Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லிகர்' என்ற படத்தை முடித்திருக்கிறார், விஜய் தேவரகொண்டா. இதைத் தொடர்ந்து, இதே கூட்டணியில் இன்னொரு படமும் உருவாகவிருக்கிறது.

இன்பாக்ஸ்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லிகர்' என்ற படத்தை முடித்திருக்கிறார், விஜய் தேவரகொண்டா. இதைத் தொடர்ந்து, இதே கூட்டணியில் இன்னொரு படமும் உருவாகவிருக்கிறது.

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

மலையாளத்தில் சில படங்கள், தமிழில் ‘என்னை அறிந்தால்', ‘விஸ்வாசம்' ஆகியவற்றில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன், சமீபமாக நிறைய போட்டோஷூட் நடத்தி அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். இப்போது, நாகார்ஜுனா நடிக்கும் ‘தி கோஸ்ட்' திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் டோலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். அடிப்பொலி..!

இன்பாக்ஸ்

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய இரும்பு உருக்கும் தொழிற்கூடம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. வெடால் அருகே உள்ள மாந்தாங்கல் எனும் கிராமத்தில் உள்ள இதனை திருவண்ணாமலை மரபுசார் அமைப்பினர் கண்டறிந்துள்ளனர். இரும்பு உருக்கும் உலைகளை எரியூட்டுவதற்காக துருத்திபோலப் பயன்படுத்திய சுடுமண் குழாய்த் துண்டுகள், பானை ஓடுகள் போன்றவை இங்கு கிடைத்தன. இரும்பினால் ஆன ஆயுதங்களை இங்கு செய்திருக்கலாம் என்கின்றனர். இதே ஊரில் முன்பு கண்டெடுக்கப்பட்ட ஈமப்பேழை ஒன்று திருவண்ணாமலை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஓல்டு இஸ் கோல்டு!

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ இவர்களின் நட்பு நாளுக்கு நாள் நெருக்கமாகிவருகிறது. அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார்கள். சமயங்களில் இந்தச் சந்திப்புகள், அடையாறில் உள்ள விஜய்யின் அலுவலகத்தில் லன்ச் சகிதம் நடக்கிறதாம். மெர்சல் மாஸ்டர்ஸ்!

சிரஞ்சீவியின் `காட்பாதர்' படத்தில் சல்மான்கான் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். சல்மான் தொடர்பான காட்சிகளை கடந்த ஜனவரி மாதமே படமாக்குவதாக இருந்தது. ஆனால் சிரஞ்சீவிக்கு அப்போது கொரோனாத் தொற்று ஏற்பட்டதால் முடியாமல்போய்விட்டது. மீண்டும் இப்போது படப்பிடிப்பு தொடங்கியபோது, சல்மான்கான் ஹைதராபாத் வரமுடியாத நிலை. இதனால் மும்பையிலேயே சல்மான்கான் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்காக மும்பை வந்த சிரஞ்சீவியை சல்மான்கான் தன் பண்ணை வீட்டில் தங்கவைத்து கவனித்து அனுப்பினார். விருந்தோம்பல் அழகு!

இன்பாக்ஸ்

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ‘லிகர்' என்ற படத்தை முடித்திருக்கிறார், விஜய் தேவரகொண்டா. இதைத் தொடர்ந்து, இதே கூட்டணியில் இன்னொரு படமும் உருவாகவிருக்கிறது. தவிர, சமந்தாவுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘மகாநடி' படத்தில் இருவரும் இணைந்தனர். சமந்தா வசமிருக்கும் படங்களின் வரிசையில் இந்தப் படமும் இணைந்திருக்கிறது. ரவுடி - சம்மு..!

இன்பாக்ஸ்

மதுரையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அமெரிக்கன் கல்லூரிக்கு வயது 141. கல்லூரியில் பழைய பொருள்களைப் போட்டு வைத்திருந்த ஜேம்ஸ் ஹால் எனும் பழைய ஆய்வுக்கூடத்தை சுத்தம் செய்தபோது, அதன் உள்ளே குகை போல் ஒரு பாதை செல்வதைப் பார்த்துள்ளனர். அது 60 அடி தூரம் வரை சென்று வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தச் சுரங்க வழி பற்றி ஆய்வு செய்துவருகின்றனர். முதலாம் உலகப்போர் நடந்தபோது பாதுகாப்புக்காக இந்தப் பதுங்குகுழி உருவாக்கப்பட்டது என்கிறார்கள். உக்ரைன் போர் நடக்கும் இச்சூழலில் இந்தப் பதுங்குகுழி, மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிசயங்கள் புதைந்திருக்கும் மண்!

இன்பாக்ஸ்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். பொது தரிசனம், கட்டண தரிசனம் எதுவாயினும், நீண்ட வரிசையில் காத்திருந்து உள்ளே போனாலும் நிம்மதியாக சுவாமியைத் தரிசிக்க முடியவில்லை என்ற பக்தர்களின் மனக்குமுறல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த நிலையில், ‘பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திட கட்டண தரிசனத்தை ரத்து செய்ய வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ரூ.20, ரூ.250 கட்டண தரிசன வரிசை ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் ‘15 நாள்கள் மட்டுமே இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும்’ என, இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இதுக்கு நெல்லு மூட்டை குடோன்லயே இருக்கலாமே!

இன்பாக்ஸ்

தஞ்சாவூர் அருகே உள்ள தோழகிரிப்பட்டி கிராமத்தில் வகுப்பறையுடன் கூடிய ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் மற்றும் தொடக்கப் பள்ளி நூலகம் இரண்டையும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்துள்ளார். தமிழகத்திலேயே ஊரகப்பகுதியில் முதன்முறையாக உருவாகியுள்ள ஸ்மார்ட் அங்கன்வாடி மையம் இது. தனியார் நர்சரிப் பள்ளிகள் போன்றே குழந்தைகளின் செயல்வழிக் கற்றல் திறனை அதிகரிக்க தேவையான பொம்மைகள், கற்றல் கருவிகள் இங்கு ஏராளமாக உள்ளன. ப்ரொஜக்டர் மூலம் கதைகள், பாட்டுகள், குழந்தைகளின் உச்சரிப்பு மேம்படுத்தும் பயிற்சிகள் போன்றவை ஒளிபரப்பப்படுகின்றன. தேவையான மாற்றம்!

இன்பாக்ஸ்

நெல்லை மாவட்டம் களக்காடு, சேரன்மாதேவி, முனைஞ்சிபட்டி, ஏர்வாடி, கல்லணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பாக இலவசமாக ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களில் மொத்தம் 21 மாணவ, மாணவிகள் சென்னை ஐ.ஐ.டி, அண்ணா பல்கலைக்கழகம், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றைச் சுற்றிப் பார்க்க தூத்துக்குடியிலிருந்து விமானத்தில் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு இலவசப் பயிற்சி அளிப்பதுடன், அங்கு படிக்க நினைக்கும் எளிய குடும்ப மாணவர்களை அதே வளாகத்துக்கு விமானத்தில் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் செயல் மாணவர்களுக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. நன்மை பயக்கட்டும்!

இன்பாக்ஸ்

அனுஷ்கா நடித்த ‘ருத்ரமாதேவி' படத்தை இயக்கிய குணசேகர், அடுத்து சமந்தாவை வைத்து ‘சாகுந்தலம்' படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குகிறார் `ரோஜா’ பட மதுபாலா. படத்தில் மேனகாவாக வரும் அவர், இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளை அணிந்து நடித்தார். அவரது போர்ஷன் ஷூட் செய்து முடிக்கும் வரை, நகையைப் பாதுகாக்கவே தனி டீம் போட்டிருந்தார்களாம். கெத்துதானே?

சினிமாவில் அறிமுகமான காலம் முதல் தற்போதுவரை நவீன நாடகம், சினிமா பற்றி அவ்வப்போது எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிடும் ஆர்வத்தில் இருக்கிறார் நடிகர் நாசர். விரைவில் வாசகர்கள் படிக்கலாம். வெயிட்டிங்!

தன் வாழ்க்கைக் கதையை நெல்லை வட்டார மொழியில் ஒரு நாவலாக உற்சாகத்துடன் எழுதிவருகிறார் எழுத்தாளர் வண்ணநிலவன். அதன் பெயர் ‘வாக்குமூலம்.' சில மாதங்களுக்குள் அந்த நாவல் வெளிவர இருக்கிறது. மண்வாசனை!

இன்பாக்ஸ்

கரிசல் இலக்கியத் தந்தை மறைந்த கி.ராஜநாராயணன் படைப்புலகம் மற்றும் அவருடைய நட்பு பற்றி, சமகாலப் படைப்பாளிகளின் கட்டுரைகளைத் தொகுத்து நூலாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். மரபு உடைக்கும் படைப்புகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism