Published:Updated:

இன்பாக்ஸ்

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
கீர்த்தி சுரேஷ்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவத்திலும் மருந்து இருப்பதை அரசு பரிசீலிக்காதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது.

ட்விட்டரின் முக முக்கிய பிரச்னை போலி அக்கவுன்ட்கள். சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் பலியான அன்று ட்விட்டரே கொதித்துக்கொண்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயரில் இயங்கும் ஒரு போலி ஐடியில் `stand with India’ என ஒரு ட்வீட் வர, பலர் அதை ரீட்வீட் செய்தனர். இதில் பல பாஜக தலைவர்களும் அடக்கம். டிரம்ப்பின் நிஜ ஐடியிலே இப்படி அதிர்ச்சியான ட்வீட்கள் வருமென்பதால் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. ஆனால், அது போலி ஐடி என்பது கூடவா தெரியாமல் இருக்கிறார்கள் பாஜக தலைவர்கள் எனக் கலாய்த்துத் தள்ளிவிட்டனர் ட்விட்டர்வாசிகள். மாட்டிக்கிட்டியே கோப்பாலு.

னுஷ் இயக்கத்தில் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட படம், தேனாண்டாள் பிக்சர்ஸ் நிதிச்சிக்கலில் மாட்டியதால் அப்படியே நிறுத்தப்பட்டது. லைவ் போர்ஷனை தனுஷ் எடுத்துமுடித்துவிட்டார். கதையில் 600 ஆண்டுகளுக்கு முந்தைய பீரியட் போர்ஷனும் இருப்பதால் அந்தப்பகுதியை அண்ணன் செல்வராகவனை இயக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறாராம் தனுஷ். இன்னொரு தயாரிப்பு நிறுவனம் இந்தப்படத்தைக் கையில் எடுக்க முன்வந்திருப்பதுதான் பேச்சுவார்த்தைகள் தொடங்கக் காரணம். ஆயிரத்தில் இருவர்

மீபத்தில் கொரோனாவால் இறந்த மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளியின் இறப்பு சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதனை மனதளவில் பாதித்துவிட்டது. பாலமுரளியின் சிகிச்சைக்காக இரண்டரை லட்ச ரூபாய்க்கு சொந்தப் பணத்தில் மருந்து வாங்கிக்கொடுத்துள்ளார். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியாததால் அதிர்ச்சியான ஏ.கே.வி., காவலர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இம்முறை சென்னையில் ஊரடங்கு விதிகளை கடுமையாக போலீஸ் கடைப்பிடிப்பதற்கு பாலமுரளியின் இறப்பு ஏற்படுத்திய தாக்கமும் ஒரு காரணம் என்கிறது போலீஸ் வட்டாரம். பத்திரமா இருப்போம்!

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

தேசிய விருது வாங்கியதும் ஒதுக்கப்படும் நடிகைகள் லிஸ்ட்டில் கீர்த்தி சுரேஷையும் சேர்த்துவிட்டிருக்கிறது கோலிவுட். ‘சாவித்ரி’ படத்தில் பிரமாதமாக நடித்து விருதுவென்ற கீர்த்திக்கு அதன்பிறகு பெரிய வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சம்பளத்தையெல்லாம் குறைத்திருக்கிறார் கீர்த்தி. நியாயமாரே

ளம் இயக்குநர்களே லாக்டெளனில் சத்தம் இல்லாமல் இருக்க, சீனியர் கெளதம் செம பிஸி. ‘கார்த்திக் டயல் செய்த எண்’ குறும்படம், ‘ஒரு சான்ஸ் குடு பெண்ணே’ பாடல் என லாக்டெளனிலும் ஷூட் செய்து வியூஸ் அள்ளியவர், இப்போது ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷனையும் முடித்துவிட்டாராம். விக்ரமை வைத்து இன்னும் 5 நாள்கள் ஷூட்டிங் மட்டும் பாக்கி. அனுமதி கிடைத்து ஷூட் முடித்துவிட்டால் நேரடி ஓடிடி ரிலீஸுக்கு ‘துருவநட்சத்திரம்’ தயாராகிவிடும். வழக்கமா இருக்கிற ரெண்டு கதையில் எந்தக் கதை?

டி20 ஸ்பெஷலிஸ்ட் சுரேஷ் ரெய்னாவுக்கும் பயோபிக் ஆசை வந்துவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸின் ‘சின்ன தல’க்கு தன்னுடைய பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் மலையாள நடிகர் துல்கர் சல்மான்தான் நடிக்கவேண்டுமாம்! சல்மான் சதை போடணும்ல

நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் கல்விக்காக அள்ளி அள்ளிக் கொடுப்பவர். 2016-ல் கல்விக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் தந்திருக்கிறார். இப்போது அவரும் அவர் மனைவியும் சேர்ந்து ஆப்ரோ-அமெரிக்க மக்களுக்கான மூன்று கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தலா 40 மில்லியன் டாலர் என மொத்தம் 120 மில்லியன் டாலர் தர முன்வந்திருக்கிறார். உதவிபெற்ற மூன்று கல்வி நிலையங்களும் “எங்களுக்கு இதுவரை கிடைத்த உதவித்தொகையிலே இதுதான் அதிகம்” என்கின்றன. “இனவெறிக்கு எதிராக நம்மால் ஆன ஒவ்வொன்றையும் அனைவரும் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஹேஸ்டிங்ஸ். ஊர்கூடி...

இன்பாக்ஸ்

ஹாரிபாட்டரில் லேவண்டர் பிரவுனாக நடித்த ஜெஸி கேவ் மூன்றாவது முறையாகத் தாயாகவிருக்கிறார். மேடிட்ட வயிற்றை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து, ‘ஊப்ஸ்... மீண்டும் இதைச் செய்துவிட்டேன்’ என்று ஹார்ட்டின் விட்டிருக்கிறார் ஜெஸி. அவரின் பாய்ஃபிரெண்ட் ஆல்ஃபி பிரவுனோ, முதல் இரண்டு குழந்தைகளின் பிஞ்சுப் பாதங்களையும், பிறக்கவிருக்கிற சிசுவின் ஸ்கேனிங்கையும் புகைப்படமாக எடுத்து போஸ்ட் செய்திருக்கிறார். கூடவே, ‘அந்தப் புத்தம் புது உறவை உலகத்துக்கு அறிமுகப்படுத்தக் காத்துக்கொண்டிருக்கிறேன்’ என்று உருகியிருக்கிறார். இது பாசம்தான ஜெஸி!

ப்பா சயிஃப் அலிகானின் வீடியோ இன்டர்வியூவில் தன் குறும்பு முகத்தைக் காட்டுவதே மகன் தைமூர் அலிகானின் வேலை. சமீபத்திய வீடியோவிலும் தைமூர் எட்டிப்பார்க்க, நிருபர் ‘ச்சோ... ஸ்வீட்’ என்று பொடிசைக் கொஞ்ச, ‘ஐ யம் நாட்...’ என்று கோபம் காட்டுகிறார் ஜூனியர் சயிஃப். ‘உன்னை ஹேண்ட்ஸம் பாய் என்று பாராட்டுகிறார்கள். தேங்க்ஸ் சொல்லேன்’ என்று அப்பா சொன்னதும், ‘தேங்க்ஸ் ஆன்ட்டி’ என்கிறான் தைமூர் கெத்தாக. இந்த வீடியோவை சம்பந்தப்பட்ட நிருபர் தன் சமூகவலைதளத்தில் பகிர, தைமூருடன் சேர்த்து அவரும் ட்ரெண்டாகிக்கொண்டிருக்கிறார். வைரல் ஜூனியர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சித்த மருத்துவத்திலும் மருந்து இருப்பதை அரசு பரிசீலிக்காதது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. விஷயத்தை சில மூத்த சித்த மருத்துவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கவனத்துக்குக் கொண்டு சென்றவுடன், “நிலவேம்பு குடிச்சதனால தான் டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர முடிஞ்சது. சித்த மருத்துவமும் வேணும்ங்க. கபசுரக் குடிநீர் மட்டுமல்ல, வேறென்ன மருந்துகள் இருக்கு, எதையெல்லாம் மக்களுக்கு நாம கொடுக்கலாம்னு உடனே ஆய்வு பண்ணி ரிப்போர்ட் கொடுங்க” என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து மளமளவென சித்த மருந்து சிகிச்சைக்கு மாநகராட்சியில் ஏற்பாடு செய்யப்படுகிறது. மெல்ல மெல்ல...

சோஷியல் மீடியாவில் அவ்வப்போது புதுப்புதுப் புயல் கிளம்பும். யாருமே கண்டுகொள்ளாத ஒரு ஆப், உலகையே ஆக்டிவ் ஆக்கும். அப்படி சென்ற வாரம் அடித்த புயல் “ஃபேஸ் ஆப்.” நம் புகைப்படத்தை அப்லோடு செய்தால், 80 வயதில் நாம் எப்படியிருப்போம், ஆணாக இருந்தால் நம்மைப் பெண்ணாக மாற்றுவது என ஏகப்பட்ட ஃபில்டர்ஸ் கொண்டது ஃபேஸ் ஆப். அவரவர் படங்களை அப்லோடு செய்தது மட்டுமல்லாமல், பிரபலங்களையும் இழுத்துவிட்டு செம ஆட்டம் போட்டனர் நெட்டிசன்ஸ். இந்திய கிரிக்கெட் அணி முழுவதையும் கிழவர்களாகவும் பெண்களாவும் மாற்றியதுதான் உச்சக்கட்ட வைரல். அதில், பெரும்பாலானோரின் லைக்ஸ் விழுந்தது, புவனேஷ்வர் குமாரிக்குத்தான். லாக்டெளன் மேட்ச்