Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ஷூட்டிங் கேப்பில் இருவரும் திண்டுக்கல் பகுதியில் பைக்கில் சுற்றி வந்த படங்கள் வைரலாகின.

இன்பாக்ஸ்

ஷூட்டிங் கேப்பில் இருவரும் திண்டுக்கல் பகுதியில் பைக்கில் சுற்றி வந்த படங்கள் வைரலாகின.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
ண்டுக்கு அரை டஜன் படங்கள், இதுதான் விஜய்சேதுபதியின் டார்கெட்!
இன்பாக்ஸ்

தற்போது நடித்து வரும் பெயரிடப்படாத பொன்ராம் படத்தில் விஜய் சேதுபதிக்கு காமெடி போலீஸ் ரோலாம். யோகி பாபுவுக்குப் பதில் இப்போது ட்ரெண்டில் இருக்கும் குக்கு வித் கோமாளி புகழ் புகழே காமெடியனாக விஜய் சேதுபதியோடு அதகளம் செய்திருக்கிறார். ஷூட்டிங் கேப்பில் இருவரும் திண்டுக்கல் பகுதியில் பைக்கில் சுற்றி வந்த படங்கள் வைரலாகின. காமெடிக்கு ராவடி!

இன்பாக்ஸ்

‘அலா வைகுண்டபுரமுலு’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா’வுக்கு ஆந்திர தேசத்தையும் தாண்டி எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. மாஸ் டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தயாராகி ஆகஸ்ட் ரிலீஸுக்கு நாள் குறித்துக் காத்திருக்கிறது. பஹத் பாசில் இப்படத்தில் இருப்பதும், ஏற்கெனவே விஜய்க்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் கூட்டம் கேரளாவில் அல்லு அர்ஜுனுக்கு இருப்பதும் படத்துக்கு எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாகக் கூட்டியிருக்கிறது. மாஸ் கூட்டுங்க பாஸ்!

இன்பாக்ஸ்

த்தனையோ வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வந்து விட்டாலும்கூட, பிரிட்டிஷ் இளவரசி டயானாவின் வாழ்க்கையில் இன்னமும் சொல்லப்படாத பக்கங்கள் இருப்பதாகவே நினைக்கிறது ஹாலிவுட் திரையுலகம். அதனால் அடிக்கடி டயானா படங்கள் வருகின்றன. அந்த வரிசையில் லேட்டஸ்ட், ‘ஸ்பென்ஸர்.’ இதில் டயானா கெட்டப்பில் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட் இருக்கும் புகைப்படம், லேட்டஸ்ட் இணைய வைரல். டயானா ஹேர்ஸ்டைல், புன்சிரிப்பு, முகத்தில் குழந்தைத்தனம் என ‘ஸ்பென்ஸர்’ படத்துக்கான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது புகைப்படம். வெயிட்டிங்!

இன்பாக்ஸ்

சுமார் 15 மாதங்களுக்குப் பிறகு வெளிநாடு செல்ல விமானம் ஏறியிருக்கிறார் பிரதமர் மோடி. வங்க தேசத்தின் விடுதலைப் பொன்விழாவில் நேரில் பங்கேற்கும் ஒரே வெளிநாட்டுத் தலைவர் மோடிதான். பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி போன்றோரின் பயணங்களுக்காக வாங்கப்பட்ட VT-ALW என்ற பதிவு எண் கொண்ட ஏர் இந்தியா ஒன் போயிங் விமானத்தில் அவரின் முதல் பயணம் இப்படியாக அமைந்தது. வழக்கம் போல இந்தப் பயணத்திலும் தேர்தல் மாங்காய் அடித்தார் மோடி. தேர்தல் நடைபெறும் மேற்கு வங்காளத்தில் கணிசமாக இருக்கும் மதுவா இனத்தினர் புனிதமாகக் கருதும் இரண்டு கோயில்கள் வங்க தேசத்தில் உள்ளன. அந்த ஆலய வழிபாடுகள், மோடி சுற்றுப்பயணத்தில் முக்கிய அம்சம். வெளிநாடு சென்றாலும் தேர்தல் பிரசாரத்தை மறக்கவில்லை பிரதமர். தொழிலில் கவனம் இருக்கணும்ல!

இன்பாக்ஸ்

பாலிவுட்டின் மிரட்டல் நடிகர் நவாஸுதீன் சித்திக்கை இனி அடிக்கடி தமிழில் பார்க்கலாம். ஏற்கெனவே தமிழுக்கு வந்தும் ரஜினிகாந்தின் ‘பேட்ட’யில் பெரிதாய் சோபிக்கவில்லை எனக் குறைப்பட்டவர், தமிழில் விஜய் சேதுபதியோடும் தனுஷோடும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். ``தமிழில் நல்ல நல்ல வாய்ப்புகள் இப்போதான் வருது. இதுநாள்வரை நிறைய ஃபாரின் படங்கள் கமிட்மென்ட்களால் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்தேன். இனி வருடம் ஒரு படமாவது தமிழில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்!’ என்று சொல்லியிருக்கிறார் நவாஸுதீன் சித்திக். சூப்பர் பா!

றிமுக இயக்குநர் ஸ்ரீனிவாஸ் கவிநயம் இயக்கும் ‘பேய்ப்பசி’ படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பாளர் -கம்- இசையமைப்பாளர் அவதாரம் எடுத்த படம், ஒருவழியாக ஓ.டி.டி ரிலீஸுக்குத் தயாராகியிருக்கிறது. இப்படத்தின் மூலம் தன் உறவினர் ஹரிபாஸ்கரை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் யுவன், விஜய் சேதுபதியையும், சந்தோஷ் நாராயணனையும் புரொமோ பாடலைப் பாட வைத்திருக்கிறார். அந்தப் பாடலுக்காக யுவன் செம ஆட்டம் போடவிருக்கிறார். இதற்காக ஜிம், டயட் என இப்போதே பிஸியாகிவிட்டார் யுவன். லிட்டில் மேஸ்ட்ரோ இன் ஃபயர்!

‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ என்ற ஏழைகளுக்கு வீடுகட்டிக் கொடுக்கும் திட்டத்தின் மூலம் இப்போது பா.ஜ.க., புதுச் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நாளிதழ்களில் வந்த இந்தத்திட்டத்துக்கான விளம்பரத்தில் பிரதமரோடு இருந்த பெண் யார் என்று ஒரு செய்தி நிறுவனம் துப்பு துலக்கியபோது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. கொல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் லக்ஷ்மி பாய் என்ற அந்தப் பெண்ணுக்கு சொந்தமாய் வீடே இல்லையாம். பொதுக்கழிப்பறையைப் பயன்படுத்தியபடி பிளாட்பாரத்தில் படுத்துறங்கும் அவருக்கு, தான் எப்படி பத்திரிகையில் வந்தோம் என்றே தெரியவில்லையாம். யாரோ தெரியாமல் என்னைப் புகைப்படம் எடுத்துவிட்டார்கள் என்று புலம்பியிருக்கிறார். என்னங்கய்யா இது போங்கு ஆட்டம்?

கொரோனா சுனாமியில் ஸ்விம்மிங் செய்து ஒரு சீசனை வெற்றிகரமாக முடித்த ஐபிஎல் நிர்வாகம், அடுத்த சீசனை ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. அதே சமயம், கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளி தள்ளி இந்த ஜூலை மாதம் ஆரம்பிக்கவிருக்கிறார்கள். ஆனால், ஜூலை மாதத்துக்குள் கொரோனா முடியாது என்பதால், உள்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி. ஜப்பான் தவிர பிற நாட்டு ரசிகர்களுக்கு இந்த ஆண்டின் ஒலிம்பிக்ஸ் தொலைக்காட்சிகளில்தான். ‘டெலி’ம்பிக்ஸ்!

குளிர்ச்சியான கேரளாவிலேயே வெயில் அதிகம் கொளுத்தும் பாலக்காடு தொகுதி இப்போது தேசிய கவனம் பெற்றுள்ளது. காரணம், பா.ஜ.க சார்பில் அங்கு போட்டியிடும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன். டெல்லி மெட்ரோவை உருவாக்கி இந்தியாவின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக மாற்றிய 88 வயது ஸ்ரீதரன், கேரளாவில் போட்டியிடும் வேட்பாளர்களிலேயே மிக வயது முதிர்ந்தவர். வியர்வை வழிய வீதிவீதியாக நடந்து அரசியல் பழகுகிறார் ஸ்ரீதரன். பா.ஜ.க கேரளாவில் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் தொகுதிகளில் ஒன்று இது என்பதால், மோடி, அமித் ஷா என வரிசையாக வந்து பிரசாரம் செய்கிறார்கள். கிளம்பிட்டாங்கய்யா!

டலில் மூழ்கிய ‘டைட்டானிக்’ கப்பல், 110 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கடலில் இறங்கவுள்ளது. ஆஸ்திரேலிய கப்பல் கட்டுமான நிறுவனமான ‘புளூ ஸ்டார் லைன்’ இந்தக் கப்பலை புத்தம் புதுசாய் வடிவமைத்துள்ளது. பழைய டைட்டானிக் கப்பலைப் போன்ற அதே தோற்றம், அதே உள்கட்டமைப்பு, சொகுசு வசதிகளுடன் உருவாகிவரும் இந்தக் கப்பல் 2022-ல் அட்லாண்டிக் பெருங்கடலில் தனது பயணத்தைத் தொடங்கவுள்ளது. ஒரிஜினல் டைட்டானிக் மூழ்கிய அதே பாதையில் இது பயணிக்கவிருப்பதால், கொரோனா அச்சத்தையும் மீறி இப்போதே புக்கிங் குவிகிறதாம். வாரே வா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism