Published:Updated:

இன்பாக்ஸ்

தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்

ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்துக்கு 2024 என ரிலீஸ் டார்கெட் குறித்திருக்கிறார்கள்.

இன்பாக்ஸ்

ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்துக்கு 2024 என ரிலீஸ் டார்கெட் குறித்திருக்கிறார்கள்.

Published:Updated:
தனுஷ்
பிரீமியம் ஸ்டோரி
தனுஷ்
ரசியல்வாதிகளின் வாரிசுகள் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெல்வது அபூர்வமான விஷயம். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி இப்போது ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகியுள்ளார்.
அஞ்சலி
அஞ்சலி

இந்தச் செய்தி வெளியானதும், ‘அஞ்சலி தேர்வு எழுதாமலே ஐ.ஏ.எஸ் ஆகிவிட்டார்’ என சோஷியல் மீடியா வதந்திகள் பரவின. ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவை அறிவிக்கும்போது, ஒரு ரிசர்வ் பட்டியலையும் வைத்திருப்பார்கள். காலியிடங்களைப் பொறுத்து இவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அப்படி ரிசர்வ் லிஸ்ட்டிலிருந்து தாமதமாக அஞ்சலி வாய்ப்பு பெற்றதால்தான் இப்படி ஒரு வதந்தி கிளம்பியுள்ளது. வாழ்த்துகள் அஞ்சலி!

சூரி
சூரி

னந்த விகடனில் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ சிறுகதையைத்தான், தற்போது சூரியை வைத்து வெற்றிமாறன் படமாக்கிவருகிறார். படப்படிப்பு சத்தியமங்கலம் காட்டில் நடந்துவருகிறது. இதில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவிருந்த நிலையில், தனது உடல்நிலை காரணமாக படத்திலிருந்து விலகியிருக்கிறார் பாரதிராஜா. இப்போது அந்தக் கேரக்டருக்கு நடிகர் கிஷோரை கமிட் செய்திருக்கிறாராம் வெற்றி மாறன். கதையும் மாறியாச்சு, ஆளும் மாறியாச்சு..!

ரெஜினா
ரெஜினா

‘குற்றம் 23’ படத்துக்குப் பின்னர் தன் அடுத்த படத்திலும் அருண் விஜய்யுடன் இணைந்திருக்கிறார் இயக்குநர் அறிவழகன். டெல்லி, ஆக்ராவில் ஸ்பை த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுவரும் இதில், 3,000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு கொரோனா சோதனை எல்லாம் செய்து, சண்டைக் காட்சி ஒன்றை எடுக்கவிருக்கிறார்களாம். ரா ஏஜென்டாக இப்படத்தில் நடிக்கும் ரெஜினா, படத்துக்காக ஸ்பெஷல் டிரெய்னிங் எடுத்திருக்கிறாராம். க்ரைம் டீம்!

தனுஷ்
தனுஷ்

‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்துக்கு 2024 என ரிலீஸ் டார்கெட் குறித்திருக்கிறார்கள். கதைக்கான தயாரிப்புப் பணிகள் அவ்வளவு காலம் நீடிக்கும் என்று ஒருபுறம் சொன்னாலும், தனுஷே 2024 வரை பிஸி என்கிறார்கள். ஏற்கெனவே ஒப்பந்தமான கார்த்திக் நரேன் படத்தின் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு, நெட்ப்ளிக்ஸில் வெளியாகவிருக்கும் ஹாலிவுட் படமான The gray manக்கு 60 நாள் கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம். ‘ஜகமே தந்திரம்’, ‘கர்ணன்’ இரண்டும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. சோழன் வர்றான்!

எலான் மஸ்க்
எலான் மஸ்க்

மேசான் நிறுவனரான ஜெஃப் பெஸாஸைப் பின்னுக்குத் தள்ளி உலகின் டாப் பணக்காரராக உயர்ந்திருக்கிறார் எலான் மஸ்க். இன்று தொழில்நுட்ப உலகில் முக்கிய ஆளுமையாகப் பார்க்கப்படும் இவர் கடந்த வருடம் ஜனவரி மாதம் இதே பட்டியலில் 35-வது இடத்தில் இருந்தார். ஒரே வருடத்தில் ஜெட் வேகத்தில் டாப் இடத்துக்கு உயர்ந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், அவரது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் அபார வளர்ச்சி. அந்நிறுவனத்தின் மதிப்பு கடந்த வருடத்தில் மட்டும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. மஸ்க்கின் தற்போதைய சொத்துமதிப்பு, சுமார் 14 லட்சம் கோடி ரூபாய். எலைட் எலான்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

றைந்த எழுத்தாளர் பிரமிள் பெயரில் நெல்லையில் நூலகம் திறக்கப்பட்டுள்ளது. படைப்புலகில் பன்முகத் தன்மையுடன் விளங்கிய பிரமிளின் பெயரை நிலைக்கச் செய்யும் இந்த நூலகம், நெல்லைத் திருப்பணிக்கரிசல்குளம் கிராமத்தில் உள்ளது. பிரமிளின் நெருங்கிய நண்பரும் அவரது நூல்களின் தொகுப்பாசிரியருமான கால சுப்பிரமணியம் இதைத் திறந்து வைத்தார். கவிஞர்கள் தேவதேவன், தேவேந்திரபூபதி, ஜீவலெட்சுமி, சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆர்.ஆர்.சீனிவாசன், நூலகத்தை அமைத்துக் கொடுத்த மயன் ரமேஷ்ராஜா, உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிரமிளின் கவிதைகளுடன் அழகிய ஓவியங்கள், அரிய புகைப்படங்கள் நூலகத்தை அலங்கரிக்கின்றன. மேல்நோக்கிய பயணம்!

இன்பாக்ஸ்

ந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்த கொரோனாத் தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது என்றதும், பலரும் அதன் செயல்திறன் குறித்துத் தேடிப் படித்தனர். சிலரோ, சீரம் இன்ஸ்டிட்யூட் உரிமையாளர் ஆதர் பூனாவாலாவின் மனைவி நடாஷா பற்றித் தேடினர். கணவருடன் இணைந்து நிறுவனத்தை நிர்வகிக்கும் நடாஷா, பாலிவுட்டின் அத்தனை பிரபலங்களுக்கும் தோழி. மும்பையில் இருக்கும் இவர்கள் பங்களாவில் வி.ஐ.பி-க்களை சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். கொரோனாவால் இந்த பார்ட்டிகள் நின்றுபோனதுதான் பலருக்கும் வருத்தம். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

Every Good thing comes to an end என்பது புகழ்பெற்ற ஆங்கிலப் பழமொழி. மிஸ்டர் பீனாக உருமாறி குழந்தைகளையும், பெரியவர்களையும் கவர்ந்த ரோவன் அட்கின்சன், இனி அந்த வேடத்தில் நடிக்க விரும்பவில்லை. ‘‘அதன் எதிர்பார்ப்புகள் கொடுக்கும் நெருக்கடி என்னுள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இனி இதை ரசித்துச் செய்ய முடியாது. இதன் முடிவுக்காகக் காத்திருக்கிறேன்’’ என்று உருகுகிறார். குட்பை பீன்

இன்பாக்ஸ்

னைவி மேகன் மார்க்கலுடன் பிரிட்டிஷ் இளவரசர் ஹேரி அரசவையை விட்டுச் சென்று ஓராண்டு முடிந்துவிட்டது. மேகனை வைத்து நிறவெறி சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருந்த ஆங்கில மீடியாக்களும் ஓய்ந்துவிட்டன. கொரோனா நெருக்கடி உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும், ‘இந்த ஆண்டு எங்களுக்கு இனிமையாகவே இருந்தது’ என்கிறது இந்தத் தம்பதி. வாழ்க்கைக்கு எது தேவையோ அதை நோக்கி நகர்ந்திருப்பதால் நிம்மதியாய் இருக்கிறார்கள் என்கிறார்கள் மேகனின் நலம் விரும்பிகள். நிம்மதி... அதான எல்லாம்!

கிரிக்கெட்டின் வடிவம் மாறிக்கொண்டே வருகிறது. ஒரு நாள் தொடர் ஆரம்பிக்கப்பட்டபோதே, ‘கிரிக்கெட்டின் மேன்மை கெட்டுவிடும்’ என மரபான கிரிக்கெட் ரசிகர்கள் ஆட்சேபனை தெரிவித்தார்கள். அதன்பின் டி20, ஐஸ் கிரிக்கெட், டி10, ஆறு ஓவர் போட்டி என மாற்றங்கள் அணிவகுத்தன. சமீபத்திய வரவு, அல்டிமேட் கிரிக்கெட் சேலஞ்ச். யுவராஜ், கெயில், ரஷீத் கான், பீட்டர்சன், ரஸல், மோர்கன் என முன்னாள் இந்நாள் வீரர்களைக் கலந்துகட்டிய போட்டித் தொடர் துபாயில் அறிமுகமானது. ஒவ்வொரு பிளேயருக்கும் 30 பந்துகள், அதில் இரண்டு இன்னிங்ஸ், அவுட் என்றால் 5 ரன்கள் கழித்துக்கொள்ளப்படும் என வேறு லெவல் விதிகளுடன் நடந்த உள்ளரங்குத் தொடர் இது. ஆண்டிரி ரஸலும், ரஷீத் கானும் மோதிக்கொண்ட இறுதி ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் வீரரான ரஷீத் கான் வென்றதுதான் ஸ்பெஷல். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அடித்தால் 12 ரன்கள் என அறிவித்திருந்தனர். அதையும் ரஷீத் கானால் மட்டும்தான் அடிக்க முடிந்தது. புதுசா புதுசா கிளம்பறாங்களே.

இன்பாக்ஸ்

DC காமிக்ஸின் சினிமாட்டிக் யுனிவர்ஸை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்த ஜாக் ஸ்னைடர் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தின் தன்னுடைய முழுமையான வெர்ஷனை HBO மேக்ஸ் ஓடிடி-யில் வெளியிடத் தயாராகிவருகிறார். இதனிடையே அவரின் அடுத்த படமாக ‘ஆர்மி ஆஃப் தி டெட்’, நெட்ப்ளிக்ஸில் இந்த வருடம் வெளியாகவுள்ளது. ‘கேஸினோக்களுக்குப் பெயர்போன லாஸ் வேகாஸ் நகரில் கொள்ளையடிக்கச் செல்லும் ஒரு படை, ஜோம்பிக்களிடம் மாட்டினால் எப்படியிருக்கும்‘ என்பதுதான் ஒன்லைன். ‘காலா’ நாயகியான ஹூமா குரேஷி உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தன் ‘ஜஸ்டிஸ் லீக்’ படம் உள்ளடக்கிய ஹார்ட்டிஸ்க் டிரைவ்களை இந்தப் படத்தின் இடது ஓரத்தில் சேர்த்திருக்கிறார் ஜாக் ஸ்னைடர். ‘ஜஸ்டிஸ் லீக்’ படத்தின் ஸ்னைடர் வெர்ஷன் என்று ஒன்று இல்லவே இல்லை என முன்னர் கிண்டலடித்த பலரையும் இதன்மூலம் வம்புக்கு இழுத்திருக்கிறார் ஸ்னைடர். என்னா குசும்பு!

இன்பாக்ஸ்

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ என ஆல் டைம் ஃபேவரைட் திரைப்படங்களை எடுத்துவிட்டு, லாக்டௌன் மோடுக்குச் சென்றுவிடுகிறார் நலன் குமாரசாமி. கொரோனா ஸ்பெஷலாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ஒரு குறும்படம் இயக்கியிருந்தார். தற்போது தன் அடுத்த படத்துக்காக ஆர்யாவிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறாராம். சட்டு புட்டுன்னு வாங்க பாஸ்