Published:Updated:

இன்பாக்ஸ்

சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன்

`மெரினா’, `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களுக்குப் பிறகு `நம்ம வீட்டுப் பிள்ளை’

இன்பாக்ஸ்

`மெரினா’, `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களுக்குப் பிறகு `நம்ம வீட்டுப் பிள்ளை’

Published:Updated:
சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
சிவகார்த்திகேயன்

ந்தியாவின் ஆல்ரவுண்ட் கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியா, தன் காதலை வருங்கால மனைவி நடாஷாவுடனும் நிச்சயதார்த்த மோதிரத்துடனும் இன்ஸ்டாவில் கன்ஃபர்ம் செய்துவிட்டார்.

இன்பாக்ஸ்

இதுநாள் வரை கிசுகிசுவாக வலம் வந்து கொண்டிருந்த விஷயம்தான். இப்போது படகில் வைத்து மோதிரம் மாற்றி உறுதியாகி யிருக்கிறது. மும்பையில் செட்டிலான செர்பிய நடிகை நடாஷா ஸ்டான்கோவிக், பெரிய திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் ‘பிக்பாஸ்’, ‘நாச் பலியே’ (இந்தி ஜோடி நம்பர்) போன்ற ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பிரபலமானவர். ஹர்திக் - நடாஷா ஜோடியின் நிச்சயத்துக்கு சினிமா மற்றும் கிரிக்கெட் செலிபிரிட்டிகள் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்க, நடாஷாவின் எக்ஸ் பாய்ஃபிரெண்ட் அலி கோனி(Aly Goni)யும் நடாஷா வின் இன்ஸ்டா போஸ்ட்டில் ஒரு ஹார்ட்டினைத் தட்டியிருக் கிறார். எங்கிருந்தாலும் வாழ்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சூப்பர் மாடல், நடிகை, தொகுப்பாளர், எழுத்தாளர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் பத்ம லட்சுமி. ‘டாப் செஃப்’ எனும் அமெரிக்க சின்னத்திரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவரும் இவரின் சமீபத்திய போட்டோஷூட் இணையத்தை ஆக்கிர மித்துள்ளது.

இன்பாக்ஸ்

49 வயதான பத்மா, தன்னுடைய ரசிகர்களுக்கான புத்தாண்டுப் பரிசாக ‘டாப்லெஸ் புகைப்படம்’ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ‘புது வருடம், ஆனால், அதே நான்’ என்ற கேப்ஷனையும் இணைத்திருக்கிறார். மேலாடைக்கு பதில் மஞ்சள் நிற மாலை மற்றும் பீஜ் வண்ண ஸ்கர்ட் அணிந்து ‘ஹாட் போஸ்’ கொடுத்திருக்கிறார். தைரிய லட்சுமி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`மெரினா’, `கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படங்களுக்குப் பிறகு `நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் இணைந்த பாண்டிராஜ் - சிவகார்த்திகேயன் கூட்டணி, தற்போது நான்காவது முறை இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இன்பாக்ஸ்

இதுவும் கிராமத்துக் கதைதான் என்றும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் சொல்லப் படுகிறது. சூப்பர்ல!

நீண்ட நாள்களாக ‘ஸ்பைடர்-மேன்’ படங்கள் குறித்த ஒப்பந்தத்தில் பிளவுபட்டிருந்த டிஸ்னி மற்றும் சோனி நிறுவனங்கள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் சுமுகமான முடிவுக்கு வந்தன. இந்நிலையில் மேலும் மூன்று `ஸ்பைடர்-மேன்’ படங்களுக்கான ஒப்பந்தம் இரு நிறுவனங் களிடையே கையெழுத்தானது.

ஸ்பைடர்-மேன்
ஸ்பைடர்-மேன்

அந்த வரிசையில் டாம் ஹாலந்து ஹீரோவாக நடிக்கவிருக்கும், `ஸ்பைடர்-மேன்’ படத்தின் மூன்றாம் பாகத்துக்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் அடுத்த ஆண்டு ஜூலையில் வெளியாகும். மரண மாஸ்!

`அசுரன்’ படத்தைத் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யும் வேலைகள் பரபரப்பாக நடந்துவருகின்றன. தனுஷ் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் நடிக்கிறார்.

பிரியாமணி
பிரியாமணி

கென் கருணாஸ் நடித்த கேரக்டரில் தெலுங் கிலும் கென்னே நடிக்கவிருக்கிறார். மஞ்சு வாரியர் நடித்த கேரக்டருக்கு ஸ்ரேயா, அனுஷ்கா எனப் பல நடிகைகளின் பெயர்கள் அடிபட்ட நிலையில், தற்போது பிரியாமணி கமிட்டாகியி ருக்கிறார். வெயிட்டிங்!

ந்திய செஸ் வீராங்கனையான கொனெரு ஹம்பி தன் குழந்தையை வளர்ப்பதற்காக இரண்டு ஆண்டுகள் விளையாட்டி லிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது பிரேக்கி லிருந்து திரும்பியிருக்கும் அவர், மாஸ்கோவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தி ருக்கிறார்.

இன்பாக்ஸ்

‘ஓய்விலிருந்து திரும்பியது ஏன் என சிலர் கேட்கிறார்கள். சாதிக்க வேண்டுமென்றால் சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டும். வளர்ந்தபின் என் மகள் இதைப் புரிந்து கொள்வாள்’ என ஸ்டேட்மென்ட் தட்டியிருக் கிறார் கொனெரு, சாம்பியன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism