Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

மகள் ஆராத்யா வெட்கப்பட்ட ஒரு ஜாலியான சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

இன்பாக்ஸ்

மகள் ஆராத்யா வெட்கப்பட்ட ஒரு ஜாலியான சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, தன் கணவர் விராட் கோலிக்கு ஹேர்-கட் செய்துவிட்ட வீடியோ லாக்டெளன் வைரல். தொடர்ந்து ஹீரோயின்கள் பலரும் கணவர் தலையைப் பதம் பார்க்க, அந்த வரிசையில் இப்போது இணைந்திருப்பவர் கன்னக்குழி அழகி ப்ரீத்தி ஜிந்தா. இவர் தன் கணவருக்கு ஹேர்-கட் செய்த போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்து, ‘வெற்றிகரமாக ஹேர்-கட் செய்து முடித்துவிட்டேன். கணவரும் ஹேப்பி, நானும் ஹேப்பி. நன்றாகச் செய்துள்ளேனா?’ என ரசிகர்களைக் கேட்டிருந்தார். இதற்கு பதில் சொன்னது சிக்ஸ் பேக் நாயகன் ஹ்ரித்திக் ரோஷன். ‘முன்பு இருந்ததைவிட இது நல்லாருக்கு’ என்று ரிப்ளை செய்திருக்கிறார். தலைக்கு மேல வேலை!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஐஸ்வர்யா ராய் பச்சன்.
ஐஸ்வர்யா ராய் பச்சன்.

கள் ஆராத்யா வெட்கப்பட்ட ஒரு ஜாலியான சம்பவத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய் பச்சன். நான்கு வருடங்களுக்கு முன் வெளியான ‘ஹே தில் ஹை முஷ்கில்’ இந்திப் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி ரன்பீர் கபூர். அம்மாவைப் பார்ப்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ஆராத்யா, ரன்பீரை தன் அப்பா அபிஷேக் பச்சன் என்று தவறாகப் புரிந்துகொண்டு ஓடி வந்து அணைத்திருக்கிறார். ‘அன்று ரன்பீர், அவள் அப்பா அபிஷேக்போலவே டிரெஸ் செய்திருந்தார். பின்னால் இருந்து பார்ப்பதற்கு அபிஷேக்போலவே இருந்தவரை ஓடிவந்து கட்டிக்கொண்டுவிட்டாள். பிறகு, அந்த நாள் முழுக்கச் சின்ன வெட்கத்துடனே நடமாடிக்கொண்டிருந்தாள். விஷயத்தைக் கேள்விப்பட்ட அபிஷேக்கும் சிரித்தார்’ என்றிருக்கிறார் ஐஸு. மகளதிகாரம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அஜித்
அஜித்

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அதன் தீவிரம் குறைந்தபிறகே ‘வலிமை’ ஷூட்டிங்கை ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறாராம் அஜித். பொதுவாகவே தன்னைக் காண பெருங்கூட்டம் கூடும் என்பதால் ரிஸ்க் எடுக்கமுடியாது எனத் தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார் அஜித். அதனால் ‘வலிமை’ ஹூட்டிங் தள்ளிப்போவதோடு, அடுத்த ஆண்டு மே மாத ரிலீஸ் என்பதை நோக்கி வேலை செய்யலாம் என்கிற முடிவில் இருக்கிறதாம் டீம். நொடி நொடியா செதுக்குறாரு!

தனுஷ்
தனுஷ்

ரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடித்தாலும் தனுஷ் கால்ஷீட் ஃபுல். இந்த நிலையில் இன்னொரு படத்துக்கும் ஓகே சொல்லியிருக்கிறார். இந்தப்படத்தை இயக்கவிருப்பவர் தனுஷின் ஃபேவரிட் மித்ரன் ஜவஹர். கதை, திரைக்கதை, வசனம் எல்லாமே தனுஷாம். இயக்கம் மட்டுமே மித்ரன். நீங்க நடத்துங்க ப்ரோ.

மீபத்தில் ஒரு தங்க வேட்டையை நிகழ்த்தியிருக்கிறது இந்திய அமலாக்கத் துறை. நீரவ் மோடி மற்றும் மொகுல் சொக்சி ஆகியோர் மோசடி வழக்கு விசாரணையில் இருந்தபோது பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை அவர்கள் துபாய்க்குக் கடத்தியதாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் சொந்தமான 2,300 கிலோ எடையுள்ள தங்கம் வைரம் மற்றும் முத்துக்கள் அமலாக்கத் துறையினரால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. சுமார் 1,350 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நகைகளை அவர்கள் ஹாங்காங்கில் ஒரு லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் கிடங்கில் ஒளித்து வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இங்க கரன்ட் பில்லுக்குக் காசில்ல.

‘மாஸ்டர்’ படத்தை முடித்துவிட்ட லோகேஷ் கனகராஜ் அடுத்து ராஜ்கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார். ஷூட்டிங்குக்கான லொகேஷன்கள் வரை இறுதி செய்யப்பட்ட நிலையில் கொரோனாவால் திட்டம் மாறிப்போனது. ‘அண்ணாத்தே’ முடித்து ரஜினி இந்தப் படத்தில் நடிக்க இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால், மீண்டும் டிரீம் வாரியர்ஸுக்குப் படம் இயக்குகிறார் லோகேஷ். ‘பொன்னியின் செல்வன்’ பிரேக்கில் இந்தப் படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி. கைதி கூட்டணி.

“எங்க கடைல மீனு, எறா எல்லாம் சீப்புங்கோ... புக் பண்ணுங்க” என ஆன்லைனில் தாய்லாந்து உணவகம் ஒன்று புரமோஷன் நடத்தியது. ஆயிரக்கணக்கில் புக்கிங் ஆனதும் “ப்ச்... இவ்ளோ பொருள் எங்ககிட்ட இப்ப இல்லையே” எனக் கடையை மூடிவிட்டார்கள் உரிமையாளர்கள் இரண்டு பேரும். முன்பதிவு செய்தவர்கள் போலீஸை நாட, இருவருக்கும் 1446 ஆண்டுகள் சிறைவாசம் எனத் தீர்ப்பு தந்தது தாய்லாந்து நீதிமன்றம். 1446 ரொம்ப ஜாஸ்தி சார் என இருவரும் மன்றாட, பிழைத்துப்போங்கள் என 723 ஆண்டுகள் தண்டனை என அறிவித்திருக்கிறார்கள். ஆனால், தாய்லாந்தின் அதிகபட்ச தண்டனைக்காலம் என்பது 20 ஆண்டுகள்தான். இவை குற்றத்துக்கான மதிப்பீடு மட்டுமே. சில ஆண்டுகளுக்கு முன்னர், சில குற்றவாளிகளுக்கு 13,000 ஆண்டுகள் தாய்லாந்து தண்டனை அளித்தது குறிப்பிடத்தக்கது. கம்பி எண்ணுறமாதிரி வருஷத்தை எண்ணனும்!

சுகாதாரத்துறைச் செயலாளராக மாற்றப்பட்டிருக்கும் ராதாகிருஷ்ணன், காலையில் யோகாவும், நேரம் கிடைக்கும் போது மாலையில் வாக்கிங் செல்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். வீட்டின் தரையை அவ்வப்போது மஞ்சள் நீரால் துடைக்கச் சொல்கிறார். கருஞ்சீரகப் பொடி கலந்த வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்கிறார். மனது ரொம்பவும் இறுக்கமான நேரங்களில் தோட்டத்துப் பூச்செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சக் கிளம்பிவிடுகிறார். “மனசு ரிலாக்ஸா இருந்தாப் போதும். எவ்வளவு நெருக்கடியான காலகட்டத்தையும் சமாளிச்சுடலாம்” என்று, பார்ப்பவர்களிடம் சிரித்தபடியே கூறுகிறார். எங்க மனசையும் ரிலாக்ஸ் பண்ணுங்க சார்.

லைமைச்செயலாளர் சண்முகம், ஜூன் மாதத்துடன் பணி ஓய்வுபெறவிருந்த நிலையில், மூன்று மாதங்களுக்குப் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக காலை 9 மணிக்கெல்லாம் அலுவலகம் வந்துவிடுவது சண்முகத்தின் வழக்கம். முதல்வருடன் சந்திப்பு, துறைச் செயலாளர்கள் கூட்டம், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் என்று எப்போதும் பிஸியாகவே இருக்கிறார். எத்தனை மணியானாலும் அத்தனை கோப்புகளையும் அலுவலகத்திலேயே பார்த்து முடித்துவிட்டுதான் வீட்டுக்குக் கிளம்புவார். காலையில் வீட்டிலிருந்து வரும்போது அவித்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொஞ்சம், தயிர்சாதம் கொஞ்சம் கொண்டுவருகிறார். அது மட்டும்தான் அவரது மதிய உணவு. டயட் கன்ட்ரோல் எல்லாம் ஓகே. கொரோனாவை கன்ட்ரோல் பண்ணுங்க சார்.

இன்பாக்ஸ்

ப்பா பிரகாஷ் படுகோனுக்குத் தன் இன்ஸ்டாவில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் தீபிகா படுகோன். 80-களில் பேட்மின்ட்டன் விளையாட்டில் உலகளவில் நம்பர் ஒன், அனைத்து இங்கிலாந்து ஓப்பன் பேட்மின்ட்டன் போட்டிகளிலும் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியர், அர்ஜுனா விருது, பத்ம விருது பெற்றவரான தன் அப்பாவை, ‘நீங்கள் விளையாட்டில் மட்டுமல்ல, அன்பான இதயத்திலும் மனிதத்திலும்கூட சாம்பியன்தான். உலகின் ஆகச்சிறந்த ஆஃப்ஸ்கிரீன் ஹீரோ நீங்கள். உங்களைப் போன்ற இன்னொரு நபரை நான் பார்த்ததே இல்லை. லவ் யூ பப்பா’ என்று பெருமிதப்பட்டிருக்கிறார் தீபிகா. கல்யாணம் ஆனாலும் அப்பா பொண்ணு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism