Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

கோடைக்காலம் தொடங்கியதுமே நுங்கு, பதநீர் விற்பனையும் களைகட்டும். தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் கிராம மக்கள், பள்ளி வளர்ச்சி நிதிக்காகப் பதநீர் விற்றுப் பணம் சேர்த்து வருகின்றனர்.

இன்பாக்ஸ்

கோடைக்காலம் தொடங்கியதுமே நுங்கு, பதநீர் விற்பனையும் களைகட்டும். தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் கிராம மக்கள், பள்ளி வளர்ச்சி நிதிக்காகப் பதநீர் விற்றுப் பணம் சேர்த்து வருகின்றனர்.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கதாநாயகனின் தந்தையாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், நெல்லையைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞரான தங்கராஜ். இவர், தொழில் இல்லாத காலங்களில் வெள்ளரிக்காய்த் தோட்டத்தில் இரவுக் காவலாளியாகப் பணியாற்றிவருகிறார். ``இப்போ இயக்குநர் ஒருவர், தன் படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். அவரிடம் படத்தைப் பற்றிக் கேட்டதற்கு, ‘நான் ரொம்ப பிஸி’ என்றார். நான் போனை கட் பண்ணிட்டேன். அந்த இயக்குநர் திரும்பவும் அழைத்து, ‘அய்யா ஏன் போனை கட் பண்ணீங்க’ன்னு கேட்டார். நான் அவரிடம், ‘நீங்க தான் ரொம்ப பிஸின்னு சொன்னீங்களே’ என்றேன். அவர் சிரித்துவிட்டு, `நான் ரொம்ப பிஸி’ங்கறதுதான் படத்தோட பேரு. அதனால் படத்தோட பேரைச் சொன்னதும் மறுபடியும் கட் பண்ணிடாதீங்க’ன்னு சொன்னார். ஷூட்டிங் இன்னும் ஆரம்பிக்கலை’’ என்கிறார் தங்கராஜ். வெள்ளந்தி மனிதர்!

இன்பாக்ஸ்

‘டாக்டர்’, ‘அயலான்’, ‘டான்’ என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன். மீண்டும் ஒரு புதுமுக இயக்குநருடன் கைகோக்க உள்ளார். அவர், அட்லீயிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த அசோக். கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ரஜினி நடித்த ‘சிவாஜி’ படத்தில் இடம்பெறும் பிரபல வசனமான ‘சிங்கப் பாதை’யை டைட்டிலுக்கு டிக் அடித்துள்ளனர். கண்ணா... இது வேற மாதிரி!

இன்பாக்ஸ்

கோடைக்காலம் தொடங்கியதுமே நுங்கு, பதநீர் விற்பனையும் களைகட்டும். தூத்துக்குடி மாவட்டம் அந்தோணியார்புரம் கிராம மக்கள், பள்ளி வளர்ச்சி நிதிக்காகப் பதநீர் விற்றுப் பணம் சேர்த்து வருகின்றனர். நூற்றுக்கணக்கில் அடர்ந்து காணப்படும் பனைமரங்கள்தான் இக்கிராமத்தின் அடையாளம். கிராமத்தின் நுழைவுப் பகுதியிலேயே உள்ளது ஊர் நலக்கமிட்டியின் பதநீர் விற்பனை நிலையம். இந்த ஊர் நடுநிலைப் பள்ளியில் 230 மாணவர்கள் படித்துவருகிறார்கள். மொத்தமுள்ள 7 ஆசிரியர்களில் 4 பேருக்கு அரசு ஊதியம் கொடுத்துவரும் நிலையில், மீதமுள்ள 3 பேரின் ஊதியம், பள்ளி நிர்வாகச் செலவு ஆகியவற்றிற்காகப் பனை சீசனில் பதநீர் விற்கிறார்கள். கூடவே கருப்பட்டியும் விற்கிறார்கள். நெல்லை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் கிராமம் இருப்பதால், பதநீர் விற்பனைக்குப் பிரச்னையில்லை. சுயச்சார்பு கிராமம்!

இன்பாக்ஸ்

ஏப்ரல் 6-ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தலைத் தாண்டி இந்திய டிரெண்டிங் விஜய்தான். வீட்டிலிருந்து சைக்கிளில் வந்து வாக்களித்தார் விஜய். அவரது வீட்டின் பின்புறம் உள்ள வாக்குச்சாவடி அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ‘மிகவும் குறுகிய சாலை என்பதால்தான் சைக்கிளில் வந்தார்’ என்று விஜய் தரப்பில் விளக்கம் தந்தனர். மறுபுறம், ‘அது என்னதான் சைக்கிள்’ என்று நெட்டிசன்கள் தீயாக நடத்திய தேடுதல் வேட்டையில், அது ‘மான்ட்ரா மெட்டல்’ (Montra Metal) 27.5 என்றும், அதன் விலை இருபத்திரண்டாயிரத்து சொச்சம் என்றும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே டிமாண்டில் சென்றுகொண்டிருந்த சைக்கிளுக்கு தற்போது ஆர்டர்கள் குவிந்து வருகிறது. அடி ஆத்தி!

அமெரிக்க ஹாட் மாடல் கிம் கர்தாஷியான் கவர்ச்சிகரமான உடைகளுக்கு மட்டுமல்ல, இப்போது இன்னொரு விஷயத்துக்கும் டிரெண்டாகிவிட்டார். சமீபத்தில் ‘ஃபோர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் கிம்முக்கு முதன்முதலாக இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 780 மில்லியன் அமெரிக்க டாலரைச் சம்பாதித்திருக்கிறார். கடந்த ஆண்டைவிட இவர் சம்பாத்தியம் இரட்டிப்பாகியிருக்கிறது. ரியாலிட்டி ஷோ, வெப்சைட் பிசினஸ் எனத் தாறுமாறாய் கொடிகட்டிப் பறக்கிறார் கிம். இந்த சந்தோஷத்தை இரண்டு பிகினி படங்களை வெளியிட்டுக் கொண்டாடி யிருக்கிறார் கிம். கவர்ச்சி பாம் கிம்!

இன்பாக்ஸ்

வில்லேஜ் சப்ஜெக்ட் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாண்டிராஜ், சூர்யாவை வைத்து மதுரையில் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார். இதற்காக மதுரை சென்றிருக்கிறார் சூர்யா. படத்தின் ஹீரோயினாக ‘டாக்டர்’ நாயகி பிரியங்கா அருள் மோகன் கமிட்டாகியிருக்கிறார். முதல்குட்டி சிங்கம்!

இன்பாக்ஸ்

‘குக்கு வித் கோமாளி - சீசன் 2’ மூலம் பிரபலமான நடிகை பவித்ரா லக்ஷ்மி. தற்போது நடிகர் சதீஷ் முதல்முறையாகக் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தைக் குறும்பட இயக்குநரான கிஷோர் ராஜ்குமார் இயக்கவுள்ளார். ஏற்கெனவே பவித்ரா நடித்த ‘உல்லாசம்’ எனும் மலையாளப் படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. மெழுகு டாலு நீ.. அழகு ஸ்கூலு நீ..!

கொழும்பில் ஏப்ரல் 4-ம் தேதி ‘திருமதி இலங்கை’ அழகிப் போட்டி நடைபெற்றது. புஷ்பிகா என்பவர் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டார். ஆனால், போட்டிக்குச் சென்றிருந்த கடந்த ஆண்டின் ‘திருமதி உலக அழகி’யான கரோலின் ஜூரி மேடையில் ஏறி, ‘புஷ்பிகா விவாகரத்து ஆனவர். அவர் வெற்றி பெற்றது செல்லாது’ என வாதாடி, புஷ்பிகாவை அடித்து அவர் கிரீடத்தைப் பிடுங்கினார். இருவருக்கும் அடிதடியாகி, போலீஸ் புகார் வரை போனது. ‘கரோலின் மன்னிப்பு கேட்டால், நான் புகாரை வாபஸ் வாங்குகிறேன்’ என்றார் புஷ்பிகா. மன்னிப்பு கேட்க மறுத்து ஜெயிலுக்குப் போயிருக்கிறார் கரோலின். மன்னிக்கிற மனசு இருக்கே...!

படக்குழுவில் நான்கு பேருக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதன் காரணமாகத் திடீரென்று நிறுத்தப்பட்ட ‘அண்ணாத்த’ ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது. தேர்தல் முடிந்த கையோடு படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காகத் தனி விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த். அங்கு மூன்று வாரம் நடைபெறும் படப்பிடிப்பை முடித்த பின்னர் மே 3-ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் விருது விழாவில் கலந்துகொள்ள உள்ளார். அண்ணாத்ததான் வர்றாரு..!

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு ‘விக்ரம்’ பட வேலைகளில் மும்முரமாகியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்து பிரபாஸை வைத்து த்ரில்லர் பாணியில் புதிய படம் இயக்கவுள்ளார் என்று கிசுகிசுக்கிறது டோலிவுட் வட்டாரம். ‘மாஸ்டர்’ பட புரொமோஷன் நேரத்தில் ஹைதராபாத்தில் பிரபாஸைச் சந்தித்து ஒன்லைன் சொன்ன லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளார் பிரபாஸ். தற்போது பிரபாஸ் கைவசம் சலார், ஆதிபுருஷ், நாக் அஷ்வின் இயக்கும் படம் என அடுத்தடுத்து படங்கள் உள்ளதால் இக்கூட்டணி இணைய இன்னும் சில காலம் எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாரே... கொல மாஸு!

யுவன் ஷங்கர் ராஜாவை இப்போது தெக்கத்திப் பக்கம் அடிக்கடி பார்க்க முடிகிறது. முன்புபோல மூடி டைப் ஆளாக இல்லாமல் எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுகிறார். ரெக்கார்டிங் இல்லாத வார இறுதிகளில் கைலி டி-ஷர்ட்டில் மனைவியின் ஊரான கீழக்கரையில் லைட் ஹவுஸ் ஏரியா, பள்ளிவாசல் தெரு என அவர் வாக்கிங் போவதைப் பார்க்க முடிகிறது. அங்கு வந்தால் தென்னந்தோப்பில் கிரிக்கெட் ஆடுவது, இறகுப்பந்து ஆடுவது என வேறொரு ஆளாக மாறிவிடுகிறார். மனைவி ஜஃப்ரூன்னிஷாதான் யுவனின் காஸ்ட்யூம் ஏரியாவைப் பார்த்துக்கொள்கிறார். கீழக்கரை சுல்தான்!

இன்பாக்ஸ்

வெற்றிமாறனின் அடுத்த படத்துக்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய்க் கூடியிருக்கிறது. சூரி நாயகனாய் நடிக்கும் அந்த ‘விடுதலை’ படத்தில் அடுத்தடுத்து ஆச்சர்யமான நபர்கள் சேர்கிறார்கள். ‘உங்களுக்கு முக்கியமான ரோல் இருக்கு, வந்து சேருங்க!’ என கௌதம் மேனனுக்கு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டியிருக்கிறார் வெற்றிமாறன். ஏன் எதற்கு என்றுகூடக் கேட்காமல் பைக் ஏறி ஸ்பாட்டுக்குப் போய்விட்டாராம் கௌதம். (இப்போதெல்லாம் புல்லெட்டில்தான் அதிகம் பயணிக்கிறாராம்!) விஜய் சேதுபதி, சூரி, கௌதம் மேனன் என இப்பவே கிர்ருங்குது. கெட்-அப் சேஞ்ச் உண்டா சார்?

இன்பாக்ஸ்

திருமணத்துக்குப் பிறகு ரொம்பவே உற்சாகத்தில் இருக்கிறார் காஜல். ‘குலேபகாவலி’ ‘ஜாக்பாட்’ படங்களைக் கொடுத்த கல்யாண் இயக்கத்தில் காஜல் லீடு ரோலில் நடித்த ‘கோஷ்டி’ படம் போஸ்ட் புரொடக்‌ஷனில் இருக்கிறது. தியேட்டரில் வெளியிடத் திட்டமிட்டு பணியை விரைவுபடுத்தி யிருக்கிறார்கள். கண்டா கோலிவுட்டுக்கு வரச் சொல்லுங்க!

இன்பாக்ஸ்

நெல்லை மாவட்ட அருங்காட்சியகத்துக்குப் பெரிய வரலாறு இருக்கிறது. பெருங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய பழைமையான பொருள்கள், ஆயுதங்கள், ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழி, தானியக்குதிர், வீரக்கல், பழங்கால நாணயங்கள் என இங்கு பல பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் இருக்கும் இடம், ஒரு காலத்தில் சிறைச்சாலையாக ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்த்த வீரபாண்டிய கட்டபொம்மனின் சகோதரர் ஊமத்துரையை இங்குதான் சிறை வைத்திருந்தனர். அவர் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் ஊமத்துரையின் வரலாற்றை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் ஓவியம் வரைவது, பயன்படாத பொருள்களை வைத்து அலங்காரப் பொருள்கள் செய்வது உள்ளிட்ட பல பயிற்சிகள் கொடுக்கப்படுவதால், இங்கு எப்போதும் கூட்டம் இருக்கிறது. தொன்மை!

இன்பாக்ஸ்

பிரிட்டிஷ் அரசின் நீதிவழங்கும் முறையை அடிப்படையாகக்கொண்டு எழுத்தாளர் சோ.தர்மன் ‘வவ்வால் தேசம்’ என்ற நாவலை உருவாக்கிவிட்டார். நாவலின் பரப்பு 1800களின் காலகட்டத்தில் ஆரம்பித்துத் தற்காலம் வரை விரிகிறது. பிரிட்டிஷ் அதிகாரி வேல்ஸ் துரை, ஊமைத்துரை போன்ற பல முக்கியப் பாத்திரங்கள் நாவலில் உண்டு. ‘அடையாளம்’ பதிப்பகத்தின் வெளியீடாக வரும் இந்த நாவல் குறித்து இலக்கிய உலகில் எதிர்பார்ப்பு நிலவுகிறது. காத்திருக்கிறோம்!

இன்பாக்ஸ்

சமூக வலைதளங்களில் ட்ரோல்கள் புதிதல்ல. ஆனால், பல பிரபலங்கள் அவற்றை ஜாலியாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், அபிஷேக் பச்சன் எல்லாவற்றையும் கூலாக ஹேண்டில் செய்கிறார். சமீபத்தில் வெளியான அபிஷேக்கின் ‘தி பிக் புல்’ படம் பார்த்த ஒரு ரசிகர், ‘வழக்கம் போல நம்மை ஏமாற்றவில்லை அபிஷேக். மொக்கையாக நடித்திருக்கிறார்’ என அவருக்கே ட்வீட் செய்ய, அதற்கு அபிஷேக் ‘உங்களை ஏமாற்றாதவரை எனக்கு மகிழ்ச்சியே. எங்கள் படம் பார்த்தமைக்கு நன்றி’ என பதில் தந்திருக்கிறார். அப்புறமென்ன... நெட்டிசன்கள் அபிஷேக்கைப் புகழ்ந்து தள்ளிவிட்டார்கள். செம!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism