Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

பாலிவுட் நடிகை ஜரீன் கான் ஒரு பேட்டியில் நொந்துபோய்ப் புலம்பியிருக்கிறார்.

இன்பாக்ஸ்

பாலிவுட் நடிகை ஜரீன் கான் ஒரு பேட்டியில் நொந்துபோய்ப் புலம்பியிருக்கிறார்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
டந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மிக முக்கியமான சம்பவம், தங்கள் குடும்பம் எப்போதும் ஜெயித்துவந்த அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்றது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் தோற்ற ஸ்மிரிதி இரானி, அடுத்த ஐந்தாண்டுகள் எப்படி வேலை பார்த்து ராகுலை அங்கு தோற்கடித்தார் என்பதைப் புத்தகமாக எழுதியிருக்கிறார் பத்திரிகையாளர் ஆனந்த் விஜய். இந்தியில் ஏற்கெனவே வெளியாகிவிட்ட இந்தப் புத்தகம் ‘Dynasty to Democracy: The Untold Story of Smriti Irani’s Triumph’ என்ற பெயரில் ஆங்கிலத்தில் இந்த வாரம் வெளியாகிறது.
இன்பாக்ஸ்

‘பா.ஜ.க-வின் ஒரு தேர்தல் வெற்றிக்காக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எப்படிப் பல ஆண்டுகள் திட்டமிட்டு வேலை பார்க்கிறது’ என்பதற்கான ஆவணமாகவும் இது இருக்கிறது. அசிங்கப்படுத்திட்டாங்களே!

இன்பாக்ஸ்

ரசியல் பிரசாரங்களுக்கு இடையே கமலின் சினிமா வேலைகளும் மின்னல் வேகத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. `விக்ரம்' படத்தின் டைட்டில் அறிமுகத்திலிருந்தே அதன்மீதான எதிர்பார்ப்பு என்பது ஹை வோல்டேஜ் மின்சாரமாகத்தான் இருந்துவருகிறது. தற்போது படத்தின் வில்லன் வேடத்திற்கான தேர்வு நடந்துவருகிறதாம். 'மாஸ்டர்' படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விஜய் சேதுபதியைப் பயன்படுத்தியதுபோல், இதிலும் ஒரு பெரிய நடிகரைக் களமிறக்கவிருக்கிறாராம். அநேகமாக அது லாரன்ஸ் அல்லது பிரபுதேவாவாக இருக்கும் என்கிறார்கள். ஆரம்பிக்கலாங்களா?

இன்பாக்ஸ்

மூக வலைதளங்களிலும் இணையத்திலும் வதந்திகள் பரவும்போது, சில நம்பகமான தளங்கள் அதை ஆராய்ந்து ‘உண்மை என்ன’ என்று புலப்படுத்தும். இந்த வேலையை இப்போது ஒரு மாநில அரசே செய்யப்போகிறது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, https://factcheck.ap.gov.in என்ற பெயரில் இணையதளம் தொடங்கியிருக்கிறார். இதற்காக ட்விட்டர் கணக்கும் தொடங்கப்பட்டுள்ளது. ‘`அரசின் திட்டங்கள் பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் உள்நோக்கத்துடன் பலர் வதந்திகளைப் பரப்புகிறார்கள். மக்களுக்கு உரிய ஆதாரங்களுடன் உண்மைகளைச் சொல்வதே எங்கள் நோக்கம்’’ என்கிறார் ஜெகன். சமீபகாலமாக பா.ஜ.க-வும், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் நடத்தும் போராட்டங்களால் தடுமாறிய ஜெகன், அவர்களை எதிர்கொள்ள இந்த அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ஜெகனே தந்திரம்!

வ்வொரு ஆண்டும் காற்றில் 51 பில்லியன் பசுமை இல்ல வாயுக்கள் சேர்ந்துகொண்டே வருகின்றன. 1990களின் சூழலைவிட தற்போது 65% கார்பன் வெளியேற்றம் அதிகரித்திருக்கிறது. தன்னுடைய புதுப் புத்தகமான How to Avoid a Climate Disaster-ல் பில் கேட்ஸ் உலகின் பெரும் அச்சுறுத்தலான பருவநிலை மாற்றம் குறித்து வருத்தம் தெரிவித்திருக்கிறார். இதற்கான தீர்வாக பில் கேட்ஸ் பலவற்றை முன்வைக்கிறார். வளரும் நாடுகள் முதலில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கு மாற வேண்டும். ‘உலகின் இன்றைய மோசமான நிலைக்குக் காரணமாக இருந்த நாடுகள்தானே, அதனைக் காப்பதிலும் முன்னிலையில் இருக்க வேண்டும்’ என்பது கேட்ஸின் வாதம். அதே சமயம், தானும் தனியார் ஜெட் பயன்படுத்தும் கயமைத்தனத்தையும் ஒப்புக்கொள்கிறார். உலகில் இருக்கும் பெரும் பணக்காரர்களில் ஒரு சாரார் செவ்வாய்க்கிரகத்துக்குத் தப்பியோட வழிதேடிக்கொண்டிருக்க, இந்த பூமியில் வாழ நாம் என்ன செய்ய வேண்டும் எனப் புத்தகம் எழுதியிருக்கிறார் பில் கேட்ஸ். அந்த மனசு இருக்கே!

ர்ணன் படத்தை ரீரெக்கார்டிங்குக்கு முன் ‘ரஷ்’ பார்த்த தனுஷ், ‘`இவ்ளோ ஹெவியான சப்ஜெக்ட்டை எவ்ளோ அழகா சினிமாவாக்கியிருக்கீங்க மாரி’’ என்று கட்டியணைத்து நெகிழ்ந்துபோயிருக்கிறார். ‘`கதை ரெடி பண்ணுங்க மாரி. சீக்கிரமே இன்னொரு படம் பண்ணலாம்’’ என்று வாக்கும் கொடுத்திருக்கிறார். கர்ணனை சீக்கிரம் வரச் சொல்லுங்க!

இன்பாக்ஸ்

பாலிவுட் நடிகை ஜரீன் கான் ஒரு பேட்டியில் நொந்துபோய்ப் புலம்பியிருக்கிறார். ``என்னைப் பார்க்கிற சிலர், `நீங்க சன்னி லியோன் மாதிரி இருக்கீங்க' என்கிறார்கள். `ப்ரீத்தி ஜிந்தா மாதிரி இருக்கீங்க' என்கிறார்கள் வேறு சிலர். இன்னும் சிலரோ, `பூஜா பட் மாதிரி இருக்கீங்க' என்கிறார்கள். என்னை ஜரீன் கானாகப் பார்க்க அவர்களுக்கு ஏன் மனம் வரவில்லை?'' என்பது அவர் ஆதங்கம். டோன்ட் ஒர்ரி ஜரீன்!

இன்பாக்ஸ்

டெல்லி மெட்ரோ திட்டத்தை வடிவமைத்தவர் ஸ்ரீதரன். ‘இந்தியாவின் மெட்ரோ மனிதர்’ என்று அழைக்கப்படும் இவரை சமீபத்தில் பி.ஜே.பி சேர்த்துக்கொண்டது. இந்நிலையில், ‘எங்கள் முதல்வர் வேட்பாளர் ஸ்ரீதரன்தான்’ எனக் கேரள பி.ஜே.பி தலைவர் சுரேந்திரன் அறிவித்தார். ஆனால், ‘எங்கள் அனுமதி இல்லாமல் எப்படி இதை அறிவிக்கலாம். தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களில் இதனால் பிரச்னை ஆகிவிடாதா?’ என டெல்லி தலைமை அவரைக் குதறிவிட்டது. `ஸ்ரீதரனை முதல்வர் வேட்பாளர் என்று சொல்லவில்லை. அவர் முதல்வராக வேண்டும் என மக்கள் ஆசைப்படு கிறார்கள் என்றுதான் சொன்னேன்’ என இப்போது சமாளித்திருக்கிறார் சுரேந்திரன். வேட்பாளர் மாறினாலும் ரிசல்ட் ஒண்ணுதானே!

இன்பாக்ஸ்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கான தலைவராக இருந்து சமீபத்தில் பிரிந்து பா.ஜ.க-வுக்குப் போனவர் சுவேந்து அதிகாரி. கோபத்தில், ‘`இம்முறை அவரை எதிர்த்து நானே போட்டியிடுவேன்’’ என அறிவித்தார் மம்தா பானர்ஜி. சொன்னது போலவே நந்திகிராம் தொகுதியில்தான் மம்தா போட்டியிடுகிறார். எப்போதும் கொல்கத்தா மாநகரின் ஒரு பகுதியான பவானிபூர் தொகுதியில்தான் மம்தா நிற்பார். ஆனால், அந்தத் தொகுதி இப்போது பி.ஜே.பி-க்கு ஆதரவானதாக மாறிவிட்டது. ‘சமீப தேர்தல்களில் வாக்கு வித்தியாசம் குறைந்ததால், பயந்துபோய் மம்தா நந்திகிராம் போய்விட்டார்’ என விமர்சிக்கிறது பி.ஜே.பி. தீதியின் திட்டங்கள்!

இன்பாக்ஸ்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அருகே நல்லேந்தல் கிராமம் உள்ளது. இங்கு 1,000 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் பழைமையான ஈமக்காட்டுப் பகுதி உள்ளது. இங்கு பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய பல்வேறு பொருள்கள் கிடைத்துவருகின்றன. பழங்காலப் பாத்திரம் ஒன்று இங்கு கிடைத்துள்ளது. அந்தப் பாத்திரம் குமிழ் போன்று அழகாகக் காணப்படுகிறது. உணவு வைக்கும் பாத்திரமாகவும், வடிகட்டும் புனல் போன்றும் அதனைப் பயன்படுத்தியிருக்கலாம் எனத் தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பழந்தமிழும் அழகுக்குமிழும்!

இன்பாக்ஸ்

நிஜ உலகின் அயர்ன்மேன் எலான் மஸ்க், தன் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டார். பல வருடங்களாக அவர் கண்ட அதிவேக இன்டர்நெட் கனவு தற்போது சாத்தியமாகப் போகிறது. ஸ்டார்லிங்க் எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த இணைய சேவை இந்தியாவில் 2022-ல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான முன்பதிவும் தற்போதே தொடங்கிவிட்டது. சாட்டிலைட் மூலம் கிடைக்கப்பெறும் இந்தச் சேவை தொடக்கத்தில் 50 mb/s - 150 mb/s என்ற வேகத்தில் கிடைக்கும், அதன் பின்னர் பல மடங்கு கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கெனவே தன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் 1,000 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளார் எலான். இந்த எண்ணிக்கை 12,000 வரை செல்லும் எனத் தெரிகிறது. மற்ற செயற்கைக்கோள்களைவிட இவை பூமிக்கு அருகில் இருக்கின்றன. இதனால்தான் இந்த அதிவேக இணைய சேவை சாத்தியமாகிறது. எல்லாம் சரி, கட்டணம்? இந்த சேவையைப் பெற ஆரம்பக் கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ.7,265 செலுத்த வேண்டுமாம். கம்பெனிக்குக் கட்டுப்படியாகும்; எங்களுக்கு?

இன்பாக்ஸ்

ரசு ஊழியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்து பணிசெய்ய தடை விதித்திருக்கிறார், உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்ட கலெக்டர் சஞ்சீவ் ரஞ்சன். இப்படி கேஷுவலாக உடை அணிந்து வரும் ஊழியர்கள், சீரியஸாக அமர்ந்து வேலை பார்ப்பதில்லையாம். ``அரசு அலுவலகங்கள் கண்ணியமான தோற்றம் தருவதற்கு ஃபார்மல் உடையில் எல்லோரும் வருவது முக்கியம்'' என்கிறார் அவர். அரசு மருத்துவர்கள் உட்பட எல்லோருக்கும் இந்த உத்தரவை அமல் படுத்தியிருக்கிறார்கள். உடையிலும் உள்ளது அரசியல்!

இன்பாக்ஸ்

பா.ஜ.க-வுக்கு எதிராக கம்பு சுத்தும் அனுராக் காஷ்யப், டாப்ஸி வீடுகளுக்கு வருமானவரிச் சோதனை போனதில் ஆச்சர்யமில்லை. ஆனால், அனுராக் வீட்டுக்கு சோதனைக்குப் போன அதிகாரிகள், அவர் வீட்டு டிவிடி லைப்ரரி கலெக்‌ஷனைப் பார்த்து வாயடைத்துப்போனார்களாம். `சம்பாதிப்பதில் முக்கால்வாசிப் பணம், ஒரிஜினல் டிவிடிக்கள் வாங்கவே காலியாகிறது'' என முன்பு அனுராக் சொன்ன வீடியோவை இப்போது ரீஷேர் செய்து பா.ஜ.க-வைக் கலாய்க்கிறார்கள் அனுராக் ரசிகர்கள்! எஞ்சினது இவ்ளோதான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism