Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் அம்பேத்கர் சிலையை, ஜனவரி 26-ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்துவைத்தார்

இன்பாக்ஸ்

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் அம்பேத்கர் சிலையை, ஜனவரி 26-ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்துவைத்தார்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை டோலிவுட்டின் க்ரஷ் மாறிக்கொண்டே இருக்கிறது. ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, கீர்த்தி ஷெட்டி ஆகியோரை அடுத்தடுத்து தங்களுடைய படங்களில் வசப்படுத்திக்கொண்டது டோலிவுட். அந்த வரிசையில் சமீபத்திய ஹாட் ஸ்டார், சம்யுக்தா மேனன். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள சம்யுக்தா, ‘பீம்லா நாயக்' படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வாத்தி' என்ற தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படத்திலும் இவர்தான் நாயகி. மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் சம்யுக்தா மேனனை கமிட் செய்திருக்கிறார்கள். இவர் நடித்த ஒரு கன்னடப் படமும் வெளியாகவிருக்கிறது. பேன் இந்தியா நாயகி!

‘குருதி ஆட்டம்', ‘பொம்மை', ‘ஹாஸ்டல்', ‘ருத்ரன்', ‘யானை', ‘பத்து தல', ‘திருச்சிற்றம்பலம்' எனக் கிட்டத்தட்ட ஏழெட்டுப் படங்கள் பிரியா பவானிசங்கரின் நடிப்பில் வெளியாகக் காத்திருக்கின்றன. தவிர, ‘பூலோகம்' கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. அடுத்ததாக, விக்ரம் குமார் இயக்கத்தில் டோலிவுட் வெப் சீரிஸ் ஒன்றில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாகிறார் பிரியா. வெற்றிக்கொடி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

நிஜமாகவே ஐஸ் மழையில் நனைந்து திரும்பியிருக்கிறார் ஐஸ். கடந்த வருடம் தொடர்ந்து ஷூட்டிங் இருந்ததால் ஓய்வில்லாமல் ஓடிய ஐஸ்வர்யா ராஜேஷ், தன் நட்பு வட்டம், அண்ணன், அம்மா என குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்க முடியாமல்போனது. அந்தக் குறையை இந்த வருட ஆரம்பத்திலேயே தீர்த்து வைத்திருக்கிறார். யெஸ். குடும்பத்தினருடன் துபாய் போனவர், நெருங்கிய தோழி ஜனனி உட்பட சிலருடன் காஷ்மீரின் வெள்ளை மழையிலும் நனைந்து வந்திருக்கிறார். நாடோடிக் காற்று!

தன் பிறந்த நாளை ரஷ்யாவில் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். தெலுங்கில் விக்ரம்குமார் இயக்கத்தில் நாக சைதன்யா, ராஷிகண்ணா நடித்துவரும் ‘தேங்க்யூ' படத்திற்கு அவர் ஒளிப்பதிவு செய்துவருகிறார். அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் போர்ஷன் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுவருகிறது. கேக் வெட்டி யூனிட்டில் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்ததில், நெகிழ்கிறார் பி.சி.ராம். சர்வதேச பிறந்தநாள்!

கவிஞர் வைரமுத்து தொடர்ந்து ட்விட்டரில் நெற்றித்தீ என்ற பெயரில் தன் அனுபவங்களை மக்களுக்குப் பயன்படும் அறிவுரை வாசகங்களாக எழுதிவருகிறார். பலரால் அந்தச் செய்திகள் பின்தொடரப்படுகின்றன. தீ பரவட்டும்!

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘மண்டியிடுங்கள் தந்தையே' என்ற நாவலை டால்ஸ்டாயின் வாழ்க்கை மீதான சில பக்கங்களை முன்வைத்து எழுதியிருக்கிறார். இது ரஷ்ய அரசின் கவனத்திற்குப் போய், அவர்கள் சந்தோஷமடைந்து எஸ்.ராவை தங்கள் நாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள். ரஷ்யாவில் ராமகிருஷ்ணன்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

சமீபத்தில் அயலகத் தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட அறிமுகப் பாடல் ஒன்றை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு எழுதியுள்ளார். ‘தாயால் பிறந்தோம், தமிழால் வளர்ந்தோம், ஓயா உழைப்பால் உலகை அளந்தோம்' என்ற அந்தப் பாடல் அயலகத் தமிழர்களின் நலன் குறித்தும் அவர்களின் உழைப்பு குறித்தும் பேசுகிறது. தமிழால் வெல்வோம்!

குடியரசு தினத்தை மயிலாடுதுறை அருகிலுள்ள மறையூர் கிராம மக்கள், ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றி வைத்து வித்தியாசமாகக் கொண்டாடினர். அனைத்து வீட்டு வாசல்களிலும் மாலை 6 மணிக்கு ஒரே நேரத்தில் தீபங்கள் ஏற்றியதால், ஊரே அகல் விளக்குகளால் நிறைந்து ஒளிமயமாய்க் காட்சி தந்தது. குடியரசு தின நாளை நினைவுபடுத்தும் விதமாக அன்று காலை ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் மரக்கன்றுகளை நட்டனர். இந்த தேசபக்தி கிராமம், மயிலாடுதுறை மாவட்டத்திலேயே கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் முழுமை பெற்றுள்ள கிராமம் என்பது குறிப்பிடத்தக்கது. மேன்மேலும் மிளிரட்டும்!

பெரிதாகக் கதை இல்லாமல், பரபர கார் சேஸிங் காட்சிகளை வைத்தே ஹிட் அடித்து அடுத்தடுத்த பாகங்களை எடுத்துவருகிறது ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் குழுமம். ஏற்கெனவே F9 படத்தை WWE புகழ் டிவைன் ஜான்சன் புறக்கணித்த நிலையில், அடுத்த பாகத்துக்காவது வந்து சேரும்படி அழைப்பு விடுத்திருக்கிறார்கள். முடியவே முடியாது என டிவைன் ஜான்சன் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும், அதனால் அடுத்த பாகத்தை மறுத்துவிட்டதாகவும் தகவல். தற்போது கேம் ஆஃப் த்ரோன்ஸ், அக்வாமேன் போன்றவற்றில் நடித்த ஜேசன் மோமோவைத் தேர்வு செய்திருக்கிறது படக்குழு. 2023-ம் ஆண்டு மே மாதம் வெளியாகவிருக்கிறது இந்தப் படம். கார் காலம்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் தமிழ்நாடு வனத் துறையில் வனக்காப்பாளராக, திண்டுக்கல் மாவட்டம் கோட்டையூர் வனப்பகுதியில் பணியாற்றுகிறார். இவரின் கணவர் சத்தியேந்திரன் டிரைவராக இருக்கிறார். தற்போது விஜயலட்சுமி 9 மாதக் கர்ப்பிணியாக உள்ளார். குடும்பத்தைப் பிரிந்து வேறு மாவட்டத்தில் தனியாக வசித்து, சவாலான பணியைச் செய்துவரும் விஜயலட்சுமிக்கு, நத்தம் வனச்சரக அலுவலகத்தில் வனச்சரகர் பாஸ்கரன் தலைமையில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக வளைகாப்பு நிகழ்வில் ஏழு வகையான உணவுகள் வழங்கப்படும். ஆனால், விஜயலட்சுமிக்கு பிரியாணி பிடிக்கும் என்பதால், சிக்கன் பிரியாணி, முட்டை கிரேவி வழங்கியுள்ளனர். வனத்துறை ஊழியர்கள் விஜயலட்சுமிக்கு ஆரோக்கியமாகக் குழந்தை பிறக்க வேண்டும் என சந்தனம் தடவி, வளையல் இட்டு வாழ்த்தினர். அன்பில் நெகிழ்ந்தது, விஜயலட்சுமி மட்டுமல்ல... நாமும்தான்!

ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில் அம்பேத்கர் சிலையை, ஜனவரி 26-ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் திறந்துவைத்தார். ஈரோட்டில் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட வேண்டும் என 30-க்கும் மேற்பட்ட அமைப்புகள் பல காலமாகப் போராடி இந்தச் சிலையைப் பெற்றுள்ளனர். இதுதான் ஈரோடு மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள முதல் அம்பேத்கர் சிலை. ஏற்கெனவே தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் ஈரோடு பன்னீர் செல்வம் பூங்காவில்தான் அண்ணா, பெரியார், கலைஞர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவர்களின் சிலையும் ஒரே மேடையில் அமைக்கப்பட்டுள்ளன. இப்போது அதில் ஐந்தாவதாக அம்பேத்கர் சிலையும் இடம் பெற்றிருக்கிறது. ஒரே மேடையில் ஐந்து தலைவர்களின் சிலைகளும் அருகருகே அமைந்திருப்பது தமிழகத்தில் எங்கும் இல்லாதது. மகிழ்ச்சி!

நாமக்கல் மாவட்டம் குப்பம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி - வசந்தா தம்பதியினரின் 13 வயது மகன், வர்ஷாந்த். சமீபத்தில் இவர் இரு சக்கர வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்தார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் மண்டையைத் திறந்து சிக்கலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ், இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, சிறுவனின் உயிர் காக்கப்பட்டது. இரண்டு லட்ச ரூபாய் செலவாகியிருக்க வேண்டிய சிகிச்சை, இந்தத் திட்டத்தின் மூலம் வர்ஷாந்துக்கு இலவசமாகச் செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தாரிடம், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் போனில் பேசி நலம் விசாரித்து, தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்வதாகவும் உறுதியளித்தார். அதோடு, அமைச்சர் மதிவேந்தனும், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமாரும், வர்ஷாந்த் மருத்துவச் செலவுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் அளித்துள்ளனர். அறம் தலை காக்கும்!

தமிழகத்தில் சென்னை ராஜ்பவனுக்கு அடுத்தபடியாக, ஆளுநரின் அதிகாரபூர்வ மாளிகையாக ஊட்டி ராஜ்பவன் விளங்கிவருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அரசுத் தாவரவியல் பூங்காவுக்குள் அமைந்திருக்கும் இந்த ராஜ்பவன், தற்போதைய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியின் மனம் கவர்ந்த மாளிகையாக மாறியிருக்கிறது. பிப்ரவரியில் ஆளுநரின் இல்லத் திருமண விழா, இந்த மாளிகையில் 10 நாள்கள் நடைபெறவிருக்கிறது. எனவே, வி.வி.ஐ.பி-களின் வருகையும் உறுதியாகியிருக்கிறது. திருமண விழாவுக்காக மாளிகையைப் புதுப்பிக்கும் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. மலர் அலங்காரத்தில் நிபுணர்களான நீலகிரி தோட்டக் கலைத்துறையை மாளிகையில் மலர் அலங்காரம் செய்ய உத்தரவிட்டிருக்கிறார்கள். அரசு விழாவைப் போல நடைபெறவிருக்கும் திருமண விழாவால், ஆளுநர் மாளிகை அமர்க்களப்பட்டுவருகிறது. கலர்புல் கல்யாணம்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர், தன் தந்தையின் சட்டைப்பையில் இருந்து ரூ.3,000 திருடிவிட்டார். இது தெரிந்த பெற்றோர் கண்டிக்க, மாணவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார். தற்போது அச்சிறுவனை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த நிலையில், ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள பசுவந்தனையைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் ஒருவர், தன் தந்தை வங்கியில் அடகு வைத்திருந்த நகைக்கு வட்டி கட்டுவதற்காக பீரோவில் வைத்திருந்த ரூ.4,000 பணத்தை எடுத்து அருகிலுள்ள மொபைல் ரீ சார்ஜ் கடையில் கொடுத்து ‘ப்ரீ ஃபயர் கேம்’ விளையாட ரீசார்ஜ் செய்யச் சொல்லியிருக்கிறான். கடைக்காரர் அந்த மாணவரை அருகில் உட்கார வைத்து, விவசாய வேலைகளில் அவரின் அப்பா படும் கஷ்டத்தை எடுத்துச் சொல்லி, அந்த மாணவனை வீட்டிற்கு அனுப்பிவைத்தார். தப்பை உணர்ந்த அச்சிறுவன், ‘ப்ரீ ஃபயர் கேம் வேண்டாம். அதுக்காக யாரும் பணத்தை வீட்ல இருந்து திருட வேண்டாம். அந்தப் பணத்தை அம்மா, அப்பா சம்பாதிக்க எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என ஒருமுறை யோசித்துப் பாருங்க’ என வீடியோவாகப் பேசியுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. மாற்றம் நல்லது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism