பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

vijay
பிரீமியம் ஸ்டோரி
News
vijay

இந்தக் கதை விஜய்யின் அடுத்த படமாக உறுதியாகும் பட்சத்தில், அது `துப்பாக்கி - 2’ என்ற பெயரில் எடுக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.

ரீனா கபூர் நடித்து, ரியா கபூர் இயக்கத்தில் வெளியான ‘வீரே தீ வெட்டிங்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்டை ரியா முழுவதுமாக எழுதி முடித்துவிட்டார்.

கரீனா கபூர்
கரீனா கபூர்

முதல் பாகத்தின் அபார வசூலைத் தொடர்ந்து, இந்தப் படத்தையும் அனில் கபூரே தயாரிக்கவிருக்கிறார். வருகிற ஏப்ரலில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. வெட்டிங்குக்கு வெயிட்டிங்!

`மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பது உறுதியான நிலையில், அந்தப் படத்தின் இயக்குநரைத் தேர்ந்தெடுக்கும் வேலைகள் மும்முரமாக நடந்துவருகின்றன. அதன் ஒருபகுதியாக `துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை முருகதாஸ் சொல்லியிருக்கிறாராம்.

vijay
vijay

இந்தக் கதை விஜய்யின் அடுத்த படமாக உறுதியாகும் பட்சத்தில், அது `துப்பாக்கி - 2’ என்ற பெயரில் எடுக்கப்படாது என்றும் கூறப்படுகிறது.சீக்கிரம் சொல்லுங்க பாஸ்!

‘எக்ஸ் மென்’ படங்கள் மூலமாக நன்கு அறியப்பட்ட நடிகர் நிக்கோலஸ் ஹோல்ட், அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கும் ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்தின் ஏழாம் பாகத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹேலே ஆட்வெல், போம் க்ளிமெண்டிஃபைத் தொடர்ந்து இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் மூன்றாவது மார்வெல் சூப்பர்ஹீரோ நடிகர் நிக்கோலஸ் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர்ஹீரோ சீரிஸ்!

ழுத்தாளரும், தெஹல்கா புலனாய்வுப் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான ராணா அயூப், ஜே.என்.யூ விஷயத்தில் பாலிவுட் கதாநாயகர்கள் அமைதிகாத்து வருவதை, தன் பாணியில் கிண்டலடித்திருக்கிறார். ‘ஜே.என்.யூ-வில் மாணவர்களும் ஆசிரியர்களும் ரத்தம் வடித்தபடி போராடிக்கொண்டிருக்கிறார்கள். இது நாம் அமைதியாக இருக்க வேண்டிய நேரமில்லை’ என்கிற நடிகை சோனாக்‌ஷி சின்ஹாவின் ட்வீட்டை ரீட்வீட் செய்து, ‘பச்சன்களே, கான்களே... உங்கள் துறையைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு வலுவான முதுகெலும்பு இருப்பதைக் காட்டிவிட்டார்கள். பாவம், உங்களுக்குத்தான் சங்கடமாக இருக்கும்’ என்றிருக்கிறார். செம தில்லு!

” சபாக்’ படத்தின் டிரெய்லரைப் பார்த்தேன். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பிறகு என் அக்கா ரங்கோலி அனுபவித்த துன்பங்கள், அவற்றிலிருந்து அவள் மீண்டு வந்தது என அத்தனையையும் மறுபடியும் நினைவு படுத்தி விட்டீர்கள்.

Deepika Padukone
Deepika Padukone

‘சபாக்’ அந்த அளவுக்கு உண்மைத் தன்மை யுடன் இருக்கிறது. படத்தை இயக்கிய மேஹ்னா குல்சாருக்கும் நடித்த தீபிகா படுகோனுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக நன்றிகள்’ என்று நெகிழ்ந் திருக்கிறார் கங்கணா ரனாவத். அடடே!

த்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது, அதைப் பற்றி கிரிக்கெட் வீரரும் இந்திய கேப்டனுமான கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் இந்தியாவில் யாரும் எடுக்காத துணிச்சலான முடிவு எனப் பாராட்டியது பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் இந்த முறையும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவைப் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டது.சுதாரித்துக்கொண்ட கோலி ‘‘தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி என்னால் எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது” என்று கூறித் தப்பித்துக் கொண்டார். அவுட் ஆன பிறகு சிக்ஸ் அடிக்க முடியுமா கோலி?

இன்பாக்ஸ்

டற்பயிற்சியின் முக்கியத்துவம் முதல் பயண நேர அலப்பறைகள்வரை அன்றாட வாழ்க்கையில் தான் கடந்து வரும் இனிமையான நொடிகளை ‘க்ளிக்’ செய்து அவ்வப்போது சமுக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளும் பழக்கமுடையவர் சுஷ்மிதா சென். அந்த வரிசையில், சூரியன் உதயமாகும் வேளையில் இயற்கையை ரசித்தபடி சுஷ்மிதா சந்தோஷமாக ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பதுபோன்ற காணொலி, சமீபத்திய வைரல். இந்தக் காணொலியோடு, ‘ஊஞ்சலிலிருந்து சூரிய ஒளியைக் காணும்போது, குழந்தைப் பருவத்தில் நம்முள் இருந்த நம்பிக்கை எனும் மந்திர சக்தியை நினைவுபடுத்துகிறது’ என்ற கேப்ஷனையும் இணைத்திருந்தார் மிஸ் யுனிவெர்ஸ். லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!

ஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கிலான ஹெக்டேர் வனப்பகுதி, மாதக்கணக்காக எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீக்கு இரையாகிக் கொண்டிருக்கிறது. நெருப்பை அணைக்க ஆஸ்திரேலியாவின் தீயணைப்புப்படை மொத்தமும் களத்தில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், நெருப்பை அணைக்கத் தேவைப்படும் நீர் பற்றாக்குறையாகிக்கொண்டிருப்பதாகவும் அதற்குக் காரணம் ஒட்டகங்கள்தான் என்றும் கூறுகிறார்கள். அதுமட்டுமன்றி, எண்ணிக்கையில் அதிகரித்து ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறியுள்ள ஒட்டகங்களைக் கொன்றால்தான் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் நீர்ப் பற்றாக்குறை ஏற்படாது என்று அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல்கட்டமாக 10,000 ஒட்டகங்களை ஹெலிகாப்டரில் வேட்டைக்காரர்களை வைத்துச் சுட்டுக்கொல்ல முடிவு செய் துள்ளார்கள். அய்யோ!

லெக்ஸா மூலம் வாய்ஸ் அசிஸ்டென்ஸ் மட்டுமே செய்துகொண்டிருந்த டெக் உலகம், தற்போது சாம்சங்கின் நியான் (NEON) மூலம் Artificial Intelligence டிஜிட்டல் மனிதனாக அப்கிரேடு ஆகியிருக்கிறது. CES 2020-யில் இந்த AI Human-ஐ அறிமுகப்படுத்தி யிருக்கிறது சாம்சங். அலெக்ஸாவிடம் பேசுவது போலவே இதனுடனும்... சாரி, இவர்களுடனும் பேசலாம், மனிதர்களுடன் பேசுவது போன்றே இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறது சாம்சங். கூடிய விரைவில் இவர்களை நம் மொபைல்களில் எதிர்பார்க்கலாம். சும்மா கிழி!