Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ஐரோப்பாவில் கால்பந்து லீக் போட்டிகள் நடப்பதுபோன்று பார்வையாளர்கள் இல்லாமல்தான் போட்டிகள் நடக்குமாம்.

இன்பாக்ஸ்

ஐரோப்பாவில் கால்பந்து லீக் போட்டிகள் நடப்பதுபோன்று பார்வையாளர்கள் இல்லாமல்தான் போட்டிகள் நடக்குமாம்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தேர்தல் தோல்விக்குப் பிறகு மிகவும் சோர்ந்திருந்த ராகுல் காந்தி, கொரோனா காலத்தில் தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார். பல துறை ஆளுமைகளிடம் உரையாடிவருகிறார். ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, ஆஷிஷ் ஜா போன்றோரைத் தொடர்ந்து இந்த வாரம் பஜாஜ் நிறுவனத் தலைவர் ராஜிவ் பஜாஜ் உடன் நிகழ்ந்த உரையாடலில், “உலகப் போர்களின்போதுகூட உலகம் இயங்கிக்கொண்டுதான் இருந்தது, இப்படி முடங்கவில்லை. மத்திய பாஜக அரசு நிலைமையை மிகவும் மோசமடையச் செய்திருக்கிறது, கொரோனா விஷயத்தில் மாநிலங்களுக்கு ஆரம்பத்திலேயே முழுச் சுதந்திரம் அளித்திருக்க வேண்டும்” எனப் புலம்பியிருக்கிறார் ராகுல். அவங்களுக்கு கேக்காது!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கரீனா கபூர் கான்
கரீனா கபூர் கான்

லாக்டெளனில் படப்பிடிப்புகள் இல்லாததால் சினிமா செலிபிரிட்டிகள் சமூக வலைதளங்களில் செம ஆக்டிவ். பாலிவுட்டின் முன்னணி நடிகையான கரீனா கபூர் கான் இன்ஸ்டாவில் சமீபத்தில் தன் ஃபேமிலி ட்ரீ ஓவியத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த ஃபேமிலி ட்ரீ கரீனாவின் குட்டி மருமகளான 3 வயது இனாயாவால் வரையப்பட்டது. இனாயாவின் புகைப்படத்துடன் ஃபேமிலி ட்ரீயைப் பதிவிட்டுள்ள கரீனா ‘என் அழகான மருமகள்’ என்று இனாயாவை மெச்சியுள்ளார். லாலாலாலாலா

ளவுத்துறை ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ள ஈஸ்வரமூர்த்திக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு பை, ஒரு வாட்டர் கேனுடன் வீட்டிலிருந்து கிளம்புவார். அதை யாரும் தூக்கிச் செல்ல அனுமதிக்க மாட்டார். மதியம் பெரும்பாலும் ஆபீஸ் மெஸ் தயிர்சாதம்தான். உளவுத்துறையில் நீண்ட அனுபவசாலி என்பதால், ஒவ்வொரு ஊரிலும் இவருக்கெனத் தனி நெட்வொர்க் உண்டு. அலுவலக வாகனம் சொந்தப் பயன்பாட்டுக்கு வேண்டாம் என அரசுக்கு எழுத்துபூர்வமாக எழுதிக்கொடுத்த காவல் அதிகாரி இவர். இந்த வாக்குறுதியைத் திருத்துறைப்பூண்டியில் டி.எஸ்.பியாகப் பணியில் இணைந்த காலம் தொட்டு இன்றுவரை அவர் கடைப்பிடிப்பது ஆச்சர்யம்தான். காக்க காக்க

த்தம் இல்லாமல் ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்கை எடுத்துமுடித்துவிட்டார் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ இயக்குநர் கோகுல். அருண்பாண்டியன் தயாரிப்பில் அவரும் அவர் மகள் கீர்த்தி பாண்டியனும் நடித்திருக்கும் இப்படத்துக்கு இயக்குநர் ராஜுமுருகன்தான் வசனம். மூச்சுத்திணறுமே!

டி.டி.வி தினகரன் கொரோனா லாக்டெளனில் பொழுதைக் கழிப்பதற்காகப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தார். பிரெஞ்சுப் புரட்சி, அமெரிக்கக் கறுப்பின மக்களின் வரலாறு, 1857க்குப் பிறகான இந்திய சுதந்திரப் போராட்டம் என வரலாற்றுப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தாராம். தற்போது சோழர்களின் வரலாறு குறித்துப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். இதற்காக, பாண்டிச்சேரியில் கடை கடையாக சோழர்களின் வரலாற்றுப் புத்தகங்களை அவர் உதவியாளர்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர். வரலாறு முக்கியம் அமைச்சரே

`கொரோனாவால நாட்டுல ஒரே பிரச்னையா இருக்கு, ஆனா உங்க காட்டுல மட்டும் காசு கொட்டுதே!'ன்னு கில்லி ஓட்டேரி நரிபோல முகேஷ் அம்பானியைப் பார்த்துக் கேட்கலாம். இரண்டு மாதங்களில் மட்டும் அத்தனை வெளிநாட்டு முதலீடுகளைக் குவித்திருக்கிறது ரிலையன்ஸ் ஜியோ. ஃபேஸ்புக்கில் தொடங்கிய லிஸ்ட் ஒவ்வொரு வாரமும் நீண்டுகொண்டே இருக்கிறது. கடைசியாக முதலீடு செய்திருப்பது அபுதாபியைச் சேர்ந்த முபாதாளா என்னும் நிறுவனம். இந்த முதலீடுகள் மூலம் கடனே இல்லாத நிறுவனமாக வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் கனவு விரைவில் நிறைவேறப்போகிறது. இது ஒருபுறம் இருக்க அமேசான் நிறுவனம் பாரதி ஏர்டெல்லில் 2 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்போகிறதாம். இதனால் இந்தச் சந்தையில் போட்டி மீண்டும் சூடுபிடிக்கப்போகிறது என்கின்றன டெலிகாம் வட்டாரங்கள். உங்க கடன் தீர்ந்துடும்...

லன் மஸ்க், டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர். தனது ஐந்தாவது குழந்தைக்கு “X AE A-12” எனப் பெயர் வைத்து அதிர்ச்சியளித்தது, தன் நிறுவனம் மூலம் முதன்முதலில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியது என்று கொரோனா கால டிரெண்டிங் ஸ்டார். கடந்த வாரம் திடீரென தன் ட்விட்டர் பக்கத்துக்கு பிரேக் விடுவதாக அறிவித்துப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார். லைம்லைட் முக்கியம் பிகிலு

பிஎல் போட்டிகளை ஆகஸ்டில் நடத்தலாமா எனக்கேட்டு அமித்ஷாவின் முடிவுக்காகக் காத்திருக்கிறார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. அமைச்சரின் அனுமதி கிடைத்தால் கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் போட்டிகள் நடத்தும் யோசனை இருக்கிறதாம். ஐரோப்பாவில் கால்பந்து லீக் போட்டிகள் நடப்பதுபோன்று பார்வையாளர்கள் இல்லாமல்தான் போட்டிகள் நடக்குமாம். வீட்ல இருந்தே விசில் போடலாம்!

மாதவன்
மாதவன்

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு ஷூட்டிங்கும் இடையிடையே நடத்தப்பட்டு, பின் நிறுத்தப்பட்ட படம் மாதவனின் ‘மாறா.’ ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்டாண்ட் அப் காமெடியன் அலெக்ஸாண்டர் பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் மலையாளத்தில் ஹிட் அடித்த ‘சார்லி’யின் ரீமேக். இப்போது படத்துக்கான தடைகளெல்லாம் உடைந்து லாக்டெளன் முடிந்ததும் ஒரே ஷெட்யூலில் படத்தின் ஷூட்டிங்கை முடிக்கவிருக்கிறாராம் இயக்குநர் திலீப். இனியும் மாறாதுல்ல!

இன்பாக்ஸ்

த்ராகண்ட் மாநிலத்தின் யு.எஸ் நகர் மாவட்டத்தில் சின்னச் சின்னத் திருட்டுகள் அதிகரிக்க... ஒரு வித்தியாசமான ஐடியா பிடித்திருக்கிறார்கள் காவல்துறையினர். அவசர வேலைக்குச் செல்பவர்களும், திருடர்களும்தான் இரவு நேரங்களில் பெட்ரோல் பங்க் வருகிறார்கள் என்று உளவுத்துறை தகவல் சொல்ல... இரவில் பெட்ரோல் நிரப்ப வருபவர்களுக்குப் புதிய விதிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இரவில் பெட்ரோல் நிரப்ப வருபவர்கள் தாங்கள் அணிந்திருக்கும் மாஸ்க் போன்றவற்றைக் கழற்றி சிசிடிவி கேமராவிற்கு முன் தங்கள் முகத்தைக் காட்டவேண்டும். மேலும், அங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் செல்போன் எண்ணிற்குத் தொடர்புகொண்டால் மட்டுமே பெட்ரோல் நிரப்ப பங்க் ஊழியர் வெளியே வருவார். கண்ணாடியத் திருப்பினா...