Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

அறம்னா என்ன விலைன்னு கேட்டாலும் கேட்பாங்க!

இன்பாக்ஸ்

அறம்னா என்ன விலைன்னு கேட்டாலும் கேட்பாங்க!

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

ஞ்சிதா ஷெட்டி நடித்த ‘பார்ட்டி’, ‘பல்லு படாம பார்த்துக்கோ’, ‘தேவதாஸ் பிரதர்ஸ்’ ஆகிய படங்கள் இன்னும் திரைக்கு வராமல் இருக்கின்றன. தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ‘காதலைத் தேடி நித்யானந்தா’ படத்திலும் பெயரிடப்படாத மற்றொரு படத்திலும் நடித்துவருகிறார். தவிர, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலிருந்தும் சஞ்சிதாவுக்கு வாய்ப்புகள் வருகின்றன. ஆல்ரவுண்டர்!

இன்பாக்ஸ்

தேர்தல் வாக்குறுதிகளுக்கும் அடிப்படைத் தேவைகளுக்குமான வித்தியாசம்கூடப் புரியாத நபர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை மீண்டும் பீகாரில் பா.ஜ.க நிரூபித்திருக்கிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றால், பீகார் மக்களுக்கு இலவசமாக கொரோனாத் தடுப்பு மருந்து கொடுக்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருக்கிறார் நிர்மலா சீதாராமன். அப்படியெனில் மற்ற மாநிலத்து மக்களின் நிலைமை, அவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசிகள் இலவசம் கிடையாதா என இயல்பான கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள பா.ஜ.க தொழில்நுட்பக் குழு தலைவர் அமித் மால்வியா, “மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு குறிப்பிட்ட விலையில் இந்த மருந்துகளைக் கொடுக்கும். அதை இலவசமாக மக்களுக்குக் கொடுக்க வேண்டுமா அல்லது பணம் வசூலிக்க வேண்டுமா என்பது மாநிலங்களின் முடிவு’’ எனத் தெரிவித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடனும் இதே வாக்குறுதியை அறிவித்திருக்கிறார் என்பதுதான் வேடிக்கையானது. `ஓட்டு போட்டால் உயிர் வாழத் தேவையான தடுப்பு மருந்தைக் கொடுப்பேன்’ என அறிவிப்பது அறமற்றது என்கிறார்கள் விமர்சகர்கள். அறம்னா என்ன விலைன்னு கேட்டாலும் கேட்பாங்க!

இன்பாக்ஸ்

திரையரங்குகள் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுவிட்டாலும், தமிழகத்தில் இன்னும் அதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல், திரையரங்குகளுக்கு தற்போதைய சூழலில் கூட்டம் வருவது கடினம் என்பதால், எடுத்து முடிக்கப்பட்ட பல படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருக்கின்றன. அந்த வரிசையில் தீபாவளி ரிலீஸாக அக்‌ஷய் குமார் நடிப்பில் லக்‌ஷ்மி பாம் படத்துடன் போட்டி போடவிருக்கிறது ஆர் ஜே பாலாஜியின் ‘மூக்குத்தி அம்மன்.’ சூர்யா நடிப்பில் வெளியாகவிருந்த ‘சூரரைப் போற்று’ திரைப்படம் சில அனுமதி பிரச்னைகளால் சொன்ன தேதிக்கு வெளிவரமுடியாத சூழல் உருவாகியிருக்கிறது. ஆக, இந்த தீபாவளிக்கு சாமிக்கும் பேய்க்கும் சண்டை!

இன்பாக்ஸ்

`வீழ்வதுபோல் கொஞ்சம் விழுவேன் எதிரிகள் சுகம் காண’ என கொரோனா மக்களிடையே சீசன் 2 போர் நடத்திவருகிறது. ஜூலை மாதத்தில்தான் அமெரிக்காவில் 70,000 பேர் பாதிக்கப்பட்டனர். அதற்குப் பின்னர் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்துவந்தது. தற்போது மீண்டும் மூன்று மாதங்கள் கழித்து ஒரே நாளில் 80,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஐரோப்பியக் கண்டத்தில் இதே நிலைதான். சமூக இடைவெளியும், மாஸ்க் அணிவதும்தான் பாதிப்பைச் சற்றுக் குறைக்கும் என்கிறது உலக சுகாதார மையம். இதுக்கு எப்ப சார் எண்டு?

இன்பாக்ஸ்

டென்மார்க் மிருகக்காட்சிசாலையில் பென்குயின்கள் செய்யும் சேட்டைதான் தற்போதைய வைரல். தன்பால் ஈர்ப்பாளர்கள் என்பவர்களைப் பற்றி இன்னும் மனிதர்களே சரியாகப் புரிந்துகொள்ளாத சூழலில், விலங்குகளில் இந்தக் குணம் எப்போதும் வெளிப்படையாகவே இருந்துவருகிறது. அதிலும் பென்குயின்களில் இவை மிகவும் சாதாரணம். ஆதரவற்ற முட்டைகளை எடுத்து வளர்த்து சிறப்பான பெற்றோர்களாகத் தங்களை முன்னிறுத்துவதில் இத்தகைய பென்குயின்களுக்கு அலாதி பிரியம். ஆனால், இந்த மிருகக் காட்சி சாலையில் ஆண் தன்பால் ஈர்ப்பாளரான பெண்குயின்கள், தனியாக இருந்த ஒரு பென்குயின் குஞ்சைக் கடத்திவந்து சாமர்த்தியமாகத் தங்கள் காலுக்கு அடியில் மறைத்து வைத்திருக்கின்றன. உண்மையான தாய் தந்தையர் குஞ்சைத் தேடி அலைய, சந்தேகப்பட்ட நிர்வாகம் மீண்டும் அந்தப் பென்குயினை மீட்டு ஒப்படைத்திருக்கிறார்கள். திருட்டுப் பென்குயின்களா!

இன்பாக்ஸ்

சீரியல் கில்லர்களைப் பேட்டி எடுத்து, அவர்களின் மனநிலை என்னவாக இருந்தது, கொலைகளின் பேட்டர்ன் என்னவாக இருந்தது என அவர்களை உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தி FBI-ல் ஒரு புதிய துறையை உருவாக்கும் வேலையைச் செய்த இரண்டு அதிகாரிகள் பற்றிய உண்மைக்கதை ‘மைண்ட்ஹன்ட்டர்.’ நெட்ப்ளிக்ஸில் தொடராக வந்த இந்த வெப் சீரிஸ், இரண்டு சீஸன்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீஸனுக்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க, நிர்வாக தயாரிப்பாளர்களில் ஒருவரும் சில பாகங்களின் இயக்குநருமான டேவிட் பின்ச்சர், இந்தத் தொடருக்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைவு, அதற்காக இவ்வளவு செலவு செய்து இந்தத் தொடரை எடுக்க முடியாது என அறிவித்திருக்கிறார். 2020 தூக்கி வளர்த்த துயரங்களின் பட்டியலில் மைண்ட் ஹன்ட்டரையும் ரசிகர்கள் சேர்த்திருக்கிறார்கள். அப்ப ஹிட் இல்லியா?!

இன்பாக்ஸ்

கொரோனாச் சூழல் எப்போது மாறும் எனத் தெரியாததால், பிரபல இயக்குநர்கள் அடுத்தடுத்து ஸ்டிரீமிங் தளங்களுக்குப் படங்கள் இயக்கித் தர முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி வெங்கட் பிரபு, மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு தளத்துக்கு வெப் சீரிஸ் இயக்கித்தர பேச்சுவார்த்தை நடத்துகிறாராம். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையப்படுத்தி 1960களில் நிகழ்ந்த சம்பவங்களை வைத்து இயக்குநர் ராம் ஒரு வெப் சீரிஸ் இயக்க முடிவு செய்திருக்கிறார். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்துவருகின்றன. அதேபோல், நடிகர்களும் இப்போது முழுக்க ஸ்டிரீமிங் தளங்களில்தான் நடித்துவருகிறார்கள். சத்யராஜ் சீதா நடிப்பில் ஒரு தொடர், காஜல் அகர்வால் நடிக்கும் ஒரு ஹாரர் தொடர், தமன்னா நடிக்கும் க்ரைம் தொடர், வாணி போஜன் நடிக்கும் காமெடி தொடர் என வெப் சீரிஸ் வரிசை கட்டி வெளியாகக் காத்திருக்கின்றன. ஓ.டி.டியே வாழ்க்கை

இன்பாக்ஸ்

`ராக்கி’ பட இயக்குநர் அருண் மாதேஷ் படத்தில் நடிகராக அறிமுகமாகவிருக்கிறார் செல்வராகவன். செல்வாவுடன் கீர்த்தி சுரேஷும் இப்படத்தில் நடித்துவருகிறார். தற்போது அருண் மாதேஷ், தனுஷுக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். `ஜகமே தந்திரம்’, `கர்ணன்’ பட வேலைகள் முடிந்துவிட்ட நிலையில், அடுத்ததாக இயக்குநர் ராம்குமார் படம், அக்‌ஷய் குமாருடன் ஒரு பாலிவுட் திரைப்படம், இயக்குநர் கார்த்திக் நரேன் படம், மித்ரன் கே ஜவஹர் திரைப்படம் என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் தனுஷ். அருண் மாதேஷ் சொன்ன கதையும் ஓக்கேவாகிடும் என்கிறார்கள். ரகிட ரகிட ரகிட ஊ!

இன்பாக்ஸ்
இன்பாக்ஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism