கட்டுரைகள்
Published:Updated:

இன்பாக்ஸ்

விஜய்
பிரீமியம் ஸ்டோரி
News
விஜய்

விஜய்யின் 65வது படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது.

வீடுகளே கதி என உலகமே முடங்கியிருக்க, படங்களைத் திரையரங்குகளில் வெளியிட முடியாமல் திணறிவருகின்றன பெரிய ஹாலிவுட் ஸ்டூடியோக்கள். சரியாக இந்த நேரத்தில் ரிலீஸான படங்களுக்கு இன்னும் சிக்கல். இப்படி சில வாரங்களுக்கு முன் வெளியானது டிஸ்னி-பிக்ஸாரின் ஹை-பட்ஜெட் அனிமேஷன் படமான ‘ஆன்வேர்டு’ (Onward). ஆனால் வெளியான சில நாட்களிலேயே கொரோனா பிரச்னை பெரிதாக வெடித்தது, திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் இரண்டே வாரங்களில் படத்தை டிஜிட்டல் ரிலீஸ்செய்துள்ளது டிஸ்னி. இதுமட்டுமல்லாமல் லவ் பேர்ட்ஸ் (lovebirds) என்ற ஹாலிவுட் படமும் நேராக நெட்ஃப்ளிக்ஸில் வெளிவரவுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் பல படங்கள் இந்தப் பாதையை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டுக்கு வாங்க

inbox corona
inbox corona

விவாகரத்து செய்துவிட்ட பாலிவுட் நட்சத்திரத் தம்பதி ஹ்ரித்திக் ரோஷனையும், அவர் மனைவி சுசானேவையும் இந்த அசாதாரண கொரோனா சூழல் மீண்டும் இணைத்துள்ளது. தம்பதியாக அல்ல; நண்பர்களாக. இந்தியாவில் 21 நாள்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், தன் இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு ஹ்ரித்திக் வீட்டுக்கு வந்துவிட்டார் சுசானே. நெகிழ்ந்துபோன ஹ்ரித்திக், `இந்த ஊரடங்கு முடியும்வரை என் பிள்ளைகளைப் பார்க்க முடியாதோ என்று வருத்தப்பட்டேன். சற்றும் எதிர்பாராதவிதமாக சுசானேவும் என் மகன்களும் என்னைத் தேடி வந்துவிட்டார்கள். என் மனதைப் புரிந்துகொண்டதற்கு நன்றி சுசானே. எல்லோரும் உங்கள் மனதுக்கு நெருங்கியவர்களுடன் பாதுகாப்பாக இருங்கள்’ எனத் தன் இன்ஸ்டாவில் ஹ்ரித்திக் பகிர, வைரலாகிக்கொண்டிருக்கிறது இந்த அப்பாவின் அன்பு! உறவுகளை இணைத்த ஊரடங்கு.

இன்பாக்ஸ்

மீபத்தில் பாலிவுட் பாடகி கனிகா கபூர் என்பவருக்குக் கொரோனாத் தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டு, அரசின் எச்சரிக்கையையும் மீறி அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பது சர்ச்சையாக வெடித்தது. கனிகா கபூருடன் நிகழ்ச்சி ஒன்றில் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, அவர் மகனும் எம்.பி.யுமான துஷ்யந்த் சிங் ஆகியோர் கலந்துகொண்டனர். அடுத்தடுத்த நாள்களில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்ற துஷ்யந்த், குடியரசுத் தலைவர் ஏற்பாடு செய்திருந்த காலை விருந்திலும் பங்கேற்றார். குறிப்பாக, துஷ்யந்த், சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே ஆகியோருக்கு தி.மு.க எம்.பி. கனிமொழி விருந்தளித்தார். கனிகா கபூருக்குக் கொரோனா தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டவுடன், சங்கிலித் தொடராக அவரோடு தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டது. துஷ்யந்த், வசுந்தரா ராஜே இருவருக்கும் கொரோனாத் தாக்குதல் இல்லை என்று பரிசோதனையில் தெரியவிட்டது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மு.க எம்.பி. கனிமொழி, ஒருவாரம் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டு சுய பரிசோதனை செய்துள்ளார். அவருக்குக் கொரோனாத் தாக்குதல் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமயோசிதமாக அவர் செயல்பட்டிருப்பது பாராட்டைப் பெற்றிருக்கிறது. வருமுன் காப்போம்னு அவர் அப்பா சொல்லியிருக்காரே!

போரிஸ் ஜான்சன்
போரிஸ் ஜான்சன்

கொரோனாச் செய்திகள் எல்லாமே வைரல் என்றாலும், இங்கிலாந்திலிருந்து வரும் பெயர்கள் எல்லாம் பீதியைக் கிளப்புகின்றன. `யானே அரசன். யானே கள்வன்’ என ஒரு காலத்தில் உலகை ஆண்ட பிரிட்டிஷ் அரண்மனை நபர்களைக்கூட கொரோனா விட்டுவைக்கவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன், `என்னப்பா கட்டிப்பிடிக்கக்கூடாதா, வணக்கம்தானா’ என ஜாலியாக நக்கலடித்த இளவரசர் சார்லஸையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. 71 வயதான அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனையில் இருக்கிறார். தற்போது, இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. நெல் ஆடிய நிலம் எங்கே

கொரோனாப் பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், விளிம்புநிலை மக்களுக்குப் பல பிரபலங்களும் உதவிவருகிறார்கள். இவர்களில் சானியா மிர்ஸாவும் ஒருவர். தினக்கூலித் தொழிலாளர்களுக்கு ‘சாஃபா’ அமைப்பின் மூலம் உதவ, தன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு நிதி திரட்டி வருகிறார் சானியா. `ஊரடங்கு போட்டாலும் வசதிபடைத்தவர்கள் சௌகர்யமாகவே இருப்பார்கள். ஆனால், தினக்கூலிகள் அந்த அளவுக்கு அதிர்ஷ்டசாலிகள் இல்லையே. அவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை’ என்று உருகியிருக்கிறார் சானியா. காலத்தே செய்த உதவி!

சீனா, இத்தாலியைவிடவும் மோசமான பாதிப்புகளைக் கொரோனாவால் அமெரிக்கா சந்திக்கத் தொடங்கிவிட்டது. ‘ஃப்ளூவில் கூடத்தான் அத்தனை பேர் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர்’ என்றும், கொரோனாவை ‘சீன வைரஸ்’ என்றும் இந்த விஷயத்தில் தொடர்ந்து அலட்சியம் காட்டிவந்தார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஒருபுறம் இப்படி இவர் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்குகளாக உயர்ந்துள்ளது. இதனால் இறுதியாகச் சீனாவிடமே உதவி கேட்டுச் சரணடைந்திருக்கிறார் ட்ரம்ப். ஈஸ்டர் (ஏப்ரல் 12) நாளுக்கு முன் இவற்றுக்குத் தீர்வு கண்டு ஊரடங்கைத் திரும்பப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் ட்ரம்ப். ஆனால் ஆறு வாரம் முதல் பத்து வாரம் வரை கண்டிப்பாக மக்கள் வீட்டுக்குள் தங்கியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் பில் கேட்ஸ். கொரோனாவிற்கு முன்பே இதுபோன்ற பெருந்தொற்று நோய்களின் ஆபத்துகள் குறித்துக் குரல் கொடுத்துவருபவர் அவர். ‘அணு ஆயுதங்களுக்குக்கூட நம்மிடம் பதிலிருக்கிறது. ஆனால், கண்ணுக்குத் தெரியாத வைரஸுக்கு இல்லை’ எனச் சில வருடங்களுக்கு முன்பு பேசியிருந்தார் கேட்ஸ். கொஞ்சம் மனது வையுங்கள் ட்ரம்ப்

பிரெண்டன் டாரண்ட், நியூஸிலாந்து நாட்டில், மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலரைக் கொன்று குவித்ததற்காகக் கைது செய்யப்பட்டிருக்கும் நபர். தன்னுடைய கொலைகளை சமூக வலைதள நேரலையில் ஒளிபரப்பி உலகையே உலுக்கிய பிரெண்டன், கைது செய்யப்பட்டாலும் தன் குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் கடந்த வாரம் நீதிமன்ற விசாரணையின் போது, திடீரென தன் முந்தைய வாக்குமூலத்தை மாற்றி, 51 கொலைகளையும் தான் செய்ததாகக் குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரைக் குற்றவாளி என உறுதிசெய்த நீதிமன்றம், மே 1ஆம் தேதி தண்டனை முடிவுசெய்யப்படும் என அறிவித்துள்ளது. சட்டம் தன் கடமையை...

மாநாடு’ படத்தின் படப்பிடிப்பிற்கு சிம்பு தவறாமல் கலந்துகொண்டதைத் தொடர்ந்து சிம்புவை வைத்துப் படம் பண்ணுவதற்குப் பல தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். ஆனால், ஏற்கெனவே பல தயாரிப்பாளர்களுக்கு சிம்பு கால்ஷீட் கொடுத்துள்ளதால் முதலில் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். சேரன், மிஷ்கின் ஏற்கெனவே சிம்புவிடம் கதை சொல்லி ஓகே வாங்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ‘அரிமா நம்பி’, ‘இருமுகன்’, ‘நோட்டா’ படங்களின் இயக்குநர் ஆனந்த் ஷங்கர், சிம்புவிடம் கதை சொல்லியிருக்கிறார். முதலில் இந்தக் கதை விஷாலுக்குச் சொல்லியிருந்த நிலையில், தற்போது அது சிம்புவிடம் வந்திருக்கிறது. அதுமட்டுமன்றி, மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான ‘டிரைவிங் லைசன்ஸ்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கும் சிம்புவிடம் பேசி வருகிறார்களாம். கொரோனாவவிட ஷாக்கா இருக்கு!

விஜய்
விஜய்

விஜய்யின் 65வது படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. தொடர் தோல்விகளை சரிக்கட்டும் விதமாக இந்தப் படம் இருக்க வேண்டும் என அதற்கான ஸ்கிரிப்ட் வொர்க்கில் இருக்கிறார், முருகதாஸ். இந்தப் படத்திற்கு இசையமைப்பதற்காக தமனிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். ரெண்டாவது துப்பாக்கியா?

பாடகர், பாடலாசிரியர், நடிகர் எனப் பன்முகக் கலைஞராக வலம்வந்த அருண்ராஜா காமராஜ், ‘கனா’ படன் மூலம் இயக்குநரானார். ‘கனா’ படத்திற்குப் பிறகு அவர் இயக்கும் இரண்டாவது படத்திற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில், தற்போது அவர் உதயநிதியை வைத்துத் தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். டிரீம் வாரியர் தயாரிப்பில் நடிகர் கார்த்திக்குக் கதைச்சொல்லிக் காத்திருந்த அருண்ராஜா, அவர் ‘சுல்தான்’, ‘பொன்னியின் செல்வன்’, பி.எஸ்.மித்ரனின் படத்தையெல்லாம் முடித்துவிட்டு வரத் தாமதமாகும் என்பதால், அதற்குள் மற்றொரு படத்தை முடித்துவிடலாம் என உதயநிதிக்குக் கதைசொல்லி ஓகே வாங்கியிருக்கிறார். ஆளுக்கொரு கனா