கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

கொரோனா, இந்தப் புவி கண்டிராத ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது.

மேசானின் பூர்வகுடி மக்கள் வரை சென்றுவிட்டது கொரோனா. அமேசான் கொகாமா பூர்வகுடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குக் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேத்யூஸ் ஃபெயிடோஸா என்ற மருத்துவருக்குக் கொரோனா இருப்பது தெரியவந்த பிறகு, அவரோடு தொடர்பிலிருந்த 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டனர். அந்த 27 பேரில் ஒருவர்தான் இந்தப் பூர்வகுடிப் பெண். ஃபெயிடோஸா ஒரு கிராமத்திலிருந்த 10 பூர்வகுடி மக்களுக்கு சிகிச்சையளித்துள்ளார் என்று பழங்குடிகளுக்கான மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. இதனால் அமேசான் காட்டின் உள்பகுதிக்குள், இன்னும் தனிமைப்பட்டு வாழ்கின்ற பூர்வகுடிகள் மத்தியில் கொரோனா பரவிவிடும் ஆபத்து இருக்கிறது. பிரேஸில் எல்லைக்குள் வருகின்ற அமேசான் வனப்பகுதிக்குள் 107 பூர்வகுடியினக் குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் பெரும்பாலும், அருகருகே சின்னச்சின்ன குக்கிராமங்களில் பிரிந்தே வாழ்கிறார்கள். இது பரவினால், அவர்கள் அனைவரையும் எளிதில் பாதித்துவிடும் ஆபத்து இருக்கிறது. ஆகவே, இதை அவசரகால நடவடிக்கையாக முன்னெடுக்க, பிரேஸில் அரசாங்கத்தின் பூர்வகுடிப் பாதுகாப்பு அமைப்பு முயற்சிகள் எடுத்துவருகிறது. நல்லது நடக்கட்டும்!

கொரோனா லாக் டௌனில் ‘வீட்டிலேயே உடற்பயிற்சி’ என்று சென்ற வாரம் முழுக்க சமூகவலைதளங்களில் ஹெல்த் போஸ்ட் போட்டுவந்த பாலிவுட் செலிபிரிட்டிகள், இந்த வாரம் போஸ்ட்களுக்கான கன்டன்ட்டை மாற்றிவருகிறார்கள். அந்த வகையில், இயற்கை மற்றும் மூலிகைப் பொருள்களின் பிரியையான ஜூஹி சாவ்லா, ‘லாக் டௌன் நாள்களில் உங்களுடைய முடியை அடர்த்தியாக வளர்க்க தினமும் வெந்தய பேஸ்ட்டைத் தலையில் அப்ளை செய்யுங்கள்’ என்று பியூட்டி டிப்ஸ் தந்தார். மேலும், மும்பைத் தெருக்களில் நடமாடுகிற மயில்களின் படங்களை போஸ்ட் செய்து, ‘இதைப் பார்த்தால் நம் மனம் இயற்கையின்பால் காதலில் விழுகிறதல்லவா’ என்று உருகியிருந்தார். சார் போஸ்ட்!

கொரோனாவின் பிடியிலிருந்து எப்படியாவது தப்பித்துவிட முடியாதா என உலகமே ஏங்கிக்கொண்டிருக்கிறது. இதில் கொரோனாத் தொற்று இருப்பதைக் கண்டறிவதுதான் பெரும் சிக்கலாக இருந்துவருகிறது. குறைந்த அளவிலான டெஸ்ட்களை மட்டுமே ஒரு நாளில் எடுக்க முடியும் என்ற நிலைதான் பல நாடுகளில் இருக்கிறது. இதற்கு ஒரு தீர்வாக நாய்களின் மோப்பத்திறனை வைத்து கொரோனாத் தொற்று இருப்பதைக் கண்டறிய முடியுமா என இங்கிலாந்தைச் சேர்ந்த ‘சேரிட்டி மெடிக்கல் டிடெக்ஷன் சென்டர்’ சோதனை முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கு முன்னர், இந்த அமைப்பினால் பழக்கப்படுத்தப்பட்ட நாய்கள் மலேரியா, பார்கின்சன் நோய் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றை மோப்பத்திறனால் கண்டறிந்துள்ளன. இது சாத்தியமானால் குறைந்த நேரத்தில் அறிகுறி இல்லையென்றாலும்கூட கொரோனாத் தொற்று இருக்கும் பலரையும் கண்டறிய முடியும். நாய்கள் ஜாக்கிரதை!

வூகானில் ஆரம்பித்த கொரோனாவால் இன்னொரு வூகானுக்கு லக் அடித்துள்ளது. எரிக் வூகான் என்பவர்தான் அவர். உலகமெங்கும் ஊரடங்கு ஆட்டிப்படைக்க பல அலுவலகங்கள் வொர்க் ஃப்ரம் ஹோமில் மீட்டிங் நடத்த Zoom என்கிற வீடியோ காலிங் செயலியை அதிகம் நாடத் தொடங்கினர். இதனால் அந்த நிறுவனத்தின் பங்கு பெரும் எழுச்சி கண்டது. 2011-ம் ஆண்டு எரிக் வூகான் ஜூம் செயலியை நாற்பது பொறியாளர்களுடன் இணைந்து தொடங்கினார். இன்று உலகம் முழுவதும் வேண்டப்படும் செயலியாக ஜூம் உருவெடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் இணைய வழியில் ஒருவரை ஆதரவாக அணைத்துக்கொள்வதும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மூலம் சாத்தியப்படும் என சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். காற்றுள்ளபோதே...

Lea Seydoux
Lea Seydoux

ந்த வாரம் வெளியாகியிருக்க வேண்டிய ஜேம்ஸ் பாண்ட் படமான `NO TIME TO DIE’ திரைப்படம், கொரோனாவால் நவம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. படத்தின் நாயகியான லியா செட்யுவிடம் (Lea Seydoux) பாண்ட் நாயகர்களின் செக்ஸ் அப்பீலுக்காகத்தான் பாண்ட் படத்தில் நாயகிகளா எனக் கேள்வி எழுப்பப்பட, கடுப்பாகிவிட்டார். “ பெண்கள் பாண்ட் படம் பார்க்க வருவதே ஜேம்ஸ் பாண்ட் நடிகரின் செக்ஸ் அப்பீலுக்காகத்தான். அதே சமயம், ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பெண்களின் பாத்திரங்கள் ஒன்றும் பாண்ட் கதாபாத்திரத்தின் தேவைக்காக உருவாக்கப்படுபவை அல்ல’’ என பதிலளித்திருக்கிறார். வாவ் லியா

கொரோனா, இந்தப் புவி கண்டிராத ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவின் சிகாகோவில் இருக்கும் மீன்காட்சியகம் ஒன்றில் பெலூகா திமிங்கிலங்களும், பென்குயின்களும் வசிக்கின்றன. பொதுமக்கள் பார்வைக்கான அனைத்து இடங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், பென்குயின்களை மீன்காட்சியகத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதித்திருக்கிறார்கள். வட துருவத்தில் மட்டும் காணப்படும் பெலூகாவும், தென் துருவத்தில் வாழும் பென்குயினும் முதல் முறையாகச் சந்தித்திருக்கின்றன. முதல்முறையாக ஒரு உயிரினத்தைப் பார்க்கும் ஆச்சர்யத்தில் உறைந்துபோன இந்த இரண்டு உயிர்களின் வீடியோதான் இந்த வார வைரல். அனைத்தும் சாத்தியம்.

ஊர்வசி ரௌதெலா
ஊர்வசி ரௌதெலா

பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதெலா ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் திரைப்படமான பாரசைட் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். ஆனால் அது அமெரிக்க எழுத்தாளர் ஒருவரின் ட்வீட்டை காப்பி செய்து திருத்தாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறார் என்பது பின்னர் தெரியவந்தது. இதனை ஒருவர் ட்விட்டரில் சுட்டிக்காட்டவே, அந்த அமெரிக்க எழுத்தாளர் “குறைந்தபட்சம் இலக்கணப் பிழையைத் திருத்திவிட்டு அவர் பதிவிட்டிருக்கலாம்” எனப் பகடி செய்திருக்கிறார். ஊர்வசி ரௌதெலா ட்வீட்டை காப்பி செய்து பதிவிடுவது இது முதல்முறையல்ல. அடப்போங்கய்யா, இது தேவையா...

க்கட்டான சூழ்நிலைகளில்தான் மனிதரின் மடமையும், மனிதநேயமும் வெளிப்படும். அதற்கு எடுத்துக்காட்டு மத்தியப்பிரதேசத்தில் நிகழ்ந்த நிகழ்வு. மத்தியப்பிரதேசம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட, மருத்துவப் பணியாளர்களைக் கற்கள் வீசி விரட்டித் தாக்கியிருக்கிறார்கள் அந்த ஊர் மக்கள். அதற்கு மறுநாள், அந்த நிகழ்வைப் பொருட்படுத்தாமல் கொரோனா பாதிப்பிற்கான மருத்துவப் பரிசோதனைக்கு அதே ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் மருத்துவர்கள். ‘இது எங்கள் வேலை, எந்தத் தடங்கல் ஏற்பட்டாலும் இதைத் தொடர்ந்து‌ செய்ய வேண்டியது எங்கள் கடமை’ எனப் பேட்டியளித்திருக்கிறார் மருத்துவர் ஒருவர். அன்பே மருத்துவம்!

ழகிரி கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்ற செய்திகள் றெக்கை கட்ட ஆரம்பித்துவிட்டன. விசாரித்ததில் ‘கலைஞர் தி.மு.க பேரவை’ என்கிற பெயரைத் தேர்தல் கமிஷனில் பதிவு செய்திருக்கிறார் என்கிறது அவர் வட்டாரம். ஆனால் தனிக்கட்சியெல்லாம் இல்லை... பேரவையாகச் செயல்படுவதுதான் தற்போதைய திட்டமாம். கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு!

டற்பயிற்சி பிரியை மலைக்கா அரோரா, இந்த லாக் டௌன் நேரத்தில், தான் ஒரு சிறந்த குக்கரி எக்ஸ்பர்ட்டும்கூட என்று நிரூபித்திருக்கிறார். ‘சமைக்கிறேன், வீட்டை சுத்தம் செய்கிறேன், குடும்பத்துடன் நேரம் செலவழிக்கிறேன், மிச்ச நேரங்களில் நிம்மதியாக உறங்குகிறேன்’ என்று இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டுள்ள மலைக்கா, கூடவே தான் செய்த பாசிப்பருப்பு லட்டின் படங்களையும் பதிவேற்றியிருக்கிறார். மலைக்காவின் ரசிகர்கள் சிலர், ‘உங்களைப் போலவே நீங்கள் செய்த லட்டும் பளபளப்பாக இருக்கிறது’ என்று புகழ, ‘லட்டின் செய்முறையைச் சொல்லுங்களேன்’ என்று சீரியஸாகவே கேட்டிருக்கிறார்கள் பலர். தற்போது நடன நிகழ்ச்சிகளில் நடுவராக இருக்கிற மலைக்காவை கூடிய சீக்கிரம் சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராக எதிர்பார்க்கலாம்போல. கிச்சன் சூப்பர்ஸ்டார்!

ளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் மார்க்கில், அரச குடும்பப் பொறுப்புகளிலிருந்து அதிகாரபூர்வமாக விடைபெற்று, தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தொடங்கியிருக்கின்றனர். இந்தக் காதல் ஜோடி கடந்த ஜனவரி மாதம் அரச குடும்பத்திலிருந்து விலகப்போவதாக அறிவித்து மக்களைத் திகைக்கச் செய்தது. அதைத் தொடர்ந்து, சென்ற வாரம் 113 லட்ச ஃபாலோயர்களைக்கொண்ட அரச குடும்பத்தின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘நீங்கள் எங்களை இங்கே பார்க்க முடியாமல்போனாலும், எங்களுடைய பணிகள் தொடரும்’ என்று கூறி அதிலிருந்து வெளியேறியுள்ளனர். மேலும், அரச குடும்பத்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘Sussex Royal’ பட்டமும் விலக்கப்பட்டுள்ளது. நான்தான்டா என் மனசுக்கு ராஜா!