கட்டுரைகள்
பேட்டிகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

படம் ஜூலை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டாலும் கொரோனா விடுமா என்பதை டைம் டிராவல் செய்துதான் பார்க்கவேண்டும்.

இன்பாக்ஸ்

ல நிறுவனங்களைப் போலவே ஃபேஸ்புக்கும் இந்தக் கொரோனா காலகட்டத்தைத் தாண்டியும் வொர்க் ஃப்ரம் ஹோமைத் தொடரவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிறகும் கிட்டத்தட்ட 50,000 ஊழியர்களாவது அடுத்த ஐந்து முதல் பத்து வருடங்களுக்கு வொர்க் ஃப்ரம் ஹோமைத் தொடர்ந்து செய்வார்கள். ஊழியர்களுக்கும் அலுவலகத்துக்கும் இணக்கமாக இந்த முடிவு எடுக்கப்படும்” என்று அறிவித்திருக்கிறார் மார்க் சக்கர்பெர்க். வீட்ல இருந்தும் ஃபேஸ்புக்லதான் இருப்பாங்க!

இன்பாக்ஸ்

“ ‘ஏழைகளின் ஏஞ்சலினா ஜூலி’ என்று என்னை அழைப்பதில் எனக்கு விருப்பமில்லை” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார் ஈஷா குப்தா. அதற்கு அவர் சொன்ன காரணம் ‘அடடே’ லெவல். “நான் ஏஞ்சலினா ஜூலி போல இருப்பதால் அப்படிக் கூப்பிடுகிறீர்கள் என்பது சரி. ஆனால் இதன்மூலம் நீங்களே உங்களை ஏழைகள் என்று ஏன் சொல்லிக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார் அவர். இது சபாஷ் கேள்வியா இருக்கே!

இன்பாக்ஸ்

போபால் அருகே சத்லாபூர் கிராமத்தில் எளிய முறையில் ஒரு திருமணம் நடைபெற்றிருக்கிறது. மணமக்களுடன் 30 பேர் மட்டுமே கலந்துகொண்ட அந்தத் திருமணம் முடிந்து, இரண்டே நாள்களில் மணமகளுக்குக் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, மணமகன் உள்ளிட்ட மற்ற அனைவரும் 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். பாவத்த

வித்தியாசமான கதைக்களங்களைத் தேடிப் பிடிக்கும் கிறிஸ்டோபர் நோலன் இந்த முறை கையில் எடுத்திருப்பது டைம் டிராவல். அவரின் ‘டெனட்’ படத்தின் டிரெய்லரில் ‘இது டைம் டிராவல் ரிவர்ஸல்’ என வரும் வசனம், விபத்து ஒன்றின் காட்சியமைப்பு, ஏற்கெனவே சுடப்பட்ட புல்லட்களைத் துப்பாக்கியால் திரும்ப கேட்ச் செய்வது எனப் பல மாயவித்தைகள் நிகழ்கின்றன. குறிப்பாக ரிவர்ஸில் ஓடும் டைமில் கதாநாயகர்கள் ஃபார்வேர்டாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இப்போதே யூடியூபர்களும் ‘சயின்ஸ்ல இது என்ன தியரி தெரியுமா?’ என பிசிக்ஸ் புக்கைப் புரட்ட ஆரம்பித்துவிட்டார்கள். படம் ஜூலை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டாலும் கொரோனா விடுமா என்பதை டைம் டிராவல் செய்துதான் பார்க்கவேண்டும். வெயிட்டிங்!

லையாள நடிகர் பிரித்விராஜும் படக்குழுவினர் 58 பேரும் ஜோர்டான் நாட்டில் கடந்த இரண்டு மாதங்களாகச் சிக்கியிருந்தார்கள். `ஆடுஜீவிதம்’ என்ற படத்தின் படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்ற அவர்கள் கொரோனா லாக்டௌனில் சிக்கிக்கொண்டார்கள். இரண்டு மாதம் கழித்து மே 22-ம் தேதிதான் அவர்கள் அனைவரும் கொச்சி திரும்பியிருக்கிறார்கள். நாடு திரும்பினாலும் பிரித்விராஜும் மற்றவர்களும் ஏழு நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு கொரோனா டெஸ்டிங் நடந்து கொரோனா இல்லை என்று ஆனபிறகுதான் இயல்பு வாழ்கைக்கு அவர்கள் திரும்ப முடியும். நம்புவோம்!

லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருந்த படம், டிராப் ஆனதால் அந்த கால்ஷீட்டில் வேறு ஒரு படம் நடித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அந்தப் படத்திற்காகப் பல பேரிடம் கதை கேட்டு தற்போது அட்லியின் உதவி இயக்குநரின் கதையை ஓகே செய்திருக்கிறாராம். இதில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். டபுள் டமாக்கா!

சானியா மிர்ஸா
சானியா மிர்ஸா

``என் மகன் அவன் அப்பாவை எப்போது பார்ப்பான் என்பதே தெரியாது’ என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் வருத்தப்பட்டிருக்கிறார் சானியா மிர்ஸா. என்ன விஷயம் என்றால், கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் சென்ற சோயிப், லாக்டெளன் காரணமாக அங்கேயே தங்கிவிட்டிருக்கிறார். ‘அவர் அங்கே, நானும் என் மகனும் இங்கே ஹைதராபாத்தில் இருக்கிறோம். சின்னக்குழந்தையுடன், அவரில்லாமல் இந்தத் தருணத்தைக் கடப்பது கடினமாக இருக்கிறது. ஆனாலும், பாகிஸ்தானில் சோயிப் தன் வயதான அம்மாவுக்குத் துணையாக இருக்கிறார். அது எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றிருக்கிறார் சானியா. நல்ல மருமகள்!

சானியா மிர்ஸா
சானியா மிர்ஸா
செரீனா வில்லியம்ஸ்
செரீனா வில்லியம்ஸ்

டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில் செரீனாவும் அவரின் இரண்டு வயதுக் குட்டி மகள் அலெக்சிஸ் ஒலிம்பியாவும் ஒரு காலை வேளையில் முகம் கழுவி, சருமப் பராமரிப்பில் ஈடுபடுகின்றனர். தாயும் மகளும் ஒரே வண்ணத்தில் உடையணிந்து, அருகருகில் நின்று, முகத்தை ஈர டவல் கொண்டு துடைக்கின்றனர். ‘நாங்கள் எங்கள் காலை வேலைகளைச் செய்கிறோம். இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, ஏனென்றால் இந்தச் சிறிய பெண் நான் செய்யும் எல்லாவற்றையும் மிகவும் அழகாகச் செய்கிறாள்’ என்று தான் செய்வதையே கியூட்டாக காப்பி பேஸ்ட் செய்யும் தன் மகளை மெச்சும் செரீனா, அந்த வீடியோவில் தன் சருமப் பராமரிப்பு பற்றியும் கூறியிருக்கிறார். ஜூனியர் செரீனா!