Published:Updated:

இன்பாக்ஸ்

Trisha
பிரீமியம் ஸ்டோரி
News
Trisha

Inbox

தீபிகா - ரன்வீர் தம்பதி தங்களுடைய முதல் திருமண நாளையொட்டி திருப்பதிக்கு வந்திருந்தனர். அப்போது தீபிகா கட்டியிருந்த புடவை, அவருடைய திருமணத்தின்போது மாமியார் வீட்டினர் மஞ்சள் குங்குமத்துடன் தட்டில் வைத்துக்கொடுத்தது. புடவையை தீபிகா வாங்குகிற அந்தப் பழைய புகைப்படத்தையும், தீபிகா திருப்பதி வந்த புகைப்படத்தையும் மேட்ச் செய்து வைரலாக்கிவிட்டார்கள் நெட்டிசன்கள்! தீப்வீர் வைரல்!

தீபிகா - ரன்வீர் தம்பதி
தீபிகா - ரன்வீர் தம்பதி

2020 ஐபிஎல் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துவிட்டது. டிசம்பரில் ஏலம் நடைபெறவிருக்கும் நிலையில், எல்லா அணிகளுமே சேர்த்தல், விடுத்தல் பணிகளை ஆரம்பித்துவிட்டன. பஞ்சாபில் இருந்த அஷ்வின் டெல்லிக்கும், டெல்லியில் இருந்த ட்ரென்ட் போல்ட் மும்பை இந்தியன்ஸுக்கும் மாறியிருக்கிறார்கள். சென்னை அணி 5 பேரை விடுவித்து, ஏலத்துக்காக 14.6 கோடி ரூபாயைச் சேர்த்திருக்கிறது. ஆட்டம் களைகட்டும்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்தது. ஜியோ தந்த போட்டி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சம்பளம்கூட அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளியது. கேரளாவில் 10 மாதங்களாக சம்பளம் கிடைக்காத விரக்தியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திலேயே, ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் நிகழ்ந்தது. நிறுவனத்தைச் சீரமைக்கக் கூடுதல் பண பலன்களோடு ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட 75,000 பேர் தானாக முன்வந்து ஓய்வுபெறப் போகின்றனர். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் 1,50,000 பேர் பணி புரிகின்றனர். பாதிக்குப் பாதி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Seeman
Seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வளர்ப்புப் பிராணிகள் என்றால் கொள்ளைப் பிரியம்! ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வாத்து, பூனை, கோழி, வான் கோழி, புறா, நாய் என விதம்விதமான வளர்ப்புப் பிராணிகள் வளைய வருகின்றன. வீரா, சூரா, செம்பா, எழில் என ஒவ்வொன்றுக்கும் அழகிய தமிழ்ப் பெயர் சூட்டி அழைக்கிறார். அன்பின் மிகுதியால் எல்லை மீறி சேட்டை செய்யும் பிராணிகளை நோக்கி, ‘`என்னடா மகனே... சேட்டை அதிகமா இருக்கு. உங்க அம்மா வர்றாங்க ஓடிடு... அடி வாங்கிடாத...’’ என்று திருமதி சீமான் வருவதைச் சுட்டிக்காட்டி செல்லங்களை எச்சரிக்கவும் செய்கிறார் இந்த அன்பு அண்ணன்! மீசக்கார நண்பா...

Trisha
Trisha

20 ஆண்டுகளுக்கு முன் ஜோடி எனும் படத்தில் ஒன்றாக நடித்த த்ரிஷா மற்றும் சிம்ரன் இருவரும் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளார்கள். சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘சுகர்’ எனும் படத்தில் அக்கா தங்கையாக இணைந்துள்ளது இந்த ஜோடி. த்ரிஷாவின் கால்ஷீட் கிடைத்தால் சிம்ரனுக்கு நேரம் இல்லை என்றும் சிம்ரனின் கால்ஷீட் கிடைத்தால் த்ரிஷா பிஸியாக இருக்கிறார்கள் என்றும் குழப்பத்திலிருந்த படக்குழு வெளிநாட்டில் எடுக்கவேண்டிய காட்சிகளைத் தள்ளிவைத்துவிட்டு, பிச்சாவரத்தில் படத்தின் சில பகுதிகளை முடித்துள்ளார்கள். இந்தப் படம் நயன்தாராவின் அறம் படம் போல சமூகப் பிரச்னையைப் பேசும் என்பதால் இந்தத் திரைப்படத்துக்கு ஆர்வமாகக் கையெழுத்திட்டுள்ளார் த்ரிஷா. ஷூட்டிங்குகள் பெரும்பாலும் தண்ணீர் இருக்கும் இடங்களிலேயே நடைபெறுவதால் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட படமாகவும் இது இருக்கலாம். வெள்ளிமலர்கள்!

இன்பாக்ஸ்

ரலாறு காணாத காற்று மாசுப் பிரச்னையால் அவதிப்பட்டுவருகின்றனர் டெல்லி மக்கள். உச்சநீதிமன்றம் டெல்லி மாசுப் பிரச்னையில், மத்திய அரசையும், டெல்லி மாநில அரசையும் கண்டித்ததோடு, அதைக் குறைக்கச் செயல்படுமாறு உத்தரவிட்டது. காற்று மாசு தொடர்பாக 21 எம்.பி-க்கள் கொண்ட நாடாளுமன்றக் குழு முடிவுசெய்யப்பட்டு, பேச்சுவார்த்தைக்கான நாளும் முடிவுசெய்யப்பட்டது. எனினும் ஒரு எம்.பி-யும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கிழக்கு டெல்லி எம்.பி-யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கவுதம் கம்பீர், தன் நண்பர் வி.வி.எஸ்.லக்‌ஷ்மணுடன் இந்தோரில் ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டிருந்த படத்தை லக்‌ஷ்மண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். காற்று மாசு பற்றிய கூட்டத்திற்கு வராமல் இந்தோரில் ஜிலேபி சாப்பிட்டுக்கொண்டிருப்பதற்குக் கிழக்கு டெல்லி எம்.பி-யாக கம்பீர் அவமானப்பட வேண்டும் என நெட்டிசன்கள் திட்டித் தீர்த்துள்ளனர். ஜிலேபி சாப்டு சிவாஜி

`எங்க ஃபேமிலி வாட்ஸ் அப் குரூப் பேரு Dad’s Kids. அதுல நானு, டாடி, அர்ஜுன் பையா, அன்ஷுலா தீதி, குஷி எல்லாரும் மெம்பர்ஸ். நான் புதுசா ஒரு டிரஸ் போட்டா என்னோட புகைப்படங்களை ஃபேமிலி குரூப்பில் போட்டுக் கருத்துகேட்பேன். அவங்களுக்கு என் டிரஸ் பிடிச்சிருந்தாதான், எனக்குத் தன்னம்பிக்கையே வரும்’ என்று தன்னுடைய பேட்டி ஒன்றில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் குறிப்பிட்டிருந்தார். இதில் அர்ஜுன் பையாவும் அன்ஷுலா தீதியும் போனிகபூரின் முதல் மனைவி மோனாவின் பிள்ளைகள். ஃபேமிலி வாட்ஸ் அப் குரூப் பற்றி ஜான்வி கபூர் சொன்னது உண்மை என்பதற்கு ஆதாரமாக, அன்ஷுலா ஸ்கிரீன் ஷாட் ஒன்றை சமீபத்தில் தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அப்பா பிள்ளைகள்!

Anushka
Anushka

`எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ரிலீஸ் சிக்கல்களைத் தீர்த்து வைத்த ஐசரி கணேஷுக்கு நன்றிக்கடனாக மூன்று படங்கள் இயக்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார், கெளதம். அதில் ஒரு படம்தான், ஐசரி கணேஷின் உறவினரான வருண் நடிக்கும் `ஜோஷ்வா.’ இதற்கடுத்து சூர்யா நடிக்கும் ஒரு படமும், அனுஷ்காவை வைத்து ஒரு படமும் இயக்கவிருக்கிறார் கெளதம். அனுஷ்கா நடிக்கும் படத்தின் கதை, பிரபல பாலிவுட் இயக்குநர் கோவிந்த் நிஹாலனி எழுதியதாம். கமலின் `குருதிப்புனல்’ படத்துக்குக் கதை எழுதியதும் இவரே! கம்பேக் கெளதம்!

ர்மபுரி எம்.பி செந்தில்குமார் ட்விட்டரில் செம ஆக்டிவ். யார் என்ன கேட்டாலும் முடிந்தவரை பதில் சொல்லிவிடுகிறார். தவிர, தொகுதி சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு எப்போதும் முன்னுரிமை கொடுத்து அவற்றுக்கு ஆக்‌ஷன் எடுப்பதோடு அதை ட்விட்டரில் பதிலாகவும் பதிவிடுகிறார். ட்விட்டரை இப்படிப் பொறுப்புடன் பயன்படுத்தும் இவர் வாட்ஸப்புக்கு நோ சொல்கிறார். கேட்டதற்கு “என் ஃப்ரெண்ட்ஸ பார்த்திருக்கேனே... ஆ ஊன்னா எதாவது க்ரூப்ல சேர்த்துவிட்டு குட்மார்னிங் மெசேஜா போட்டுக் கடுப்பேத்தறாங்கன்னு சொல்வாங்க. அதுனால வாட்ஸப்பை இன்ஸ்டால் பண்ணவே இல்லை நான்!” என்கிறார். குட்மார்னிங் சார்!