Published:Updated:

வலைபாயுதே

மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன்

யோவ்... யாருயா உங்கள அறுபது வயசுல நீட் எழுதி பாஸ் பண்ணச் சொன்னது?

வலைபாயுதே

யோவ்... யாருயா உங்கள அறுபது வயசுல நீட் எழுதி பாஸ் பண்ணச் சொன்னது?

Published:Updated:
மாளவிகா மோகனன்
பிரீமியம் ஸ்டோரி
மாளவிகா மோகனன்

twitter.com/RevanTalks

ஒரு கோமாளி அரண்மனைக்குள் நுழைந்தால் அவன் ராஜாவாக மாட்டான். அதற்கு பதிலாக அந்த அரண்மனையையே சர்க்கஸ் கூடாரமாக்கிவிடுவான்.அது ஒரு பழைய துருக்கிய பழமொழி. ஆனா எல்லார் மைண்ட்டும் இப்போ எங்க போகுதுன்னு நல்லாவே தெரியுது!

twitter.com/VignaSuresh

நாட்ல யார் யாரையோ வில்லன்றாங்க. பசியோட வருவாங்கன்னு, ஜிம், பார்க், பேட்மின்டன் கோர்ட், யோகா க்ளாஸ்னு தேடித் தேடிப்போய் வாசல்ல ஒருத்தன் சமோசா, வடைக் கடை வைக்கறான்.

டேய்... யார்ரா நீயி?

twitter.com/TheBluePen25

கடந்த வாரம் பிணத்தைப் பொதுப்பாதையில் கொண்டு சென்றதுக்கு தலித்துகளின் மீது தாக்குதல், சென்னை கழிவுநீர்க் கால்வாயில் மூழ்கி தொழிலாளர் இருவர் பலி, மாதம் குறைந்தது ஒரு ஆணவக்கொலை. முதலில் தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டிவிட்டு தேசத்தை ஒன்றுகூட்டலாம். இட ஒதுக்கீடு மட்டும் சமூகநீதி கிடையாது!

twitter.com/npgeetha

‘கேக்குதா, ஒரே சத்தமா இருக்கு’ என மறுமுனையில் அக்கா இரைந்துகொண்டிருக்க, அவள் பயணிக்கும் பேருந்தில் ஒலிக்கும் ராஜாவின் பாடலோடு நானும் கூடவே சற்று நேரம் பயணித்துத் திரும்புகிறேன். ஊரில் வாழ்வது ஊரில் இல்லாமலும் சாத்தியப்படும் மற்றுமொரு தருணம்.

twitter.com/xSPDZvzAbx1SrjC

கோட்சேவின் பெயரையும், மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ்-ஸையும் குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். ஆனால் கோவைக் காவல்துறை அனுமதிக்க முடியாது என்கிறது. நல்ல வாய்ப்பாக முதல்வர் சென்னையில் இருக்கிறார். கோவையில் இருந்திருந்தால் இந்நேரம் முதல்வர்மீதே வழக்கு பாய்ந்திருக்கும்!

Vedhika: கவலைக்கெல்லாம் ஹாலிடே!
Vedhika: கவலைக்கெல்லாம் ஹாலிடே!

twitter.com/sultan_Twitz

முரசொலியை அவர்கள் கட்சியினரே படிப்பதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

ஆமா, ‘நமது அம்மா’ நாளிதழ் ஆல் இந்தியா ஃபேமஸ்?!

twitter.com/itz_idhayavan

பா.ஜ.க வலிமையாக உள்ள பகுதிகளில் இடங்களை ஒதுக்க அ.தி.மு.க-விடம் வலியுறுத்தினோம் - அண்ணாமலை.

உத்தரப்பிரதேசத்துல இடங்களை ஒதுக்க ஏன் அ.தி.மு.ககிட்ட வலியுறுத்தணும்?!

twitter.com/deltatamilian

மோடியின் மீது நமக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் அவரின் ஆடைகள் தேர்வு பிரமிக்க வைக்கிறது. அவர் ஒருமுறை அணிந்த ஆடைகளை மீண்டும் அணிவதில்லை என்றே தோன்றுகிறது. ராகுல் காந்தி பத்து ஆடைகளையே திரும்பத் திரும்ப அணிகிறார். மக்களை மகிழ்விக்கும் கலைஞன் மோடிஜிக்கு மனமார்ந்த நன்றிகள்.

twitter.com/NameisSoni

யோவ்... யாருயா உங்கள அறுபது வயசுல நீட் எழுதி பாஸ் பண்ணச் சொன்னது? வீட்ல போன் பண்ணி... ‘நீயெல்லாம் தண்டமா இருக்கியே’ன்னு கேக்குறாங்க.

twitter.com/HAJAMYDEENNKS

ஐ.ஜே.கே தனித்துப் போட்டி, யாருக்கும் ஆதரவு கிடையாது - ரவி பச்சமுத்து

# எங்களுக்கு யாருமே ஆதரவு கிடையாதுன்னு சொல்ல வந்ததை வாய்தவறி மாத்திச் சொல்லிட்டாரு!

twitter.com/saravankavi

பா.ஜ.க-வுக்கு வாக்களித்தால் உத்தரப்பிரதேசத்தை நம்பர்-1 ஆக்குவோம்: அமித் ஷா

ஏற்கெனவே அஞ்சு வருஷமா நீங்கதான் ஆட்சில இருக்கீங்க...

twitter.com/ramesh_twetz

என்னைக்கு மொபைல் நெட்வொர்க்காரங்க ‘அன் லிமிட்டெடு கால்’னு கொண்டு வந்தாங்களோ, அன்னைக்கே போன் வந்தா உடனே எடுத்துப் பேசற பழக்கம் விட்டுப்போச்சு!

facebook.com/Elangovan Muthiahமதுரையில் ஒமைக்ரானுக்கு அடுத்த கொரோனாவின் புது வேரியன்ட் ஒன்று பரவிக்கொண்டிருக்கிறது. இந்த வேரியன்ட் டூ வீலரில் மாஸ்க் அணியாமல் பயணம் செய்பவர்களால் மட்டுமே பரவும். பக்கத்திலேயே மாஸ்க் போடாமல் நடந்து செல்லும் ஆயிரக்கணக்கான பாதசாரிகளால் பரவாது. மேலும் அது ஐந்நூறு ரூபாய் பைன் கட்டினால் பரவுவதை நிறுத்திவிடும். அந்தப் புதுக் கொரோனா வேரியன்ட்டின் பெயர் ‘நிறுத்றான், மடக்றான்.’

Shobana: சீனியர் - ஜூனியர்
Shobana: சீனியர் - ஜூனியர்

twitter.com/teakkadai1

அந்தக் காலத்தில் ஒரு பெரிய கல்லூரி பிரின்சிபால் இருந்தார். ஆங்கிலத் துறையைச் சேர்ந்தவர். ஷேக்ஸ்பியர் ஆக்கங்களில் Ph.D செய்தவர். அவர் கல்லூரிக்குள் நுழைந்தாலே எல்லோரும் அலறுவார்கள்; ஓய்வுக்குப் பின் பொருளாதார பலம் குறைவால் ஒரு டுட்டோரியல் காலேஜில் ஆங்கிலம் கற்பிக்கச் சேர்ந்தார். எல்லோரும் பத்தாவது பெயில் ஆட்கள். அவர் முன் சிகரெட்கூட ஊதுவார்கள். அதையும் சகஜமாக எடுத்துக்கொண்டார். அவர் உடன் பணியாற்றிய பேராசிரியர்கள் எல்லாம் பணியாற்றிய காலத்திலேயே ரியல் எஸ்டேட், சீட்டு அது இதுவெனப் போட்டு செட்டில் ஆகியிருந்தார்கள். இவர் காலம் முழுவதும் தீவிரப் பணியாற்றி சுதாரிக்காமல் டுட்டோரியல் காலேஜுக்கு வந்தார். அவர் ஞாபகம் ஏனோ பிக்பாஸ் அல்டிமேட் பார்க்கும்போது வந்தது.

twitter.com/arattaigirl

உண்மையில் தனிமையில் இருப்பவர்கள் தனிமையில் இல்லை. தனிமையுடன் இருக்கிறார்கள். அவர்கள் தனிமையை விரும்பித் துணையாக்கிக்கொள்கிறார்கள். அவர்களுக்கும் தனிமைக்கும் இடையே யார் வந்தாலும் அழுது புலம்பி விலகச் செய்துவிட்டு, பின் மீண்டும் தனிமைக்குத் திரும்பி நிம்மதியாகிவிடுவார்கள்.

twitter.com/teakkadai1

Forecasting திறமையும் அதை நோக்கிய பிறழா உழைப்பும் ஒரு மனிதன் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.

facebook.com/sowmya.ragavan

தாமதமாய் சந்தித்துக்கொள்ள நேரும் பொருத்தமான ஜோடிகளுக்கு கள்ளக்காதலர்கள் என்று பெயராகி விடுகிறது.

twitter.com/selvachidambara

சிலர் தனக்கு ஞாபகமறதி அதிகம் என்பதைச் சொல்லிச் சொல்லிக் கட்டமைத்துக்கொண்டே இருப்பார்கள். பின்னர் நிறைய செயல்களில் அவர்கள் தப்பித்துக்கொள்ள அதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்வார்கள்.

twitter.com/Kozhiyaar

ஒருசில பெரியவர்களுக்கு மகனோ, மகளோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே நோயைப் பாதி தீர்த்துவிடுகிறது!

twitter.com/manipmp

மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி என்பது... அத்தை பொண்ணு ‘மாமா’ன்னு கூப்பிடுவதற்கும், ‘அங்கிள்’னு கூப்பிடுவதற்கும் இடையிலானது.

twitter.com/mrithulaM

வாரத்துல ஒருநாளாவது நினைச்ச நேரத்துல தூங்கி, சுகப்படுற நேரத்துல எந்திரிச்சு, ஆசைப்பட்டதெல்லாம் வாங்கிச் சாப்பிடுற வாழ்க்கை, அடுத்த ஜென்மத்துலயாவது அமையணும்!

Malavika Mohanan: வெயிலில் நனைகிறேன்!
Malavika Mohanan: வெயிலில் நனைகிறேன்!

facebook.com/ RS Prabu

இப்போது வரும் பல சாதாரண மகிழுந்துகளின் உயர் variant-களில் மேலே திறக்கும்படியான கூரை வசதி (sun roof) இருக்கிறது. நிறைய பெற்றோர்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்ட நெரிசல் அதிகமான சாலைகளில் செல்லும்பொழுதுகூட சன்ரூஃப் வழியாக நின்றுகொண்டு வர அனுமதிக்கிறார்கள். குழந்தைகள் இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு ‘சன்ரூஃப் மீது நிற்க அனுமதித்தால்தான் சாப்பிடுவேன்’ என்று அடம் பிடிக்கவும் செய்வதாக சில பெற்றோர்களே தெரிவிக்கின்றனர்.

குழந்தைகள் எப்போதும் குழந்தைகளே. பார்ப்பதையெல்லாம் கேட்பார்கள், நச்சரிப்பார்கள்தான். நம்மால் ஒன்றை வாங்கித்தர முடிகிறது என்பதற்காக குழந்தைகள் கேட்கும் அனைத்தையும் நிறைவேற்றிக் கொடுத்துக்கொண்டே இருந்தால்தான் நிறைவான பெற்றோர்களாகவும், குழந்தை வளர்ப்பில் அக்கறையுடையவர்களாகவும் இருக்க முடியும் என்று பொருள் இல்லை.

குழந்தைகளை சன்ரூஃப் மேலே நிற்கவைத்துக் கடைவீதிகளில் மகிழுந்து ஓட்டிச் செல்கிறார்கள். அப்போது அந்தப் பெற்றோர்களின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு இருப்பதைப் பார்க்க முடியும். பலதரப்பட்ட வாகனங்கள் வெவ்வேறு வேகங்களில் செல்லும், ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு கிராமச் சாலை வந்து இணையும், லேசான பல வளைவுகள் கொண்ட, இருபுறமும் புளியமரங்கள் இருக்கும் சாலைகளில் 60 கிலோமீட்டர் வேகத்தில் சன்ரூஃப் மீது குழந்தைகளை நிற்கவைத்து ஓட்டி வருகிறார்கள். ஒரு சிறிய கல் தட்டினாலோ, நாய் குறுக்கே வந்து திரும்பி ஓடிவிட்டாலோ, பள்ளமோ, பள்ளத்துக்கு ஒட்டுப்போட்ட மேடு தென்பட்டாலோ லேசாக பிரேக்கை மிதித்தாலோ அல்லது ஸ்டியரிங்கை ஒரு சுண்டு சுண்டி அதைச் சமாளித்தாலோ போதும். சன்ரூஃப் மீது நிற்கும் குழந்தை நிச்சயமாகப் பறந்துசென்று விழுந்துவிடும்.

குழந்தைகள் ஆசைப்பட்டால் நமக்குப் பரிச்சயமான ஆள் இல்லாத கிராமச் சாலைகளில் அளவான வேகத்தில் சன்ரூஃப் மீது நின்றுவர அனுமதிக்கலாம். அதுவும் திருப்பங்கள் தெளிவாகத் தெரிந்த, புதர்கள் மறைத்திருக்காத சாலையாக இருக்க வேண்டும். புறவழிச்சாலைகளின் அணுகுச் சாலைகளில் மட்டும் (சர்வீஸ் ரோடு) வண்டிகள் வராத பட்சத்தில் சிறிது தூரம் குழந்தைகளை சன்ரூஃப்பில் நின்று வர அனுமதிக்கலாம். ஆனால் பைபாஸ் மீது ஏறிவிட்டால் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் தலையை நீட்டக்கூடாது.

மின்சாரத்தில் இயங்கும் இயந்திரங்களை குழந்தைகளை விட்டு இயக்க எந்த அளவு கவனம் எடுத்துக்கொள்வோமோ, அதே அளவுக்கு சன்ரூஃப் மீது குழந்தைகளை நிற்க வைக்கும்போதும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism