சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

‘நமன்' படத்தின் மலையாளப் பதிப்புக்காக அஞ்சலி நாயர் தனது கர்ப்ப காலம் முதலே நடித்துவருகிறார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக வரும் காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டன.

அழகிரியின் மகன் துரை தயாநிதியும் அஜித்தும் நண்பர்கள். அந்த நட்பில்தான் ‘மங்காத்தா'வைத் தயாரித்தார் துரை தயாநிதி. வெங்கட்பிரபுவைச் சந்திப்பவர்கள் பலரும், ‘‘எப்போது ‘மங்காத்தா 2' வரும்?'' எனக் கேட்பதுபோல துரை தயாநிதியிடமும் ‘‘இரண்டாவது பார்ட்டையும் நீங்களே தயாரிக்க வேண்டும்'' என்று கேட்டுவருகிறார்களாம். இப்போது அஜித்தும் துரை தயாநிதியும் மீண்டும் இணைய உள்ளனர். ஆனால் அது ‘மங்காத்தா 2' இல்லையாம். அநேகமாக விக்னேஷ் சிவன் படத்திற்குப் பிறகு அது நடக்கலாம் எனத் தகவல். பைக் ரெடி பண்ணி வைங்க!

இன்பாக்ஸ்

மகிழ்ச்சியில் திளைக்கிறது லைகா நிறுவனம். ‘பொன்னியின் செல்வன்' காட்டுத்தனமான வசூலை அள்ளிக்கொடுத்ததில் மணிரத்னத்தைவிட, லைகாவிற்குத்தான் சந்தோஷம் அதிகம். அந்த ஒரே படம் கொடுத்த லாபத்தில் லைகா, தன் சில்லறைக் கடன்களையெல்லாம் அடைத்துவிட்டது. ‘பொன்னியின் செல்வன் 2' வசூல் முழுக்கவே லாபத்தில் சேரும் என்கிறார்கள். தருகிறான் சோழன்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

‘நமன்' படத்தின் மலையாளப் பதிப்புக்காக அஞ்சலி நாயர் தனது கர்ப்ப காலம் முதலே நடித்துவருகிறார். அவர் நிறைமாத கர்ப்பிணியாக வரும் காட்சிகளும் ஷூட் செய்யப்பட்டன. கடந்த ஜூலையில் இரண்டாவது மகள் அத்விகாவைப் பெற்றெடுத்த அஞ்சலி நாயர், பிரசவம் முடிந்த இரண்டாவது மாதம் ஷூட்டிங் சென்று மற்ற காட்சிகளில் நடித்தார். இந்நிலையில், அதே படத்தில் தனது மூன்று மாதக் குழந்தைக்குப் பாலூட்டுவது போன்ற காட்சியில் நடித்ததுடன், அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிலும் பதிவேற்றம் செய்துள்ளார். ‘‘பிரசவத்திற்குப் பிறகு உடல் அழகு போய்விடும் என நினைக்கும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு அஞ்சலி நாயர் சிறந்த உதாரணம்'’ எனக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள். தாய்மைக்கு மரியாதை!

90ஸ் ஹீரோயின்களில் லைலா கம்பேக் ஆனது போல, அடுத்து சித்தாராவும் கோலிவுட் வருகிறார். இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஹிட் லிஸ்ட்' படத்தில் நடிக்கிறார் சித்தாரா. விக்ரமனின் முதல் படமான ‘புது வசந்தம்', கே.எஸ்.ரவிக்குமாரின் முதல் படமான ‘புரியாத புதிர்' இரண்டிலும் நடித்த சித்தாராவை ஹிட் சென்டிமென்ட்டிற்காக மகன் படத்திலும் நடிக்க வைத்திருக்கிறார் விக்ரமன். வெல்கம் பேக்!

இன்பாக்ஸ்

சமீபத்தில் மதுரையில் நடந்து முடிந்த புத்தகத் திருவிழாவின் அடையாளமாக தமுக்கம் அரங்கத்தின் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்ட, தொல்காப்பியம் முதல் குண்டலகேசி வரையிலான சங்க நூல்களின் பிரமாண்ட வடிவமைப்பு மக்களை ரொம்பவும் கவர்ந்தது. அங்கு நின்று பலரும் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். விழா முடிந்த பின்பு அதை அகற்ற வேண்டாம் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் இலக்கியவாதிகளும் மக்களும் கேட்டுக்கொண்டதால், அந்த வடிவமைப்பு அப்படியே தொடர்கிறது. தற்போது மதுரை மக்கள் மட்டுமன்றி, வெளியூர் மக்களும் அங்கே சென்று செல்ஃபி எடுப்பதால் அது பிக்னிக் ஸ்பாட்டாக மாறிவருகிறது. சங்க செல்ஃபி!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

மம்மூட்டியும் - ஜோதிகாவும் ‘காதல்' படத்தில் ஜோடி சேர்கின்றனர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார் ஜோதிகா. ‘நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தைத் தொடர்ந்து இதையும் மம்மூட்டி கம்பெனி தயாரிக்கிறது. இயக்குநர் ஜியோ பேபி சொன்ன கதையைக் கேட்டு உற்சாகமான மம்மூட்டி, கதாநாயகியாக ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரை செய்தாராம். ஜோரான ஜோடி!

இன்பாக்ஸ்

கே.ஜி.எஃப்-2 படத்தைத் தொடர்ந்து துருவ் சர்ஜா நடிக்கும் ‘கே.டி- தி டெவில்' படத்திலும் நடிக்கிறார் சஞ்சய் தத். கன்னடத் திரையுலகின் அடுத்த பேன் இந்தியா முயற்சி இது. ‘‘இன்னும் நிறைய தென்னிந்தியப் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். தென்னிந்தியப் படங்களில் ஹீரோயிசம், லவ், எனர்ஜி, சினிமா தாகம் எல்லாமே நன்கு வெளிப்படுகின்றன. பாலிவுட் இதைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்'' என்கிறார் சஞ்சய் தத். அதீரா உண்மையைச் சொல்றார்!

திருச்சி மாநகரில் திரும்பிய இடங்களிலெல்லாம் சகட்டுமேனிக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு கசமுசாவெனக் கிடக்கிறது. இதைத் தடுப்பதற்காக, தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் ‘பொது சுவரொட்டிப் பலகை' என்னும் திட்டத்தை அறிமுகம் செய்கிறது திருச்சி மாநகராட்சி. நகர் முழுக்க மொத்தம் 25 இடங்களில் இந்தப் பொது சுவரொட்டிப் பலகையை வைக்க இருக்கின்றனர். இங்கு போஸ்டர்களை ஒட்டலாம். இதைத் தவிர மற்ற பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஐடியா நல்லாத்தான் இருக்கு!

இன்பாக்ஸ்

திருச்சி கே.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணியாற்றிய சுமதி என்ற பெண் காவலர், புற்றுநோய்க்கு 4 ஆண்டுகளாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சமீபத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், சுமதியுடன் 1997-ம் ஆண்டு பேட்ச்சில் வேலைக்குச் சேர்ந்த காவலர்கள் 2,572 பேர் ஒன்று சேர்ந்து பணத்தைப் போட்டு 13,02,500 ரூபாய் திரட்டினர். அந்தத் தொகையை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் முன்னிலையில், சுமதியின் கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு வழங்கினர். நிதி வழங்கிய சுமதியின் சக பேட்ச் போலீஸாரை பாராட்டிய காவல் ஆணையர் கார்த்திகேயன், ‘‘உங்களில் யாருக்காவது பிரச்னைன்னா இப்படி ஒன்று சேர்ந்து தொடர்ந்து உதவி செய்யுங்கள்!’' என நெகிழ்ந்து சொன்னார். காக்கிக்குள் ஈரம்!

இன்பாக்ஸ்

35 ஆண்டுகள் மகாராஷ்டிராவில் போலீஸ் கமிஷனர், இணை கமிஷனர், மாநில டிஜிபி என உயர் பதவிகளை வகித்தவர் பொள்ளாச்சியைச் சேர்ந்த டி.சிவானந்தன் ஐ.பி.எஸ். ஓய்வு பெற்ற பிறகு ‘ரொட்டி வங்கி' என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, மும்பையில் ஏழைகளின் பசியை போக்கி வருகிறார். ‘‘2018-ம் ஆண்டு இதைத் தொடங்கினேன். மும்பையில் தாராவி, மான்கூர்டு, குர்லா மற்றும் மெட்ரோபாலிடன் பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 11 வாகனங்களில் சாப்பாடு எடுத்து சென்று நேரடியாக சப்ளை செய்கிறோம். எங்களுக்கு போன் செய்து யார் சாப்பாடு கேட்டாலும் ஓடோடிச் சென்று கொடுத்து வருகிறோம். இப்போது தினமும் 11 ஆயிரம் பேருக்கு இலவசமாக சாப்பாடு வழங்குகிறோம். இதற்காக தினமும் 4.50 லட்சம் ரூபாய் செலவு செய்கிறோம். சப்பாத்தி தயாரிக்க மெஷின் வாங்கி இருக்கிறோம். எங்கள் சேவையை நாக்பூர், ஐதராபாத், கோயம்புத்தூர், சென்னை என விரிவுபடுத்த இருக்கிறோம்'' என்கிறார் சிவானந்தன். ரொட்டி வங்கியின் கிளைகள் விரியட்டும்!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்

பண்டிகைகள் என்றாலே 90ஸ் கிட்ஸ் நினைவுக்கு வருவது வாழ்த்து அட்டைகள்தான். ஒரு வாரம் முன்பே வீட்டு வாசலில் போஸ்ட்மேனை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் உண்டு. தற்போது, செல்போன் மூலமாக வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி லெனின், ஒவ்வொரு வருடமும் வாழ்த்து அட்டைகள் அனுப்பத் தவறுவதே இல்லை. அந்த நண்பர்களின் குடும்ப புகைப்படங்களை முன்னதாகவே வாங்கிக்கொள்ளும் லெனின், அதைத் தன் கவிதையுடன் சேர்த்து வாழ்த்து அட்டை போல வடிவமைத்து, தபால் மூலம் அனுப்பி நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார். ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்களுக்கு இவரின் வாழ்த்துச் செய்தி கிடைத்துவிடுகிறது. கொடுத்து வைத்தவர்கள்!