Published:Updated:

இன்பாக்ஸ்

தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா

கூட்டம் நிறைந்த ஊட்டி மெயின் பஸ் ஸ்டாண்டில் மாலை நேரத்தில் ஊட்டி அரசுப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்களான சஞ்சய் குமார் மற்றும் சூர்யா இருவருக்கும் காகிதத்தில் சுற்றப்பட்ட பொட்டலம்‌ ஒன்று கிடைத்திருக்கிறது.

இன்பாக்ஸ்

கூட்டம் நிறைந்த ஊட்டி மெயின் பஸ் ஸ்டாண்டில் மாலை நேரத்தில் ஊட்டி அரசுப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்களான சஞ்சய் குமார் மற்றும் சூர்யா இருவருக்கும் காகிதத்தில் சுற்றப்பட்ட பொட்டலம்‌ ஒன்று கிடைத்திருக்கிறது.

Published:Updated:
தமன்னா
பிரீமியம் ஸ்டோரி
தமன்னா
இன்பாக்ஸ்

கரூர் - திண்டுக்கல் எல்லையில் உள்ளது தொப்பையசாமி மலை. 3,000 அடி உயரம் கொண்ட இந்த மலை உச்சியில், தொப்பையசாமி கோயில் உள்ளது. கோயில் அமைந்துள்ள இடம், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. கோயிலுக்கு எதிரே உள்ள தீப கம்பம், நந்தி உள்ளிட்டவை அமைந்துள்ள இடம், கரூர் மாவட்ட எல்லையில் உள்ளது. நடுவில் கற்களை வைத்து எல்லை பிரித்திருக்கிறார்கள். 3,000 அடி உயரத்தில் ஒரு பாறை மீது, திண்டுக்கல், கரூர் என்று வழிகாட்டும்விதமாக எழுதி வைத்திருப்பது சுவாரசியமாக உள்ளது. ஆன்மிக அன்பர்களும் மலையேற்ற ஆர்வம் உள்ளவர்களும் இந்தக் கோயிலுக்குச் சென்று வருகிறார்கள். `மலை'க்க வைக்கும் அனுபவம்!

இன்பாக்ஸ்

கஸ்தூரிராஜா `பாமர இலக்கியம்' என்ற நூலை எழுதியுள்ளார். உலக புத்தக நாளை முன்னிட்டு இந்த நூல் அறிமுக விழா, தேனி மாவட்டத்தில் அவரது சொந்த ஊரான மல்லிங்காபுரத்தில் நடைபெற்றது. நாட்டுக்காக உழைத்த தியாகி தனக்கு வழங்கப்பட்ட நிலத்தை இழந்து கடைசியில் உயிரிழப்பதாக எழுதப்பட்டிருக்கும் இந்நூலில், தென்தமிழகத்தின் பாரம்பரியங்களையும், சடங்குகளையும் சுவாரசியமாக எழுதியுள்ளார் கஸ்தூரிராஜா. மண்ணின் மொழி!

இன்பாக்ஸ்

திருச்சூர் பூரம் திருவிழா, கேரளாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் காரணமாக 2020-ம் ஆண்டு பூரம் நடக்கவில்லை. கடந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. இயல்புநிலை திரும்பியிருப்பதால் இந்த முறை பழைய உற்சாகத்துடன் பூரம் திருவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 6 கிராம மக்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் யானைகளுக்கான ஏலம் முடிந்துவிட்டது. எர்ணாகுளம் சிவக்குமார் என்கிற யானைதான் இரண்டாவது முறையாக, அனைத்து யானைகளுக்கும் தலைமை தாங்க உள்ளது. இப்போதே திருச்சூர் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. கலர்புல் திருவிழா!

இன்பாக்ஸ்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன்கோட்டையில் நகைத் திருட்டு நடந்தது. காவல் ஆய்வாளர் சேகர் வந்து விசாரணை நடத்தினார். `வெளிநபர் வந்து திருட வாய்ப்பில்லை, அருகே இருப்பவர்கள்தான் திருடியிருக்கக்கூடும்' எனக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த அனைவரிடமும் சாணி உருண்டைகளைக் கொடுத்து அண்டாவில் போட வைத்தார். நகையை எடுத்தவர், சாணி உருண்டையில் வைத்து நகையைப் போட்டுவிட, 12 பவுன் நகையை சாமர்த்தியமாக மீட்டார். சேகர் சின்னமனூர் காவல் நிலையத்தில் 20 பேர் அமர்ந்து படிக்கும் அளவுக்கு ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட நூலகம் ஒன்றையும் அமைத்துள்ளார். கமல்ஹாசன் தொடங்கி உள்ளூர் மக்கள் வரை அவரது செயலைப் பாராட்டிவருகிறார்கள். காக்கியின் சிறப்பு!

இன்பாக்ஸ்

தமிழகத்திலேயே முதல்முறையாக, அரசின் தலையீடின்றி நேரடியாக கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக `தருவைகுளம் சூழல்சார் பல்லுயிர் பெருக்க சுற்றுலாக் கடற்கரைப் பூங்கா' செயல்படத் தொடங்கியுள்ளது. இது முழுக்கவே தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் கடற்கரை கிராம கமிட்டியினரால் நிர்வகிக்கப்படுகிறது. மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகப் பகுதியில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் புற்கள், கடற்குதிரை, சிங்கி இறால், மெல்லுடலிகள் உட்பட பல்வேறு வகை உயிரினங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் அடிப்பாகத்தில் கண்ணாடி இழை பொருத்தப்பட்ட படகுகளில் சவாரியும் தொடங்கப்பட்டுள்ளது. 2 கி.மீ தூரம் படகில் சென்று வர ரூ.200 கட்டணம். கடல் கண்காட்சி!

இன்பாக்ஸ்

கூட்டம் நிறைந்த ஊட்டி மெயின் பஸ் ஸ்டாண்டில் மாலை நேரத்தில் ஊட்டி அரசுப் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவர்களான சஞ்சய் குமார் மற்றும் சூர்யா இருவருக்கும் காகிதத்தில் சுற்றப்பட்ட பொட்டலம்‌ ஒன்று கிடைத்திருக்கிறது. அதைப் பிரித்துப் பார்த்தபோது அதில் 35,000 பணம் இருந்தது. இருவரும் அருகில் இருந்த போக்குவரத்து ஊழியர்களுக்கும் போலீஸாருக்கும் தகவல் சொல்லி, பணத்தை ஒப்படைத்தார்கள். பணத்தைப் பறிகொடுத்த லாரி டிரைவர் ஒருவர் அதைத் தேடி அலைவதைப் பார்த்து, அப்போதே அவரிடம் பணத்தை ஒப்படைத்தனர். அரசுப் பள்ளி மாணவர்களின் அட்டூழியம் என அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகிக் கவலையை ஏற்படுத்திவரும் நிலையில், இந்த மாணவர்களின் செயலைப் பலரும் கொண்டாடிவருகின்றனர். நல்வழியில் அடுத்தத் தலைமுறை!

இன்பாக்ஸ்

புதுச்சேரி நாவற்குளம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணன், சாலையில் இறந்துகிடக்கும் நாய், பூனை உள்ளிட்ட பிராணிகளை மீட்டு அவற்றை நல்லடக்கம் செய்துவருகிறார். சில வருடங்களுக்கு முன்பு தன் குழந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக்கு உயிரிழந்த பிராணிகளிடம் இருந்து பரவிய கிருமிகள்தான் காரணம் என்று மருத்துவர் சொன்னது முதல் இந்த சேவையைச் செய்து வருவதாகக் கூறும் சரவணன், இதுவரை 2,000-க்கும் மேற்பட்ட பிராணிகளை அடக்கம் செய்திருக்கிறார். கிருமிகள் பரவாதபடி 3 அடி ஆழத்தில் குழியைத் தோண்டி அதில் உப்பைக் கொட்டி பிராணிகளை அடக்கம் செய்து, மறக்காமல் மலர்களைத் தூவுகிறார். ``சாலைகளில் பிராணிகள் இறந்துகிடப்பதைப் பார்ப்பவர்கள் உடனே எனக்கு போன் செய்கிறார்கள். அதுதான் எனக்கான அங்கீகாரம்'' என்கிறார் சரவணன். இரக்கம் வழியும் இறுதி மரியாதை!

இன்பாக்ஸ்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள தவசியேந்தல்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் `மறதி அம்மன் கோயில்' திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, தவசியேந்தல்பட்டியில் பிறந்து வளர்ந்து, திருமணமாகி வெளியூர்களில் வசிக்கும் பெண்களை, தவசியேந்தல்பட்டிக்குத் திருமணமாகி வந்த புகுந்த வீட்டுப் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்று விருந்து படைக்கின்றனர். காலம் காலமாக நடைபெறும் இந்த நடைமுறையில் இந்த வருடம் தவசியேந்தல்பட்டி பிறந்த வீட்டுப் பெண்கள் அனைவரும் ஒரே மாதிரி புடவை அணிந்து சீர்வரிசைகளை எடுத்துவர, புகுந்த வீட்டுப் பெண்களும் ஒரே மாதிரியான சேலைகளை உடுத்தி ஆரத்தி எடுத்து அவர்களை உற்சாகமாக வரவேற்று விருந்து படைத்தனர். பல வீடுகளில் எதிரும் புதிருமாக இருக்கும் இவர்கள் இருதரப்பினரையும் ஒன்றிணைப்பதற்காக, ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வு, இன்றும் தொன்றுதொட்டு நடந்துகொண்டிருக்கிறது. இணைப்புத் திருவிழா!

இன்பாக்ஸ்

தமன்னா எந்த மொழிப் படத்தில் நடித்தாலும் டோலிவுட் எப்போதும் அவரைக் கொண்டாடத் தவறியதில்லை. தமன்னா தன்னுடைய ஃபேவரைட் என்று சிரஞ்சீவியே சொல்லியிருக்கிறார். `சைரா நரசிம்ம ரெட்டி' படத்தைத் தொடர்ந்து `வேதாளம்' ரீமேக்கான `போலா ஷங்கர்' படத்தில் அவருடன் நடித்துவருகிறார் தமன்னா. வெங்கடேஷ், வருண் தேஜ் ஆகியோருடன் இவர் நடித்த `F3' படம் வெளியாக ரெடி. இப்படத்தின் இயக்குநர் அனில் ரவிப்புடி அடுத்ததாக, பாலகிருஷ்ணாவை இயக்குகிறார். அந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க தமன்னாவிடம் பேசி வருகிறார்கள். இதுவரை பாலகிருஷ்ணாவும் தமன்னாவும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முரட்டுக் காம்போ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism