Published:Updated:

இன்பாக்ஸ்

மோகன்லால்
பிரீமியம் ஸ்டோரி
மோகன்லால்

கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை? பலரின் கேள்வி இது.

இன்பாக்ஸ்

கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை? பலரின் கேள்வி இது.

Published:Updated:
மோகன்லால்
பிரீமியம் ஸ்டோரி
மோகன்லால்

மேற்கு வங்காள வெற்றியை அடுத்து திரிபுரா மாநிலத்தில் கண் வைத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. பா.ஜ.க ஆளும் திரிபுராவில் எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சோர்ந்துபோயிருக்க, சூழலைப் பயன்படுத்தப் பார்க்கிறது திரிணாமுல் காங்கிரஸ். பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை இதற்காகக் களத்தில் இறக்கியது. 23 பேர் கொண்ட ஐபேக் டீம் திரிபுரா போனபோது, கொரோனா விதிகளை மீறியதாகக் காரணம் சொல்லிக் கைது செய்தது திரிபுரா போலீஸ். இதை வைத்து அதிரடி அரசியலில் இறங்கிவிட்டார் மம்தா. திரிபுரா தீதி!

தமிழ்நாட்டின் இரண்டாவது திருநங்கை காவல் துணை ஆய்வாளராக, திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே பாவுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சிவன்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்; முன்னதாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்தப் பெருமையைப் பெற்றார். தற்போது சிவன்யாவுக்கான பணி ஆணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்ற தன்னுடைய கனவு நிறைவேறிய நிலையில், ‘`காவல் கண்காணிப்பாளராக வரவேண்டும் என்பது என் அடுத்த கனவு’’ என்கிறார் சிவன்யா. அதுவும் மெய்ப்படும்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

`அகதி என்பது விருப்பத்தின் பெயரால் நடந்தது அல்ல; எங்கள்முன் இருப்பது இரண்டு தேர்வுகள்தான், ஒன்று எங்கள் நாட்டிலேயே சாக வேண்டும், அல்லது, தப்பிக்கத் துணிந்து மரணத்தை தரிசிக்க வேண்டும்.' தன் சுயசரிதையில் இவ்வாறாக எழுதியிருப்பார் யுஸ்ரா மர்தினி. இந்த ஆண்டு ஒலிம்பிக்கில் மீண்டும் வைரலாகியிருக்கிறார் மர்தினி. சொந்த தேசமான சிரியாவிலிருந்து படகில் கிரீஸுக்குத் தப்பிக்க முயன்ற மர்தினிக்குப் பல தடங்கல்கள். ஆறு நபர்கள் மட்டுமே அமரக்கூடிய படகில், 20 பேர் செல்ல, படகின் இன்ஜின் ரிப்பேராகிவிடுகிறது, மர்தினி, அவரின் சகோதரி மற்றும் இரண்டு பேர் படகை மூழ்கவிடாமல், நான்கு மணி நேரம் கடலில் படகைத் தள்ளியிருக்கிறார்கள். 20 பேரின் உயிரைக் காப்பாற்றியவர், ஜப்பான் ஒலிம்பிக்ஸில் அகதிகளுக்கான அணியில் நீச்சல் வீராங்கனையாக விளையாடிவருகிறார். எதிர்நீச்சல்! வீராங்கனை!

கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஏன் குறையவில்லை? பலரின் கேள்வி இது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செய்த சீரோசர்வேயில் கிடைத்துள்ளது இதற்கான பதில். கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு எத்தனை பேரின் உடலில் எதிர்ப்பாற்றல் உருவாகியுள்ளது என்பதைக் கண்டறியும் ஆய்வு இது. `இந்தியாவில் ஒரு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டால், 33 பேர் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறார்கள்' என்பது இந்த ஆய்வு சொல்லும் உண்மை. ஆனால், கேரளாவில் ஒரு நோயாளி கண்டறியப்பட்டால், 6 பேர் மட்டுமே கண்டறியப்படாமல் இருக்கிறார்கள். மகாராஷ்டிராவில் 12 பேர். இதனால்தான் இந்த இரண்டு மாநிலங்களில் தொற்று அதிகமாக இருப்பது போலவே தோற்றம் நிலவுகிறது. இந்த விஷயத்தில் மிக மோசம் பீகார். அங்கு ஒரு நோயாளி கண்டறியப்பட்டால், 134 பேர் கண்டறியப்படுவதில்லை. உத்தரப்பிரதேசத்தில் இது 100 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் 86 ஆகவும் இருக்கிறது. தமிழகம் 26 என்ற எண்ணிக்கையுடன் `ஓரளவு பரவாயில்லை' என்ற நிலையில் இருக்கிறது. சோதனை முக்கியம் குமாரு!

இந்தியாவிலிருந்து திருடிக் கொண்டு செல்லப்பட்ட தொன்மையான எட்டுச் சிலைகள் மற்றும் ஆறு ஓவியங்கள், ஆஸ்திரேலியாவில் கான்பரா அருங்காட்சியகத்தில் உள்ளன. இவற்றை மீட்க நம் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. விரைவில் இவை இந்தியா வருகின்றன. இவற்றில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள சாயாவனம் கோயிலில் 1960-ம் ஆண்டு களவுபோன நடனமாடும் குழந்தைத் திருஞானசம்பந்தர் சிலையும் ஒன்று. இது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்துச் சிலை. 60 ஆண்டுகளுக்குப் பின்பு சிலை திரும்ப வரப்போகும் செய்தி அப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சம்பந்தர் ரிட்டர்ன்ஸ்!

மோகன்லால்
மோகன்லால்

இயக்குநர் ப்ரியதர்ஷனும் நடிகர் மோகன்லாலும் சினிமா வாய்ப்பு தேடும் காலத்திலிருந்து நண்பர்கள். இருவரும் அவரவர் துறையில் பெரிய இடத்திற்கு வந்தாலும் அவர்களது நட்பு என்பது அப்படியேதான் இருக்கிறது. இதுவரை ப்ரியதர்ஷன் இயக்கத்தில் 30 படங்கள் நடித்திருக்கிறார் மோகன்லால். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணையவிருக்கிறது. பாக்ஸிங் களத்தை மையமாக வைத்து ப்ரியதர்ஷன் இயக்கும் கதையில் உடல் எடையைக் குறைத்து பாக்ஸராக நடிக்கவிருக்கிறார் மோகன்லால். அதற்காக பாக்ஸிங் பயிற்சியையும் எடுத்துவருகிறார். சேட்டா பரம்பரை!

அடிப்படை எழுத்தறிவைத் தரும் நோக்கத்தில் தொடங்கப்பட்ட ‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் 3,10,000 பேர் மாலை நேர வகுப்புகள் மூலம் படித்துவந்தனர். இவர்களுக்கான மதிப்பீட்டுத் தேர்வு சமீபத்தில் நடந்தது. மூதாட்டிகள் பலரும் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர். தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள்தான் சுவாரஸ்யம். சரியா, தவறா என்று டிக் அடிக்க வேண்டிய பகுதியில், ‘ஆணும் பெண்ணும் சமம் இல்லை; பேரிக்காய் பச்சை நிறம்; ஜாங்கிரி இனிப்பாக இருக்கும்; தனிநபர் கழிவறை தேவையில்லை’ போன்ற கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வு எழுதி முடித்த மூதாட்டிகள் பலரும், ‘இனி நாங்கள் கைநாட்டு இல்லை’ என்று சிம்பு ஸ்டைலில் பேனாவை விரல்களில் சுழற்றிக்கொண்டே வீட்டுக்குச் சென்றனர். கற்கை நன்றே!

டோலிவுட்டில் 100-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ள இயக்குநர் ராகவேந்திர ராவ் தற்போது நடிகர் அவதாரம் எடுக்கவுள்ளார். ‘பெல்லி சாண்டா டி’ என்ற தனது அடுத்த படத்தில் வசிஷ்டா என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வெல்கம்லு!

ட்விட்டர் நிறுவனத்துடன் தொடர்ச்சியான பஞ்சாயத்துகள் இருந்தாலும், ட்விட்டரில் பிரதமர் மோடியைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை 70 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதன் மூலம், `ஆட்சிப் பொறுப்பில் இருப்போரில் உலகில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் ஒரே அரசியல் தலைவர்' என்ற பெருமையைப் பெற்றுள்ளார் மோடி. இதுமட்டும்தான் சாதனை!

கொரோனாச் சூழல் தியேட்டர்களை முடக்க, ஓ.டி.டி தளங்களின் பக்கம் சாய்ந்துவிட்டது இந்திய சினிமா. இன்னொரு பக்கம் உலகின் பெரிய தயாரிப்பு நிறுவனமான வால்ட் டிஸ்னி, இந்தச் சூழலில் வருமானத்தைப் பெருக்க, வேறொரு உத்தியைக் கையில் எடுத்திருக்கிறது. கமல் விஸ்வரூபத்துக்குச் சொன்ன ஐடியாதான். ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும் ஓ.டி.டி தளங்களிலும் படத்தை வெளியிடுவது என முடிவு செய்து பிளாக் விடோ படத்தை வெளியிட்டது. எட்டு மெகா ஹிட் படங்களில், பிளாக் விடோவாக நடித்துப் புகழ்பெற்ற ஸ்கார்லெட் ஜோஹான்சனை நாயகியாக முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் இது. `படத்தை ஒரே நேரத்தில் இரண்டிலும் வெளியிட்டதால், தனக்கு லாபம் கிடைக்கவில்லை' என இணை தயாரிப்பாளரான ஸ்கார்லெட் தற்போது நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். பஞ்சாயத்து ஆரம்பிச்சிடுச்சு!