சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர்ப் பெரிய கோயில் தற்போது புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளால் இரவு நேரத்தில் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது.

ரன் ஜோஹர் தயாரிக்கும் ‘தோஸ்தானா -2’ படத்திலிருந்து பாலிவுட் ‘ஹார்ட்த்ராப்’ நடிகர் கார்த்திக் ஆர்யன் நீக்கப்பட்டிருக்கிறார். என்ன பிரச்னை எனத் தயாரிப்பு நிறுவனம் சொல்லவில்லை. இதற்கிடையில், கார்த்தி ஆர்யனுக்கு ஆதரவாக கங்கனா ரணாவத் ட்வீட் செய்ய, பாலிவுட்டே தகித்துக்கிடக்கிறது. ‘சுஷாந்த்தைப் போல ஆர்யனும் தன் முயற்சியால் வளர்ந்த நாயகன். ஆனால், பெற்றோர்களின் நிழலில் பிரபலமான கும்பலால் அவர் வளர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவரை நீக்கியிருக்கிறார்கள். கவலைப்படாதே ஆர்யன். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார் கங்கனா. பாலிவுட்னாலே பஞ்சாயத்துதான்.

ஸ்தோனிய நாட்டின் தலைநகரம் டலின். இங்கு பிஸியான ஒரு சாலை இப்போது மூடப்பட்டிருக்கிறது. அங்கு இது தவளைகளின் இனப்பெருக்க காலம். சாலையின் ஒரு பகுதியில் வசிக்கும் தவளைகள், அங்கே இனப்பெருக்கம் செய்துவிட்டு குட்டிகளுடன் சாலையைத் தாண்டி இன்னொரு பகுதியில் இருக்கும் குளத்துக்கு வருகின்றன. இவற்றில் பலவும் வாகனங்களில் அடிபட்டு இறப்பதால், சாலையை மூடியிருக்கிறது அரசு. விரைவில், தவளைகள் கடப்பதற்காக ஒரு சுரங்கப்பாதை அமைக்கவும் திட்டம் தயாராகி வருகிறது. உள்ளத்தில் நல்ல உள்ளம்.

இன்பாக்ஸ்

ப்ரல் 23-ம் தேதி ரிலீஸாக இருந்த ‘டக் ஜெகதீஷ்’ படம் கொரோனா இரண்டாம் அலையால் தள்ளிப்போயிருப்பதில் வருத்தத்தில் இருக்கிறார் நானி. ‘நின்னுக்கோரி’ படத்தில் ஹிட் கொடுத்த இயக்குநர் சிவ நிர்வாணா - நானி காம்போவுக்கு டோலிவுட் ரசிகர்கள் வெயிட் செய்த நேரத்தில் கொரோனா குறுக்கிட்டதில் படக்குழு அப்செட். ‘படம் ரெடியாகிவிட்டாலும் டக் ஜெகதீஷை தியேட்டரில் ரசிகர்கள் பார்க்க வேண்டும். அதனால்தான் ஓடிடி-க்குத் தரவில்லை. சீக்கிரமே வெள்ளித்திரைக்கு வருகிறோம்!’ எனச் சொல்லியிருக்கிறார் நானி. டக்குனு வாங்க ஜெகதீஷ்!

WWE வீரர்களில் அதிக படங்களில் தொடர்ந்து நடித்துவருபவர் வைன் ஜான்சன் (ராக்). காமெடி படங்கள், ஆக்‌ஷன் படங்கள் என நடித்துக்கொண்டிருக்கும் இவருக்கு வெயிட்டான ஒரு ரோல் சிக்கியிருக்கிறது. சமீபத்தில் வெளியான டிசியின் ‘சஷாம்’ படத்தின் ஸ்பின் ஆஃபாக வெளியாகவிருக்கிறது ‘பிளாக் ஆடம்’. 5,000 ஆண்டுகள் சிறைப்பட்டிருக்கும் சூப்பர் வில்லனின் வாழ்க்கையைச் சொல்லும் பிளாக் ஆடமில் நாயகனாக நடிக்கிறார் ராக். எல்லாம் சரியாக அமைந்தால், ஜூலை 2022-ல் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா கருணை காட்டுமா?

இன்பாக்ஸ்

னிதர்களைச் செவ்வாயில் தரையிறக்க தீவிரமாக ஆலோசித்துவருகிறார்கள் எலான் மஸ்க்கும், ஜெஃப் பெசோஸும். தற்போது அதற்குமுன்னர், நாசாவின் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறக்கும் ஒப்பந்தத்தை வென்றிருக்கிறது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ். அமெரிக்க அதிபரான ஜோ பைடன், முதல்முறையாகப் பெண் ஒருவரையும், வெள்ளை இனத்தவர் அல்லாத ஒருவரையும் நிலாவுக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறார். 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த டீலை வென்றிருக்கிறார் மஸ்க். டிக்கெட் விலை எவ்ளோ?

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அடிக்கடி திருவண்ணாமலையில் பார்க்க முடிகிறது. அரசியல் முடிவுகள் உட்பட எதுவாக இருந்தாலும் திருவண்ணாமலைக்கு வந்து தரிசனம் செய்யாமல் வெளிப்படுத்தியது கிடையாது. கிரிவலப் பாதையிலிருந்த மூக்குப்பொடி சித்தர் ஆசி பெற்று தினகரன் முடிவுகளைத் துணிந்து எடுப்பார். 2018-ம் ஆண்டு சித்தர் இறந்துவிட, கிரிவலப் பாதையிலுள்ள சித்தரின் நினைவிடத்துக்குச் சென்று வழிபடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டார் தினகரன். தன் செல்ல மகள் ஜெயஹரிணியின் திருமணத்தை வரும் ஜூன் மாதம் அண்ணாமலையார் கோயிலில் செய்துவைக்கிறார் தினகரன். கடந்த 2000-ம் ஆண்டு அண்ணாமலையார் கோயிலில்தான் ஜெயலலிதா மடியில் ஜெயஹரிணியை அமரவைத்துக் காது குத்தினார் சசிகலா. அந்த சென்டிமென்ட்டில்தான் இங்கேயே திருமணம் நடத்தச் சொல்லியிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதா இல்லாத குறையைப் போக்குவதற்காகவே அவர் அமர்ந்து காது குத்திய கோயிலிலேயே திருமணத்தை நடத்துகிறோம் என்று நெகிழ்கிறார் தினகரன். வாழ்வாங்கு வாழட்டும்!

இன்பாக்ஸ்

துன்பத்திலும் பெரிய துன்பம் பிரியத்துக்குரியவர் உடல்நலம் இல்லாமல் இருக்கும்போது அருகிலிருந்து பார்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலைதான். அதை நம் எல்லோர் வாழ்விலும் நடத்திக்காட்டிவருகிறது கொரோனா. தேர்தல் பணிகள் முடிந்து இப்போதுதான் குஷ்பூ சற்று ஓய்வு எடுத்துவருகிறார். தற்போது அவர் கணவர் இயக்குநர் சுந்தர்.சிக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியிருக்கிறது. அதனால் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார். தள்ளி நின்று கவனித்துக்கொள்ளும் குஷ்புவின் புகைப்படம் சொல்லாமல் சொல்கிறது அன்பின் அரவணைப்பை. அன்பே சிவம்!

‘கிழக்குக் கடற்கரையின் ராணி’ என்றும், ‘அலை பாடும் நகரம்’ என்றும், போற்றப்படும் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள தரங்கம்பாடியில் வரலாற்றுச் சிறப்புமிக்க டேனிஷ் கோட்டை அமைந்திருக்கிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் வீசும் காற்றை இதய நோயாளிகள் சுவாசிக்கும்போது அவர்கள் நிவாரணம் பெறுவதாக நம்பிக்கை இருக்கிறது. இதற்காகச் சுற்றுப்புற ஊர்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் காலகட்டத்தில் இங்கு வந்து இந்த ஓசோன் காற்றை சுவாசிக்கின்றனர். தற்போது கொரோனா காலம் என்பதால் வெளிநாட்டுப் பயணிகள் வரவு குறைவாக உள்ளது என்றாலும், தினமும் மாலை வேளைகளில் கூட்டம் குவிகிறது. செம ஸ்பாட்டுப்பா!

இன்பாக்ஸ்

துரைக்கும் சென்னைக்குமாக அலைந்துகொண்டிருக்கிறார் தொல்.திருமாவளவன். பெரம்பலூர் மாவட்டம் அங்கனூரில் வசித்துவரும் அவர் தாயாருக்கு கடந்த மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே மதுரை அப்போலோவில் சேர்த்தனர். அப்போது தேர்தல் பிரசாரம் உச்சத்தில் இருந்ததால் தாயாரை அவ்வப்போது பார்த்துவிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். திருமாவின் அக்கா மகள் மதுரையில் வசிப்பதால், தாயாரை உடனிருந்து கவனித்தார்கள். தற்போது தேர்தல் முடிந்த நிலையில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மதுரைக்கு வந்து தாயாரைப் பார்க்கிறார். ‘பொது வாழ்க்கைக்கு என்னை அர்ப்பணித்துவிட்டதால் எனக்கென்று தனி வாழ்க்கை இல்லை. ஆனாலும், உடல்நலமில்லாமல் இருக்கும் தாயாரை முழு நேரமும் இருந்து கவனிக்க முடியவில்லையே..!’ என்று கட்சியினரிடம் கலங்கியுள்ளார் திருமா. நலம் பெறட்டும் அம்மா!

DC காமிக்ஸ் ரசிகர்களின் நீண்டநாள் கனவான ஸ்னைடர் கட் ஜஸ்டிஸ் லீக் ஒருவழியாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த பாகத்துக்கான லீடுடன் அந்தப் படம் முடிந்திருந்தாலும் இயக்குநர் ஜாக் ஸ்னைடருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகத் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் ஸ்னைடரின் ஐடியாக்களிலிருந்து முற்றிலும் விலகி வேறு பாதையில் தன் படங்களைக் கொண்டு சென்றுவிட்டது. குறிப்பாக ஸ்னைடர் படங்களில் பேட்மேனாக நடித்த பென் அஃப்ளிக்குக்குப் பதிலாக, இளம் நடிகர் ராபர்ட் பேட்டின்சனை வைத்துப் புதிய பேட்மேன் படம் ஒன்றை எடுத்துவருகிறது. இந்நிலையில் ஸ்னைடர் கட்டின் வெற்றியால், #MakeTheBatfleckMovie எனப் பென் அஃப்ளெக் நடிப்பில் தனி பேட்மேன் படமொன்றைக் கேட்டு ஸ்னைடரின் ஆர்மி போராடிவருகிறது. ‘சமாதான உடன்படிக்கையாக HBO மேக்ஸ் ஓடிடி தளத்தில் பென்னை வைத்துப் புதிய பேட்மேன் சிரீஸ் வரலாம்’ என்கின்றனர். ஆனால், ரசிகர்கள் இதை ஏற்பார்களா?!

சிய யானைகள் அதிகம் வாழும் பகுதியான நீலகிரியில் அதற்கு இணையாகவே யானை - மனித எதிர்கொள்ளல்களும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. யானை வழித்தட ஆக்கிரமிப்பு, புற்றீசல்போல முளைக்கும் ஆடம்பர விடுதிகள், காடழிப்பு, களைத்தாவரப் பெருக்கம், விளைநில விரிவாக்கம், மின்வேலிகள் என காட்டுயிர்களுக்கு எதிரான அத்துமீறல்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது. இதன் விளைவாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்புப் பகுதிகளை நோக்கிப் படையெடுக்கும் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. கூடலூர், குன்னூர், கோத்தகிரி, குந்தா பகுதிகளில் மட்டுமே யானைகள் வலம் வந்துகொண்டிருந்த நிலையில், தற்போது முதல்முறையாக ஊட்டிக்கு மூன்று யானைகள் விசிட் அடித்து இங்கேயே முகாமிட்டுள்ளன. இது ஊட்டி நகர மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. `இயற்கைக்கு எதிராக நாம் செய்த அத்துமீறல்களின் நேரடி சாட்சியே இந்தக் காட்சி. இனியும் திருந்தாவிட்டால் விளைவு இன்னும் மோசமாகும்’ என‌க் கானுயிர் செயற்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர். திருந்துங்கய்யா!

`தமிழ்ப் படம்’, `தமிழ்ப் படம் 2’ படங்களைத் தொடர்ந்து அடுத்த இன்னிங்ஸிற்குத் தயாராகிவிட்டார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். விஜய் ஆண்டனியை வைத்து த்ரில்லர் பாணியில் புதிய படமொன்றை விரைவில் இயக்கவுள்ளார். விரைவில் பாசிட்டிவான டைட்டிலுடன் படம் தொடங்கும் என்று கூறியுள்ளார். இதை யாராவது ஸ்பூப் பண்ணுனா...?

லகப் புகழ்பெற்ற தஞ்சாவூர்ப் பெரிய கோயில் தற்போது புதிதாகப் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகளால் இரவு நேரத்தில் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோயிலுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் சமூகப் பங்களிப்பு நிதியின் மூலம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விளக்குகள் எரிய வேண்டும் என்பதே தஞ்சை மக்களின் பிரார்த்தனை! ஜொலிஜொலிக்கட்டும்!

இன்பாக்ஸ்

‘RRR’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். அடுத்து த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் படத்தில் நடிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கடந்த ஆண்டு முதலே இதுகுறித்து டோலிவுட் வட்டாரம் கிசுகிசுத்து வந்த நிலையில், மே 20-ம் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பான தரமான சம்பவம் வெயிட்டிங்..!

யோபிக் சீசனான இந்திய சினிமாவில் தற்போதைய ஹாட் டாப்பிக் கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். ``உங்களுடைய பயோபிக்கில் யார் நடித்தால் நன்றாக இருக்கும்?’ என்று ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு ‘தளபதி விஜய்’ என்று ட்வீட்டியுள்ளார் பத்ரி! பெரட்டி வுடு... செதற வுடு!

ஹாலிவுட்டின் ‘ஹாரி பாட்டர்’ நட்சத்திரம் எம்மா வாட்ஸன் இந்த வாரம் 31 வயதைத் தொட்டுவிட்டார். காலம்தான் எவ்வளவு பெரிய மாயச் சாத்தான்! அம்மணி லேட்டஸ்ட்டாய் இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் பிறந்தநாள் ஆடை முழுக்க முழுக்க இயற்கைமுறையில் தயார் செய்யப்பட்டதாம். ‘environmentally-conscious’ என்று ஷேர் ஆகும் அந்தப் படங்களைப் பார்த்து, `31 வயது போல் எம்மா இல்லை. 19 முடிந்து 18 ஆகிறது!’ என ஜொள்ளியிருக்கிறார்கள் எம்மா ரசிகர்கள். என்றும் 16.