Published:Updated:

இன்பாக்ஸ்

Nazriya
பிரீமியம் ஸ்டோரி
Nazriya

‘தக தக தைய தைய தையா’ என ‘உயிரே’ படத்தில் ஷாருக் கானுடன் டிரெயினில் ஆட்டம் போட்ட மலைக்கா அரோராவை நினைவிருக்கா?

இன்பாக்ஸ்

‘தக தக தைய தைய தையா’ என ‘உயிரே’ படத்தில் ஷாருக் கானுடன் டிரெயினில் ஆட்டம் போட்ட மலைக்கா அரோராவை நினைவிருக்கா?

Published:Updated:
Nazriya
பிரீமியம் ஸ்டோரி
Nazriya

மீபத்தில் 46-வது பிறந்தநாளை கரிஷ்மா, கரீனா, கரன் ஜோஹர் எனத் தன் நெருங்கிய ஸ்டார் வட்டத்துடன் கொண்டாடியிருந்தார். நடிகை, மாடல், வீடியோ ஜாக்கி, டான்சர் என்று கரியரிலும், திருமணம், விவாகரத்து, குழந்தை என பர்சனல் லைஃபிலும் நிறைய ஏற்ற இறக்கங்களைப் பார்த்துவிட்ட மலைக்கா, 20 வருடங்களுக்கு முன்னால் இருந்த அதே ஒல்லி பெல்லியாகத்தான் இருக்கிறார். எந்தச் சூழ்நிலையிலும் ஒருநாள்கூட உடற்பயிற்சி செய்ய மலைக்கா மறக்காததுதான் இதற்குக் காரணம். மலைக்க வைக்கும் மலைக்கா

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இன்பாக்ஸ்

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதில் இசைஞானி செம ஸ்மார்ட். எப்போதுமே அப்டேட்டட் மொபைல் போன்களைப் பயன்படுத்தும் இளையராஜா தற்போது ஐபோன் 11 ப்ரோ மாடலைப் பயன்படுத்துகிறார். இந்த போனின் விலை ஒரு லட்சம் ரூபாய். ராஜா கையில் ஆப்பிள்!

டாக்டர் பட்டம் வாங்கும் முனைப்பில் இருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உலக இண்டிபெண்டன்ட் இசை தொடர்பாக ஆராய்ச்சி செய்துவருகிறார். இந்தியாவில் இப்படி ஒரு தலைப்பில் பிஹெச்.டி செய்யும் ஒரே நபர் ஆதிதானாம். குட்டி பாரதிக்கு பாரதி பல்கலை!

Aadhi
Aadhi

னநலப் பிரச்னைகளால், கரியரின் உச்சத்தில் இருக்கும்போது விளையாட்டிலிருந்து விலகுவது தொடர்ந்துவருகிறது. மார்க்கஸ் ட்ரெஸ்கோதிக், மேட் பிரியர் வரிசையில் சமீபத்தில் பெண்கள் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் சாரா டெய்லர் மனநலப் பிரச்னையால் ஓய்வை அறிவித்தார். இப்போது ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல் மனநலப் பிரச்னைகளால் கிரிக்கெட்டிலிருந்து பிரேக் எடுத்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முதல்நாள் தான் 28 பந்துகளில் 62 ரன்கள் அடித்து மிரட்டியிருந்தார் மேக்ஸ்வெல். கடந்து செல்லக் கற்க!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

க்டிவிட்டி பேண்ட் நிறுவனமான FITBIT தங்களுடைய கருவிகளைப் பயன்படுத்தும் 18 நாடுகளைச் சேர்ந்த பயனாளிகளின் தகவல்களைக் கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் இந்தியர்கள்தான் இருப்பதிலேயே சோம்பேறித்தனமானவர்கள் (least active) என்றும் இந்தியர்கள் முறையாக தூக்கமற்றவர்களாகவும் சரசரியாக ஒரு இந்தியர் நாள் ஒன்றுக்கு 6,533 ஸ்டெப்ஸ் நடக்கிறார்கள், இது உலக சராசரியைவிட 3,000 ஸ்டெப்கள் குறைவு என்கிறது ஃபிட்பிட்! இந்தியாவின் இளைஞர்கள் (18-25) ஒவ்வொரு நாளும் சராசரியாக இரவு 12:33க்குப் பிறகுதான் தூங்குகிறார்களாம்! வாக்கிங் நல்லது!

மீபத்தில் கலந்துகொண்ட விழா ஒன்றில் தொண்டர் ஒருவர் மோதிரத்தோடு வர, கையில் அணியாமல் வாங்கி அருகிலிருப்பவரிடம் கொடுத்திருக்கிறார் வைகோ. தொண்டர் முகம் வாட, உடனிருந்தவர்கள் வைகோவின் தங்கமான பாலிசி பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். 1975-ல் மிசாவில் கைதாகிச் சிறைச்சாலைக்குச் செல்லும்போது, ‘கைதிகள் ஆபரணம் அணிந்திருக்கக்கூடாது’ என்ற சிறை விதிகளுக்குக் கட்டுப்பட்டுத் தனது மோதிரம், செயினைக் கழற்றிவைத்தவர்தான்.... அதன்பிறகு தங்கம் உள்ளிட்ட எந்தவகை ஆபரணத்தையும் அணிந்துகொள்ளும் பழக்கத்துக்கே ஒட்டுமொத்தமாக தனக்குத்தானே தடா போட்டுக்கொண்டார். நேரம் பார்ப்பதற்கு மட்டும் கைக்கடிகாரம் அணிகிறார். மற்றபடி கட்சித் தொண்டர்கள் அன்போடு அளிக்கும் பரிசுப் பொருள்களை முதலில் மறுத்துவிட்டு, பிறகு அவர்கள் வற்புறுத்தினால் பணமாக மாற்றிக் கட்சி நிதியில் சேர்த்துவிடுகிறார் வைகோ. நீங்களே தகதகன்னு மின்னுறீங்களே!

தினமும் வடிவேலுவின் காமெடி பார்த்துவிட்டுத் தூங்கப்போவதுதான் எடப்பாடி பழனிசாமியின் தினசரி வழக்கம். முதல்வரான பிறகும் தொடர்ந்த இந்தப் பழக்கம் சமீப மாதங்களில் கட் ஆகிவிட்டதாம். சமீபத்தில் திருச்சி சென்றுவிட்டு வரும் வழியில் சக அமைச்சர்களிடம், ஓய்வே இருப்பதில்லை என்பதைப் பற்றிப் புலம்பியவர் ‘எங்கப்பா இப்பலாம் வடிவேலு காமெடிகூட பார்க்க டைமில்ல’ என்று கூறி வருத்தப்பட்டிருக்கிறார். முதல்வனே... வனே...!

Nazriya
Nazriya

ந்தாண்டுகளுக்குப் பிறகு ஃபகத் - நஸ்ரியா ஜோடி மீண்டும் திரைக்கு வருகிறது. 2014-ல் இந்த ஜோடி மணமுடித்துக்கொண்ட பிறகு நஸ்ரியா திரையுலகை விட்டே விலகி இருந்தார். சென்ற ஆண்டுதான் ‘கூடே’ படத்தின் மூலம் பிருத்விராஜோடு இணைந்து நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். அதற்குப் பிறகு படம் எதிலும் கமிட் ஆகாமல் இருந்த நஸ்ரியா இப்போது கணவர் ஃபகத் பாஸிலோடு ‘டிரான்ஸ்’ என்கிற மலையாளப் படத்தில் இணைகிறார். அடுத்த மாதம் வெளியாகும் இந்தப்படத்தில் கௌதம் மேனனும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்! வெல்கம் பேக்!

இன்பாக்ஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism