Published:Updated:

இன்பாக்ஸ்

ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா

அஜித், விஜய் ரசிகர்கள் என்றாலே எதிரும் புதிருமாக இருக்கும் காட்சிகளைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், கோவை தல – தளபதி ரசிகர்கள் இதிலிருந்து வித்தியாசப்படுகின்றனர்

இன்பாக்ஸ்

அஜித், விஜய் ரசிகர்கள் என்றாலே எதிரும் புதிருமாக இருக்கும் காட்சிகளைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், கோவை தல – தளபதி ரசிகர்கள் இதிலிருந்து வித்தியாசப்படுகின்றனர்

Published:Updated:
ராஷ்மிகா மந்தனா
பிரீமியம் ஸ்டோரி
ராஷ்மிகா மந்தனா
இன்பாக்ஸ்

கேரள தேசத்திலிருந்து எத்தனையோ நடிகைகள் கோலிவுட்டுக்கு வந்து, தங்களின் திறமையை நிரூபித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் வரும் அடுத்தவர், நிமிஷா சஜயன். 25 வயதேயான இவர், வழக்கமான ஹீரோயினாக இல்லாமல் தன்னுடைய அழுத்தமான நடிப்பைத் தொடர்ந்து வெளிக்காட்டிவருகிறார். `தி கிரேட் இந்தியன் கிச்சன்', `நயாட்டு', `மாலிக்' என அவரின் சமீபத்திய படங்கள் அனைத்தும் சென்சேஷன். `பண்ணையாரும் பத்மினியும்', `சேதுபதி' படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படமொன்றில் நிமிஷாதான் நாயகி. வெல்கம் டு கோலிவுட்!

இன்பாக்ஸ்

ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் மோஸ்ட் வான்டட் நாயகியாக இருக்கிறார். டோலிவுட்டின் சென்சேஷனல் ஹீரோயினாக இருந்தால், அடுத்து அவர்களின் நகர்வு பாலிவுட்தான். அப்படி `மிஷன் மஜ்னு' என்ற படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் ராஷ்மிகா. இதனைத் தொடர்ந்து, விகாஷ் பாஹல் இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் `குட்பை', ரன்பீர் கபூருக்கு ஜோடியாக `அனிமல்' என்று படங்கள் வரிசை கட்டுகின்றன. ராஷ் ஆன் ரேஸ்!

இன்பாக்ஸ்

`ரஜினி 169' படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு வெளிநாடு ஒன்றில் தொடங்கவிருக்கிறது என்கிறார்கள். `பீஸ்ட்' படத்தின் முதல் ஷெட்யூலை இயக்குநர் நெல்சன் ஜார்ஜியாவில் நடத்திவிட்டு வந்ததைப் போல, ரஜினியின் படத்திற்கும் வெளிநாடு செல்லத் திட்டமிடுகின்றனர். ரஜினியின் ஜோடியாக நடிக்க திபீகா படுகோனேவிடம் பேசி வருகிறார்கள். மறுபடியுமா?

இன்பாக்ஸ்

சென்னை கிழக்குக்கடற்கரைச் சாலையில் அடுத்தடுத்த வீதிகளில்தான் விஜய், சிவகார்த்திகேயன், டைரக்டர் பாரதிராஜா போன்றவர்கள் வசித்து வருகிறார்கள். அதே வரிசையில் சிம்புவிற்கு ஒரு பெரிய வீடு கட்ட டி.ஆர் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். அதற்காகப் பத்திரிகையில் விளம்பரம் எல்லாம் கொடுத்து இடம் தேடுகிறார்கள். விஷால் நடிகர் சங்கம் கட்டிமுடித்தால்தான் திருமணம் என்பது மாதிரி சிம்புவிற்கு ஈ.சி.ஆர் வீடு அமைந்த பிறகுதான் கல்யாணம் என்கிறார்கள். நடக்கும்... நடக்கணும்!

ஆறுமுகநேரி பேரூராட்சியில் வார்டுகளுக்குள் வீடு வீடாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு பிரச்னைகளை சரிசெய்திட பேரூராட்சித் தலைவி கலாவதியின் ஏற்பாட்டில் 17 வார்டு உறுப்பினர்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. பேரூராட்சி துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் மாதந்தோறும் 10 லிட்டர் பெட்ரோல் அளிப்பதாக உறுதியளித்துள்ளார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் சாவியைப் பெற்ற 17 கவுன்சிலர்களும் ஸ்கூட்டர்களில் பேரூராட்சி சாலையில் அணிவகுப்பாக மகிழ்ச்சியுடன் சென்றனர். “எங்க பேரூராட்சியில உள்ள 18 கவுன்சிலர்கள்ல 11 பேர் பெண்கள்தான். அவங்கள்ல ரெண்டு பேருக்கு ஸ்கூட்டர் கிடையாது. ஒரு உறுப்பினர் ஸ்கூட்டர் வாங்கித் தரச்சொல்லிக் கேட்டாங்க. எல்லா உறுப்பினர்களுக்கும் வாங்கிக் கொடுத்திடுவோம்னு முடிவு செஞ்சோம். ஒருத்தர் மட்டும் வேண்டாம்னு சொன்னதனால மீதமுள்ள 17 பேருக்கும் சேர்த்து ஸ்கூட்டர் வாங்கிட்டோம். மாதந்தோறும் 17 ஸ்கூட்டருக்கும் என் சொந்தச் செலவுல தவணையைக் கட்டிடுவேன்” என்கிறார் கலாவதி. றெக்க கட்டி பறக்கும் ஸ்கூட்டி!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துள்ள இவர், ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்திவருகிறார். பிளாஸ்டிக் டப்பாவுக்கு மாற்றாக, பனையோலைப் பெட்டிக்குள் வாழை இலையைச் சிறிதாக மடக்கி வைத்து, அதில் பிரியாணியை நிரப்பி விற்பனை செய்துவருகிறார். ஒரு நபர் சாப்பிடும் பிரியாணி முதல் 10 பேர் சாப்பிடும் பக்கெட் பிரியாணி வரை அதற்கேற்ற அளவுகளில் பனையோலைப் பெட்டிகளில் பார்சல் செய்து கொடுக்கிறார். இவரது கடை ராமேஸ்வரம் செல்லும் ஈ.சி.ஆர் சாலையில் இருப்பதால், வெளியூர்க்காரர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். ``கிராமப் பகுதிகள்ல உள்ள ஸ்வீட் கடைகள், திருவிழாக்கால கடைகள்ல காரச்சேவு, கருப்பட்டி மிட்டாய் போன்ற இனிப்பு வகைகளைப் பனையோலைப் பெட்டிகளில் பேக்கிங் செய்து கொடுக்கும் வழக்கம் இப்போதும் நடைமுறையில இருக்கு. பிரியாணியை இப்படி பார்சல் போட்டுக் கொடுத்தா என்னன்னு யோசனை தோணுச்சு. பிரியாணியை சாப்பிட்டுவிட்டு இந்தப் பெட்டியை தண்ணியில கழுவி வெயில்ல காய வச்சு ஏதாவது பொருள்களைப் போட்டு வச்சுக்கலாம். செடிகளையும் வளர்க்கலாம். வேண்டாம்னு தூக்கி எறிஞ்சாலும் அது மண்ணுக்கு உரம்தான். எங்க ஊர்ல வீட்டுக்கு வீடு நடந்துட்டு வர்ற பனையோலைப் பெட்டி முடையுற தொழிலுக்கு என்னால முடிஞ்ச ஆதரவு” என்கிறார் மகேந்திரன். தேவையான மாற்றம்!

இன்பாக்ஸ்

வெற்றிமாறன் - சூர்யா கூட்டணியில் உருவாகவுள்ள `வாடிவாசல்' படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னையில் இரண்டு நாள்கள் நடந்தது அல்லவா? அதைப்போல மதுரை ஏரியாவிலும் இரண்டு நாள்கள் டெஸ்ட் ஷூட் நடக்க உள்ளதாம். மே மாத இறுதியில் `வாடிவாசல்' டீம் மதுரை கிளம்புகிறதாம். மதுர குலுங்க குலுங்க!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

அஜித், விஜய் ரசிகர்கள் என்றாலே எதிரும் புதிருமாக இருக்கும் காட்சிகளைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், கோவை தல – தளபதி ரசிகர்கள் இதிலிருந்து வித்தியாசப்படுகின்றனர். விஜய் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாக கோவை கணபதி அத்திப்பாளையம் பிரிவு பகுதி அருகே ‘விஜய் விலையில்லா விருந்தகம்’ நடத்தி வருகின்றனர். தினசரி அங்கு மக்களுக்கு இலவசமாக பல்வேறு வகை உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் அடிக்கடி பங்களிப்பது அஜித் ரசிகர்கள்தாம். அஜித் மகன் ஆத்விக் பிறந்தநாள் தொடங்கி எந்த விஷயமாக இருந்தாலும், விஜய் விலையில்லா விருந்தகத்தில் அஜித் ரசிகர்கள் பங்களித்து மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கிவருகின்றனர். ஆல் இஸ் வெல்..!

இன்பாக்ஸ்

குறிஞ்சிப் பூக்களுக்கு அடுத்தபடியாக நீல நிறத்தில் நீலகிரி மலையை அலங்கரிக்கும் மற்றொரு மலர் ஜகரண்டா. ஆங்கிலேயர்களின் ஆளுகைக்குக் கீழ் நீலகிரி இருந்த காலத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கப்பல்கள் மூலமாக மலர் நாற்றுகளை வரவழைத்து அறிமுகம் செய்தனர். அப்படி, தேயிலைத் தோட்டங்களை அலங்கரிக்க வரவழைக்கப்பட்ட பூக்கும் மரங்களில் ஒன்றுதான் ஜகரண்டா. அமெரிக்காவின் மித வெப்ப மற்றும் வெப்ப மண்டலப் பகுதிகளுக்குச்‌ சொந்தமான இந்த ஜகரண்டா மரங்கள், நீலகிரியின் பல பகுதிகளை அலங்கரித்து வருகின்றன. உறைபனிக் காலம் முடிந்ததும் இலைகளை உதிர்த்து மரம் முழுக்க ஊதா நிற ஜகரண்டா பூக்கள் மட்டுமே நிறைந்திருக்கும். கோடையை வரவேற்கும் இந்த மரங்களைத் தேடி தேன் சிட்டுகளும், தேனீக்களும் முற்றுகையிடும். 70, 80 அடிக்கு உயர்ந்து நிற்கும் இந்த மரங்களில் இருந்து 24 மணி நேரமும் மழையென ஊதாப்பூக்கள் உதிர்ந்தபடி இருக்கின்றன. மலர் மழை!

இன்பாக்ஸ்

பழம்பெரும் ஹாலிவுட் நடிகரான ப்ரூஸ் வில்லிஸ் சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். காரணம், 67 வயதான ப்ரூஸுக்கு வந்திருக்கும் `அஃபேஷியா' (Aphasia) எனப்படும் பாதிப்பு. இது மூளையின் செல்களை பாதித்து ஒருவரின் மொழி, பேச்சு, எழுத்து போன்ற தகவல்தொடர்புத் திறன்களை இழக்கச் செய்துவிடும். இப்படியான பாதிப்புடன் நடிப்பைத் தொடர்வது சவாலானது என்பதால் இந்த முடிவு. ப்ரூஸ் வில்லிஸுக்கு இந்தியாவிலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரின் `டை ஹார்டு' படத்தொடர் இங்குமே வசூலில் சாதனை படைத்தது. `12 மங்கீஸ்', `பல்ப் ஃபிக்ஷன்', `தி சிக்ஸ்த் சென்ஸ்', `அன்பிரேக்கபிள்', `ரெட்' உள்ளிட்ட படங்கள் அவரின் நடிப்பில் குறிப்பிடத்தக்கவை. அவரின் ரிட்டயர்மென்ட் செய்தி, ரசிகர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நலம் பெறுக!

இன்பாக்ஸ்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையம் சிவசுப்ரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இந்து - முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்றுகூடி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழாவில் குருசாமிபாளையம் ஊர் பெரிய தனக்காரர் இராஜேந்திரன், ராசிபுரம் கிழக்குத் தெரு பள்ளிவாசல் தலைவர் ஜி.கே.உசேன் ஆகியோர் தலைமையில் சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கொடிமரத்தில் வெள்ளைக் கொடியை ஏற்றி எல்லோரும் நலமாக இருக்க பிரார்த்தனை செய்தனர். தேங்காய், பழம், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. இதனையடுத்து, இரு தரப்பு மக்களும் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி சந்தனம் பூசிக்கொண்டதுடன், வீடுதோறும் சென்று கதவுகளில் சந்தனம் பூசினர். கோடைக்கால நோய்களைத் தடுக்கும் வகையில் இந்த விழா கடந்த 118 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதுதான் தமிழ்நாடு!

டைகர் ஷெராப், தனது `ஹீரோபந்தி' படத்தை விளம்பரப்படுத்த நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும்போது, நிஜ ஹீரோக்களையும் கண்டறிந்து அவர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக ஜெய்ப்பூரில் 94 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி, அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தினமும் 200 பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு போடுபவரைச் சந்திக்கவிருக்கிறார். அதோடு வாரணாசியில் மல்யுத்த வீராங்கனைகளைச் சந்தித்துப் பேசவும் முடிவு செய்திருக்கிறார். பப்ளிசிட்டி நல்லது!

இன்பாக்ஸ்

கேரள மாநிலம் எம்.ஜி பல்கலைக்கழகத்தில் நடந்த கலைவிழாவில் கலந்துகொண்ட பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ், மாணவிகளுடன் சேர்ந்து நடனம் ஆடி மகிழ்ந்தார். கலெக்டர் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவ... பலர் வாழ்த்திப் பின்னூட்டம் இட்டனர். சிலர், `பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துகொண்டிருக்கும்போது பணக்கார கலெக்டர் குதித்து ஆடுகிறார்' என்றும், `காங்கிரஸ் கட்சியில் எம்.எல்.ஏ-வாக இருந்த இவரின் கணவர் சபரிநாதன், இப்போது எந்தப் பதவியும் இல்லாமல் இருக்கும் மகிழ்ச்சியில் ஆடுகிறார்' என எதிர்மறையான கமென்ட்களும் வந்து விழ... நொந்து போனார் கலெக்டர். நடனமாடினது ஒரு குத்தமாய்யா..!