Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

டெக்னாலஜி மிரட்டல், வேற்றுலகம், போர் படங்கள் என சுற்றிக்கொண்டிருந்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் காதலுக்குள் காலடி எடுத்துவைத்திருக்கிறார்.

இன்பாக்ஸ்

டெக்னாலஜி மிரட்டல், வேற்றுலகம், போர் படங்கள் என சுற்றிக்கொண்டிருந்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் காதலுக்குள் காலடி எடுத்துவைத்திருக்கிறார்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
 • பாலிவுட்டின் சேட்டைக்கார அழகி சாரா அலிகான், தனுஷ் நடித்துவரும் ’அட்ரங்கி ரே’வில் நாயகி. இதற்கான படப்பிடிப்பு வாரணாசியில் நடைபெற்றது. வழக்கமாக சமூக வலைதளங்களில் தன் அம்மா அம்ரிதாவை செல்லமாகக் கேலி, கிண்டல் செய்து வரும் சாரா, வாரணாசியில் செம ஹோம்லியாக அம்மாவுடன் கங்கா ஆரத்தியெல்லாம் எடுத்திருக்கிறார். ஆரஞ்சு சுடிதார், நெற்றியில் திலகம், கழுத்தில் மாலை எனக் கண்களை மூடியபடி தியானத்தில் அமர்ந்திருக்கிற சாராவின் புகைப்படங்களும், வாரணாசி கடைவீதியில் அவர் பர்ச்சேஸ் செய்கிற வீடியோவும் செம வைரல். சந்தைக்கு வந்த கிளி!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
இன்பாக்ஸ்
 • நடிகர் சித்தார்த்துடன் காதல், பிரேக் அப், பிறகு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் காதல், லிவ்இன், திருமணம் என்று செட்டிலாகிவிட்ட சமந்தா சமீபத்திய பேட்டியொன்றில் மனம் திறந்துபேசியிருக்கிறார். ‘நாக சைதன்யா மிகச்சிறந்த மனிதர். அவர் எனக்குக் கணவராகக் கிடைத்தது வரம்’ என்று உருகியிருப்பதோடு, தன் முன்னாள் காதல் பற்றியும் வெளிப்படையாகப் பகிர்ந்திருக்கிறார். ‘நல்லவேளை அந்தக் காதலிலிருந்து நான் தப்பித்தேன். இல்லையென்றால் நானும் இன்னொரு சாவித்திரியாகி இருப்பேன்’ என்றிருக்கிறார். ChaySam

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்பாக்ஸ்
 • 53 வயதான மைக் டைசன், தான் மரணத்திற்காகக் காத்திருப்பதாக ஒரு அதிரடி ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார். “மரணத்தை விட வாழ்வது சிக்கல் நிறைந்ததாக இருக்கிறது” என்றதோடு ‘நாம் நம்மையெல்லாம் யாரோ என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நாமெல்லாம் ஒன்றுமேயில்லை” என்று பழைய தத்துவத்தையும் உதிர்த்திருக்கிறார். இதுவும் கடந்துபோகும் டைசன்!...

இன்பாக்ஸ்
 • டெக்னாலஜி மிரட்டல், வேற்றுலகம், போர் படங்கள் என சுற்றிக்கொண்டிருந்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் காதலுக்குள் காலடி எடுத்துவைத்திருக்கிறார். `வெஸ்ட் சைடு ஸ்டோரி’ என பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் ஸ்டில்கள் தான் தற்போதைய இணைய வைரல். மியூஸிக்கல் லவ் ஸ்டோரி, 1950 நியூ யார்க் நகரத்து செட்கள், டீனேஜ் காதல்கள், என 73 வயதில் காதல் ரசம் ததும்ப ததும்ப இந்த டிசம்பரில் கதை சொல்லவிருக்கிறார் ஸ்டீவ்!. காதலுக்கு ஏது வயது

பிரியாபவனி
பிரியாபவனி
 • இந்த ஆண்டு அதிகப் படங்கள் நடிக்கவிருக்கும் நடிகைகள் பட்டியலில் பிரியா பவானிசங்கர் வந்துவிடுவார் போல. எஸ் ஜே சூர்யாவுடன் பொம்மை, துல்கருடன் வான், பெல்லி சுப்புளு ரீமேக், இது போக நேரடித் தெலுங்கு படம் என தன் லிஸ்ட்டில் படங்கள் வைத்திருந்தவர் தற்போது ராகவா லாரன்ஸ் படத்திலும் நடிக்கவிருக்கிறாராம். இனி வரிசையாக போஸ்டர்களில் பிரியாவைக் காணலாம். பிரியாபவனிஉலா

இன்பாக்ஸ்
 • தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் வேகமாகப் பரவி வரும் வேளையில், அதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. சென்னை க்ரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவது வழக்கம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் இல்லத்திற்கு வருபவர்களுக்கு மிளகு ரசமும், கருப்பட்டி காபியும் கொடுக்குமாறு முதல்வரே அறிவுறுத்தியுள்ளதால், க்ரீன்வேஸ் இல்லத்திற்குச் செல்பவர்களுக்கு எல்லாம் இந்தப் பதார்த்தங்கள்தான் வயிற்றை நிரப்புகின்றன. இப்போது அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் போன்றவர்களும் மிளகு ரசத்தை தங்கள் விருந்தினர்களுக்கு அளிக்கத் தொடங்கிவிட்டனர். நல்லசாமி

இன்பாக்ஸ்
 • கொரோனாவை ‘சைனீஸ் வைரஸ்’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்திருக்கிறது. ‘அது எங்கிருந்து வந்ததோ அதைத்தான் குறிப்பிட்டேன். அது சைனாவிலிருந்துதான் எங்கள் நாட்டுக்கு வந்தது’ என்றிருக்கிறார் மிஸ்டர் ட்ரம்ப். கூடவே சீனா, ‘அமெரிக்க ராணுவத்திலிருந்துதான் அது சீனாவுக்குள் பரவியது’ என்று சொன்னதையும் மறுத்திருக்கிறார். இந்த சண்டை இப்ப தேவையா?

இன்பாக்ஸ்
 • கொரோனாவால் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட சண்டிகர் சிறையில் சிறைக்கைதிகளைத் தினமும் 800 மாஸ்க் உற்பத்தி செய்ய உத்தரவிட்டிருக்கிறார்கள். அதை 10 ரூபாய் விலையில் பொதுமக்களுக்கு எளிதில் கிடைக்கும் வண்ணம் அரசு ஏற்பாடுகள் செய்திருக்கிறது. வெரிகுட்!

இன்பாக்ஸ்

லகமே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்குப் பிறகு இதன் பாதிப்பை அதிகமாக உணர்ந்துள்ள நாடு இத்தாலி. நாடு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் அங்கு பலி எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அங்கிருக்கும் பெரும் பணக்காரர்கள் 200 கோடி ரூபாய்க்கு மேல் இத்தாலி அரசுக்கு நன்கொடை அளித்திருக்கிறார்கள். இத்தாலியின் சியாரி நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த வால்வ் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நிலையில் இத்தாலியைச் சேர்ந்த இசினோவா நிறுவனம் முன்வந்து 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் வால்வ்களை தயாரித்துக் கொடுத்துள்ளது. இதற்காக எந்தத் தொகையும் வாங்க மறுத்துவிட்டது. மிகவும் குறைந்து விலைக்கு இவர்கள் உருவாக்கிவிட்டதால், வால்வ்களைத் தயாரிக்கும் பெரிய நிறுவனம் ஒன்று வழக்குத் தொடுப்பதாக எச்சரித்திருக்கிறது. தீதும்நன்றும்

இன்பாக்ஸ்
 • கொரோனா வைரஸால் பாலிவுட் செலிப்ரிட்டிகள் பலரும் பாதுகாப்புக்காகத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள, சிலர் இதையே கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாக மாற்றியிருக்கிறார்கள். கேத்ரினா கைஃப் கிட்டார் பழகி வருகிறார். பொது அறிவு குறைவு என்று ட்ரோல் செய்யப்படுகிற பாலிவுட் டார்லிங் ஆலியா பட், இசையமைப்பாளர் நிதின் செளஹானே பற்றிய புத்தகத்தைப் படித்து வருவதாக இன்ஸ்டாவில் போஸ்ட் போட்டிருக்கிறார். நடிகை கிம் ஷர்மா தான் ஃபிட்னெஸ் உடற்பயிற்சிகளைச் செய்யும் வீடியோவை இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து, ‘நீங்களும் செய்யுங்கள்’ என்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். கொரோனா பாசிட்டிவ்!

 • மொத்த ஐரோப்பாவும் கொரானாவின் பிடியில் சிக்கியிருக்கிறது. மக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங் போன்றவற்றில் அதிகம் நேரம் செலவழிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் மொத்தமாக இணையப் பயன்பாடு பெருமளவில் உயர்ந்துள்ளது. இந்த திடீர் இணைய டிராபிக்கை சமாளிக்க ஐரோப்பாவின் இணைய நிறுவனங்கள் பல விரிவாக்க முயற்சிகளை எடுத்துவருகின்றன. இந்த நிலையைச் சமாளிக்க நெட்ஃப்ளிக்ஸ், யூடியூப் நிறுவனங்களின் உதவியை நாடியிருக்கிறது ஐரோப்பிய யூனியன். அதன் கோரிக்கையை ஏற்று வீடியோக்களின் ஸ்ட்ரீமிங் தரத்தை இந்த தளங்கள் குறைத்துள்ளன. இதனால் அங்கு பெருமளவில் இணையப் பயன்பாடு குறையத்தொடங்கியுள்ளதாம். வாட் அன் ஐடியா EU ஜி!

இன்பாக்ஸ்
 • கடந்த வார கொரோனா வைரல் சென்சேசன் பாலிவுட் பாடகி கன்னிகா கபூர் தான். அவர் அப்படி என்ன பாடினார் என்றெல்லாம் கேட்காதீர்கள். விஷயம் அதுவல்ல. லண்டனில் இருந்து திரும்பிவந்த கன்னிகா கலந்துகொண்ட பார்ட்டியில் துஷ்யந்த் சிங் எம்பியும் கலந்துகொண்டார். அதோடு நிற்காமல், பாராளுமன்றம், ராஷ்டிரபதி பவன் எல்லாம் சென்று ஜனாதிபதியும் சந்திந்துப் பேசி இருக்கிறார். தற்போது கன்னிகா கபூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. வெளிநாடு சென்று வந்ததை மறைத்ததற்காக, அவர் மீது வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள். பாஜகவின் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதல்வர் வசுந்த்ரா, எம்பி வருண் காந்தி, திரிணாமும் காங்கிரஸ் எம்.பி டெரெக் ஓ பிரெயான் என பலரை சந்தித்திருக்கிறார் துஷ்யந்த் என்பதுதான் சோகத்திலும் சோகம். அடுத்த சில நாள்களுக்கு ஜனாதிபதியே சில நிகழ்ச்சிகளை தள்ளி போட்டிருக்கிறார். பயம் அறியாள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism