Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

‘அருவா’ தள்ளிப்போவதால் அருண் விஜய்யை இயக்கத் தயாராகிவிட்டார் ஹரி.

லாக்டெளன் காரணமாக மேத்ஸ் டியூஷனுக்குப் போக முடியாத சுஷ்மிதா சென்னின் தத்து மகள் அலிஷாவுக்கும் அவர் தோழிக்கும், சுஷ்மியின் பாய் ஃபிரெண்ட் ரோமன் ஷால் கணிதம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். தன் காதலர், மேத்ஸ் டீச்சரான பொறுப்பான தருணத்தை கேண்டிட் வீடியோ எடுத்து ட்விட்டரில் போஸ்ட் செய்துவிட்டார் சென். ‘யூ ஆர் லக்கி சுஷ்மிதா...’ என்று வீடியோவை வைரலாக்கிவிட்டார்கள் ரசிகர்கள். வைரல் லவ்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
இன்பாக்ஸ்

ழக்கமாக சூப்பர் ஹீரோக்களைக் கொண்டாடும் அமெரிக்கா, ஒரு ஆறு வயதுச் சிறுவனை சூப்பர் ஹீரோ வரிசையில் சேர்த்துக் கொண்டாடிவருகிறது. சிறுவன் பிரிட்ஜர் வாக்கரின் தங்கையை ஒரு நாய் துரத்தியிருக்கிறது. நாயிடமிருந்து தங்கையைக் காப்பாற்ற வந்த பிரிட்ஜரை நாய் தாக்கியதில் சிறுவனுடைய முகத்தில் சுமார் 90 தையல்கள் போடப்பட்டுள்ளன. பிரிட்ஜரின் இந்த வீரச் செயலை அவரின் உறவினர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில் இவனையும் உங்கள் சூப்பர் ஹீரோ வரிசையில் சேர்த்துக்கொள்ளுங்கள் என அவெஞ்சர்ஸ் பட நடிகர்களை டேக் செய்திருந்தார். இதற்குப் பதிலளித்த ‘கேப்டன் அமெரிக்கா’ நடிகர் கிறிஸ் எவன்ஸ், சிறுவனுக்குப் பாராட்டு தெரிவித்து, அவனுக்கு கேப்டன் அமெரிக்கா படங்களில் பயன்படுத்தும் ஷீல்டு ஒன்றைப் பரிசளிப்பதாகக் கூறியிருக்கிறார். மேலும், மார்க் ரூபாலோ, அன்னி ஹாத்வே எனப் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் சிறுவனைப் பாராட்டி வருகின்றனர். என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சு!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘ப்ராங்க் கால்ஸ்’ என்பது நாம் அறிந்த ஒரு வேடிக்கையான விளையாட்டு. நமக்குத் தெரிந்தவர்களுக்கெல்லாம் வேறு யாரோ பேசுவதுபோல போன் செய்து பேசி விளையாடும் இந்த ப்ராங்க் கால் விளையாட்டின் சாம்பியன்கள் ரஷ்யாவில் இருக்கும் நண்பர்கள் ஓவன் மற்றும் லெக்ஸ்சஸ். ஏனெனில், இவர்கள் ப்ராங்க் செய்வது அண்டை அயலார்களை அல்ல. ஹாலிவுட் பிரபலங்கள் தொடங்கி, பிரெஞ்ச் நாட்டு அதிபர் இமானுவேல் மாக்ரான், அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் என நீள்கிறது இவர்கள் லிஸ்ட். இவர்களின் விளையாட்டில் சமீபத்தில் சிக்கியிருப்பது போலந்து நாட்டின் புதிய அதிபராகப் பதவியேற்றிருக்கும் அட்ரஸிஜ் டூடா. டூடாவிற்கு, ஐநா சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெர்ரெஸ் போல அழைத்துப் பேசியிருக்கிறார்கள். போலந்து நாட்டு மதுவைப் பற்றி அவர்கள் பேசியதும் சுதாரித்திருக்கிறார் டூடா. இந்த கால் ரெக்கார்டிங்கை அவர்கள் யூடியூபில் வெளியிட, தான் பேசியதை உறுதிப்படுத்தியிருக்கிறார் டூடா. அதேசமயம், போலந்து நாட்டில் இந்த அழைப்பு குறித்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். ஹலோ... நான் மார்க் பேசறேன்!

னிதநேயத்திற்கு எப்போதும் மதிப்பு அதிகமே என நிரூபித்திருக்கிறது அசாம் அரசு. அம்மாநிலத்தின் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘பிளாஸ்மா தானம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை’ எனக் கூறியுள்ளார். கொரோனா நோய் பாதிப்பில் இருப்பவர்களுக்கு இந்த இக்கட்டான சூழலில் பிளாஸ்மா தானம் செய்பவர்களுக்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். அரசு வேலைகளில் விண்ணப்பிக்கும்போது இந்தச் சான்றிதழுக்குக் கூடுதலாக இரண்டு மதிப்பெண்கள் கிடைக்கும். அரசு வசதிகளை அவர்கள் பயன்படுத்துவதிலும் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தானத்தில் சிறந்தது...

ந்திய கிரிக்கெட்டர் ஹர்திக் பாண்டியாவுக்கும் செர்பிய மாடலும் நடிகையுமான நடாஷாவுக்கும் ஜனவரியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது கர்ப்பமாக இருக்கிறார் நடாஷா. மேடிட்ட வயிற்றுடன் தன் புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ள நடாஷா, ‘புது உறவொன்று எங்கள் வாழ்க்கையில் வரவிருக்கிறது. உங்கள் ஆசீர்வாதங்களை வழங்குங்கள்’ என்றிருக்கிறார். வெல்கம் ஜூனியர்

இன்பாக்ஸ்

நீட் தேர்வை எதிர்த்து, அரசுப் பணியைத் துறந்த திண்டிவனத்தைச் சேர்ந்த ஆசிரியை சபரிமாலா, காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ம் தேதி ‘பெண் விடுதலைக் கட்சி’ எனும் பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தும், ‘எத்தன கட்சிகளாடா சாமி!’ என கேலி செய்தும் பலர் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் ‘`அழைப்பில் வந்து வாழ்த்து கூறிய அண்ணன்களுக்கு நன்றி’’ என அதேநாளில், சீமான், வேல்முருகன், இயக்குநர் கவுதமன் ஆகியவர்களின் புகைப்படங்களுடன் நன்றி தெரிவித்துப் பதிவு போட்டிருந்தார் சபரிமாலா. ‘அண்ணன் தங்கச்சியெல்லாம் தனித்தனியா ஆளுக்கொரு கட்சி ஆரம்பிச்சுக்கிட்டே போனா நாடு தாங்குமா’ எனக் கலாய்த்துத் தள்ளினர் நெட்டிசன்கள். சபரிமாலாவுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணன்களும் ஆளுக்கொரு பிரச்னைக்கு, ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்தவர்கள்தான் என்பதுதான் இதில் ஹைலைட்! சபரிமாலாகூட ஆரம்பிச்சுட்டாங்க.. அண்ணாத்தவைக் காணோமே இன்னும்!

வெற்றிமாறன் சூரி படத்தை இப்போதைக்கு தள்ளிவைக்க, சூர்யாவும் ‘அருவா’வை ஹோல்டில் வைத்துவிட்டார். லாக்டெளன் முடிந்ததும் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. அடுத்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என்பதுதான் இப்போதைய பிளான். ‘அருவா’ தள்ளிப்போவதால் அருண் விஜய்யை இயக்கத் தயாராகிவிட்டார் ஹரி. அருண் விஜய்க்கு எல்லோருமே கதை வெச்சிருக்காங்களே

டிடி வரலாற்றில் முதல்முறையாக 200 மில்லியன் டாலரில் ஹாலிவுட் படம் தயாரிக்க இருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். ‘தி கிரே மேன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள் அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ இயக்க இருக்கிறார்கள். கிறிஸ் இவான்ஸ் மற்றும் ரயான் ஜோஸ்லிங் நடிப்பில் உருவாகயிருக்கிறது இந்த நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல்! அறிவிப்பே அசத்துதே

ந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தை நெருங்கிவரும் நிலையில், இந்தியாவின் ஆளுகைக்குள் உள்ள யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் ஒரு கொரோனா கேஸ்கூட இல்லாதது பலரது பாராட்டுதலையும் பெற்றுள்ளது. இதற்கு மையப்புள்ளியாக விளங்கியவர், லட்சத்தீவின் சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த டாக்டர் எஸ்.சுந்தரவடிவேலு ஐ.ஏ.எஸ். பிப்ரவரி 1-ம் தேதியில் இருந்தே கடல், வான்வழி மார்க்கமாக லட்சத்தீவுக்குள் வரும் அனைவரும் சோதிக்கப்பட்டனர். கட்டாயத் தனிமைப்படுத்துதல், கண்டிப்பான சமூக விலகல், முகக்கவசம் உள்ளிட்டவற்றைக் கடைப்பிடித்ததால் லட்சத்தீவில் ஒரு கொரோனா கேஸ்கூட பாசிட்டிவ் ஆகாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. அத்தீவில் ஏறத்தாழ 65,000 மக்களுக்கு மூன்று மருத்துவமனைகள் மட்டுமே உள்ளதால், கொரோனாப் பரவலை நிர்வாகம் சீரியஸாக அணுகியுள்ளது. லட்சத்தில் ஒரு தீவு!