Published:Updated:

இன்பாக்ஸ்

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி சுரேஷ்

அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் கால்பதிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இன்பாக்ஸ்

அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் கால்பதிக்கவிருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

Published:Updated:
கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி சுரேஷ்
இன்பாக்ஸ்

`அவ்ளோதானா, இனிமேல் தென்னிந்தியாப் பக்கம் வரமாட்டீங்களா’ என, கீர்த்தி ஆர்மி சோகத்தில் கதற... அப்படியெல்லாம் இல்லை என்பதுபோல அடுத்தடுத்து இரண்டு தெலுங்குப்படங்களிலும், தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் படத்திலும் நடிக்க சம்மதித்திருக்கிறார் கீர்த்தி. கொஞ்சம் குண்டா வாங்க!

பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராடிய போராளி `பிர்ஸா முண்டா’வின் வாழ்க்கையை பாலிவுட்டில் படமாக்கும் முயற்சிகளில் இருக்கிறார் இயக்குநர் பா.இரஞ்சித். இந்தப்படத்திற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் வேலைகள் தள்ளிப்போவதால் அதற்கு முன்பு ஒரு தமிழ்ப் படத்தை இயக்கும் முடிவில் இருக்கிறாராம். குத்துச்சண்டையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப்படத்தில் நாயகனாக ஆர்யா நடிக்கிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். அடிச்சு ஆடுங்க!

டிஸ்னியின் ஹெர்பி கதாபாத்திரமாக நமக்குப் பரிச்சயப்பட்ட பீட்டில் காரின் உற்பத்தியை நிறுத்திவிட்டது ஃபோக்ஸ்வாகன். கடந்த 81 ஆண்டுகளாக விற்பனையிலிருந்த இந்தக் கார் உலக வரலாற்றில் மிக முக்கியமானது. இது ஹிட்லருக்கு மிகவும் பிடித்த கார். இந்தக் கார் ஜெர்மனியில் உருவானாலும் இதன் விற்பனை தற்போதுவரை அமெரிக்காவில்தான் அதிகம். ஃபோக்ஸ்வாகனின் கடைசி பீட்டில் மெக்சிகோ தொழிற்சாலையிலிருந்து வெளியேறிவிட்டது. இந்தக் காரை மெக்சிகோவில் உள்ள ஃபோக்ஸ்வாகன் அருங்காட்சியகத்தில் வைக்கப்போகிறார்களாம். அது ஒரு ‘கார்’ காலம்

இன்பாக்ஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

யிற்சி ஆட்டத்தின்போது டென்னிஸ் கோர்ட்டைச் சேதப்படுத்திவிட்டார் என்று விம்பிள்டனில் ஆடிக்கொண்டிருக்கும் செரீனா வில்லியம்ஸுக்குப் பத்தாயிரம் டாலர்கள் அபராதம் விதித்திருக்கிறது, போட்டிகளை நடத்தும் ஆல் இங்கிலாந்து கிளப். ‘`நான் என்ன பண்ணினேன்னு எனக்கே தெரியல... ஒருவேளை நான் ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கறதால ஏதாவது உடைஞ்சிருக்கும்.... அதுக்கு இவ்ளோ அபராதம் ரொம்ப ஜாஸ்தி’’ என்று சிரித்துக்கொண்டே பேட்டி கொடுத்திருக்கிறார் செரீனா. ரொம்ப்ப்ப்ப ஜாஸ்தி!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

போனிகபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பிறகு மேலும் மூன்று படங்கள் நடிக்கப்போகிறார் அஜித்குமார் என்று செய்திகள் கிளம்ப... ‘`அதெல்லாம் இல்லை. அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தை மட்டுமே நான் தயாரிக்கிறேன். அவரை எப்படியாவது இந்திப்படம் ஒன்றில் நடிக்கவைக்கும் முயற்சிகளில் இருக்கிறேன், அவர் இன்னும் எந்த முடிவும் சொல்லவில்லை’’ என்று கூறியிருக்கிறார் போனிகபூர். அவரை கன்ட்ரோல் பண்ணுங்க ப்ளீஸ்!

இன்பாக்ஸ்

மீண்டும் ஒருமுறை தடகள வீராங்கனை டூட்டி சந்த் இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார். இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் நடந்த யுனிவர்ஸியேட் போட்டியில் 100மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்தப் போட்டியில் பதக்கம் வெல்லும் முதல் இந்திய வீராங்கனை டூட்டிதான். சில மாதங்களுக்கு முன்பு தன்பால் ஈர்ப்பாளர் என்று பொதுவெளியில் அறிவித்துக்கொண்டார் டூட்டி, அதன் தொடர்ச்சியாக அவருடைய குடும்பத்தினராலேயே விலக்கப்பட்டுப் பல பிரச்னைகளோடு போராடிக்கொண்டிருந்தார். இந்த நிலையில்தான் இப்படி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளார். ‘`என்னைக் கீழே தள்ளுங்கள், நான் இன்னும் வலிமையோடு எழுந்து வருவேன்’’ என்று இந்த வெற்றி குறித்துத் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் டூட்டி! நீ நதி போல ஓடிக்கொண்டேயிரு!

லக அளவில் அதிக ஊதியம் பெறும் பொழுதுபோக்குப் பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில், பிரபல அமெரிக்கப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். `2.0 - பக்ஷிராஜன்’ அக்ஷய்குமார் 33-ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். ஒரு திரைப்படத்திற்காக ஐந்து முதல் பத்து மில்லியன் டாலர்கள் வரை சம்பளமாகப் பெறும் அக்ஷய்தான், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் கணக்கெடுப்பில் இந்தியாவிலிருந்து இடம்பெற்ற ஒரே பிரபலம். பசை ராஜன்!

இன்பாக்ஸ்

ரண்டே மாதங்களில் 2000 டன் அளவுக்குக் குப்பைகளைக் கொட்டி சுற்றுலாத்தலமான மணாலியைக் குப்பைமேடாக மாற்றிக்காட்டியிருக்கிறார்கள் சுற்றுலாப் பயணிகள். கோடைக்காலத்தில் மணாலியில் பயணிகள் வரத்து சற்றே அதிகமாக இருந்தாலும் இந்தமுறை அந்த எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இதனால் குவிந்த குப்பைகளும் அதிகரித்திருக்கின்றன. டேஞ்சர்!

ந்திய நெட்ஃப்ளிக்ஸ் ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு காத்திருந்த ‘சாக்ரட் கேம்ஸ்’ இரண்டாவது சீஸன் வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று அதை வெளியிடத் திட்டமிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். அனுராக் காஷ்யப், நவாசுதீன் சித்திக், சையிப் அலி கான் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் பலருடைய பங்களிப்பில் இந்த சீரிஸின் 2ஆம் பாகத்தைக் காணக் காத்திருக்கிறது இணையப் பட்டாளம். கணேஷ் கைத்துண்டே ரிட்டர்ன்ஸ்!

புதிதாகத் திருமணப் பதிவு செய்யும் தம்பதிகள் கட்டாய ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று சட்டம் கொண்டுவரும் முயற்சிகளில் இருக்கிறது கோவா அரசு. அம்மாநில சட்ட அமைச்சர் ரானே இதைச் செயல்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளார். ஒவ்வோர் ஆண்டும் ஒரு லட்சத்திற்கும் மேலான ஹெச்.ஐ.வி நோயாளிகள் இந்தியாவில் கண்டறியப்படுகின்றனர், கோவாவிலும் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தபடி உள்ளது. இந்தச் சூழலில் இது இன்றியமையாதது என்று கூறியிருக்கிறார் ரானே. இந்தியா முழுக்கவே பண்ணலாம்!