Published:Updated:

இன்பாக்ஸ்

நஸ்ரியா
பிரீமியம் ஸ்டோரி
நஸ்ரியா

நடிக்க வந்த ஆரம்ப நாட்களிலிருந்து இப்போது வரை ஒரு பாலிஸியைக் கறாராக கடைபிடித்து வருகிறார் தனுஷ். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை அவர் சந்திக்க விரும்புவதில்லை.

இன்பாக்ஸ்

நடிக்க வந்த ஆரம்ப நாட்களிலிருந்து இப்போது வரை ஒரு பாலிஸியைக் கறாராக கடைபிடித்து வருகிறார் தனுஷ். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை அவர் சந்திக்க விரும்புவதில்லை.

Published:Updated:
நஸ்ரியா
பிரீமியம் ஸ்டோரி
நஸ்ரியா

திருமணத்திற்குப் பிறகு நஸ்ரியா நடிப்பைக் குறைத்துக்கொண்டு, தன் கணவர் பகத் பாசிலுடன் சேர்ந்து தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்தார். பின், `கூடே', `ட்ரான்ஸ்' ஆகிய படங்களில் நடித்தார். இப்போது, நானியுடன் `அன்டே சுந்தனிக்கி' படத்தில் நடித்ததன் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். நானியின் ஹியூமர், நஸ்ரியாவின் க்யூட்னஸ் என செம ஜாலியான படமாக இது உருவாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, ஃபீல் குட் கதைகள் வந்தால் நடிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார். வாங்க வாங்க..!

இன்பாக்ஸ்

`ஜெய் பீம்' படத்திற்குப் பிறகு லிஜோ மோலுக்கு ஏராளமான கதைகள் வந்திருக்கின்றன. அத்தனையும் கேட்டவர், அறிமுக இயக்குநர் ஜோஷுவா என்பவரின் கதையில் நடிக்கச் சம்மதித்திருக்கிறார். `ஜெய் பீம்' கேரக்டருக்கு அப்படியே எதிர்மறையான கேரக்டராம். தவிர, மலையாளத்தில் ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் `புலிமாடா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லிஜோ நடித்து முடித்திருக்கிறார். வெரைட்டி நாயகி!

இன்பாக்ஸ்

செம ஹேப்பியாக உள்ளார் வடிவேலு. `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்', `மாமனிதன்' படங்களை அடுத்து இரண்டு கதைகள் கேட்டு வைத்திருக்கிறார். இதற்கிடையே இயக்குநர்கள் பி.வாசுவும் கௌதம் மேனனும் அவரிடம் பேசியுள்ளனர். பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் `சந்திரமுகி 2'-ல் வடிவேலு காமெடி பண்ணப் போகிறார். காமெடி ரிட்டர்ன்ஸ்!

இன்பாக்ஸ்

ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகராக இருக்கும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதிய தொடர், `தமிழ் நெடுஞ்சாலை.' விகடன் பிரசுர வெளியீடாக நூல் வடிவம் பெற்றிருக்கும் இதன் அறிமுக விழாவை களம் இலக்கிய அமைப்பு திருச்சியில் நடத்துகிறது. மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஹோட்டல் அஜந்தாவில் 16-ம் தேதி சனிக்கிழமை மாலை நடைபெறும் விழாவில் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., கரு.பழனியப்பன், பாஸ்கர் சக்தி, டிராட்ஸ்கி மருது என்று ஏராளமான ஆளுமைகள் பங்கேற்கிறார்கள். விழா அரங்கில் தள்ளுபடி விலையில் `தமிழ் நெடுஞ்சாலை' நூல் கிடைக்கும்.

கொலை செய்யும் யுக்திகளைப் படைப்புகளில் எழுதிவிட்டு, அதே யுக்தியைப் பயன்படுத்தி நிஜத்தில் கொலை செய்யும் நபர்களைப் பற்றிப் படித்திருக்கிறீர்களா? சில புத்தகங்களை எழுதியிருக்கும் நான்சி கிராம்ப்டன், 2011-ம் ஆண்டு How to murder your Husband என்னும் பிளாக் பதிவைப் பல மசாலாக்களைத் தூவி எழுதியிருந்தார். 2018-ம் ஆண்டு நான்சியின் கணவர் டேனியல் பிராபி கொலை செய்யப்பட 68 வயதான நான்சியைக் கைது செய்தது காவல்துறை. அவர் எழுதிய புத்தகங்கள், பிளாக் பதிவுகள் எல்லாமே இப்போது சர்ச்சையாக மாறியிருக் கின்றன. அவர் எழுதியதில் எல்லோரையும் ஆச்சர்யப் படுத்திய வரிகள் இவைதான். ‘துப்பாக்கி சத்தம் போடும்; விஷம் வேலைக்கு ஆகாது; கத்தி அதிக ரத்தத்தைச் சிதற வைத்துவிடும்; அடியாள் வைத்துக் கொலை செய்தால் நேரே உங்களை காவலாளியிடம் இட்டுச் சென்றுவிடுவான்.’ 25 ஆண்டுக்காலம் இணைந்து வாழ்ந்த நான்சி, இன்ஷூரன்ஸ் தொகைக்காகக் கணவரைக் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நிஜமான புனைவு!

இன்பாக்ஸ்

கவிஞர் பிரமிள் பற்றிய ஆவணப்படத்தைத் தயாரிக்கிறார் வெற்றிமாறன். வெற்றியின் நண்பர் தங்கம் இதை இயக்குகிறார். திரைப்படம் போலவே நல்ல பொருட்செலவில் தயாராகிறது. பிரமிள் தன் இறுதிநாள்களில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வேலூர் அருகிலுள்ள கரடி சமுதாய மருத்துவமனையில் இறந்தார். அங்கே இருக்கிற அவரது சமாதியைப் புதுப்பித்து மணிமண்டபம் உருவாக்குகிறார்கள். சிற்பி சந்ருவை வைத்து ஒரு சிலையும் செய்து வைக்கவிருக்கிறார்கள். கலைக்கு மரியாதை!

நடிக்க வந்த ஆரம்ப நாட்களிலிருந்து இப்போது வரை ஒரு பாலிஸியைக் கறாராக கடைபிடித்து வருகிறார் தனுஷ். ஷூட்டிங் ஸ்பாட்டில் ரசிகர்களை அவர் சந்திக்க விரும்புவதில்லை. ‘‘இன்னிக்கு படப்பிடிப்பில் பத்து ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டால், அடுத்த நாளே அவர்கள் நூறு பேரை அழைத்து வருவார்கள். இதனால் படப்பிடிப்பும் பாதிக்கப்படும், தயாரிப்பாளரும் பாதிக்கப்படுவார்'' என தனுஷ் தரப்பில் காரணமும் சொல்கின்றனர். நல்லது!

இன்பாக்ஸ்

ஆனைமலைப் புலிகள் காப்பகம் நவமலை அருகே, கடந்த சில மாதங்களாக கேரளாவைச் சேர்ந்த ஓர் ஆண் யானை வழக்கமான இடப்பெயர்ச்சி காரணமாக டெரராக வலம் வந்தது. அதன் வழித்தடத்தில் இங்குள்ள சில விவசாயிகள் சோலார் மின்வேலிகளை அமைத்ததால், யானை சொந்த வாழ்விடத்துக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சாலையில் செல்லும் வாகனங்களை வழிமறித்தது. ஒரு காரைக் கவிழ்த்ததுடன், அரசுப் பேருந்தைச் சேதப்படுத்தியது. மனிதர்களைக் கண்டாலே கோபத்துடன் துரத்தியது. வனத்துறையினர் முயற்சியால், விவசாயிகள் சோலார் மின்வேலிகளை நீக்கி யானைக்கு சொந்த வாழிடம் செல்ல வழியமைத்துக் கொடுத்தனர். தனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை என்பதை உணர்ந்த யானை, அமைதியாக கேரளா திரும்பிவிட்டது. யானைக்கு நாம் தொந்தரவு கொடுக்காவிட்டால் அதுவும் நமக்குத் தொல்லை கொடுக்காது என்கிறார்கள் வனத்துறையினர். வாழ்விட உரிமை முக்கியம்!

கொரோனாத் தொற்று முடிவுக்கு வந்திருப்பதால் பாலிவுட்டில் படப்பிடிப்புகள் முழு வேகத்தில் ஆரம்பித்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு படம் தயாராகிறது. அதில் வித்யா பாலன் நடிக்கிறார். லட்சுமண் உதேகர் இயக்கவிருக்கிறார். கம்பேக்!

இன்பாக்ஸ்

கேரளாவில் நடந்த உலகத் திரைப்பட விழாவில் நடிகை ரிமா கல்லிங்கல் மினி ஸ்கர்ட் அணிந்து கலந்துகொண்டார். அந்தப் புகைப்படத்தைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்த சிலர், `ரீமாவின் உடை நாகரிகமாக இல்லை' என கமென்ட் போட்டிருந்தனர். ரிமா கல்லிங்கலுக்கு எதிரான சைபர் தாக்குதலைத் தொடர்ந்து நடிகைகள் ரஞ்சினி ஹரிதாஸ், அனஸ்வரா ராஜன் என ஒரு பட்டாளமே களமிறங்கி பதிலடி கொடுத்தது. குட்டைப்பாவாடையுடன் சிரித்துக் கொண்டிருக்கும் போட்டோவைப் பதிவேற்றம் செய்த நடிகை ரஞ்சினி ஹரிதாஸ் ``நாங்கள் என்ன உடுத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும், எப்படி வாழவேண்டும் என மற்றவர்கள் சொன்னால் நாங்கள் இப்படித்தான் இருப்போம்’’ என பதிலடி கொடுத்திருந்தார். ஆதரவு கமென்ட் பதிவிட்டவர்களுக்கு ஸ்மைலி மூலம் நன்றி சொல்லியிருக்கிறார் ரிமா. பதிலுக்கு பதில்!

ஓசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்திலிருக்கும் மூதறிஞர் ராஜாஜி நினைவு இல்லம் பழைமை மாறாமல் புனரமைக்கப்படுகிறது. இங்குதான் ராஜாஜி பிறந்தார். அவரது மறைவுக்குப் பின் 1978-ம் ஆண்டு அவர் பிறந்த இல்லம் அரசுடைமையாக்கப்பட்டு, தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டுவருகிறது. அங்கு 200-க்கும் அதிகமான அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பழைமை மாறாமல் நினைவு இல்லத்தில் கூடுதலான அடிப்படை வசதிகள் செய்யப்படவுள்ளன. ஒலி-ஒளிக் காட்சியும் நிகழ்த்தப்படும் அளவுக்கு விரைவில் பொலிவு பெறப் போகிறது, ராஜாஜி இல்லம். வரலாறு முக்கியம் அமைச்சரே!

இன்பாக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கிறது. தண்ணீர் ஓட்டத்திற்கு நடுவில் பழைமையான புனித தோமையார் ஆலயம் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஆலயத்துக்குச் சென்ற 5 பெண் பக்தர்கள் உள்ளிட்ட 9 பேர் ஆற்றின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிருக்குப் போராடினர். ஜேமன் என்ற மீனவர், துணிச்சலுடன் ஆற்றில் குதித்து ஒன்பது பேரையும் மீட்டார். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கண் விழித்ததும், ஜேமனைக் கூப்பிட்டனர். தங்களைக் காப்பாற்றியதற்கு நன்றி சொன்னதுடன் கைநிறையப் பணம் கொடுத்திருக்கிறார்கள். ``தண்ணீல யாரு தத்தளிச்சாலும் காப்பாத்த வேண்டியது மீனவன் கடமை. அதைத்தான் நான் செஞ்சேன். அதுக்குப் பணம் குடுத்து உங்க உசுருக்கு விலை வச்சுக்காதீங்க. அந்தப் பணத்த கோயில் உண்டியல்ல போட்டுட்டு ஊருக்குப் போங்க” என்று ஜேமன் மறுத்துவிட்டார். நெகிழ்ந்துபோயிருக்கிறார்கள், உயிர் பிழைத்தவர்கள். தனி ஒருவன்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் பங்குனி மாதம் நடக்கும் வெண்ணெய்த்தாழி திருவிழா பிரசித்தமானது. மண்ணின் பெருமைக்குரிய அடையாளமாக மாறியிருக்கும் இந்த விழாவில், 50,000-க்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்கிறார்கள். கையில் வெண்ணெய்க் குடத்துடன் தவழும் குழந்தை போல நவநீதசேவை அலங்காரத்துடன், பல்லக்கில் ராஜகோபாலசாமி மன்னார்குடி வீதிகளில் உலா வந்தார். பக்தர்கள் அவர்மீது வெண்ணெய் வீசி வழிபட்டனர். இந்த விழா குறித்து சிலாகிப்புடன் பேசும் உள்ளூர் மக்கள், ``50,000 பேர் கலந்துகொள்ளும் இந்த விழாவில் ஒவ்வொருவரும் 100 கிராம் வெண்ணெய் வீசினாலே டன் கணக்கில் வீசப்பட்டிருக்கும். ஆனாலும், எதுவும் வீணாகாமல் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுவதுதான் சிறப்பு” என்கிறார்கள். வெண்ணெய் மணக்கும் திருவிழா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism