Published:Updated:

இன்பாக்ஸ்

கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி சுரேஷ்

ஆந்திராவும் கர்நாடகாவும் இணைந்து பாடலை உச்சிமுகர்ந்திருக்கிறது. அடுத்து தமிழுக்கும் பாடல் வரும் என எதிர்பார்க்கலாம்.

இன்பாக்ஸ்

ஆந்திராவும் கர்நாடகாவும் இணைந்து பாடலை உச்சிமுகர்ந்திருக்கிறது. அடுத்து தமிழுக்கும் பாடல் வரும் என எதிர்பார்க்கலாம்.

Published:Updated:
கீர்த்தி சுரேஷ்
பிரீமியம் ஸ்டோரி
கீர்த்தி சுரேஷ்

‘தேசியவாதம் என்பது சமூகத்தில் உள்ள மக்கள் தங்கள் கூட்டு சுயத்தைப் பற்றி எப்படி நினைக்கிறார்கள் என்பதற்கான பிரதிபலிப்பே. அனைவரும் சமமான குடிமக்களாக நடத்தப்படவேண்டும். மொழியாலோ, மதத்தாலோ ஒற்றை அடையாளத்துடன் ஒரு தேசம் கட்டமைக்கப்படுமாயின், அது பெரும்பான்மைவாதம் தானேயன்றி தேசியம் அல்ல . பாகிஸ்தான் உருவாகும்போதே இஸ்லாமிய தேசமாகத்தான் உருவானது. இந்தியா அதனை இந்து தேசமாக தன்னை உருவாக்கும் கடைசி நிலையில் இருக்கிறது’ என வருத்தம் தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் மூத்த எழுத்தாளரும், வரலாற்று ஆசிரியையுமான ரொமிலா தாப்பர். சிறுபான்மையினர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல், இந்தியாவின் மூத்த ஆளுமைகளை அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது. நீதியின் குரல்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இன்பாக்ஸ்

‘விஜய் சார்கூட துப்பாக்கி ஷூட்டிங் நடிச்சப்போ இவரைப் பார்த்து பிரமிச்சுப் போயிட்டேன். ஏன்னா, கேமரா முன்னாடி இருக்குற விஜய்க்கும் டைரக்டர் கட் சொன்னவுடனே இருக்குற விஜய்க்கும் பெரிய வித்தியாசம் இருக்கும்’ என்கிறார் படத்தில் அவருக்குத் தங்கையாக நடித்த சஞ்சனா. ‘நமக்குப் பிடிச்ச விஷயத்தை முழு லவ்வோட பண்ணுனா இப்படித்தான் இருக்கும் என்று அட்வைஸ் செய்வாராம் விஜய். லவ் பண்ணுங்க பாஸ்.

மூன்று படங்கள், மூன்றுமே பிளாக்பஸ்டர் என டாப்கியரில் சென்றுகொன்டிருக்கிறார் அர்ஜுனின் உறவினரான த்ருவ் சர்ஜா. கொரோனாவால் தள்ளிப்போன பொகரு திரைப்படம் அன்னாரின் அடுத்த ரிலீஸ். படத்தில் வரும் ‘நான் ஒரு சைக்கோ’ பாடல் இளசுகளின் தற்போதைய சென்சேஷன். ஏப்ரல் மாதத்தில் கன்னடத்தில் வெளியான பாடலை பத்துக் கோடி பேர் பார்த்திருக்கும் நிலையில், கடந்த வாரம் வெளியான தெலுங்கு வெர்சனை அதற்குள் ஒரு கோடி பேர் பார்த்திருக்கிறார்கள். முரட்டு உடம்பு, ரௌடியிசம் எனச் செல்லும் பாடலில், த்ருவ் சர்ஜா ராஷ்மிகா மந்தனாவுடன் ஆடுவது உச்சக்கட்ட பிசிக்கல் வயலன்ஸ். பெப்பி நம்பர், அசத்தல் நடனம் என்றாலும் பாடலுக்குக் குறைந்தபட்ச எதிர்ப்புகூட எங்கும் இல்லை. ஆந்திராவும் கர்நாடகாவும் இணைந்து பாடலை உச்சிமுகர்ந்திருக்கிறது. அடுத்து தமிழுக்கும் பாடல் வரும் என எதிர்பார்க்கலாம். ரைட்டு!

நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகியிருக்கும் ஜான்வி கபூரின் ‘குன்ஜன் சக்ஸேனா’ படம் சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கிறது. சுஷாந்த் தற்கொலைக்குப் பிறகு, வாரிசு ஆதிக்கத்தை ஊக்குவிப்பதாக கரன் ஜோஹரின் மீது குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. அவரின் தயாரிப்பில் வெளியான இந்தப் படம் கார்கில் வீராங்கனையும் இந்திய விமானப் படையிலிருந்து போருக்குச் சென்ற முதல் பெண் பைலட்டுமான குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கையைப் பேசுகிறது. இப்படியொரு வலிமையான பாத்திரத்துக்கு ஜான்வி பெரிதாக நியாயம் சேர்க்கவில்லை போன்ற விமர்சனங்கள் ஒருபுறம் என்றால் இந்தப் படத்துக்கு இந்திய ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உண்மையை மட்டுமே படமாக எடுப்பதாக வாக்குறுதி கொடுத்த கரன் ஜோஹர் தரப்பு, தற்போது ஒரு கதாபாத்திரத்தை நாயக பிம்பமாக்க, ராணுவத்தில் நடக்காத விஷயங்களைச் சேர்த்திருப்பதாகச் சாடியிருக்கிறது எதிர்த்தரப்பு. ஆபரேஷனுக்கே ஆபரேஷனா?

இன்பாக்ஸ்

`அமெரிக்க மக்களிடம் இந்த மூன்றரை ஆண்டுகளாக நீங்கள் சொன்ன பொய்களுக்கு என்றேனும் வருத்தப்பட்டிருக்கிறீர்களா’ - ஹஃப்பிங்டன் போஸ்ட்டின் SV டேட் அமெரிக்க அதிபரிடம் கேட்ட இக்கேள்விதான் சமீபத்திய சம்மட்டியடி. இப்படியொரு கேள்வியை எதிர்பாராத ட்ரம்ப், ‘என்ன?’ என ஜெர்க் ஆக, ‘பொய்’, ‘நேர்மையின்மை’ என மீண்டும் வினவினார் டேட். `யாரு சொன்னது’ என உச்சக்கட்ட கடுப்புக்கு உள்ளானார் ட்ரம்ப். ‘நீங்க சொன்னதுதான்’ என வந்த பந்தை அதே வேகத்தில் கிரவுண்டுக்கு வெளியே அடித்தார் டேட். பதிலேதும் சொல்லாமல், அடுத்த பத்திரிகையாளரிடம்் நகர்ந்துவிட்டார் ட்ரம்ப். ஐந்து ஆண்டுகளாக இந்த வாய்ப்புக்காகக் காத்திருந்ததாகச் சொல்கிறார் டேட். அங்கேயாவது கேக்க முடியுது.

கொரோனாவால் தடைப்பட்டிருந்த ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்துள்ளன. அவதாரின் அடுத்த பாகங்களின் படப்பிடிப்பு நியூசிலாந்தில் சமீபத்தில் தொடங்கியது. மார்வெல் ஸ்டூடியோஸின் ஷாங்-ஷி ஆஸ்திரேலியாவில் நடந்துகொண்டிருக்கிறது. ஜுராசிக் பார்க் ஃப்ரான்சைஸின் அடுத்த படமான ‘ஜுராசிக் வேர்ல்டு: டொமினியன்’ படத்தின் படப்பிடிப்பை இங்கிலாந்தில் தொடங்க யூனிவர்சல் ஸ்டூடியோஸ் முடிவுசெய்துள்ளது. படக்குழுவின் பாதுகாப்புக்காக மட்்டும்் 9 மில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் 70 கோடி ரூபாய்) ஒதுக்கியிருக்கிறார்கள். ஒரு ஹோட்டல் முழுவதையும் 20 வாரங்களுக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறது படக்குழு. 18,000 COVID-19 டெஸ்ட்களையும் முன்பதிவு செய்துவைத்திருக்கிறது. பாதுகாப்பு நடைமுறைகளை விளக்கும் 107 பக்க பாதுகாப்புக் கையேடு ஒன்றையும் தயார் செய்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நடக்கும் இடங்களைச் சுற்றி 150 ஹேண்ட் சானிட்டைசர் ஸ்டேஷன்களும் அமைக்கப்படுமாம். டைனோசர் வருமா வராதா?

ந்திய நீதிபதிகளின் சர்ச்சைகள் என எழுத ஆரம்பித்தால், ஜெயமோகனின் வெண்முரசு அளவுக்கு எழுதலாம்போல. ‘மயில்கள் கண்களில் வெளியாகும் கண்ணீரை வைத்து இனப்பெருக்கம் செய்யும்’ எனச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நீதிபதி சொல்லி ஷாக் அடிக்க வைத்தார். எல்லாவற்றுக்கும் சமூக வலைதளங்களில் கருத்து சொல்லும் முன்னாள் நீதிபதியான கட்ஜூவின் சமீபத்திய சர்ச்சை, இந்தித் திணிப்பைப் பற்றியது. ‘இந்தியைக் குறையாகப் பார்க்காதீர்கள், எல்லோரும் அதைக் கற்க வேண்டும்’ என ஃபேஸ்புக்கில் பாடம் நடத்தினார் கட்ஜூ. வசமாக சைடிஷ் சிக்கியிருக்கிறது என நினைத்த நெட்டிசன்கள், போலியாக பல்வேறு கதைகளை எழுதி இந்தியை நக்கலடித்துப் பதிவுகள் வெளியிட்டனர். அப்பாவித்தனமான கட்ஜூவும் எல்லாவற்றையும் உண்மை என நினைத்து, தன் பக்கத்தில் பகிர்ந்து கேலிக்குள்ளானார். என்ன கொடுமை கட்ஜூ இது?

இன்பாக்ஸ்
படம்: க.பாலாஜி

தேர்தல் நிதியாக உண்டியல் குலுக்குவது, கார்ப்பரேட்டுகளிடம் பணம் வாங்குவது எல்லாம் இந்தியன் ஸ்டைல். அமெரிக்காவில் இன்னும் புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். டொனால்டு ட்ரம்பின் மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் (அவ்ளோதான் பெயர்) Liberal Privilege என்னும் தன் அடுத்த புத்தகத்தை அமெரிக்கத் தேர்தலை மையப்படுத்தி வெளியிடவிருக்கிறார். அப்பாவுக்கு எதிராகப் போட்டியிடும் ஜோ பிடன் போன்ற தலைவர்களைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது இப்புத்தகம். பதிப்பாளர் மூலம் வெளியிட்டால் லாபத்தில் பங்கு குறைந்துவிடும் என்பதால், நேரடியாகவே புத்தகத்தை வெளியிடுகிறாராம். எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதற்கான எந்தவித ஆதாரமும் அந்தப் புத்தகத்தில் இருக்காது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். சேதாரம்தான் இருக்கும்!

கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்

ன் அம்மாவைப் போலவே ரஜினியுடன் நடிப்பதுதான் லட்சியம் என, சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன கீர்த்தி சுரேஷ், ‘அண்ணாத்த’ படத்தின் அடுத்த ஷெட்யூலுக்காகக் காத்திருக்கிறாராம். அதே சமயம், ஸ்லிம் லுக்குக்கு மாறிய கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தடுத்த படங்கள் இந்த லாக்டௌனில் வெளியாகக் காத்திருக்கின்றன. மரக்கார், மிஸ் இந்தியா என இரு படங்கள் கொரோனாவின் கருணை மனுவுக்காகக் காத்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, இந்தவாரம் குட் லக் சகி படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது. அண்ணாத்த... என்னாத்த?