பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

`விஜய் 64’ படத்தின் ஷூட்டிங் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

டிகை கத்ரீனா கைஃப், தொழில்முனைவோர் ஆகியிருக்கிறார். ‘கே பியூட்டி’ என்ற தனது காஸ்மெடிக் பிராண்டை அறிமுகப் படுத்திருக்கும் அவர், அதற்கான கேம்பைனுக்காக, சாய்னா நேவால் உள்ளிட்ட இந்தியா முழுக்க பல ஆளுமைப் பெண்களை ஒருங்கிணைத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கத்ரீனா கைஃப்
கத்ரீனா கைஃப்

அதில் நயன்தாராவும் ஒருவர். ‘தன் கடுமையான பணிகளுக்கு இடையேயும், இந்த வீடியோ வுக்காக மும்பை வந்த அழகிய, தென்னிந்திய சூப்பர் ஸ்டாருக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார் கேத்ரினா. மேலும், ஷூட் இடைவேளையின் போது தானும் நயன்தாராவும் பேசிக்கொண்டி ருக்கும் க்யூட் வீடியோவையும் வெளியிட்டார். தொழிலதிபர் அவதாரம்!

சாதனை மேல் சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது கோலி அண்ட் கோ. தொடர்ந்து 11 டெஸ்ட் தொடர்களை இந்தியாவில் இந்திய அணி வென்று சாதனை படைத்திருக்கிறது. இதற்கிடையே டெஸ்ட் அணியில் இடமே இல்லை எனப் புறக்கணிக்கப்பட்ட ஹிட்மேன் ரோஹித் இந்த சீரிஸில் மட்டும் 500 ரன்களுக்கு மேல் அடித்து ஓப்பனிங் ஸ்லாட்டை உறுதிசெய்துவிட்டார். கலக்குங்க பாய்ஸ்!

9 வயதில் கால்களில் கட்டி ஏற்பட்டு ஒருகாலை இழந்தவர் கேரளாவைச் சேர்ந்த நீரஜ் ஜார்ஜ் பேபி. தன் 32 வயதில் ஒற்றைக் காலுடன் செயற்கைக் கால் உதவியெல்லாம் இல்லாமல் கிளிமஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். கால்களை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் பாரா பாட்மின்டன் போட்டிகளில் சர்வதேசப் பதக்கங்களை வென்ற நீரஜின் உறுதிக்குப் பணிந்திருக்கிறது கிளிமஞ்சாரோ. ‘‘மாற்றுத்திறனாளிகள் தங்கள் மனத்தடைகளை நீக்கி எதையும் சாதிக்க முடியும் என்கிற நம்பிக்கையை விதைக்க வேண்டும்’’ என்று தன் பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார் நீரஜ். ஆல் இஸ் வெல்!

ரபர அரசியல் பணிகளுக்கிடையேயும்கூட, குழந்தைகளைக் கண்டால் குஷியாகிவிடுகிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். தன்னைச் சந்திக்க வருபவர்களில், யாரேனும் குழந்தையோடு வந்திருந்தால், பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தாலும் நிறுத்திவிட்டு அவர்களை அழைத்துப் பேசி அனுப்புகிறார். சமீபத்தில் தன் குழந்தையின் பிறந்தநாளுக்காக தொண்டர் ஒருவர் திருமாவைச் சந்திக்க வந்திருக்கிறார். கூட்டமாக இருப்பதைப் பார்த்ததும் குழந்தை அழ, எல்லாரையும் வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு அந்தக் குடும்பத்தோடு கொஞ்சநேரம் செலவழித்து குழந்தை அழுகையை நிறுத்தியபிறகு கேக் வெட்டி ஊட்டியிருக்கிறார் திருமா. குழந்தை மனசு!

`விஜய் 64’ படத்தின் ஷூட்டிங் பரபரப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. சென்னையில் முதல் ஷெட்யூலை முடித்துவிட்ட டீம் அடுத்து டெல்லி பறக்கிறது. டெல்லியில்தான் விஜய் - விஜய்சேதுபதி மோதல் காட்சிகள்படமாக்கப்பட விருக்கின்றன. தெறிக்கவிடப்போறாங்க!

விஜய்
விஜய்