சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

குஜராத்தில் அதிக அளவில் விளைகிறது டிராகன் பழம்.

ல்யாணி பிரியதர்ஷனுக்கு தொடர்ச்சியாக பிரபலங்களின் வாரிசுகளுடன்தான் படம் கமிட்டாகும் போல. முதல் படமான ‘ஹலோ’வில் நாகார்ஜுனாவின் மகனான அக்கில் அக்கினேனியுடன் நடித்தார்.
இன்பாக்ஸ்

அடுத்து துல்கர் சல்மானுடன் ‘வரனே அவஷ்யமுண்ட்’, காளிதாஸ் ஜெயராமுடன் ‘புத்தம் புதுக் காலை’. வினித் சீனிவாசன் இயக்கிவரும் புதிய படமான ஹிரதயமில், மோகன்லால் வாரிசு பிரனவுடன் ஜோடி சேர்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். ஷூட்டிங் பிரேக்கில் ‘மாஸ்டர்’ படத்துக்குச் சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது இந்த ஜோடி.

இன்பாக்ஸ்

மிழில் படங்கள் அடுத்தடுத்து வெளியானாலும், `இந்த வருடமாவது மழை பொழியுமா’ மோடில்தான் ஹாலிவுட் இருக்கிறது. ஏப்ரல் 2020-ல் வந்திருக்க வேண்டிய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான `No Time to Die’ கொரோனாவால் தள்ளித் தள்ளிப் போய், இந்த ஏப்ரலில் வெளியாவதாக அறிவித்திருந்தார்கள். தற்போது அதை அக்டோபர் மாதத்துக்குத் தள்ளி வைத்திருக்கிறார்கள். அதேபோல், Uncharted, கோஸ்ட்பஸ்டர்ஸ் படங்களின் வெளியீட்டுத் தேதிகளும் தள்ளிப்போகின்றன. தள்ளிப் போகாதே..!

இன்பாக்ஸ்

மீண்டும் ஹெல்த்தி லைஃப்ஸ்டைலுக்கு மாறியதால் சந்தோஷத்தில் இருக்கிறாராம் சிம்பு. மாஸ்டருடன் வெளியான ஈஸ்வரனும் ஹிட் என்பதால் கூடுதல் மகிழ்ச்சியாம். வழக்கமாக சிம்பு படங்களுக்கு வரும் கலெக்ஷனைவிட ஈஸ்வரன் வசூல் குறைவுதான் என்றாலும், கொரோனாச் சூழல், மாஸ்டர், ரீ என்ட்ரி எனப் பல காரணங்களால் இந்த நிம்மதி என்கிறார்கள் சிம்புவின் நலம் விரும்பிகள். வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’, ரஹ்மான் இசையில் ‘பத்து தல’ போன்ற படங்களுடன், ‘மேயாத மான்’ இயக்குநர் ரத்ன குமாரிடமும் கதை கேட்டுவருகிறாராம் சிம்பு. அந்த விரல் வித்தை மட்டும் வேணாம்!

இன்பாக்ஸ்

து தேர்தல் நேரம்... கட்சிக் கூட்டங்கள், மேடை சொற்பொழிவுகள், திறந்த வாகனத்தில் பிரசாரம் என கொரோனாவுக்கும் தங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நாளுக்கு நாள் உணர்த்தி வருகிறார்கள் நம் தலைவர்கள். அதே சமயம், கமலின் பிரசாரப் பயணங்களில் ஒரு ஆரோக்கியமான விஷயம் காணப்படுகிறது என்கிறார்கள் நிருபர்கள். கேரவனில் பயணம் செய்யும் கமல், அவர் கட்சி சார்ந்து அவருடன் பயணிக்கும் அனைவருக்கும் அவரது வண்டியிலேயே உடல் உபாதைகளைப் போக்குவதற்கான வசதியை ஏற்படுத்தி வைத்திருக்கிறாராம். குறிப்பாக பெண்கள் பயணங்களின்போது, இதற்கு அவதிப்படுவார்கள் என்பதால், அதில் எந்தக் குறையும் நிகழாமல் பார்த்துக்கொள்கிறாராம். ஃபாலோ பண்ணுங்க மத்தவங்களும்!

இன்பாக்ஸ்

மைசூரின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்று, லலித மஹால் அரண்மனை. மைசூர் மகாராஜா குடும்பம் கட்டிய இது இப்போது நூற்றாண்டு கொண்டாடுகிறது. சாமுண்டி மலையின் அடிவாரத்தில் உள்ள இந்த அரண்மனையை ஒரு ஹோட்டலாக மாற்றி கர்நாடக சுற்றுலாத்துறை நிர்வகித்து வருகிறது. இதைத் தனியாரிடம் குத்தகைக்கு விட முடிவெடுத்துள்ளனர். உதய்பூர், ஜெய்ப்பூர், ஹைதராபாத் எனப் பல இடங்களில் அரண்மனைகளை ஹோட்டல்களாக மாற்றி நிர்வகித்து வரும் டாடா குழுமம் இந்த லலித மஹாலையும் எடுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறது. விரைவில் இது தாஜ் லலித மஹால் அரண்மனை ஆகக்கூடும். அங்கே சுந்தர்.சி. அரண்மனை - 3 எடுப்பாரோ?

இன்பாக்ஸ்

குஜராத்தில் அதிக அளவில் விளைகிறது டிராகன் பழம். இதன் பெயர்தான் ‘டிராகன்’ என இருக்கிறதே தவிர, இது அமெரிக்காவிலிருந்தே உலகம் முழுக்கப் பரவியது. ‘’சீனப் பெயரில் இருப்பதால் இதை இப்போது நிறைய பேர் வாங்குவதில்லை’’ என விவசாயிகள் புகார் செய்ததால், இதன் பெயரை மாற்றியிருக்கிறது குஜராத் அரசு. ‘’இந்தப் பழம் பார்ப்பதற்கு தாமரைப் பூ மாதிரி இருக்கிறது. அதனால் ‘கமலம்’ எனப் பெயர் வைத்திருக்கிறோம்’’ என்கிறார் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி. ‘எல்லையில் சீனா கொடுக்கும் நெருக்கடிகளுக்கு பதிலடி இது’ என நெட்டிசன்கள் கிண்டல் செய்கிறார்கள். மக்கள் வாழ்க்கையை மாத்தலை, பேரை மட்டும் மாத்தியிருக்காங்க!

இன்பாக்ஸ்

காலையில் ஆபீஸ் வந்தால், மாலையில் வீடு திரும்புவது எல்லோருக்கும் பிடிக்கும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் பலரும் இப்படிப் போக முடியாமல் தவிக்கிறார்கள். பெரும்பாலான நாள்களில் காலையில் வீட்டிலிருந்தபடியே பணிபுரியும் அமித் ஷா, மாலையில்தான் அலுவலகம் வருகிறார். நள்ளிரவு வரை உற்சாகமாக வேலை பார்க்கிறார். இதனால் உள்துறை அதிகாரிகள், பாதுகாப்பு அலுவலர்கள் பலரும் கொட்டாவி விட்டபடி நார்த் பிளாக் அலுவலகத்தில் தவம் கிடக்கிறார்கள். தாமரை மாலையில் மலருதோ?

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

டந்த வாரத்தில் தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியபோது குறுக்குத்துறை முருகன் கோயில் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கோயில், ஆற்றின் நடுவே உள்ளது. தாமிரபரணியில் ஏற்படும் கட்டுக்கடங்காத வெள்ளத்தின்போது, தண்ணீருக்குள் மூழ்கும் என்பதால் மூலவர் சிலையை மட்டும் வைத்துவிட்டு, உற்சவர் சிலையைக் கரையில் உள்ள மற்றொரு கோயிலுக்கு எடுத்துச் செல்வார்கள். கோயிலின் மதில் சுவர், படகு வடிவில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதால், வெள்ள நீர் மோதினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. மண்டபத்துக்குள் புகும் தண்ணீர் வெளியேற, ஜன்னல் வடிவிலான துளைகள் இருக்கும் வகையில் 17-ம் நூற்றாண்டிலேயே மதிநுட்பத்துடன் கட்டியிருக்கிறார்கள். 300 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றைச் சுமந்தபடியே தண்ணீருக்குள் அமிழ்ந்தும் வெளிவந்தும் இருக்கிறது கோயில். எதிர்நீச்சல் அடி...

ங்கர் அடுத்த பிரமாண்டத்துக்குத் தயாராகிவிட்டார். விக்ரம், ஜூனியர் என்.டி.ஆர், யஷ் மூவரையும் வைத்து புதிய படத்தைத் தொடங்கவிருக்கிறாராம். லைக்கா நிறுவனத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ‘இந்தியன் 2’ படம் தாமதாகிவருவதால், அதற்கு முன்னர் அதே நிறுவனத்துக்கு இந்தப் படத்தைச் செய்கிறார் ஷங்கர். ராஜமௌலியின் RRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரும், ‘கேஜிஎஃப்’ இரண்டாம் பாகத்தில் யஷ்ஷும் தற்போது பிஸி. எனவே, ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்கவிருக்கிறது. இசை ரஹ்மான். வெயிட்டிங்!

ஃபேக் நியூஸ் இப்போது எல்லா ரூபத்திலும் வந்துகொண்டிருக்கிறது. இந்த வாரம் அப்படி எல்லோரின் மொபைலிலும் ஒரு பெண்மணியின் வீடியோ ஃபார்வர்டு செய்யப்பட்டது. கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதுபோல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அந்தப் பெண்மணி, போட்டோ எடுத்ததும் ஊசியை நகர்த்திவிடுவார். இது கொரோனா வேகத்தில் இணையத்தில் பரவியது. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உட்பட பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்கள். முன்பே ஊசி போட்டுக்கொண்டதாகவும், போட்டோவுக்காக போஸ் கொடுக்கச் சொன்னபோது இப்படிச் செய்ததாகவும் உண்மை வெளியாகியுள்ளது. ஆனால், இதைச் சிலர் இப்படித் திரித்து வெளியிட்டு இருக்கின்றனர். பரப்புவதெல்லாம் உண்மையல்ல!

ல சிக்கல்களுக்குப் பிறகு கடந்த வாரம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார் ஜோ பைடன். ஆனால், விழாவில் அவரையும் தாண்டி அதிகக் கவனம் ஈர்த்தது செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் தான். அனைவரும் விழாவுக்கேற்ற உடைகள் அணிந்த நிலையில், குளிருக்கு இதமாக இருக்கட்டும் என ஜெர்கின் கிளோவ்ஸ் சகிதமாக விழாவுக்கு வந்தார் பெர்னி. உலகின் பல்வேறு இடங்களுக்கு பெர்னி அதே காஸ்ட்யூமில் வலம் வருவது போல நெட்டிசன்ஸ் போட்டோஷாப் செய்ய, அவர்தான் கடந்த வாரத்தின் வைரல் மெட்டிரீயல். அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

ஜெயலலிதாவுக்கு அரசு சார்பில் சென்னை மெரினாவில் நினைவிடம் கட்டப்பட்டு வரும் நிலையில், அவருக்குக் கோயில் கட்டியுள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். முதன்முதலாக எம்.எல்.ஏவாகி அமைச்சரானபோது, ‘’ஜெயலலிதா இருக்கும் இடம் எனக்குக் கோயில், அதனால் செருப்பணிந்து சட்டமன்றத்துக்குள் வர மாட்டேன்’’ என்று கூறி ஜெயலலிதாவையே ஜெர்க் ஆக வைத்தவர் ஆர்.பி.உதயகுமார். இந்த நிலையில் ஜெயலலிதாவுக்காக ‘அம்மா கோயில்’ என்ற பெயரில் தனது திருமங்கலம் தொகுதியில் உள்ள டி.குன்னத்தூரில் பிரமாண்டமாக கோயிலைக் கட்டியுள்ளார். இதில் குழந்தைகள் விளையாட பூங்கா, மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி மையம் ஆகியவையும் உள்ளன.

இன்பாக்ஸ்

‘’நான் எப்பவும் ஜெயலலிதாவை கடவுளாகத்தான் பார்த்தேன். கட்சி நிர்வாகி என்பதைவிட அவரின் பக்தன் என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. நாட்டிலயே எந்த அரசியல் தலைவருக்கும் கோயில் கிடையாது. ஜெயலலிதா கோயிலை அமைக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது’’ என்கிறார் ஆர்.பி.உதயகுமார். உண்டியல் இருக்கா?

இன்பாக்ஸ்

ப்பானில் உருவான காட்ஸில்லா கதைகளின் வெற்றி, அதை ஹாலிவுட்டை நோக்கி நகர்த்தி வந்தன. ஹாலிவுட்டிலும் பல்வேறு படங்கள் ‘காட்ஸில்லா’வின் கால்ஷீட்டைப் பெற்று கல்லாவை நிரப்பின. ‘கிங் காங்’ படங்கள், பல்வேறு மார்வெல் காமிக்ஸ் புத்தகங்கள் காட்ஸில்லாவை தங்களின் ஆஸ்தான வில்லனாக்கிக் கொண்டன. தற்போது லெஜெண்டரி பிக்சர்ஸும், வார்னர் பிரதர்ஸ் நிறுவனமும் ‘காட்ஸில்லா’வை வைத்து ஒரு புதிய யுனிவர்ஸை (படத்தொடர்) ‘மான்ஸ்டர்வெர்ஸ்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளன. இதன் லேட்டஸ்ட் பாகமாக ‘காட்ஸில்லா vs. காங்’ படம் இந்த வருடம் வெளியாகவிருக்கிறது. இதில் காட்ஸில்லாவுடன் மோதப்போவது ‘கிங் காங்’ என்பதால் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ‘இரண்டு மிருகங்களில் ஒன்று அழியும்’ (One Will Fall) என்ற ஸ்பாய்லருடனே படம் விளம்பரப்படுத்தப்படுகிறது. சென்ற பாகத்தில் நடித்த ‘ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்’ புகழ் மில்லி பாபி பிரவுன், ரெபெக்கா ஹால் உட்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம், திரையரங்குகள் மட்டுமன்றி நேரடியாக ‘HBO மேக்ஸ்’ ஓடிடியிலும் வெளியாகவிருக்கிறது. வெறித்தனமா இருக்கும்ல!