Published:Updated:

இன்பாக்ஸ்

தீபிகா படுகோன்
பிரீமியம் ஸ்டோரி
தீபிகா படுகோன்

பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோன்ஸுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இன்பாக்ஸ்

பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோன்ஸுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Published:Updated:
தீபிகா படுகோன்
பிரீமியம் ஸ்டோரி
தீபிகா படுகோன்

ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டின் குடிப்பழக்கம் காரணமாகவே அவருடைய காதல் மனைவி ஏஞ்சலினா ஜோலி பிரிந்து சென்றுவிட்டார். குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கான சிகிச்சை மேற்கொண்டு வரும் பிராட் பிட், ``இப்போதெல்லாம் குடிக்க வேண்டுமென்று தோன்றினால், க்ரென்பெர்ரி ஜூஸ் குடித்து என்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறேன்.

Priyanka Chopra
Priyanka Chopra

கோபத்தைக் குறைத்துவிட்டேன். வாழ்க்கையில் சில தவறான அடிகளை எடுத்து வைத்துவிட்டேன். அவைதான் எனக்குச் சில ஞானங்களைத் தந்திருக்கின்றன. ஒருவர் இல்லாமல் மற்றொருவர் இல்லை என்பது புரிந்துவிட்டது” என்று வருந்தியிருக்கிறார். தைரியமாகச் சொல்....

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பிரியங்கா சோப்ராவுக்கும் அமெரிக்கப் பாடகர் நிக் ஜோன்ஸுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜோத்பூர் அரண்மனையில் நான்கு நாள் கொண்டாட்டமாக நடந்த அந்தத் திருமணத்தின் செலவு விவரங்களை அரண்மனை நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது. விருந்தினர்கள் தங்கியதற்கான அறைகள், நான்குநாள் கொண்டாட்டம் என அரண்மனை வாடகைக்கு மட்டும் 4,61,000 டாலர் செலவழித்திருக்கிறார்கள்! நம்மூர் மதிப்பில் 3,28,04,760 ரூபாய். ‘வளர்ப்பு மகன்’ திருமணத்தை மிஞ்சிடுச்சே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெனிஃபர் லோபஸ்க்கு 50 வயது என்று அடித்துச்சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். எல்லாம் வொர்க்-அவுட் புண்ணியம். வெள்ளை நிற ஃபுல் ஸ்லீவ் டாப், அதற்கேற்ற பேன்ட், வெள்ளை நிற பாக்கெட் புக் பேக், கேட் ஐ ஷேப் கண்ணாடி என மியாமியை வலம் வந்துகொண்டிருந்தவரின் இன்ஸ்டா புகைப்படங்களுக்கு, உலகமெங்கிலும் இருக்கிற அவரின் ரசிகர்கள் ஹார்ட்டின் அனுப்பிக்கொண்டிருக்க, ஜெனிஃபரோ வருங்காலக் கணவர் அலெக்ஸ் வாங்கிக்கொடுத்த காஸ்ட்லி போர்ஸ்சே காரில் பறந்துகொண்டிருக்கிறார். காஸ்ட்லி காதல்!

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்த காவல்துறை பலரையும் தாக்க, பாலிவுட் பிரபலங்களான அனுராக் காஷ்யப், அனுபவ் சின்ஹா, டாப்சி, பரினீதி சோப்ரா முதலானோர் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவுசெய்துள்ளனர். பாலிவுட் சூப்பர்ஸ்டார்களான ஷாரூக் கான், சல்மான் கான், ஆமிர் கான் ஆகியோர் இந்த விவகாரம் குறித்து இன்னும் வாய் திறக்கவில்லை. ரேடியோ ஜாக்கியும், பாலிவுட் நடிகருமான ரோஷன் அப்பாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாரூக் கானை நோக்கி, “நீங்களும் ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்தானே, உங்களை இவ்வளவு அமைதியாக மாற்றியிருப்பவர் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர்கூட செல்ஃபி எடுக்க முடியாதே!

`தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க வேண்டிய `ஜெயம்’ ரவி, `பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டதால், `தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக்கில் நடித்த ராம் சரணோடு கைகோக்கிறார், மோகன் ராஜா. தற்போது, ராஜமெளலி இயக்கத்தில் நடித்துவரும் ராம் சரண், அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், மோகன் ராஜா படத்தில் இணைவார் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தைத் தெலுங்கில் மட்டுமே இயக்கவிருக்கிறார் ராஜா. சித்தார்த் அபிமன்யூ யாருங்கோ?

விரைவில் வெளியாகவிருக்கும் ஜேம்ஸ் பாண்டு படமான ‘நோ டைம் டு டை’யில் எட்டு விதவிதமான வேடங்களில் நடிக்கிறார் டேனியல் க்ரைக். சால்ட் அண்டு பெப்பர் லுக்கில் ஜேம்ஸ் பாண்டு தோன்றும் முதல் படம் இதுதான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நாங்கல்லாம் ‘நவராத்திரி’, ‘தசாவதார’மே பார்த்தவய்ங்க!

`இந்தியன் - 2’ படத்தின் முதியவர் கேரக்டருக்கான காட்சிகளில் நடித்து முடித்துவிட்ட கமல், அடுத்து இளவயது கேரக்டரில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் அவருக்கு நடந்த அறுவை சிகிச்சைக்குப் பின் ஓய்வெடுத்துவரும் கமல், கடுமையான டயட்டையும் ஃபாலோ செய்து வருகிறாராம். உடல் எடையைக் குறைத்து, இளவயதுத் தோற்றத்துக்குத் தயாரானதும், ஷூட்டிங் கிளம்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நலம் பெறட்டும் நம்மவர்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சுத்த சைவம். அசைவ உணவைக் கைவிட்டுப் பல ஆண்டுகளாகின்றன. போகிற இடங்களில் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் ஆர்வத்துடன் அசைவ உணவுகளைச் சமைத்துக்கொடுக்கிறார்கள். நிறைய எண்ணெய், மசாலா பயன்படுத்துவது உடல் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் நள்ளிரவில்தான் அவரால் இரவு உணவைச் சாப்பிட முடிகிறது. அது அசைவ உணவாக இருந்தால் செரிமானக் கோளாறு ஏற்படுகிறது. அங்கனூரில் அம்மா பிடித்துவந்து சமைக்கும் ஆற்றுமீன் குழம்பு என்றால் திருமாவுக்குக் கொள்ளைப் பிரியம். ஆனால், இப்போது அதையும்கூட அவர் சாப்பிடுவதில்லை. சைவ சிறுத்தை!

ஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் புடின் தனது கணினியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாக, அதில் அவர் காலாவதியான விண்டோஸ் எக்ஸ்.பி பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது. 2001-ம் ஆண்டு வெளியான விண்டோஸ் சாஃப்ட்வேரை, ரஷ்ய அதிபர் பயன்படுத்திவருவது, அவரது ரகசியங்களை எளிதாக ஹாக் செய்யப் பயன்படும் என சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்டேட் முக்கியம் புடினு!

தீபிகா படுகோன்
தீபிகா படுகோன்

ஹ்ரித்திக் ரோஷன் நடிக்கவிருக்கும் ‘சட்டே பே சட்டா’ படத்தின் ரீமேக்கிலிருந்து திடீரென விலகியிருக்கிறார் தீபிகா படுகோன். கால்ஷீட் பிரச்னை என தீபிகாவின் தரப்பில் கூறப்பட்டாலும், முதலில் ஒப்பந்தமாகும்போது தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்ததாகவும், படத்தின் முழுத் திரைக்கதையில் ஹீரோயின் கேரக்டர் வலுவிழந்து இருப்பதாலும் அவர் விலகியதாகச் சொல்லப்படுகிறது. சட்டுனு விலகிட்டாங்க!

ட்விட்டர் சமூகவலைத்தளத்தை நடத்தும் ஜாக் டோர்ஸி, ஃபேஸ்புக் முதலாளி மார்க் சக்கர்பெர்க்கை ட்விட்டரில் அன்ஃபாலோ செய்ததுதான் சென்ற வார வைரல்! ஏற்கெனவே இருவருக்கும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருந்த நிலையில் ஜாக் அன்ஃபாலோவுக்கு என்ன காரணம் எனக் குழம்பிப்போயிருக்கிறது இணையச் சமூகம். வைரலுக்கே வைரலா?

ம்மூரில் உள்ளாட்சித் தலைவர் பதவிகளை ஏலம் விடுவது பற்றிப் பேசுகிறோம். ஆனால் அமெரிக்காவிலும் இதுதான் நடக்கிறது, ஆனால் சட்டப்படி! டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒயிட் ஹால் நகரின் தீயணைப்புத் துறையில் பணியாற்றும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில், மேயர் பதவி ஏலம் விடப்படுவது வழக்கம். இந்தமுறை ஏலத்தில் வென்று மேயராகியிருக்கும் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன், 7 வயதுக் குழந்தை. அந்த மேயரே நீங்கதானா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism