Published:Updated:

இன்பாக்ஸ்

சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
சமந்தா

அதிரடியாய் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்துவருகிறார் விஷால். `எனிமி' ரிலீஸுக்கு ரெடி.

இன்பாக்ஸ்

அதிரடியாய் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்துவருகிறார் விஷால். `எனிமி' ரிலீஸுக்கு ரெடி.

Published:Updated:
சமந்தா
பிரீமியம் ஸ்டோரி
சமந்தா

இது பெரு நிறுவனங்களின் இணைதல் சீசன் போல. சோனி இந்தியாவும், ஜீ5 நிறுவனமும் தங்களிடம் இருக்கும் படைப்புகளை இணைக்கவிருக்கிறார்கள். ஜீ குழுமத்தில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடாகச் செய்கிறது சோனி. இந்த இணைப்பு மூலம் 70 சேனல்கள், இரண்டு ஓ.டி.டி தளங்கள், இரண்டு ஸ்டூடியோக்கள் என இந்தியாவின் மிகப்பெரிய நெட்வொர்க்காக மாறவிருக்கிறது சோனியும், ஜீயும். இது ஒருபுறம் என்றால், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளின் உரிமங்கள், பட நிறுவனங்களை மொத்தமாக வாங்கிக்கொண்டிருந்த அமேசான் ப்ரைம், தற்போது அதன் ப்ரைம் வீடியோவுக்குள் பிற சேனல்களையும் இணைக்கவிருக்கிறது. இனி டிஸ்கவரி, முபி, ஈராஸ் நௌ போன்ற தனித்தனி ஓ.டி.டி தளங்களை அமேசான் ப்ரைமுக்குப் பணம் கட்டுவதன் மூலம் பார்க்க முடியும். இதனால் ஒரே ஆப்பில் பல ஓ.டி.டி பிளாட்பார்ம்களில் இருக்கும் படங்களை நம்மால் காண இயலும். விலை குறையுமா குறையாதா?

ஒரு படம் முடியும்போது அடுத்த படம் கையிலிருக்க வேண்டும் என்பது மம்மூட்டியின் ஸ்டைல். சொல்லப்போனால், வருடத்திற்கு அதிக படங்கள் நடித்துத் தன் மகன் துல்கர் சல்மானுக்கு டஃப் கொடுக்கிறார். தற்போது, ரதீனா எனும் அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்துவருகிறார், மம்மூட்டி. பார்வதி, மம்மூட்டியுடன் நடிக்கும் முதல் படம் இது. தேனி ஈஸ்வர்தான் ஒளிப்பதிவாளர். இந்தப் படத்திற்குப் பிறகு, லிஜோ ஜோஸ் இயக்கத்தில் ஓ.டி.டி தளத்திற்காக ஒன்று, தியேட்டருக்காக ஒன்று என இரண்டு படங்கள் நடிக்கவிருக்கிறார் மம்மூட்டி. எத்தனை..!

அதிரடியாய் அடுத்தடுத்து படங்களை கமிட் செய்துவருகிறார் விஷால். `எனிமி' ரிலீஸுக்கு ரெடி. அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் `வீரமே வாகை சூடும்' படத்தைத் தயாரித்து, நடித்து முடித்திருக்கிறார். தன் நண்பர்கள் ரமணா, நந்தா ஆகியோரின் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வினோத் இயக்கத்தில் சுனைனாவுடன் தற்போது நடித்துவருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பக்கா ஆக்‌ஷன் கதையொன்றில் நடிக்கவிருக்கிறார் விஷால். டிசம்பரில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. விறு விறு விஷால்...

இன்பாக்ஸ்

அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக், இந்த ஐ.பி.எல் தொடர் ஆரம்பித்ததிலிருந்தே தோனியைப் புகழ்ந்துவருகிறார். ``ஐ.பி.எல்லுக்காகவே உருவாக்கப்பட்ட மூளை தோனியுடையது. ஒரு வீரருக்கு எந்த மாதிரியான ஃபீல்டு செட் செய்தால், அவுட்டாக்க முடியும் என்பது தோனிக்குத் தெரியும்'' எனப் பாராட்டியவர், ஐதராபாத் - டெல்லி போட்டியின் போதும் தோனியைப் பாராட்டினார். சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பவுலிங் வாய்ப்பு பெற்ற அஷ்வினால் பெரிய அளவிலான விக்கெட்டுகள் எதையும் எடுக்க முடியவில்லை. அதைக் கவனித்த சேவாக், ``தோனி கேப்டன்சியில் அஷ்வின் சிறப்பாகச் செயல்பட்டதற்குக் காரணம், அஷ்வினின் பலம் தோனிக்கு நன்கு தெரிந்திருந்தது. அஷ்வினை பெரும்பாலும் ஆஃப் ஸ்பின் மட்டுமே செய்ய அனுமதிப்பார் தோனி. ஆஃப் ஸ்பின் வீசினால், பவுண்டரி ஆகிவிடுமோ என பீதியடைகிறார் அஷ்வின். அதனால் நிறைய வேரியேஷன்களில் பந்தை வீசிப் பார்க்கிறார். ஆனால், அவை விக்கெட்டாக மாறுவதில்லை. அஷ்வின் எடுத்த விக்கெட்டுகளில், ஸ்டம்புக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்த தோனியின் பங்கு அளப்பரியது'' என ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். என்னமோ திட்டமிருக்கு.

இன்பாக்ஸ்

சமந்தா இன்ஸ்டாகிராமில் தன் பெயரை மாற்றியதிலிருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள். ஆனால், பர்சனல் வேறு, தொழில் வேறு என்பதில் சமந்தா தெளிவாக இருக்கிறார். நாக சைதன்யா நடித்து இந்த வாரம் வெளியாகியிருக்கும் ‘லவ் ஸ்டோரி’ படத்தின் டிரெய்லரைப் பாராட்டியது; சினிமாத் தோழிகளுடன் கூலாகச் சுற்றுவது என கெத்தாகச் சுற்றி வருகிறார். ‘ஃபேமிலி மேன்’ தொடரில் நடித்தது யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சமீபத்திய பேட்டியில் அறிவித்திருந்தவர், மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார். ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தைத் தொடர்ந்து வுமன் சென்ட்ரிக் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். வருக வருக!

விக்னேஷ் சிவன், அட்லி, வெங்கட் பிரபு உதவியாளர் விக்னேஷின் படம் ஆகியவற்றில் விக்னேஷ், விக்னேஷ் சிவன் படங்கள் பாதிக்கு மேல் முடிந்துவிட, தற்போது பாலிவுட் படத்தில் கவனம் செலுத்திவருகிறார் நயன்தாரா. `நெற்றிக்கண்' மாதிரியான ஹாரர் சினிமாக்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து, மீண்டும் காமெடிப் படம் பக்கம் ஒதுங்கவிருக்கிறார். `போட்டா போட்டி', `தெனாலி ராமன்', `எலி' என காமெடிப் படங்களை எடுத்த யுவராஜ் தயாளன் சொன்ன காமெடிக் கதை நயனுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். 2022 முழுவதிலும் நயன் பிஸி என்கிறது சினிமா வட்டாரம். காமெடிக்கு கியாரன்டி!

அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்குக் கடுமையான போட்டி கொடுத்துக்கொண்டிருக்கின்றன. கோவை மாவட்டத்தில் மோஸ்ட் வாண்டட் அரசுப் பள்ளியான மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆண்ட்ராய்டு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர். சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் உதவியுடன் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான அறிவிப்புகள், வருகைப்பதிவு, தேர்வு மதிப்பெண்கள், விடுப்பு விண்ணப்பம் எல்லாம் ஆப் மூலமாகவே செயல்படுத்தலாம். மேலும், மாணவர்களின் வீட்டுப்பாடங்களையும் ஆப் மூலமாகச் செய்யலாம். மாணவர்கள் அனுப்பும் வீட்டுப் பாடங்கள் கூகுள் டிரைவ் மூலம் சேமிக்கப்படும். இதனால், ஆண்டு முழுவதுக்குமான தகவல் பத்திரமாகப் பராமரிக்கப்படும். ‘இந்தத் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் ஆசிரியர், மாணவர்களுக்கான சுமையும் குறையும்’ என்கின்றனர் கல்வி அதிகாரிகள். அடிச்சு ஆடுங்க பசங்களா..!

`மேயாத மான்', `ஆடை' படங்களை இயக்கிய ரத்னகுமார், நண்பர் லோகேஷ் கனகராஜுக்காக விஜய்யின் `மாஸ்டர்' படத்தில் ரைட்டரானார். அந்தக் கூட்டணி அடுத்தும் கமலின் `விக்ரம்' படத்தில் இணைந்தது. ரத்னகுமார் அடுத்து ஹீரோயின் சப்ஜெக்ட் ஒன்றை இயக்குவார் என எதிர்பார்த்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி. இப்போது சந்தானத்தை இயக்கிவருகிறார். வெயிட்டிங்!

இன்பாக்ஸ்

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பிரதான சீடர் வாசன் பாலா. மும்பைத் தமிழரான இவர் விளம்பரப் படங்கள் இயக்கத்தில் மும்பையில் ஏக பிஸி. இவர் கதை-திரைக்கதை எழுதிய ‘ராமன் ராகவ்2.0’ கதையைத்தான் அனுராக், தன் ஆஸ்தான ஹீரோ நவாஜுதீனை வைத்து இயக்கியிருந்தார். தற்போது தன் குருவை சீடர் வாசன் பாலாவே தமிழுக்கு அழைத்துவரவிருக்கிறார். ஓ.டி.டி-க்காகப் புதுமுகங்கள் நடிக்கும் கதையொன்றைத் தமிழ்-இந்தியில் எடுக்கிறார் வாசன் பாலா. இதில் அனுராக் காஷ்யப்புக்குப் புதுமையான ரோலாம். அவரைத் தமிழில் டப்பிங் பேச வைக்கப்போகிறாராம். கேங்ஸ் ஆஃப் வாஸேப்பூர் போல ஒரு படம் ப்ளீஸ்!

சமீபத்தில் தெலுங்கு சேனல் ஒன்றில் நடந்த டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் நடுவராகக் கலந்துகொண்ட பூர்ணா, போட்டியாளர்களுக்கு ஆண், பெண் பேதமின்றி மேடையிலேயே முத்தம் கொடுத்ததுடன் கன்னத்தில் செல்லமாகக் கடித்திருக்கிறார். இது வலைதளங்களில் விமர்சனத்தைக் கிளப்பியது. இதற்கு பதிலடியாக தனது தாயின் கன்னத்தை கடிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து `நம்மைப்பற்றி யாராவது தீர்ப்பு சொல்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய பிரச்னை' என மெசேஜும் தட்டிவிட்டுள்ளார் பூர்ணா. அதற்கும் பின்னூட்டமிட்ட விமர்சகர்கள் `உதடுகளால் முத்தம் கொடுக்க முயற்சி செய்யுங்கள்' எனக் கலாய்த்துவருகின்றனர். நெகட்டிவிட்டி விலக்கு!

இன்பாக்ஸ்

`மாநகரம்' ஹீரோ சந்தீப் கிஷன், கார்த்திக் நரேனின் `நரகாசூரனி'லும் ஸ்கோர் செய்துள்ளார். ஹைதராபாத்வாசியான அவர், தன் பெற்றோர்களுக்காக `விவாக போஜனம்பு' என்ற பெயரில் ரெஸ்டாரன்ட் ஒன்றையும் கட்டிக்கொடுத்திருக்கிறார். ``இயந்திரத்தனமான உலகில் அம்மா, அப்பாவை கவனிக்காமல் போய்டக்கூடாதுன்னு நினைச்சேன். என் கையில காசு வந்த டைம்ல, ரெஸ்டாரன்ட் கட்டினேன். அதை அவங்ககிட்டேயே ஒப்படைச்சிட்டேன். எப்பவாவது நான் அங்கே சாப்பிடப் போறதோட சரி... அவங்கதான் பார்த்துக்கறாங்க'' என்கிறார் சந்தீப். பொறுப்பான பையன்!

மகளிர் கூடைப்பந்து ஆசியக் கோப்பைப் போட்டி ஜோர்டான் நாட்டில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணிக்காக விளையாட மயிலாடுதுறையைச் சேர்ந்த சகோதரிகள் சத்யா, புஷ்பா ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர். ``கடந்த 2012-ல் என் கணவர் செந்தில்குமார் உடல்நலக்குறைவால் இறந்ததால், பிள்ளைகளின் விளையாட்டுக் கனவை எப்படி நிறைவேற்றப் போகிறேன் என்ற கவலையுடன் இருந்தேன். அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்ற மன உறுதியுடன் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அவர்களைப் படிக்க வைத்தேன். இப்போது இருவரும் ஒன்றாகச் சேர்ந்து இந்திய அணிக்காக விளையாடப் போவதை நினைத்துப் பெருமையாக உள்ளது. அவர்கள் கோப்பை வென்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசை'' என்கிறார் அவர்களின் தாயார் மஞ்சுளா. தங்கமகள்கள்!