மிங் பிரச்னைக்கான தீர்வுகளில் ஒன்றாக, புதிய ஆடைகளை வாங்கிக் குவித்துக்கொண்டிருப்பதை மக்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.

ஷ்ரதா ஸ்ரீநாத்
ஷ்ரதா ஸ்ரீநாத்

ஜவுளி மற்றும் சாயத் தொழில் கழிவுகளால் பூமிக்கு ஏற்படும் கேட்டைக் கட்டுப்படுத்தும் ஒரு முயற்சி அது. எனவே நான் எனது ஷாப்பிங் ஹேபிட்டுக்குக் குறுகிய காலத் தடை போட்டிருக்கிறேன்’ என்கிறார் ஷ்ரதா. சமீபத்தில் கொண்டாடிய தன் பிறந்தநாளுக்குக்கூடப் புதுத்துணி வாங்கவில்லையாம். பூமிக்காக ஒரு முடிவு!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
 • ச்சத்தில் இருக்கிறார் கேப்டன் கோலி. இந்தியாவின் கேப்டனாக 50-வது டெஸ்ட்டை நிறைவுசெய்திருக்கும் கோலி, 50வது டெஸ்ட்டில் இரட்டை சதம் (254*) அடித்து தன் அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்திருக்கிறார்.

கேப்டன் கோலி
கேப்டன் கோலி

மேலும், உலகளவில் 71.93 என அதிக வின்னிங் பர்சன்டேஜ் வைத்திருக்கும் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் சாதனையையும் முறியடிக்கவிருக்கிறார் கோலி. ஆம், கோலியின் வின்னிங் பர்சன்டேஜ் 59.18 கிங்குடா!

 • திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தி.மு.க. மீது வருத்தத்தில் இருக்கிறார். சமீபத்தில் தன்னைச் சிறையில் சந்தித்த நண்பர் ஒருவரிடம், “தி.மு.க காரங்க வெறும் கண்டனம் தெரிவிச்சதோட நிறுத்திட்டாங்களே. சிறைக்கு வந்து என்னன்னுகூடப் பார்க்கலயே?” என்று வருத்தப்பட்டுள்ளார்.

இன்பாக்ஸ்

அதற்கு அந்த நண்பர், “கனிமொழியை திஹாரில் வைத்திருந்தப்பகூடத்தான் காங்கிரஸ்காரங்க யாரும் போய்ப் பார்க்கல” என்றுள்ளார். “அப்ப காங்கிரஸ் ஆட்சி நடந்தது. நாங்க போய்ப் பார்த்திருந்தா தப்பாகியிருக்கும். இப்ப மோடி ஆட்சியால எனக்கு இவ்வளவு சிக்கல் வந்திருக்கிறது தெரிஞ்சும், தி.மு.க-வுல அமைதியா இருக்கிறாங்க. கலைஞருக்கும் எனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்நேரம் அவர் உயிரோட இருந்திருந்தா, என்னைப் பார்க்க திஹாருக்கு வந்திருப்பார்” என்று வேதனைப்பட்டிருக்கிறார் சிதம்பரம். நிழலின் அருமை

 • பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் ‘சார்பட்டா’ படத்தின் ஷூட்டிங் நவம்பரில் தொடங்குகிறது.

இன்பாக்ஸ்

இதற்கிடையே இந்தியில் ‘பிர்சா முண்டா’ படத்துக்கான திரைக்கதையை இறுதிசெய்யும் வேலைகளும் கடைசிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தப்பக்கம் ‘சார்பட்டா’ ஷூட்டிங் தொடங்கும் அதேநேரம் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தை ரிலீஸ் செய்யும் பரபரப்பிலும் இருக்கிறார் இரஞ்சித். மகிழ்ச்சி

 • மெரிக்க அதிபர் உலகம் சுற்றினால், ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் மட்டுமே பயணிப்பார். அதே போல, இந்தியத் தலைவர்களுக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இரண்டு `B777’ ரக விமானங்களை ஏர்ஃபோர்ஸ் ஒன் போல கட்டமைத்துள்ளது. ஏவுகணையால்கூட இந்த விமானங்களை வீழ்த்த முடியாது. அடுத்த ஜூலை மாதத்தில் இந்த விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவர். விமானத்தின் பெயர் ஏர்இந்தியா ஒன். இவை இந்திய விமானப்படைக் கட்டுப்பாட்டில் இருக்கும். விமானப்படை விமானிகளே இவற்றை இயக்குவார்கள். ரொம்ப செலவாகிருக்குமே!

 • ஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்’ படத்திற்குப் பிறகு, தீபிகா படுகோன் நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டார். ரன்வீர் சிங்குடன் திருமணம் முடிந்த பிறகு, தீபிகா கமிட்டாகியிருக்கும் முதல் படம் மேக்னா குல்சரின் ‘சபாக்.’

இன்பாக்ஸ்

இது, ஆசிட் தாக்குதலிலிருந்து மீண்டு வந்திருக்கும் லட்சுமி அகர்வாலின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா, ‘சபாக்’கின் கடைசி நாள் ஷூட்டிங்கில், படத்தில் ஆசிட் தாக்குதலுக்கு ஆளான மேக்கப்புக்காகத் தான் பயன்படுத்திய முகமூடியை (prosthetics) எரித்ததாகத் தெரிவித்திருக்கிறார். ‘இந்தக் கதாபாத்திரத்தின் தாக்கத்தால் என்னுள் தங்கியிருந்த வேதனையை வெளியே தள்ளுவதாக எண்ணி, நான் அதை எரித்தேன்.’ என்று உருகியிருக்கிறார்! நடிகையின் கஷ்டம் !

 • ருபக்கம் பொருளாதாரச் சரிவு பற்றி இந்தியாவே புலம்பல் மோடில் இருக்க... அதே இந்தியாவில் அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் ஒரேவாரத்தில் 19,000 கோடிக்குப் பொருள்களை விற்றுச் சாதனை படைத்திருக்கிறது. சமீபத்தில் இரு இணையதளங்களும் விழாக்கால விற்பனை நிகழ்வை நடத்தின. எப்படி சாத்தியமானது இந்த விற்பனைப்புரட்சி என்று அமேசானிடம் விசாரித்தால், `சிறுநகரங்களில் இருந்தும் கிராமங்களில் இருந்தும் பலரும் ஆன்லைனில் பொருள்கள் வாங்க ஆரம்பித்திருப்பதே இந்த வளர்ச்சிக்குக் காரணம்' என்று கூறியுள்ளனர். அம்மாடி!

 • பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் மகள் ஈரா கான், கலைத்துறைக்கு என்ட்ரி தரவிருப்பதாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்திருந்தார். நடிகையாக அறிமுகமாவார் என்று எதிர்பார்த்தபோது, அதில் ஒரு ட்விஸ்ட்.

அமீர் கானின் மகள் ஈரா கான்
அமீர் கானின் மகள் ஈரா கான்

‘இப்போதைக்கு சினிமாவுக்கு நோ. நாடகத்துறையில் பணியாற்றவிருக்கும் நான், முதன்முறையாக ஒரு நாடகத்தை இயக்கப்போகிறேன். முதலில் ஆஃப் ஸ்க்ரீன், பிறகு ஆன் ஸ்க்ரீன்’ என்கிறார் ஈரா. அவரின் சகோதரர் ஜுமைத் கானும் இந்த நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பிள்ளைகளுக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார் அமீர் கான்! ஹேப்பி ஃபாதர்!

 • ‘தில்வாலே’, `ஃபேன்’, ‘டியர் ஸிந்தகி’, ‘ரயீஸ்’, ‘ஜப் ஹேரி மெட் செஜால்’, ‘ஸீரோ’ என, கடந்த நான்கு ஆண்டுகளாக ஷாரூக் கான் நடித்த அத்தனை படங்களும் தோல்வி.

இன்பாக்ஸ்

இதனால் இன்னமும் அடுத்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் பிரேக்கில் இருக்கிறார் ஷாரூக். இதற்கிடையே ‘அடுத்த படம் என்ன?’ என ரசிகர் ஒருவர் ட்விட்டரில் கேட்க, ‘`ஹிட் ஆகக்கூடிய படமாக இருக்கும் என நம்புகிறேன்’’ என பதிலளித்திருக்கிறார் ஷாரூக் கான் பாட்ஷாவுக்கே சறுக்கிடுச்சே!

 • ஜினி, கமல், ராதிகா, ரேவதி என 80களின் நடிகர்-நடிகைகள் எல்லோரும் ஒன்றுசேரும் சந்திப்பு இந்தமுறை ரொம்பவே ஸ்பெஷல். இது, மீட் ஆரம்பித்து 10-வது ஆண்டாம். அதனால் இதை மிகவும் கோலகலமாகக் கொண்டாடவிருக்கிறார்கள். இந்தமுறை மீட் அப் நடக்க இருப்பது ஐதராபாத்தில், சிரஞ்சீவி வீட்டில். மசாலா தூக்கலா இருக்குமே!

இன்பாக்ஸ்
 • இமயமலையின் உயர்ந்த பகுதியான சியாச்சினில் பாதுகாப்புக்காக நிற்கும் ராணுவ வீரர்களின் மிகப்பெரிய பிரச்னை ஆக்ஸிஜன் தட்டுப்பாடு. அதைப்போக்க சியாச்சினிலேயே சமீபத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் ஒன்றைக் கட்டியிருக்கிறது புனேவைச் சேர்ந்த யோகேஷ் - சுமிதா என்கிற ஜோடி. முன்னாள் ராணுவ வீரரான யோகேஷ் இந்தியாவிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்தில் நான்காண்டுகளுக்கு முன்பு, தானே இந்த நிலையத்தைக் கட்டித்தருவதாக வாக்களித்திருந்தார். ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. இருந்தபோதும் தன் மனைவியோடு சேர்ந்து நிதி திரட்டி, தன் நகைகள் சொத்துகளை விற்று இந்த நிலையத்தைக் கட்டித்தந்திருக்கிறார். சூப்பர்!

 • பா.ம.க என்றாலே நம் நினைவுக்கு வருவது மாம்பழம்தான். ஆனால், அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பப்பாளிக்கு லைக்ஸ் தட்டுகிறார். ஆம்... அன்புமணிக்கு தினம் 11 மணி ஆனால் பப்பாளியின் நினைவு வந்துவிடுமாம். தட்டு நிறைய பப்பாளி சாப்பிடுவதை தினசரி வழக்கமாக வைத்திருக்கிறார் அவர். ‘`சின்னம் மாம்பழமா இருந்தாலும் நம் எண்ணம் எப்போதும் பப்பாளி மேலதான் என்கிறார்’’ சின்ன ஐயா. ஓட்டுக்கு மாம்பழம், டேஸ்டுக்கு பப்பாளி.

 • திருச்சூரைச் சேர்ந்த ஆடம் ஹரி என்கிற திருநம்பி கமர்ஸியல் விமான பைலட்டாகியுள்ளார். இந்தியாவில், திருநம்பி ஒருவர் பைலட்டானது இதுவே முதன்முறை. ‘`எல்லாரையும் போலவே என்னையும் என் குடும்பத்தினர் ஒதுக்கினர். திருநம்பி, திருநங்கைகள் மீதான சமூகப் பார்வை மாற வேண்டும். முன்பு என்னை டார்ச்சர் செய்த என் குடும்பத்தினர் இப்போது என்னை ஏற்றுக்கொள்கின்றனர். வானம் வசப்பட்டுவிட்டது’’ என்கிறார் ஆடம் ஹரி.. பறக்கலாம் மேலே மேலே